ரிக் வேதத்தில் எவருக்கும் புரியாத  பேய்கள், தேவதைகள்!-1 (Post.10,202)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,202

Date uploaded in London – 12 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக் வேதத்தில் எவருக்கும் புரியாத  பேய்கள், தேவதைகள்!-1

ரிக் வேதம் உலகின் பழமையான நூல், உலகின் முதல் கவிதைத் தொகுப்பு (ANTHOLOGY)  , இன்றும் பயன்படுத்தப்படும் உலகின் ஒரே பழைய நூல் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமே இல்லை. தள்ளிப்போன, உதவாக்கரை வெளிநாட்டு மண்டுகளும் ஒப்புக்கொள்ளும் விஷயம் இது. ஆனால் , வேடிக்கை என்னவென்றால், இப்போது இந்துக்களின் கல்யாணங்களில் பயன்படுத்தப்படும் மந்திரங்களில் உள்ள பல  சொற்களுக்குக் கூட  நமக்கு அர்த்தம் தெரியவில்லை. சிலர் அவைகளை ஆடைகள் என்பர்; சிலர் அவைகளை தேரின் பாகங்கள் என்பர். தினமும் மாட்டு மாமிசம் சாப்பிடும் பசுக்கொலை பாதகர்கள், அவை கல்யாண விருந்தில் வெட்டப்பட்ட மாமிசத் துண்டுகள் என்பர் . அதாவது ‘நீரளவே ஆகுமாம் நீராம்பல், தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு’ என்பதற்கு இலக்கணமாகத் திகழ்வர்.

இந்துக்களைப் பொறுத்தமட்டில் எங்களுக்கு அர்த்தமே தேவை இல்லை ; மனித குலம் வாழும் வரை இவைகள் ஒலிக்கட்டும்; நன்மைகள் வந்தெய்தும்; தீமைகள் எல்லாம் நலியும் என்பதே. இந்தக் கொள்கையை அவர்கள் கடைப்பிடித்திராவிடில் இன்று நம் கைகளில் வேதம் தவழாது ; வாய்களில் வேதம் முழங்காது.

குறிப்பாக ஒருவர் இறந்த பின்னர் 12 நாட்களில் ஓதப்படும் மந்திரங்களின் அர்த்தம் முழுதுமாக புரிவதில்லை. வெள்ளைக்காரர்கள் 30 பேர், ஆளுக்கு ஒரு கருத்து எழுதி இருக்கின்றனர். இன்று விக்கி பீடியாவில் கிடைக்கும் RALPH T H GRIFFITH கிரிப்பித் மொழிபெயர்ப்பின் அடிக்குறிப்புகளில் (FOOT NOTES) ‘எனக்கு அர்த்தம் புரியவில்லை’ என்று பக்கத்துப் பக்கம் எழுதியிருக்கிறார். வேதத்தை முழுதும் படிப்போருக்கு இது விளங்கும்.

நான் ரிக்வேதத்தைக் கரைத்துக் குடித்த கூத்தனுர் ஸ்ரீ சிங்கார சுப்ர மண்ய சாஸ்திரிகளுக்கு ‘உபந்யாச செக்ரடரி’யாக’ இருந்தேன். மதுரை வரும்போதெல்லாம் அவரது உபன்யாசத்துக்கு டி.வி.எஸ். (T V S) நிறுவனத்தார் கார் அனுப்புவார்கள். என் வீட்டிலிருந்து அவருடன் கூடவே சென்று அவர் உபன்யாசத்தைக் குறிப்பு எடுத்து தினமணிப் பத்திரிகையில் பிரசுரிப்பேன்.

