அருணகிரிநாதரின் 3 புதிர்களுக்கு புதிய விடைகள்! (Post No.9301)

WRITTEN BY B. Kannan, New Delhi

Post No. 9301

Date uploaded in London – –23 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

(பல ஆண்டுகளுக்கு முன்னர் இதே பிளாக்கில் லண்டன் சுவாமிநாதன் எழுதிய திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியானது. அதில் திருப்புகழில் இருக்கும் மூன்று புதிர்களுக்கு விடை கிடைக்கவில்லை என்று எழுதி இருந்தார். அதற்கு பதில் தேடுமையில் மாதுளம் பழம் பற்றி நான்காவது புதிர் உதித்தது. . இவைகளுக்குப் பதி லளித்த  டில்லி நகர  தமிழ் அறிஞர் ப. கண்ணன் அவர்கள் ஞானமயம் ஒலி பரப்பில்  பிப்ரவரி 21, 22 தேதிகளில் அரிய பல தகவல்களை அளித்தார் . இதோ அவரது விடைகளுடன் கூடிய கட்டுரை)

மூன்று புதிர் குட்டிப் போட்டு நான்கான கதை!!                

பா.கண்ணன், புது தில்லி

திருவேங்கட மலையில் முருகன் கோவில் இருப்பதாகத் திருப்புகழில் அருணகிரிநாதர் பாடுகிறார்  நமக்குத் தெரிந்து வேங்கடாசலபதி (பாலாஜி) கோவில் இருக்கிறது.

அப்படியானால் முருகன் கோவில் ஒன்று இருந்து அழிந்துவிட்டதா? அல்லது இப்போதைய பாலாஜி கோவில் ஒருகாலத்தில் முருகன் கோவிலாக இருந்ததா? இந்த விவாதத்துக்குள் போக வேண் டாம், புதிர் முடிச்சை அவிழ்க்கப் பார்ப்போம்.   

கச்சியப்ப சிவாசாரியார் திருவேங்கடத்தில் முருகன் இருந்தான் என்பதற்கு ஒரு வரலாற்றைச் சொல்கிறார்………. … தாமரைமலர் போன்ற வடிவுடைய சிவந்த திருக்கத்தில் வேலாயுதத்தை ஏந்திய குமரக் கடவுளே குகையின் வழியாக வந்து
வெளிவந்த மலையாகிய சிகரத்தையுடைய திருவேங்கடமலை மீது
எழுந்தருளியுள்ள பெருமாளே…என்கிறார்.


ஒருமுறை அன்னையிடம் கோபித்துக் கொண்டு கயிலையை விட்டு பாதாளத்தில் ஒளிந்துக்கொண்ட குழந்தை முருகன் குகை வழியே வேங்கடமலையின் உச்சியை அடைந்து நின்றான் என்கிறது கந்தபுராணம்.அம்பிகை கோபித்துக் கொண்டதனால் முருகன் தானும் கோபம் கொண்டு, ‘நான் இங்கே இருக்க மாட்டேன்; வேறு ஒரு மலைக்குப் போகிறேன்’ என்று பாதாளத்தின் வழியே வந்து வேங்கட மலையின் குகை வழியே வெளிப்பட்டானாம் …… அப்போது அவன் தங்கின இடம் திருவேங்கடம். ‘முன்பு தான் தங்கிய வேங்கட கிரியைப் பார்த்தான்’ என்று பின்பு வழிநடைப் படலத்திலும் அவர் சொல்கிறார்……

கந்த புராணத்தை ஒட்டி தி. சு. வேலுசாமிப் பிள்ளை இயற்றிய கந்தபுராண வெண்பா என் னும் நூலிலும் இச்செய்தி கூறப்பட்டுள்ளது. பாடல் வருமாறு:

மன்னன்னை யோடுமுனி வாகித்தன் வெற்பொரீஇக்

கொன்னதத்த டேகிக் குகைவழியே-முன்னம்

வருவேல் கடமாம் வரைகண்டான் அன்பாம்

குருவேங் கடமாங் குசன்” (உற்பத்தி காண்டம்வழிநடைப் படலம்–6)

என்பது பாடல். இச்செய்தியை அடியொற்றித்தான் அருணகிரி நாதர் ‘குகை வழி வரு வேங்கட கிரி’ என்கிறார், போலும்!

மேலும், கந்தபுராணம் உற்பத்தி காண்டம் – வழிநடைப் படலத்தில், கச்சியப்பர், முருகன் சூரனை அழிப்பதற்காக, வடக்கேயுள்ள தன் கந்தகிரியிலிருந்து புறப்பட்டுத் தெற்கு நோக்கி வரும் வழியில் உள்ள தெய்வப் பதிகளையெல்லாம் கண்டு சென்றதாகக் கூறப்பட்டுள்ளது. அப்பகுதிகளைப் பற்றிய செய்திகளைக் கூறும் பாடல்களாவன

என்னையா ளுடையானிடம் சேர்வன்என் றிமையக்

கன்னி பூசனை செய்த கேதாரமும் கண்டான்” (3)

மையல் மானிடர் உணர்ந்திட மறைமுனி எடுத்த

கையதே யுரைத்திட்டதோர் காசியைக் காண்டான்”

அண்டம் மன்னுயிர் ஈன்றவளுடன் முனிவாகித்

தொண்ட கங்கெழு சுவாமிதன் மால்வரை துறந்து

மண்டு பாதலத் தேகியே ஒர் குகை வழியே

பண்டு தான்வரு வேங்கட கிரியையும் பார்த்தான்”

கறுத்த தலைஎன்று தொடங்கும் திருப்புகழில்

மலர்க் கமல வடிவுள செங்கை

அயிற் குமர குகைவழி வந்த

மலைக் சிகர வடமலை நின்ற பெருமாளே”- என்றும்,

சரவண பவநிதிஎன்னும் பாடலில்,

திரிபுரம் எரிசெயும் இறையவர் அருளிய

குமர சமரபுரி தணிகையும் மிகுமுயர்

சிவகிரியிலும் வடமலையிலும் உலவிய வடிவேலா” என்றும் உரைக்கிறார். 

முதல் முடிச்சு அவிழ்ந்து விட்டதா?

