Written by S Nagarajan
Date: 26 February 2016
Post No. 2575
Time uploaded in London :– 4-44 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
நையாண்டி மடல் (மடல் எண் 1)
முட்டாள்கள் முன்னேற்றக் கழகம்!
ச.நாகராஜன்
அன்புடையீர்,
நீஙகள் வெகு ஆவலுடன் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த முமுக ( முட்டாள்கள் முன்னேற்றக் கழகம்) ஆரம்பிக்கப்பட்டு விட்டது என்பதை மகிழ்வுடன் அறிவித்துக் கொள்கிறோம்.
இதை ஏன் தமிழகத்தில் ஆரம்பிக்கிறோம் என்பது உங்களுக்கே மிக நன்றாகத் தெரியும்.
இங்கு இதன் உறுப்பினர்கள் ஒரே நாளில் ஆயிரக் கணக்கில் சேர்ந்து விடுவார்கள் என்பதே காரணம்.
இதில் சேர எந்த விதமான தகுதியும் தேவையில்லை என்பதும் உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
தமிழகத்தின் ஒரு சில துர்பாக்கியசாலிகளைத் தவிர மற்ற அனைவருமே இதில் உறுப்பினர்களாக ஆக்கப்பட்டு விட்டனர்.
நான் முட்டாள் இல்லையே என்று சொன்னால், ஹ.. ஹ.. ஹ.., நிச்சயமாக நீங்கள் முட்டாள் தான்!
நான் முட்டாள், என்னைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று நீங்கள் சொன்னால், அப்புறம் என்ன, நீங்களே ஒப்புக் கொண்டுவிட்டீர்கள், நீங்கள் கழகத்தின் ஆயுள் கால உறுப்பினர் தான்!
நீங்கள், ‘நான் முட்டாளா, இல்லையா என்று எனக்கே தெரியவில்லை என்ற முட்டாள் குழப்பத்தில் இருந்தால், கவலைப் பட வேண்டாம். சேர்க்கப்பட்டவுடன் கியாரண்டியாக நீங்கள் முட்டாள் ஆகி விடுவீர்கள்.
ஆக, சேருவதைப் பற்றிய பிரச்சினை இத்தோடு தீர்ந்தது.
அடுத்து நமது கழகத்தின் ஆலோசகர்களாக யார் வேண்டி விரும்பிச் சேர்ந்திருக்கிறார்கள் என்பதைக் கேட்டால் நீங்கள் அசந்து போவீர்கள்.
இந்தியாவின் தலை நகரில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் மூத்த பேராசிரியர்கள் தாம் நமது ஆலோசகர்கள்.
இவர்களது அபார அறிவுத் திறனையும் அனைவரையும் வழி நடத்தும் பாங்கையும் கண்டு உலகமே வியக்கிறது; அதிசயிக்கிறது.
நமது கொள்கைகளை வீடு வீடாக எப்படிக் கொண்டு சேர்க்கிறது என்ற கவலையே எந்த முட்டாளுக்கும் (அது தான் நீங்கள் உறுப்பினர் ஆகி விட்டீர்களே) வேண்டாம்.
டெல்லியில் உள்ள அனைத்து டெலிவிஷன் சானல்களும் நம்மை வெகுவாக விளம்பரப்படுத்த ஒப்புக் கொண்டு விட்டார்கள்.
இதற்காகவே, நரைத்த விக் வைத்த தடியர்( சற்று உடல் பருமனைக் குறிப்பிடுகிறோம்) கீச்சுக் குரலில் கத்திப் பேசும் பேராசிரியர், எதிராளியைப் பேச விடாமல் தானே காச் மூச் என்று கத்திக் கொண்டே இருக்கும் காம்ரேட், மற்றும் அழகிய சல்வார் கமீஸ், நல்ல லிப்ஸ்டிக் மற்றும் மேக்-அப்பில் கவனம் செலுத்தி ஸ்டுடியோவுக்கு வருகை புரியும் பெண்ணியப் போராளி ஆகிய அனைவரும் இந்த டெலிவிஷ சானல்கள் வாயிலாக நமக்கு நல்லாதரவு தினமும் தருவது உறுதி.
“இந்தியா அறிய விரும்புகிறது” என்ற கர்ஜனைக் குரலுடன் தினமும் நமது நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்படும்.
நீங்கள் அறிவாளிகள் (யாராவ்து இருந்தால்) பற்றிப் பயப்பட வேண்டாம்.
நமது புதிய அகராதியை அவர்கள் முன் வீசி எறியுங்கள். அவர்கள் சற்று மறுத்துப் பேசினால்.. .. ஹ. ஹ. அவர்களையே வீசி எறியுங்கள்.
எடுத்துக் காட்டாக ஒரு வார்த்தையைச் சொல்லி இந்த எமது முதல் மடலை முடிக்கிறோம்.
செகுலரிஸம் என்றால் மதச்சார்பின்மை என்று அந்த ஆக்ஸ்போர்டும் இதர அகராதிகளும் சொல்வது சுத்தப் பத்தாம் பசலித்தனம். செகுலரிஸம் என்றால் ஹிந்து மதத்தையும் அதைச் சார்ந்த தொன்மத்தையும் நம்பிக்கையையும் அதில் இருக்கும் உறுப்பினர்களையும் இழிவு படுத்துவதே! கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய கொள்கைகளைப் பற்றியோ அவர்களின் தொன்மம், நம்பிக்கை பற்றியோ பேசவே கூடாது. (நமக்கு எதற்கு உடல் ரீதியான விபரீதம்?) இதுவே செகுலரிஸம்.
இப்படிப் பல புதிய விஷயங்களை நமது ஆலோசகர்கள் அவ்வப்பொழுது கூறிக் கொண்டே இருப்பார்கள். அதனால் நமது முட்டாள்தனம் நீண்ட நெடு நாளாய் இருக்கப் போவது உறுதி.
யாரும் கவலைப்பட வேண்டாம். அடுத்த மடல் விரைவில் வரும்.
அன்புடன்
முமுக தலைவர்
You must be logged in to post a comment.