அவர் காஞ்சி பராமசாரிய சுவாமிகள் வைத்த ரிக் வேத பரீட்சையில் தேறி, ஒரு வீடு, பசு மாடு, சால்வை, தங்கக் காசு பெற்றவர். காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் இந்த நிலவுலகில் எவ்வளவு காலம் வாழப்போகிறார் என்பதைச் சொன்னவர். “ஏய் சிங்காரம் !என் கைகளில் அக்ஷதையைப் போடு என்று சொல்லி, அதில் கைகளில் தங்கியதை மட்டும் எண்ணிப் பார்த்து ‘ஓ நான் இவ்வளவு ஆண்டுகள் இருப்பேனா’ என்று வியந்தாராம். சாஸ்திரிகளுக்கே தெரிந்திருக்காது எதற்காக அக்ஷதையைப் போடச் சொன்னார் என்று; பின்னர்தான் தெரிந்திருக்கும் . நான் ஆர்வத்துடன் எத்தனை ஆண்டுகள்? என்று சாஸ்திரிகளைக் கேட்டபோது ‘அதல்லாம் சொல்லப்படாது’ என்று பிராமண  பாஷையில்  பதில் சொல்லிவிட்டார்.

ராமாயண உபன்யாசத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாக வேத மந்திரங்களை முழங்குவார். வீட்டிற்கு வரும்போது இரவு 10 மணி ஆகிவிடும். முதல் நாள் உபன்யாசத்தில் சொன்ன வேத மந்திரங்களை மறுநாள் காலையில் கேட்டு எழுதி இயன்றவரையில் மதுரை தினமணியில் வெளியிட்டோம்.

வீட்டில் என் அம்மா சாப்பாடு பரிமாறும்போது உங்களுக்கு என்ன வேண்டும்? என்று சொல்லுங்கோ அதை இரவு போஜனத்துக்கு செய்து வைக்கிறேன் என்பார். நாங்கள் எல்லோரும் ஏதோ அரிசி உப்புமா அல்லது இட்டிலி, தோசை என்று சொல்லுவாரோ என்று ஆர்வத்தோடு காது கொடுத்து நிற்போம். அவரோ “நீங்கள் எல்லோரும் பரம க்ஷேமமாக இருக்க வேண்டும்” என்று திருவாய் மலர்ந்து அருளுவார். அப்பேற்பட்ட வேத விற்பன்னர்களுக்கும் கூட வேதத்தின் ‘அர்த்தம்’ பெரிதல்ல.

நேரடியாக சப்ஜெக்டுக்கு வருகிறேன்.

பத்தாவது மண்டலத்திலுள்ள மந்திரங்களை முதலில் எடுத்துக் கொள்வோம் .

குளத்தின் நடுவில் பறவை வசிக்கிறது

10-5-1

‘பறவை சுனையின் நடுவே வசிக்கிறது’

ஆஹா, ஒரு கொக்கு அல்லது நாரை , வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில்  உள்ளது போல  ஏரியின் நடுவில் மரத்தில் கூட்டு கட்டி வசிக்கிறது என்று நம் நினைப்போம்; ஆனால் விமர்சகர்களெழுதியது : ‘சூரியன் (பறவை) கிழக்கே (சுனையில்) உதிக்கிறான்’ என்பதாகும். ஆகையால் ரிக் வேத விஷயத்தில் வெள்ளைக்காரன் போல அவசரப்பட்டு மந்திரங்களை எடைபோடக் கூடாது.

Xxx

10-5-5

ஏழு சிவப்பு சகோதரிகள்

ஏழு என்ற எண் , ஏராளமான இடங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது. சிந்து சமவெளியும் இந்த எண்ணையும் மூன்றையும் தான் அதிகம் பயன்படுத்தியுள்ளது .

‘ஏழு சிவப்பு சகோதரிகள்’ என்பதை அக்கினி தேவனின் 7 சிவப்பு நாக்குகள்’ தீக் கொழுந்துகள் என்று விமர்சித்து காளி , கராளி முதலிய 7 பெயர்களை அடுக்குகிறார் சாயன ர்.

சாயனரின் உரையை நோக்குமிடத்து புராணக் கதைகளுக்கான விதைகள் ரிக் வேதத்திலேயே ஊன்றப்பட்டது  தெளிவாகும்.