2. சரஸ்வதி நதிக்கரையில் வயிரவி வனம் என்று ஒரு இடம் இருப்பதாகவும் அங்கே முருகன் கோவில் இருப்பதாகவும் பாடுகிறார். சரஸ்வதி நதி வேத காலத்தில் ஓடி மகாபாரத காலத்தில் மறையத் துவங்கிவிட்டது. அருணகிரி காலத்தில் சரஸ்வதி நதி இல்லையே! நமக்குத் தெரிந்து வயிரவி வனம் என்று ஊரும் இல்லையே. வயிரவி வனம் எது? முருகன் கோவில் எங்கே? இது அவர் போடும் இரண்டாவது புதிர்.

வயிரவிவனம் எனும் திருத்தலம் வடநாட்டில் பஞ்சாபில் இருக்கிறது எனும் கருத்துக்கு மாறாக, அது இதோ இங்கேதான் இருக்கிறது என்று ஆதார பூர்வமாகத் தமது புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் வலயப்பேட்டை திரு ரா. கிருஷ்ணன் அவர்கள். இக்கோவிலைக்  குறித்து வரும் குறிப்புகள் அவரது “அருணகிரிநாதரின் அடிச்சுவட்டில்’ எனும் நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளன. காஞ்சிபுரத்தில் உள்ளது வயிரவிவனம் எனும் திருத்தலம். அங்கு பிள்ளையார்பாளையம் பகுதியில் சோளீச்வரர்-வயிரவேச்வரர் கோயில் அமைந்துள்ளது. வயிரவர்= பெரும் ஆற்றல் மிக்கவன், வல்லமைப் பொருந்தியவன் என்பது பொருள்.

“ஸ்ரீமத் மாதவ சிவஞானயோகிகள் என்னும் மகான் இப்பகுதியில் உள்ள திருவாவடுதுறை ஆதின திருமடத்தில் இருந்து கொண்டு காஞ்சிபுராணத்தை எழுதினார் என்பர். அதில் காஞ்சியில் அமைந்துள்ள பல்வேறு சிவாலயங்களின் விவரங்கள் காணக்கிடைக்கின்றன. காஞ்சியில் நான்முகன் மிகப்பெரிய வேள்வி செய்ய முற்பட்டார். அதனை விரும்பாத சரஸ்வதி தன்னுடைய வடிவை மாற்றி நதியாகப் பெருக்கெடுத்தாள். இதனைக்கண்ட நாரதமுனிவர் பிரமதேவனை வணங்கி அதனைத் தடை செய்ய வேண்டினார். நான்முகன் சிவபிரானைத் துதிக்க, அவரோ திருமாலை அழைத்து பிரமனின் யாகத்தை அழிப்பதற்கு சரஸ்வதி நதியாக வருவதால் அவள் செருக்கொழிய விரைந்து காப்பாய் என்று கூறினார். அதன்படி திருமால் சரஸ்வதி நதியைத் தடுத்துக் கடல் நோக்கிச் செல்லவிட்டார். சிவபெருமான் சொன்னவண்ணம் செய்தமையால் திருமாலுக்குச் “சொன்ன வண்ணம் செய்த பெருமாள்” என்று அருள்பாலித்தார். மேலும் சரசுவதி நதி வலியவினை எவற்றையும் அழிக்கும் வேகவதி நதி என்ற பெயரில் இந்நிலத்தில் ஏற்றமுற்று அதில் மூழ்குவோருக்கு இன்பவாழ்வினை அளிக்கும் என்று வாழ்த்தினார். மேற்படி செய்திகள் அனைத்தும் காஞ்சிபுராணம் சிவாத்தானப் படலத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.சரசுவதி நதி உருவில் வந்து சிவபெருமான் அருளால் வேகவதி நதி எனப் பெயர் பெற்ற புராணப்பாடல்களை நோக்கும் போது அருணகிரியார் பாடிப்பரவிய சரஸ்வதி நதிக்கண் வீறு வயிரவிவனம் என்ற தலம் காஞ்சிபுரத்திலுள்ள வயிரவேச்வரர் திருக்கோயில் என்றே அனுமானிக்கலாம். இது நாணயத் தின் ஒருபுறம், மற்றொன்று…………

இத்தலத்திற்கான திருப்புகழ் பாடல் : ஒன்று 

அருவரை யெடுத்த வீர னெரிபட விரற்க ளூணு

     மரனிட மிருக்கு மாயி …… யருள்வோனே

மருமலர் மணக்கும் வாச நிறைதரு தருக்கள் சூழும்

     வயல்புடை கிடக்கு நீல …… மலர்வாவி

வளமுறு தடத்தி னோடு சரஸ்வதி நதிக்கண் வீறு

     வயிரவி வனத்தில் மேவு …… பெருமாளே.

(வாசனை மலர்கள் மணம் வீசும் நறுமணம் நிறைந்துள்ள மரங்கள் சூழ்ந்த வயல்கள் பக்கத்தில் உள்ள நீலோத்பல மலர்கள் மலர்ந்துள்ள நீர்நிலைகளின் செழிப்பு வாய்ந்த கரைகளோடு ஸரஸ்வதி என்னும் ஆற்றினிடத்தே விளங்குகின்ற வயிரவிவனம்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே).

இது நாணயத் தின் ஒருபுறம், மற்றொன்று…………

அருணகிரியார் கூறும் வயிரவி வனம் வட இந்திய மாநிலம் ஹரியானா-பஞ்சாப் எல்லையில் நிச்சயமாக இருக்கிறது. அங்கு முருகன், கார்த்திகேயனாக அருள்பாலிக்கிறான். அதைப் பற்றிய ஒரு கட்டுரையை நான் எழுதியுள்ளேன். அதையும் இணைத்துள்ளேன். அதன் முக்கியச் சாராம் சம் இதோ…….

