Written by S.NAGARAJAN
Date: 21 September 2017
Time uploaded in London- 5-35 am
Post No. 4230
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
சம்ஸ்கிருதச் செல்வம்
சம்ஸ்கிருதத்தில் புதிர்க் கவிதைகள்! அழகியின் மேனியும், உதடுகள் அழுத்தும் போது கத்துவதும்!
ச.நாகராஜன்
அத்ரோத்யானே மயா த்ருஷ்டா வல்லரி பஞ்சபல்லவா I
பல்லவே பல்லவே தாம்ரக் யஸ்யாம் குஸும மஞ்சரி II
சம்ஸ்கிருததில் இதை சமானரூப புதிர் என்கின்றனர்.
இதன் பொருள்:
இந்த வனத்தில் (அழகியின் மேனி)
நான் ஒரு கொடியை (கை) ஐந்து கிளைகளுடன் (விரல்கள்) பார்த்தேன். ஒவ்வொரு கிளையிலும் சிவந்த அலங்காரப் பூவைப் பார்த்தேன் (சிவப்பு நகங்கள்)
தண்டியின் காவ்யாதர்சத்தில் இடம் பெறும் கவிதை இது.
இதை ஆங்கிலத்தில் பார்ப்போம்:
In this garden (female body) I have seen a creeper (arm) having five twigs (fingers), and in each of these twigs there are ruddy blossoms (red nails)
அழகியின் மேனியை வர்ணிக்க என்ன ஒரு அற்புதமான புதிர்க் கவிதை!
இன்னொரு அழகிய புதிர்க் கவிதை இது:
அந்த: சமேத்யாபி வஹி: ப்ரயாதி
ஸ்ப்ருஷ்டா வித்யத்தே வஹூகனாதி I
தத்தவாதரம் ரோதிதி சுஷ்கமேவ
சைவம் விலாஸைஸ்தபசாப்யலம்பா II
இதன் பொருள்:
உள்ளே இருவரும் இணைந்தாலும் அவள் வெளியே வருகிறாள்.
தொட்டால் தழுவுகிறாள். உதடுகளை அழுத்தும் போது கத்துவது போல் பாசாங்கு செய்கிறாள். இப்படி தனது விளையாட்டு லீலைகளால் தவத்தினால் கூட அடைய முடியாதபடி அவள் இருக்கிறாள்!
இந்தப் புதிருக்கு விடை என்ன என்று திகைக்கிறோம்.
விடை : புல்லாங்குழல்
இதன் ஆங்கில மொழியாக்கத்தைப் பார்ப்போம்
Though come together inside, she comes out, when touched, she gives embraces. When the lips are pressed she pretends, to cry out. Thus she is difficult to get even by penance on account of her palyful activities;
Answer : Flute
Translation by A.A.Ramanaathan (A.A.R.)
இந்த்ரவஜ்ர சந்தத்தில் அமைந்துள்ள இந்தக் கவிதை வேணிதத்தரின் பத்யவேணியில் காணப்படும் கவிதை.
சிருங்கார ரஸத்தில் சொக்கிப் போய் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணிக் கடையிசியில் புல்லாங்குழல் என்று சொல்லும் போது மனம் விட்டுச் சிரித்துக் குதூகலிக்கிறோம்.
ஆயிரக்கணக்கான புதிர்க் கவிதைகளில் மேலே ரசித்தவை இரண்டு!
***