

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No.7705
Date uploaded in London – 17 March 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
Diamond Axe- Hindus’ Reply to Christian Attacks கிறிஸ்தவர் புகார்களுக்கு ஆப்பு 1888 நூலில்!-1(Post No.7705)
I am posting it in two parts ;இரண்டு பகுதிகளாக வெளியிடுகிறேன்
Following book contains Hindus’ reply to Christian criticism in English and Tamil. Book is available in the British Library in London.
நாடார்கள் பேய்களை வழிபடும் கீழ்ஜாதிகள் என்றும் கிருஷ்ண பரமாத்மா பெண் பித்தன் என்றும் பிஷப் கால்டு வெல் (Bishop Caldwell 1814-1891) போன்ற விஷமிகள் விஷ(ம)ப் பிரசாரம் செய்து வந்ததை எதிர்த்து இந்துக்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பதில் கொடுத்து புஸ்தகம் வெளியிட்டனர். 1888-ம் ஆண்டிலேயே இவ்வளவு ஹிந்து விழிப்புணர்ச்சி இருந்தது வியப்பூட்டுகிறது. அதுமட்டுமல்ல “கல்வி கற்ற இந்துக்களுக்கு” என்ற தலைப்பில் 4 பகுதி கொண்ட ஆங்கிலப்புஸ்தகத்தில் கிருஷ்ணனையும் மகாபாரதத்தையும் குறைகூறி பிஷப் கால்டு வெல் எழுதியதற்குப் பதிலாக இந்தப் புஸ்தகம் உள்ளது. ஐந்தாம் நூற்றாண்டில் கணிதம் கற்பித்த பேரழகியை தர தர என்று தெருவுக்கு இழுத்து வந்து அவளை உயிருடன் கொளுத்திய சம்பவம் முதல் தென் அமெரிக்க நாகரீகங்களை கிறிஸ்தவப் பாதிரியார்கள் தீக்கிரை ஆக்கிய சம்பவம் வரை எல்லாவாற்றையும் சுருக்கமாகக் கொடுத்துள்ளனர். இதில் ஒரு சம்பவம் கூட மிகைப் படுத்தப்பட்டதல்ல என்பதை இன்று வரலாறு படிப்போர் அறிவர். எல்லா என்சைக்ளோபீடியாக்களிலும் உலகமே ஒப்புக்கொண்ட உண்மைச் சம்பவங்கள் இவை.
புஸ்தகத்தின் பெயர் – வஜ்ரக் கோடாலி (சம்ஸ்க்ருதத்தில் வஜ்ர டங்கம் )
கிடைக்குமிடம்- பிரிட்டிஷ் லைப்ரரி, லண்டன்
நான் இதை பிரிட்டிஷ் லைப்ரரியில் படித்தவுடன் “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற திருமூலர் வாக்கு நினைவுக்கு வந்தது . உடனே இதை பேஸ் (Facebook) புக்கில் போட்டேன் . இப்பொழுது எனது இரண்டு ‘பிளாக்’குகளிலும் பதிவு செய்கிறேன்.
Tags — வஜ்ர டங்கம் , கிறிஸ்தவ மதம், ஆப்பு , பிரசாரம் , பிஷப் கால்டுவெல்
Second and last part will be posted tomorrow
To be continued ……………………..

















—- subham —-
You must be logged in to post a comment.