தமிழ்நாட்டில் அழகன் முருகன் பொதுவாகத் தனது தேவியர் வள்ளி-தேவசேனா சமேதராகக் காட்சியளிப்பவர், வட இந்திய மாநிலங்களில் ஸ்ரீகார்த்திகேயசுவாமி என்றப் பெயருடன் வீரம் செறிந்தப் பிரம்மச்சாரியாகத் தோற்றமளிக்கிறார். இப்பிரதேசப் பெண்மணிகள் இவரது சன்னிதி, கருவறை முன் நின்று வழிபடுவது கிடையாது. அதனால் அவருடையப் பிரம்மச்சரியத்துக்கு அபசாரம் செய்தவராகி, தங்களுக்குத் தீங்கு விளைந்துவிடும் என்றும் நம்புகின்றனர்

அப்படி அமைந்திருக்கும் பெஹோவா எனும் தலத்தில் தான் அருள்பாலித்துக் கொண்டிருக் கிறார் அழகன் முருகன். தில்லிக்கு அண்டை மாநிலம் ஹரியானாவின் குருக்ஷேத்திரம் மாவட் டத்தில் புராதன, போற்றத்தக்க, புண்ணியம்மிகுந்த, மகாபாரதச் சம்பவங்களுடன் தொடர்புடைய துமானப் பிரதேசம் பெஹோவா.அனைத்து நதிகளிலும் சிறந்ததும், அம்பிதமே, நாதிதமே, தேவிதமே சரஸ்வதி‘ (சிறந்த தாய், சிறந்த நதி, சிறந்த பெண் தெய்வம்) என ரிக்வேதம் போற்றக் கூடியதும், இங்குப் பூமிக்கடியில் அந்தர்வாஹினியாகப் பிரவாகிப்பதாகக் கருதப் படும் வேதகாலத்து நதியான சரஸ்வதி ஆற்றின் தென் பகுதியில் இவ்விடம் அமைந்துள்ளது.

தில்லியிலிருந்து 197கி.மீ., ஸ்தானேசர்- குருக்ஷேத்திரத்திலிருந்து சுமார் 30கி.மீ. தொலைவில் பஞ்சாப், ஹரியாணா எல்லைக்கருகில் உள்ளது. பாரதம், விஷ்ணு புராணம் ஆகியவற்றிலிருந் துப் பெஹோவாவைப் பற்றிய விவரங்களை அறிய முடிகிறது.

பக்த துருவன் வம்சத்தில் வந்த மன்னன் பிருது. பின்னாளில் தற்போதையக் குருஷேத்திரத் துக்கு அருகிலிருந்த நீர்நிலைக் கரையில் தவமிருந்து, முன்னோர்களுக்கு எள்ளும், நீரும் அளித்துப் பித்ருகடன் செய்து முடிக்கிறான். ப்ருது + உதக்(தண்ணீர்)= ப்ருதுதக். அதனால் இக்குளம் ‘பிருதுதக்’, பிருதுதீர்த்தம் என அழைக்கப் படுகிறது. அதுவே காலப்போக்கில் ‘பெஹோவா’ என மருவிவிட்டது. காசி, கயாவுக்கு அடுத்து இவ்விடமும் நீத்தாருக்குத் திதி கொடுக்கும் புண்ணிய இடமாக விளங்குகிறது,

மகாபாரதம், வாமன, ஸ்கந்த, மார்க்கண்டேயப் புராணங்களில் பிருதுதக் நீர்நிலையைப் பற்றிச்.சொல்லப்பட்டுள்ளது. “புண்யமாஹு குருஷேத்ர, குருஷேத்ராத் சரஸ்வதி, சரஸ்வத்மாஸ்ச தீர்த்தாநி தீர்த்தப்யஸ்ச ப்ருதுதகம்”குருஷேத்ர நகரம் புனிதமிக்கது. அதைவிட அதிகம் புண்ணியம் வாய்ந்தது இங்குப் பாயும் சரஸ்வதிநதி, இவற்றைவிட மிகவும் புனிதம் வாய்ந்தது ப்ருதுதக் தீர்த்தம்—என்று விவரிக்கிறது மகாபாரதம்.பாரதப்போர் ஆரம்பிப்பதற்கு முன், கிருஷ்ணனின் ஆலோசனைப்படி பாண்டவர்கள் இங்கு வந்து முன்னோர் களை வழிபட்டு, சரஸ்வதிநதியை ஆராதித்தனர் என்று அறிகிறோம். குப்தர்காலத்தில் வந்த ஃபாஹியான், மன்னன் ஹர்ஷர், பல்லவர்கள் ஆட்சிக் காலத்தில் வந்த ஹ்வேன்சாங் போன்ற சீன யாத்ரீகர்கள் தங்கள் பயணக் கட்டுரைகளில் குருஷேத்திரத்தை வர்ணிக்கும் அளவுக்குப் பெஹோவாவைச் சிறப்பிக்கவில்லை. ஸ்தானேசரில் இருந்தத் துறவிமடம் கோவிந்தாவிகாரை என இவர்களால் அழைக்கப் பட்டுள்ளது ( பார்க்க ஹ்வேன்சாங் எழுதியப் புத்தகம் “சி-யூ-கி). இங்கிருந்து அவர்கள் திரும்பி நேராக மதுரா சென்று விடுகின்றனர். கஜனி முகமதுவுடன் வந்தப் பாரசீக யாத்ரீகர் அல்பரூனி மட்டுமே பிருதுதக் சென்றது பற்றிக் குறிப்பிடுகிறார். சரஸ்வதி , கார்த்திகேயன் கோவில்கள் மிக்கப் பிரசித்திப் பெற்றவையாகும். இங்குள்ளச் சுப்பிரமணியர் ஆலயம் சுமார் 4500 ஆண்டுகள் புராதனமானதும், மகாபாரதக் காலத்துக்கு முற்பட்டதாகவும் அறியப்படுகிறது.குப்தர், குஷாண் வம்சத்தினர், ஆந்திர இக்ஷ்வாகு மன்னர்கள், பஞ்சாப்பை ஆண்ட குறுநில அரசர்களான யௌதேயர் முதலானோருக்குக் கார்த்திகேயன் கண்கண்டத் தெய்வமாக விளங்கியுள்ளார். யௌதேய மன்னர்கள் மற்றும். குஷாண் வம்சத்தினர் கார்த்திகேயன் உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட்டுள்ளனர்…….

விரிவானக் கட்டுரை வேறு பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது புதிருக்கும் விடை கிடைத்து விட்டதல்லவா?

3. பிள்ளையார் கையில் ஒரு மாதுளம் கனியை பார்வதி தேவி கொடுத்ததாகப் பாடுகிறார். அது

என்ன புதிய கதை? நமக்குத் தெரிந்ததெல்லாம் பழனியில் மாங்கனி கொடுக்கப்பட்டது. முருகன் கோபித்துக் கொண்டு ஓடிப் போய் தண்டாயுதபாணியாக நின்றார். இந்த மாதுளம் பழக் கதை என்ன? 

