
WRITTEN BY S NAGARAJAN
Post No. 9841
Date uploaded in London – 12 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures
புராணத்துளிகள் மூன்றாம் பாகம்-அத்தியாயம் 11 கட்டுரை எண் 9807 வெளியான தேதி
3-7-2021
புராணத்துளிகள் : மூன்றாம் பாகம் – அத்தியாயம் 12
(34 முதல் – 40 முடிய)
ச.நாகராஜன்
34. எது சிறந்த செயல்?
தத் கர்ம ஹரிதோஷம் யத் ஸா வித்யா தன்மதிர்யயா |
தத் வர்ணம் தத் குலம் ச்ரேஷ்டம் ததாஸ்ரமம் சுபம் பவேத் ||
ஸ்ரீமத் பாகவதம் 4/29/49
எது ஹரிக்குத் திருப்தியாக இருக்கிறதோ அதுவே சிறந்த செயல். அவனை நோக்கி பக்தி செலுத்தச் செய்வது எதுவோ அதுவே சிறந்த வித்யா. அவனது பாதகமலத்தை நோக்கி எந்த ஜாதி மனதை இட்டுச் செல்கிறதோ அதுவே சிறந்த ஜாதி. எந்த குலம் அவனை நோக்கி இட்டுச் செல்கிறதோ அதுவே சிறந்த குலம். எந்த ஆஸ்ரமம் (வர்ணாசிரம தர்மங்கள்) அவனை நோக்கி இட்டுச் செல்கிறதோ அதுவே புனிதமானது.
*
ஹரிதேஹப்ருதாமாத்மா ஸ்வயம் ப்ரக்ருதிரீஸ்வர: |
தத்பாதமூலம் சரணம் யத: க்ஷேமோ ந்ருணாமிஹ ||
ஸ்ரீமத் பாகவதம் 4/29/50
ஸ்ரீஹரியே ஆத்மா. ப்ரக்ருதியும் (இயற்கை) ஈஸ்வரனும் (எங்கும் நிறைகின்ற இறைவன்) உடல் சார்ந்தவை. அவனது பாத கமலங்களில் சரணடைவது எல்லா க்ஷேமத்தையும் (நலத்தையும்) தரும்.
*
36. எவனை வித்வான் என்று கூறலாம்?
ஸ வை ப்ரியதமஷ்சாத்மா யதோ ந பயமன்வபி |
இதி வேத ஸ வை வித்வான் யோ வித்வான் ஸ குருர்ஹரி: ||
ஸ்ரீமத் பாகவதம் 4/29/51
அவரே (ஸ்ரீஹரியே) அனைவருக்கும் பிரியமானவர். அவரிடமிருந்து கிஞ்சித்தும் பயம் எழாது. எவன் ஒருவன் இதை அறிகிறானோ அவனே வித்வான் (அனைத்தும் அறிந்தவன்). அவனே அவனுக்கு குரு கடவுளும் அவனும் ஒன்றாகிறான்.
*
37. ஆயிரம் ஜன்மம் கழித்து வருவது எது?
ந்ருணாம் ஜன்ம ஸஹஸ்ரேன பக்தௌ ப்ரீதிர்ஹி ஜாயதே |
கலௌ பக்தி: கலௌ பக்திதர்பக்த்யா க்ருஷ்ண: புரஸ்தித: ||
பத்ம புராணம் (உத்தர காண்டம்) 194/19
பக்திக்கென ஆயிரம் ஜன்மங்கள் கடுமையான முயற்சி செய்த பின்னரே ஒருவனுக்கு இறைபக்தி வருகிறது. கலியுகத்தில் பக்தி ஒன்றே நமக்கான புகலிடம். பக்தியினால் ஸ்ரீகிருஷ்ணரின் தரிசனம் கிட்டுகிறது.
*
38. பக்தர்களில் சிறந்த பக்தர் யார்?
யே மே பக்தஜனா: பார்த்த ந மே பக்தாஸ்ச தே ஜனா: |
மத்பக்தானாஞ்ச யே பக்தா: தே மே பக்ததமா மதா: ||
ஆதிபுராணம் – 112/91
என்னிடம் மட்டுமே பக்தி செலுத்துபவர் எனது பக்தனாக மாட்டார். என்னிடம் பக்தி செலுத்தும் பக்தனிடம் பக்தி செலுத்துபவரே எனது சிறந்த பக்தராவார்.
*
39. எந்தப் பாவம் போகவே போகாது?
அத்யுக்ரோ வைஷ்ணவத்ரோஹோ வேதாதிஷு ஸுவிஸ்ருத: |
ந சக்யதே வாரயிதும் கல்பகோடிஷதரைபி: ||
ஆதிபுராணம் – 112/91
வைஷ்ணவர்களுக்கு துரோகம் இழைப்பவர்களின் பாவமானது கோடி கோடி கல்பங்கள் ஆனாலும் போகாது, தீர்க்க முடியாது என்று வேதங்கள் அறைகின்றன. (வைஷ்ணவன் – தூய பக்தன்)
*
40. மூவுலகங்களிலும் துன்பப் படுபவர் யார்?
பக்தித்ரோஹகரா யே ச தே சீதந்தி ஜகத்ரயே |
துர்வாஸா துக்கமாபன்ன: புரா பக்திவிநிந்தக: ||
பத்ம புராணம் (உத்தர காண்டம்) 194/20
பக்திக்கு எவர் ஒருவர் தீங்கு இழைக்கிறாரோ அவர் மூவுலகங்களிலும் துன்பப் படுவார். ஒரு பக்தனைத் தூற்றியதால் துர்வாஸர் துக்கத்திற்குள்ளானார்.
(குறிப்பு : துர்வாஸரின் கதை அனைவரும் அறிந்த ஒன்று. அம்பரீஷனை அவர் அவமதித்ததால் அவர் பெரும் அல்லலுக்கு உள்ளானார்)
***
INDEX
ஸ்ரீமத் பாகவதம்,ஆதிபுராணம்,பத்ம புராணம் (உத்தர காண்டம்) ஸ்லோகங்கள்
சிறந்த செயல் ஹரி பக்தியே
ஹரி சரணாகதியே சகலமும் தரும்
ஹரியை அறிபவனே வித்வான்
பக்தர்களிடம் பக்தி செலுத்துபவனே சிறந்த பக்தன்
வைஷ்ணவ துரோகம் என்ற பாவம் கோடி கல்பமானாலும் போகாது
பக்தனை அவமதிப்பவன் மூன்று உலகங்களிலும் துன்பப்படுவான்
நன்றி : Truth Vol89, No 2 Dated 23-4-21 (Slokas taken from this issue)
***
tags – சரணாகதி, புராணத்துளிகள்,
