மாசுகள் உருவாகும் வகைகள்! (Post No 2685)

plastic rubbish

Written by S NAGARAJAN (for AIR talk)

Date: 1 April 2016

 

Post No. 2685

 

Time uploaded in London :–  5-55 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 Plastic-Bottles-Trash-waste-460x250

    சுற்றுப்புறச் சூழல் மாசு படுவதன் காரணங்கள் பல!

    தீங்கு பயக்கும் அல்லது நச்சு கலந்த பொருள்கள் காற்றிலோ நதிகள், கடல்களிலோ கலக்கும் போது அவை மாசுபடுகின்றன. விலங்குகள், தாவரங்கள் ஏன் மனிதர்கள் கூட இதற்கு விலக்கு அல்ல. அவர்களிடமிருந்தும் கூட சூழல் மாசுக்குள்ளாகும் நிலை உருவாகலாம்.

 

   சூழலில் ஏற்பட்டுள்ள மாசினால் இங்கிலாந்தில் பதினோரு லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

   சூரிய ஒளியின் ஆற்றலினாலும் காற்றுச் சுழலிகள் மூலமாகவும் மின் சக்தி உருவாவது இன்றைய காலகட்டத்தின் அவசரத் தேவையாகிறது.

 

   நமது வாகனங்களில் நாம் பயன்படுத்தும் டீஸல் மற்றும் பெட்ரோல் சுற்றுப்புறச் சூழலில் மாசை ஏற்படுத்துகிறது. ஆகவே அவற்றின் பயன்பாட்டை முடிந்த அளவு ஒவ்வொருவரும் குறைத்தல் வேண்டும்.  

   ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் இரசாயனக் கழிவுகள் நதி, கடலில்     கலந்தால் அவை பல மைல் தூரம் உடனடியாக கொண்டு செல்லப்படுவதால் அபாயம் வெகு விரைவில் எங்கும் பரவும் நிலை ஏற்படுகிறது.    

 

  பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக்கினால் ஆன பல்வேறு பொருள்கள் ஆகியவற்றின் பயன்பாட்டை உடனடியாக ஒவ்வொருவரும் நிறுத்தி விட்டால் சுற்றுப்புறச் சூழலில் பெரும் முன்னேற்றம் ஏற்படும்.     பிளாஸ்டிக் பைகள் கடலில் மிதக்கும் போது அவற்றை தனது உணவாக எண்ணி அவற்றை உட்கொள்ளும் மீன்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் பரிதாபமாக உயிரை இழப்பது பெருமளவில் பெருகி வருகிறது.  

வீட்டில் சுத்தப்படுத்துவதற்காக நாம் பயன்படுத்தும் திட மற்றும் திரவ வடிவிலான இரசாயனப் பொருள்களைப் பற்றி நன்கு அறிந்த பின்னரே அவற்றைச் சிறிய அளவில் பயன்படுத்ல் வேண்டும். சூழலுக்கு உகந்தவற்றை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும்.  

 

   சுற்றுப்புறச் சூழல் பற்றிய அனைத்து விஷயங்களையும் நாம் அறிந்து பிறருக்கும் அவற்றைக் கூறுதல் பெரிய சமுதாய சேவை ஆகும்!

–Subham–