அந்தப் பாடலின் பகுதி….

சிவஞான புண்டரிக மலர்மாதுடன் … சிவஞானம் என்னும் தாமரை மலரில் வீற்றிருக்கும் சிவமாதுடனே…………

ஒளிர் ஆனையின்கரமில் … விளங்கும் யானைமுக விநாயகனுக்குக் கரத்தில்

மகிழ்மாதுளங்கனியை ஒருநாள் பகிர்ந்த …மகிழும்படியாக மாதுளங்கனியை முன்பொருநாள்  

அளித்தவளும்

உமை யருள்பாலா … ஆகிய உமாதேவி, பார்வதி அருளிய பாலகனே,

மாதுளம் பழம் (அ) கொம்மட்டி மாதுளை என்பதற்கு பச்சை எலுமிச்சம் பழம் என்று சொல்லப்பட்டிருந்தது. ‘மாதுலுங்க பல’ (அ) மாதுலம் என்பதற்குப் பேரெலுமிச்சை, கொடி எலுமிச்சை, ஊமத்தை என்றும்  ஜம்பீரம் என்று எலுமிச்சையைச் சம்ஸ்க்ருத அகராதியும் பொருள் சொல்கிறது. மேலும், தாடிம: என்று மாதுளையை சம்ஸ்க்ருதத்திலும்,, அனார் என்று ஹிந்தியிலும் குறிப்பிடுகிறார்கள்.

ஏகம் ஆம்ரம் எனும் ஒற்றை மாமரத்தினடியில் காட்சியளித்து,ஏழவார்குழலி எனும் தன்னை மணந்து கொண்ட ஏகாம்பரரின் மனதுக்கு உகந்ததினால் தனக்கும் பிடித்தமான அம்மரத்தின் இனிப்புச் சுவை மிகுந்த மாம்பழத்தையே நாரதர் அளித்துள்ளாறோ என மனமகிழ்ந்து, யானை முகன் விநாயகன் கரத்தில் அந்த “மகிழ்மாது” உமையவள் தன் ” (உ)ளங்கவர் கனி”யை அளித் திருக்கலாம், அல்லவா? இங்கு பண்டிதர்களுக்கே உரித்தான Poetic Justice  உத்தியைக் கையாண்டு மகிழ்மாது  ளங்கனியை என்ற சொற்களைச் சிறிது மாற்றிப் பதம் பிரித்து,  நாரத முனி அளித்த மாங்கனிக்கு இழுக்கு வரா வண்ணமும், காமாட்சி தேவியின் மனதைக் குளிர் விக்கும் விதமாகவும் அருணகிரியார் விவரித்திருக்கலாம்,அல்லவா?

மூன்றாவது புதிருக்கும் விடை கண்டாகி விட்டதா?

அதிகப்பிரசங்கித் தனமாய் இருக்குமானால் அறிவார்ந்த சபையோர் மன்னித்தருள வேண்டும்.

சரி,இப்போது சிவரஹஸ்யம் ஸ்லோகத்துக்கு வருவோம்…..

4. हेमाद्रिं किल मातुलुङ्गफलमित्यादाय मोदाधिको

मौढयान्नाकनिवासिनां भयपरैर्वाक्यैरिव प्रार्थितः ।

नीलीशम्बरनीलमम्बरतलं जम्बूफलं भावयन्

तं मुच्ञन् गिरिमम्बरं परिमृशन् लम्बोदरः पातु मा

சிவரஹஸ்ய கிரந்தத்தில் இருக்கும் இச் ஸ்லோகம் பரமேஸ்வரனால் பிரம்மாவின் குமாரர் ருபுவுக்கு உபதேசிக்கப் பட்டதாகும்.இதன்பொருள் : பரம்பொருள் தனது அதீத மாயா சக்தியால் அனைத்து இயற்கை வஸ்துக்களையும் சிறியது முதல் பெரியது வரை,தன்னுள் அடக்கிக் கொள்ளும் ஆற்றல் மிக்கது என்பதாம்.

ஹேமாத்ரி கில மாதுலுங்க பல மித்யாதாய  மோதாதிகோ என்று துவங்கும் அந்த ஸ்லோகத் தில் முதல் வரியில் வரும் ‘மாதுலுங்க பல’ என்பதற்கு எலுமிச்சை என்றே சம்ஸ்க்ருத அகராதி பொருள் சொல்லும் என்கிறீர்கள் . இந்த வரியின் மொத்த பொருள்:–அப்படியானால்,

மேரு மலையையே எலுமிச்சம் பழம் போல கையில் தூக்கும் கணபதியே – என்றும் பின்னர் வரும் வரிகளில் ஜம்பு பழத்தையும் — அதாவது  நாவல் பழத்தையும் குறிப்பிட்டு– அத்தகைய கணபதி என்னைக் காப்பாற்றுவாராக என்று முடிகிறது

மாதுலுங்க பல (அ) மாதுலம் என்பது ஊமத்தையும் குறிக்கும்,அல்லவா? அவை ஈசனுக்கு மிக வும் பிடித்த மலரும், காயுமல்லவோ? பிதாவை வணங்கும் விதமாக அதைத் தன் தும்பிக்கை யில் வைத்தவாறு, ஊமத்தைக் காய் போன்ற கரடு முரடான மேரு மலையை அனாயாசமாகத் தூக்கும் கணபதியே…. என்றும் சொல்லலாம், அல்லவா? எலுமிச்சைத் தோல் பாகம் வழவழப் பா யிருக்குமே? எனவே மேரு மலைக்கு ஊமத்தையே ஒத்து போகும் என்பது Poetic Justice! இதற்கும் என் பார்வை தவறென்றால் சிவாச்சாரியார் அவர்கள் க்ஷமிக்க வேண்டும்.

–subham–

tags – அருணகிரிநாதர்,  புதிர் ,  விடைகள்

____________________________________________________________________________________________________

அஸ்வமேத யாகத்தில் புரியாத புதிர்கள் (Post No.3168)

krishna_advising_on_the_horse_sacrifice

Written  by London swaminathan

Date: 19 September 2016

Time uploaded in London:9-19 AM

Post No.3168

Pictures are taken from various sources; thanks.

