Compiled by london swaminathan
Date: 2 April, 2016
Post No. 2687
Time uploaded in London :– 9-02 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் என்பவர் செய்த அற்புதம் பற்றி 1908 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்ப் பெயரகராதியில் ஈக்காடு இரத்தினவேலு முதலியார் தந்துள்ள விவரத்தின் சுருக்கம் இதோ:-
பிள்ளைப் பெருமாள் அய்யங்கார், வேதியர் குலத்தில் உதித்து, வேத வேதாங்கங்களில் புலமை பெற்று வருணாசிரம தருமங்களை வழுவாது அனுசரித்து வருங்காலத்தில் மதுரையில் திருமலை நாயக்கர் அரசாட்சி செய்து வந்தார். அவரது ராஜாங்க சேவையில் ஈடுபட்ட அய்யங்கார் ஒரு நாள் அனைவர் முன்னிலையிலும் தனது (உத்தரீயத்தின்) மேல்துண்டின் முனைகளை சரசரவென்று தேய்த்தார்.
அனைவரும் இது கண்டு நகைத்து, ‘ஐயன்மீர் ஏன் இப்படித் தேய்த்தீர்?’ என்று வினவ அவர் ஸ்ரீரங்கம் தேர்த்திருவிழாவில், தீவட்டி ஏந்தி வந்தவர்களின் தீச்சுவாலைபட்டு, தேர்த் திரைச் சீலை தீப்பற்றியதாகவும் அதை அணைக்கவே அவ்வாறு செய்ததாகவும் பதில் தந்தார்.
இதைக் கேட்ட பலரும் அய்யங்காருக்குச் சித்தப் பிரமை பிடித்துவிட்டது என்று நாயக்க மன்னரிடம் தெரிவித்தனர்.
மன்னரோ, அய்யங்கார் மீதுள்ள மதிப்பு காரணமாக, திருவரங்கத்திற்கு ஒரு ஆளை அனுப்பி, தீரவிசாரித்து வருமாறு உத்தரவிட்டார். அவர் திருவரங்கம் அர்ச்சகர்களைக் கண்டு தேரின் திரைகள் தீப்பிடித்ததா என்று கேட்டனர். அவர்கள், ஆம் தேர்த்துணிகள் தீபிடித்தவுடன், அருகிலிருந்த அய்யங்கார் அவைகளை அவித்தார் என்றும் சொன்னார்கள்.
இதைக் கேட்ட நாயக்கர் ஆனந்தப் பரவசப்பட்டு அய்யங்காரை வரவழைத்து, திருவரங்கத்தான் தேர்த் தீபிடித்தபோது நீவீர், இங்கேயல்லவா இருந்தீர், அங்கே போனதாகப் பலரும் சொல்வதெப்படியென வினவ, அவர் தன் மனதளவில் அங்கே என்று எம்பெருமானை சேவித்தேன் என்றார். அருகிலுள்ளவர்களும் ஆமாம், இவர் கிருஷ்ண, கிருஷ்ண என்று சொல்லி உத்தரீயத்தைத் தேய்த்தார் என்றும் அப்போது காரணம் கேட்டதற்கு இதையே சொன்னதாகவும் உறுதி செய்தனர். உடனே நாயக்க மன்னர் அவரை சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து பூஜித்து அனுப்பிவைத்தார்.
அன்றிரவு நாயக்க மன்னர் ஒரு கனவு கண்டார். அதில் தான் , காவிரி நதியில் ஸ்நானம் செய்துவிட்டுப் பிள்ளைப் பெருமாள் அய்யங்காருடன் சென்று, திருவரங்கப் பெருமானைச் சேவித்ததாகவும், திரும்பி வருகையில் திடீரென்று அய்யங்கார் காணாமற் போனதாகவும் கனவு கண்டார்.
நாயக்க மன்னர் மிகவும் விசனப்பட்டு மறு நாள் காலையில் அய்யங்காரை வரவழைத்துச் சேவித்து, ‘தேவரீர்! உங்களைப் போன்ற பெரியோரை நான் லௌகீகத் தொழிலில் இதுவரை ஈடுபடுத்தியது தவறு. நீங்கள் என்னைச் க்ஷமித்து (மன்னித்து) இனி வைதீக காரியங்களில் ஈடுபட்டு காலட்சேபம் செய்ய அடியேன் யாது செய்யவேண்டு’ மென்று இறைஞ்சினார்.
அய்யங்காரும் தான், திருவரங்கப் பெருமானுக்கு அருகிலிருக்க விரும்புவதாகச் சொல்லவே, கோவிலுக்கு வடமேற்கில் ஒரு திருமாளிகை புதுக்கி, அதில் அவரை எழுந்தருளச் செய்து தானும் அடிக்கடி திருவரங்கம் சென்று அவரை உபசரித்து மகிழ்ந்தனன்.
அங்கெழுந்தருளிய அய்யங்கார் நூற்றெட்டு திருப்பதி அந்தாதி, திருவேங்கட மாலை, திருவேங்கட அந்தாதி, அழகர் அந்தாதி, திருவரங்கத்துக் கலம்பகம், திருவரங்க மாலை, அந்தாதி, அஷ்டப் பிரபந்தம், பரப்ரம்ம விவேகம் என்னும் பல நூல்கள் செய்து பகவத் கைங்கரியத்தில் காலம் தள்ளினார். ஒருநாள் கோவிலில் தரிசனம் செய்துகொண்டிருக்கையில் ஒரு நொண்டிப் பசு இடறி அவர் காலில் விழுந்தது. அதுவே தனது இறுதிக்காலம் என்று ஒரு பாடலில் சொல்லிவிட்டு கொஞ்சம் காலம் கழித்து பரமபதம் சேர்ந்தார்.
எனது முந்தைய கட்டுரைகள்
1.ஆண்டாளுடன் 60 வினாடி பேட்டி (20 ஜனவரி 2012)
2.வங்கக் கடல் கடைந்த ஆண்டாள் தரும் அற்புதத் தகவல்- 9 ஜனவரி 2014
3. ‘இனித்தான் எழுந்திராய்! ஈதென்ன பேருறக்கம்!’ ஆண்டாள் அறைகூவல்! – 28 நவம்பர் 2014
4. Sri Ramanuja’s Favourite Tamil Hymn! (Article No.1443; Dated 28th November 2014.)
5. Amazing Andal: Where did she see the Lion? ( 30 -1-2013)
6. Ramanuja and Non Brahmins ( 13-5-2013)
7.காலா! என் காலருகே வாடா! ஞானிகளின் ஞானத் திமிர்!! (கட்டுரை எண்: 925 தேதி: 23 March 2014.)
8. Andal by C.Subrahmanya Bharati (Post No.924 Date: 22nd March 2014.)
9. கொக்கைப் போல இருப்பான், கோழி போல இருப்பான், உப்பைப் போல இருப்பான் பக்தன் (Post No. 900 Dated 11th March 2014)
10. Vaishnavite Saint NAMMALWAR (Post no 915 date 18th March 2014)
11.ஆழ்வார் முக்கியப் பாடல்கள் (மே சிந்தனைச் சிற்பிகள் காலண்டர்) (Post No.1011; Date:30 ஏப்ரல் 2014
And more articles about Alvars and other Vaishnavite saints
-subham-
You must be logged in to post a comment.