வேறு ஒரு இடத்தில் ‘ஏழு சகோதரிகள்’ என்பதற்கு பறவையியல் அறிஞர் தவே (Mr Dave) என்பவர் வங்காளத்தில் பெரும்பாலும் ஏழு ஏழாகப் பறக்கும் ஒருவகைப் பறவைகளை அவர்கள் இன்றும் ஏழு சகோதரிகள் என்று அழைப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் .

இவ்வாறு எந்த ஒரு விஷயத்துக்கும் வேதமே மூலமாக இருப்பதால்தான் மநு போன்ற பேரறிஞர்கள் உலகத்துக்கும் தர்மத்துக்கும் வேதமே மூலம் (வேர்) என்கின்றனர்.

Xxxx

वेदोऽखिलो धर्ममूलं स्मृतिशीले च तद्विदाम् ।

आचारश्चैव साधूनामात्मनस्तुष्टिरेव च ॥ Manu 2-6

தருமத்தின் ஆணிவேர் வேதங்கள்; அவைதான் புனித சட்ட திட்டங்கள் ; இதற்கு அடுத்தபடியாக வருவது பாரபர்யமாகப் பின்பற்றப்படும் நடை முறைகள்; அதாவது அவரவர் குலத்தின், குடும்பத்தின் ஆசாரம் . இதற்கும் பின்னர் ஏதேனும் சந்தேகம் வருகிறதா; அந்தக்காலத்தில் வாழும் ஒழுக்க சீலர்கள் என்ன சொல்கிறார்களோ அதுவே சட்டம் ; இதற் கெல்லாம் அடுத்ததாக மனச் சாட்சி என்று ஒன்றுள்ளது. அதுவே சொல்லும் எது தப்பு; எது சரி என்று.- மனு தர்ம சாஸ்திரம் 2-6

 “The whole Veda is the (first) root of the righteousness/ dharma/ reli-gion and sacred law, next the tradition and the virtuous conduct of those who know the Veda further, also the customs of holy men, and finally self-satisfaction”- MANU 2-6

पितृदेवमनुष्याणां वेदश्चक्षुः सनातनम् ।

अशक्यं चाप्रमेयं च वेदशास्त्रमिति स्थितिः ॥ Manu12-94॥

 “The Veda is the eternal eye of the ancestors, gods and humans; the teachings of the Vedas are impossible to master and impossible to measure; this is an established fact”- Manu 12-94

வேதங்கள் என்பன நம்முடைய மூதாதையர்களின் , கடவுளரின், மனிதர்களின் சாச்வதமான கண்கள்; வேதங்களின் அறிவுரைகளை எவரும் முழுதும் படித்தறியமுடியாது . அதன் ஆழத்தையும் எவராலும் அளக்கமுடியாது ; இது ஆதாரம் உடைய சத்தியம்/ உண்மை–  மநு ஸ்ம்ருதி 12-94

Xxx

பகவத் கீதையில் கடல் பற்றிய வருணனை வருகிறது ‘அசலப் பிரதிஷ்டம், ஆபுர்யமானம்’  என்பது அந்தவரிகள் ; அதாவது எங்கும் நிறைந்தது ;அசைக்கவெண்ணாதது .

இந்த வரிகள் வேதத்துக்கும் பொருந்தும்

விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் விஷ்ணுவை வருணிக்கையில் ‘அப்ரமேயம்’ என்பர்; அதாவது இவ்வளவு என்று அளவிட முடியாதவர். அதுதான் வேதம். சஹஸ்ரநாமத்தின் முதல் வரியே இறைவனை பூத , பவ்ய, பவத் பிரபு என்று போற்றும்; கடந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் எல்லாம் இறைவன்; அதாவது அவன் காலத்தைக் கடந்தவன்; அவ்வாறே வானிலிருந்து ரிஷிகளால் ரேடியோ அலைகளைப் போல கேட்கப்பட்ட பேருண்மைகளே வேதங்கள்.