அஸ்வமேத யக்ஞம் பற்றிய அதிசயச் செய்திகள் – பகுதி 2 

 

 

அஸ்வமேத யக்ஞத்தில், — ஓராண்டுக் காலம் பல நாடுகளுக்குச் சென்றுவந்த குதிரையைக் கழுத்தை நெறித்துக் கொன்றார்கள் — அந்தக் குதிரையுடன் மஹாராணி இரவு முழுவதும் கணவன் – மனைவி போல  நெருங்கிப் படுத்திருக்க வேண்டும் —  அப்பொழுது ஆபாச வசனங்களை மற்ற பெண்கள் சொல்ல வேண்டும் — என்று மட்டும் எழுதி அந்த யக்ஞத்தைக் கொச்சைப்படுத்தும் வெளிநாட்டுப் படை எடுப்பா ள ர்களும் அவர்களின் உள்நாட்டுத் திராவிட அடிவருடிகளும் அந்த யாகம் பற்றிய முழு விஷயத்தையும் சொல்ல மாட்டார்கள். ஏனெனில் இது அவர்களுக்கும் புரியவில்லை; கேட்டால் நமக்கும் புரியாது. அவர்கள் ஆபாச வசனங்களை  மட்டும் பரிமாறிக் கொள்ளவில்லை. பல விடுகதைகள்,  புதிர்களையும் பகிர்ந்து கொண்டார்கள். அது மட்டுமல்ல; அதில் ஒரு குஷ்ட ரோகியும் பங்கு பெற்றார். இதற்கெல்லாம் என்ன பொருள் என்று பார்க்கும்போது வியப்பாக இருக்கும்.

 

அஸ்வமேதத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படும் குதிரை என்ன நிறத்தில் இருக்க வேண்டும் என்று சிரௌத சூத்திரங்கள் சொல்லுகின்றன. நெற்றியில் கருப்புப் பொட்டுடன் இருக்கும் வெள்ளைக் குதிரை அல்லது பழுப்பு குதிரையாக இருக்கலாம். ஆது ஆயிரம் பசு மாடுகளின் விலைக்குச் சமமானதக இருக்க வேண்டும் என்றும் சொல்லும். எல்லா குதிரைகளையும், பந்தயத்தில் தோற்கடிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் அது சூரியனின் அடையாளம். அதன் மீது இதுவரை யாரும் ஏறி சவாரி செய்திருக்கக்கூடாது!

இந்தக் குதிரைக்கு விதிக்கப்படும் நிபந்தனைகளை எல்லாம் பார்த்தால் அப்படி ஒரு குதிரை கிடைக்குமா என்று வியப்போம்!

 

அஸ்வமேத யக்ஞம் நான்கு புரோகிதர்களால் செய்யப்படும். அரசனின் நான்கு மனைவியர் கூடவே இருக்க வேண்டும். குதிரையைத் தொடர்ந்து 400 வீரர்கள் செல்ல வேண்டும். அரசனுடன் எட்டு ஆலோசகர்கள் செல்ல வேண்டும் . எல்லாம் நான்கு என்ற எண்ணின் மடங்குகள்! ஏன்?

 

நான்கு புரோகிதர்களும் ஒரு வாரத்துக்கு முன் சந்திப்பர். அப்பொழுது அரசன் கொடுத்த அரிசிக் கஞ்சியை சாப்பிடுவர். அரசன் ஒவ்வொரு புரோகிதருக்கும் 1000 பசுமாடுகளும் தங்கமும் தருவான். அவர்கள் நால்வரும் அரசனின் கழுத்தில் தங்கச் சங்கிலி ஒன்றைக்கட்டுவர். குதிரையைத் தர்பைப் புல்லைக் கொண்டு சுத்தம் செய்வர்.

(இன்றும்கூட பிராமணர்கள் தர்பைப் புல்லை வைத்துதான் சுத்தப்படுத்துவார்கள். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இப்படி பின்பற்றப்படும் ஒரு வழக்கம் வேறு எந்த கலாசாரத்திலும் இல்லை!).

 

அஸ்வமேதக் குதிரை ஓராண்டுக்கு அது இஷ்டப்பட்ட இடங்களுக்கு எல்லாம் செல்லும்’ அந்த நாடுகள் எல்லாம் அரசனின் தலைமையை ஏற்கவேண்டும். அல்லது அவனுடன் சண்டை போட்டு வெல்ல வேண்டும்.

அச்வமேதக் குதிரையைச் சுற்றி 100 குதிரைகள் செல்ல வேண்டும்.

அந்தப் பிரதான குதிரைக்கு ஒவ்வொரு ராணியும் 1000 முத்துகள் உடைய மாலையைச் சூட்டவேண்டும் என்று ஆபஸ்தம்ப ச்ரௌத சூத்திரம் சொல்லும். 4X1000 = 4000 முத்துக்கள்.

 horse-sacrifice2

எனது கருத்து:

இந்த முத்துகளும், யாகத்தில் கொடுக்கப்பட்ட தங்கமும் எங்கிருந்து வந்தன? தென் கடல் முத்தாக இருந்தால் வேத காலத்திலேயே அவர்களுக்கு தென்னாட்டு உறவு இருந்தது தெரிகிறது. மற்ற நாட்டு முத்தானால் அவர்களுக்கு கடல் சார் வணிக உறவுகள் இருந்தது நிரூபணமாகிறது. சில பரதேசிகள், வேத கால இந்துக்களுக்கு “கடல்” என்றால் என்ன என்று தெரியாது என்று எழுதின!

 

 

யக்ஞத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பல எண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். குறிப்பிட்ட எண்ணுடைய காட்டு மிருகங்கள், வீட்டு மிருகங்கள், 13 ஆசீர்வாதங்கள், 13 கம்பங்கள் என்று பல எண்கள் குறிப்பிடப்படுகின்றன; ஏன் என்பதற்கு பல விளக்கங்கள் கூறப்பாட்டாலும் இது மிகவும் திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட யாகம் என்பதை அறிய முடிகிறது.

எனது கருத்துகள்:

ரிக் வேதத்திலேயே மூன்று மண்டலங்களில் குறிப்பிடப்படும் அஸ்வமேதம், வேத கால மக்கள் கணிதத்தில் எவ்வளவு முன்னேறியவர்கள் என்பதைக் காட்டும் அது மட்டுமல்ல. தங்கமும் ஆயிரக்கணக்கான பசுமாடுகளும் அவர்களுடைய செல்வ வளத்தை காட்டும். நூற்றுக் கணக்கான குதிரைகள் பயன்படுதப்பட்டன. அரிசிச் சோறு பயன்படுத்தப்பட்டதால் அவர்கள் இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளை சேர்ந்தவர்கள் என்பதும் தெளிவாகிறது.

 

வேத காலத்தில் அரசர்கள் இருந்ததும் அவர்கள் பெரிய யாகங்களை நடத்தி தனது தலைமையை நிலைநாட்டியதும் இந்த யக்ஞத்தால் புலனாகிறது. ஆரியர்களை நாகரீகம் தெரியாத நாடோடிகள் என்று எழுதிய பரதேசிகளுக்கு இது செமை அடி கொடுக்கிறது. ஒரு பக்கம் அஸ்வமேதத்தைக் குறை கூறி எழுத பல உண்மைகளை மறைத்து அரைகுறை விஷயங்களை எழுதியதும் அம்பலம் ஏறுகிறது.

(பரதேசி = வெளிநாட்டான்)

உலகில் வேறு எந்தப் பகுதியிலும் இது போன்ற யக்ஞங்கள் இல்லை. ஆனால் இமயம் முதல் குமரி வரை இந்த யாக யக்ஞங்கள் இருந்ததை புறநானூற்றுப் பாடல்கள் உரைக்கின்றன. இவ்வளவு பெரிய பரப்பில் இவ்வளவு பெரிய நாகரீகம்–கலாசாரம் உலகில் வேறு எங்கும் இருந்ததில்லை. இன்றைய பரப்பளவில் பாரதம், உலகில் ஏழாவது பெரிய நாடு. 2000 ஆண்டுகளுக்கு முன்னரோ உலகில் நாம்தான் “ஒரே கலாசாரம்” உள்ள பெரிய நாடு.

 

யக்ஞத்தில் பயன்படுத்தப்பட்ட மிருகங்களை எண்ணிப் பார்த்தால் 609 என்று வருகிறது ஆனால் அவை அனைத்தும் இறுதியில் உயிருடன் விடப்பட்டன என்றே தெரிகிற து அகநானூற்றில் கூட, வெளியே உலாவரும்  வேள்விக்குண்ட ஆமை ஒன்றை உவமையாகக் கூறுகின்றார் ஒரு புலவர்.

 

மேலும் இந்த யக்ஞம் பற்றி விரிவாகப் பேசும் சதபதப் பிராமணம் என்னும் நூலே உயிர்ப்பலியை எதிர்த்துப் பேசுகிறது. யாகத்தில் மாவினால் செய்யப்பட்ட உருவங்களைப் போடுவதே சிறந்தது என்றும் செப்புகிறது. அடையாளபூர்வமாக ஓரிரு மிருகங்கள் பலியிடப்பட்டதாகவும் ஊகிக்க முடிகிறது.

 

இன்று,  மதத்தின் பெயரால் பலியிடப்படும் மனிதர்கள், ஒட்டகங்கள், ஆடுகள், மற்றும் உணவுக்காக (சாப்பிடுவதற்காக) நாள் தோறும் கொல்லப்படும் கோடிக்கணக்கான உயிரினங்களை ஒப்பிடுகையில் இது ஆற்று மணல் துகள் அளவே என்று சொல்லலாம்.  ஏனெனில் அஸ்வமேதம் செய்த  அரசர்களின் எண்ணிக்கை இந்திய வரலாற்றில் மிகக்குறைவு. சுமார் 30 பேர்தான் . வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் அதற்கும் குறைவே. ஆகையால் உலகில் யாரும் இது பற்றிப் பேச தார்மீக உரிமை இல்லை.

aswamedha

குஷ்டரோகி!

 

யாகத்தின் முடிவில் எல்லோரும் ஊர்வலமாகச் சென்று ஒரு குளத்தில் குளிக்க வேண்டும். வருண பகவானுக்காக ஒரு குஷ்ட ரோகியின் தலையில் வெண்ணை அபிஷேகம் செய்யப்படும். அந்த மனிதனை 1000 பசுக்கள் கொடுத்து விலைக்கு வாங்க வேண்டும் என்று சாங்க்யாயன ச்ரௌத சூத்திரம் சொல்லுகிறது.அவன் அத்ரி குலத்தைச் சேர்ந்த பிராமண குஷ்ட ரோகியாக இருக்க வேண்டும்! ஏனெனில் வருண பகவான் குஷ்டரோகி வடிவம் எடுக்கிறாராம். அவனை ஆற்றில், வாய்க்குள் நீர் புகும் வரை, முழ்க வைத்து பின்னர் வீட்டுக்கு அனுப்பிவிடுவர். பின்னர் அதே இடத்தில் எல்லோரும் குளித்துவிட்டு புத்தாடை அணிவர்.

 

சிறைக்கதிகளை அந்த இடத்திற்கு அழைத்து வந்து அவர்களையும் குளிக்கச் செய்து விடுதலை செய்துவிடுவார்கள்.

 

மஹாபாரதம், ராமாயணம் முதலிய சம்ஸ்கிருத நூல்களில் அஸ்வமேதம் பற்றிப் பல செய்திகள் உள்ளன.

 

வள்ளுவனும் மனுவும்

 

அவி சொரிந்  தாயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர் செகுத்து ண்ணாமை நன்று (குறள் 259)

 

தீயில் அவியைப் போட்டு ஆயிரம் வேள்விகளைச் செய்வதைப் பார்க்கிலும் ஒன்றன் உயிரைக் கொன்று அதன் மாமிசத்தைத் தின்னாமல் இருப்பது மேலானது.

அவி= அரிசிச் சோறு+நெய்

 

இது மனு ஸ்மிருதியின் எதிரொலி; அவர் கூறியதையே வள்ளுவரும் வேறு விதமாகக் கூறுகிறார் (மனு. 5-53)

“ஓராண்டுக்கு ஒரு அஸ்வமேத யக்ஞம் வீதம் நூறு ஆண்டுகளுக்கு நூறு அஸ்வமேதம் செய்பவருக்கு என்ன பலன் கிடைக்குமோ அது ஒருவன் புலால் உணவைச் சாப்பிடாததால் கிடைக்கும்.”