இதனால்தான் இன்று விக்கி பீடியாவில் உங்களுக்கு இலவசமாகக் கிடைக்கும் ரிக் வேதத்தின் 10,000 மந்திரங்களை மொழிபெயர்த்த ரால்ப் டி .எச். கிரிப்பித் Griffith , பக்கத்துக்குப் பக்கம், ‘அர்த்தம் விளங்கவில்லை; தெளிவில்லாமல் இருக்கிறது;  ஒருவேளை இப்படி இருக்குமோ; Ludwick லுத்விக் இப்படி நினைக்கிறார்; Wilson வில்சன் இப்படி எழுதியுள்ளார்; சாயனர் இப்படிச் சொல்கிறார் என்றெல்லாம் அடிக்குறிப்பில் சேர்த்து வருகிறார்.  அதாவது அவரே  குழம்பி, நம்மையும் குழப்புகிறார்.

Xxx

கந்தர்வி 10-11-2

தட்சனின் மகள் சுரபி ; சுரபியின் மகள் கந்தர்வீ; அவள் ஒரு அப்சரஸ்; குதிரை இனத்தின் தாய் !! இங்கேயே புராணக்கதை வந்து விடுகிறது ஜொனாதன் ஸ்விப்ட் Jonathan Swift’s Gulliver’s Travels எழுதிய கல்லிவரின் யாத்திரை கதையை எல்லா சிறுவர்களும் படித்திருப்பார்கள். அது அரசியல் நையாண்டி ; லில்லிபுட் என்ற ஊரில் எல்லா மக்களும் கட்டை விரல் அளவுடைய மக்கள்; ஆகையால் மனித உருவமுள்ள கல்லிவரைக் கண்டு ஆச்கார்யமடைவர். இதற்கு அடுத்தபடியாக அவர் அறிவுள்ள குதிரைகள் வாழும் ஓரித்துக்குச் செல்வார். அந்தப் பெயர் ஆங்கிலேயர்களால்கூட உச்சரிக்க முடியாது. அதாவது குதிரை கணைக்கும் ஒலியைச் சேர்த்து எழுதிய பெயர்

Houyhnhnm . இந்தக் கதையை நினைவுபடுத்துகிறது  கந்தர்வீ கதை.

Xxx

 மாதலி – கவ்யர்கள்

10-14-3

மாதலி – இந்திரனின் தேரோட்டி;

கவ்யர்கள் – இறந்து போன (manes) முன்னோர்களின் ஒரு வகை.

மாதலி/ ரி பற்றிய சுவையான விஷயம்  மஹா பாரதத்தின் வன பர்வத்தில் உள்ளது ; பிரபஞ்சத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் விண்கலத்தின் பைலட் மாதரி; அவன் அர்ஜுனனை ஏற்றிக் கொண்டு இந்திரலோகம் செல்லும் போது, புண்ய ஆத்மாக்கள் ஒளி ரூபத்தில் வானவெளியில் நட்சத்திரங்களாக ஒளி வீசுவதைக் காண்கிறான். பின்னர் பூமிக்குத் திரும்புகிறான்.

ஆக மஹாபாரத மாதரியும் ரிக்வேதத்தில் வருகிறான். வியாசர் என்ற மஹாபாரத கால வரலாற்று ஆசிரியர்; முனிவர் நான்கு வேதங்களை தொகுத்ததால் மஹாபாரத, ராமாயண கதாபாத்திரங்கள் சிலரை நாம் ரிக் வேதத்தில் காண்கிறோம். அதாவது கி.மு. 3150-க்கு முன்னர் வாழ்ந்தோர் .

கவ்யர்கள் என்னும் பிதுருக்கள் (manes) பற்றி விளக்கம் இல்லை

Xxx

10-14-9 Ghosts

இப்பாடல் மயானத்தைச் சுற்றி வரும் பிசாசுகளை நோக்கி கூறப்படுவதாக சாயன பாஷ்யம் / உரை விளம்புகிறது

புறநாநூற்றில் மயானப் பேய்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. சுடுகாட்டில் திரும்பிப் பார்க்கக்கூடாது  என்ற கருத்தும் புற நானூற்றில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்டுள்ளது ( பாடல்கள் 369-372)

To be continued………………………….

tags- ரிக் வேதத்தில் , புரியாத , பேய்கள், தேவதைகள்