 

100 அஸ்வமேதம் செய்தால் அவர்களுக்கு இந்திரன் பதவி கிடைக்கும் என்றும் நமது சாத்திரங்கள் சொல்லும். அந்த அளவுக்குப் பெருமை பொருந்தியது மாமிசம் உண்ணாமை!

 

Books used:-

 

The Asvamedha – by Subhas Kak; 2002

 

The Vedic horse sacrifice –  by Stephen Fuchs

 

Xxx

 

My Old Article on the same subject

 

அகநானூறு ஆமை ரகசியம் அம்பலம்! (Post No.3028)

Research Article written by london swaminathan

Date: 2nd  August 2016

Horse headed Seer: Rig Veda Mystery No.1; Research Paper written by London

No.1255; Dated 27th August 2014.

 

 

–சுபம்–

அகநானூற்றுப் பாடலில் யாக குண்ட ஆமை!! புரியாத புதிர்!!! (Post No 2607)

charles-yaga

படம்: பிரிட்டிஷ்  இளவரசர் சார்ல்ஸ், கெமில்லா பார்க்கர், சுவாமி ச்தானந்த சரஸ்வதி

Research article written by london swaminathan

Date: 7 March, 2016

 

Post No. 2607

 

Time uploaded in London :–  9-26 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; 

 

 

எனது பிளாக்கிலுள்ள 2600 கட்டுரைகள் குறித்து, நாள் தோறும் எனக்கு  ஈ மெயில் மூலம் வரும் பல கடிதங்களில் ஒன்று இதோ:–

 

சார்,
அகநானூறு 361
‘தூ மலர்த் தாமரைப் பூவின் அம் கண்,
மா இதழ்க் குவளை மலர் பிணைத்தன்ன,
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழைக் கண்,
அணி வளை முன்கை, ஆய் இதழ் மடந்தை
வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும்,    (5)
கவவுப் புலந்து உறையும் கழி பெருங் காமத்து
இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல்’ என
அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய்,
பொருள் புரிவுண்ட மருளி நெஞ்சே!
கரியாப் பூவின் பெரியோர் ஆர,     (10)
அழல் எழு தித்தியம் அடுத்த யாமை
நிழலுடை நெடுங் கயம் புகல் வேட்டாஅங்கு,
உள்ளுதல் ஓம்புமதி, இனி நீ, முள் எயிற்று,
சில் மொழி, அரிவை தோளே பல் மலை
வெவ் அறை மருங்கின் வியன் சுரம்,     (15)
எவ்வம் கூர, இறந்தனம், யாமே.

பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. –
எயினந்தை மகனார் இளங்கீரனார்

சார்,

இந்த பாடலின் பொருள் என்ன?
உயிர் பலியிடுதலை (ஆமை) சொல்கிறதா?

 

Yours sincerely

XXXX

rudra-baba

படம்: அதிருத்ர மஹா யக்ஞம், ஸ்ரீ சத்ய சாய் பாபா

 

இந்தப் பாடல் எனக்கும் பல ஆண்டுகளாகப் பொருள் விளங்காத பாடல். டாக்டர் இரா. நாகசாமி போன்ற சம்ஸ்கிருதமும், தமிழும் நன்கறிந்த ஒருவர்தான் இதற்கு சரியக விளக்கம் தர முடியும்.நானும் கொஞ்சம் முயற்சி செய்கிறேன்.

 

இபோதுள்ள பொருள்:

வாடாத மலரையுடைய தேவர் உண்பதற்காகத் தீ ஓங்கிய வேள்விக் குண்டத்தில் இடப்பட்ட ஆமை தான் முன்பு இருந்த நிழல் பொருந்திய பொய்கையில் போவதைப் போல

 

—என்பது நூல்கள் தரும் விளக்கம். ஆனால் இந்த உவமை அங்கு பொருத்தமாகவுமில்லை. மேலும் மக்கள் நன்கறிந்த ஒரு விஷயத்தைத்தான் உவமையாகக் கொடுக்கவேண்டுமென்பது செய்யுள்விதி. அவ்வகையிலும் இது பொருத்தமில்லை. ஏனெனில் அஸ்வமேத யாகத்தில் பலியிடப்படும் நூற்றுக் கணக்கான தாவரங்கள், பிராணிகள், ஹோமத் திரவியங்களில் ஒன்று , ஆமை, எனப் படித்திருக்கிறேன்.

 

மனு தர்ம சாஸ்திரத்தில், இறந்து போன முன்னோர்களுக்கு திதியில் (திவசத்தில்) வழங்கக்கூடிய மாமிசப் பொருட்களில் ஆமை மாமிசமும் ஒன்று. ஆனால் இதை மூன்று வருணத்தாரில் யார் வழங்கினர், எப்படி வழங்கினர் என்பதற்கு விளக்கமில்லை. வேள்வியில் வழங்கினரா, அல்லது, கண்ணப்ப நாயனார் செய்ததுபோல நைவேத்தியம்/படையல் செய்தனரா என்பதையும் அறியோம்.

 

அகநானூற்றுப் பாடலோ ஒரு ‘செக்ஸி’ (sexy) பாடல் (அவளுடைய வார் (Bra ப்ரா) அணிந்த முலைப்பரப்பு முயக்கத்தை ஒரு நூல், இடையில் தடுப்பதாயினும் அதை வெறுக்கும் மிகப் பெரிய காதலுடன் இன்பம் அனுபவிக்கும் ) . அதிலும் பிராமணரல்லாத ஒரு புலவர் (?) இப்படிப் பாடியதை, நாம் ஒப்புக்கொண்டால் தமிழ் நாட்டில் யாக யக்ஞங்கள் மிக, மிகப் பெரிய அளவில் – குறிப்பாக மன்னர்கள் மட்டுமே நடத்தும் அஸ்வமேத யாகம் — நடந்திருக்கிறது என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும். அல்லது செக்ஸி கவிதையில் இப்படி ஒரு உவமை வராது!

 

(முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டியன் அஸ்வமேத யாகம் நடத்தி, குதிரைப் படத்துடன் நாணயம் வெளியிட்டது பற்றியும், பாண்டியர்கள் இப்படி அஸ்வமேத யாகம் நடத்தி அவப்ருத ஸ்நானம் செய்வது பற்றி காளிதாசன் ‘ரகுவம்ச’ காவியத்தில் பாடியது பற்றியும் எனது முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் சொல்லியிருகிறேன்)

பாடல் வரி ‘கரியாப்பூவின் பெரியோர்’ = வாடாத மலருடைய பெரியோர்கள்= தேவர்கள். இவர்கள் வெளி உலக (Extra Terrestrials எக்ஸ்ட்ரா டெர்ரெஸ்ட்ரியல்) மனிதர்களா? என்றும் ஒரு ஆர்ச்ச்ய்ச்சிக் கட்டுரை எழுதியிருக்கிறேன். தேவர்களுக்கு வியர்க்காது, தேவர்கள் செக்ஸ் (Sex) செய்ய முடியாது, தேவர்களின் கால்கள் நிலத்தில் படியாது, தேவர்கள் போட்டுக்கொண்ட பூ மாலைகள் வாடாது, தேவர்கள் நினைத்த மாதிரத்தில் காற்று வழியாக பல உலகங்களுக்குச் செல்ல முடியும், தேவர்கள் கண் சிமிட்டமாட்டார்கள் –என்று நமது புராணங்கள் வருணிப்பதால் இவர்கள் – வெளி உலக வாசிகள் (ET) என்றும் முன்னரே ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியுள்ளேன்.

தித்தியம்= வேள்விக் குழி (யாக குண்டம்); வியப்பான விஷயம்! சுமார் 30,000 வரிகளையுடைய சங்க இலக்கியத்தின் 18 புத்தகங்களில், இந்த தித்தியம் என்னும் சொல், ஒரே இடத்தில்தன் கையாளப்பட்டுள்ளது! இது சம்ஸ்கிருதச் சொல்லா என்பதையும் ஆராய வேண்டும். ‘தைத்ய’ என்றால் திதி என்னும் பெண்ணின் மைந்தர்களான தைத்யர்கள், அதாவது அசுரர்கள். அந்தப் பொருளும் இங்கே பொருந்தாது.தித்தி, தித்தன் – என்ற சொற்கள் பல இடங்களில் வருகிறது. அவற்றின் பொருளும் இங்கே பயன்படா.

–subham–

 

மீன்களுக்குப் பிடிக்காத நீர்நிலை எது? எதனால்? சம்ஸ்கிருத புதிர்

boat, bridge

Written by S NAGARAJAN

Post No.1853; Date: 9 May 2015

Uploaded at London time: 14-29

 

சம்ஸ்கிருதச் செல்வம்பாகம் 3

கவிதைப் புதிர்களின் தொடர் வரிசையில் இன்னும் ஒரு பஹிர் ஆலாப வகை புதிர்:

 

கீத்ருக் கிம் ஸ்யான்ன மத்ஸ்யானாம் ஹிதம் ஸ்வேச்சாவிஹாரிணாம் I

குணை: பரேஷாமத்யர்தம் மோததே கீத்ருஷ: புமான் II

 

தங்கள் இஷடம் போல விளையாட நினைக்கும் மீன்களுக்கு எது, எதனால் பிடிக்காமல் இருக்கும்? இதற்கான விடை விமத்சரா –  இதன் பொருள் ; நீரிலேயே வாழும் பறவைகள்

 

ஏன் என்று சுலபமாகப் புரிந்து கொள்ளலாம். நீர் நிலைகளையே ஆதாரமாகக் கொண்டு வாழும் பறவைகளுக்கு உணவு அந்த நீர் நிலைகளில் வாழும் மீன்கள் தானே! ஆகவே தான் அப்படிப்பட்ட பறவைகள் வாழும் இடத்தில் வசிக்கவே அவை அஞ்சும்!

 

மற்ற மனிதர்களின் நல்ல குணங்களினால் எப்படிப்பட்ட மனிதன் சந்தோஷமடைகிறான்?

 

விடை : விமத்சரா: பொருள் : பொறாமை அற்ற ஒரு மனிதரால்.

விமத்சரா: என்ற ஒரே சொற்றொடரை இரு விதமாகப் பிரித்தால் அது இரு வேறு கேள்விகளுக்கு விடையை அளிக்கிறது.

 

இன்னொரு புதிர்:

கீத்ருக் தோயம் துஸ்தரம் ஸ்யாத் திதீர்ஷோ:                                                       

கா பூஜ்யாஸ்மின் கட்கமாமந்த்ரயஸ்வ  I                                   

த்ருஷ்ட்வா தூமம் தூரதோ மானவிஞ்ஞா:                                              

கிம் கர்தாஸ்மி ப்ராதரேவாஷ்ரயாஷம்  II

 

இது சாலினி என்ற சந்தத்தில் அமைந்துள்ள ஒரு புதிர் செய்யுள்.

 

ஒருவன் கடந்து செல்ல விரும்பும் போது எந்த நீர் நிலை (நதி) கடந்து செல்ல மிகவும் கஷ்டமானது? (தோயம் என்றால் நீர் அல்லது இங்கு நீர்நிலை/நதி)

 

இதற்கான விடை: நுபடகு இல்லாத போது

 mum and child deepu bhat

மதிக்கப்பட வேண்டியவர் மாதா (தாயார்)

மதிப்பதற்குத் தகுதியானவர் யார்?

இதற்கான விடை : மாதா (தாயார்)

 

வாளை எப்படி அழைப்பது? –

இதற்கான விடை: ஆஸே!  ( கத்தியே என்று)

மிக்க அறிவார்ந்தவர்களே, தூரத்தில் புகையைக் கண்டால் நான் என்ன செய்வது?

இதற்கான விடை: அனுமாதாஸே (காலையிலேயே தீ இருப்பதை அனுமானத்தால் அறியலாம்)

 

இப்படி, அனுமாதாஸே என்ற ஒரே சொற்றொடர் நான்கு கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறது.

 shivaji sword

வீர சிவாஜியின் கத்தி

விடை தெரிந்து புதிர்களைக் கையாள்வது சுலபம். விடை தெரியாமல் இருக்கும் போது சம்ஸ்கிருதத்தில் சொற்விற்பன்னராக இருக்கும் ஒருவர் மட்டுமே விடையைச் சரியாகக் கூற முடியும், இல்லையா!

*************