பெண்ணின் மனம்: ரிக் வேதம், ஷேக்ஸ்பியர், தமிழ் பாட்டு ஒப்பீடு (Post No.4220)

Written by London Swaminathan

 

Date: 17 September 2017

 

Time uploaded in London- 6-56 am

 

Post No. 4220

 

Pictures are taken from various sources; thanks.

 

 

பெண்களை தாயார் ஸ்தானத்தில் வைக்கும்போது அவர்களை இந்து மதம் புகழ்வது போல வேறு எந்த மதமும் புகழ்வதில்லை; தமிழ் சம்ஸ்கிருத நூல்களில் கண்டது போல வேறு எங்கும் கண்டதில்லை. மனு தர்ம சாஸ்திரமோ பெண்களை உச்சானிக்  கொம்பில் வைத்து போற்றுகிறது. அவர்கள் அழுதால் அந்தக் குடும்பம் அல்லது அதற்குக்  காரணமானவர் வேருடன் சாய்வர் என்று எச்சரிக்கிறார் மனு. பெண்களுக்கு நகை நட்டுகளை வாங்கிக் கொடுத்து அவர்களை எப்போதும் மகிழ்ச்சிக் கடலில் மிதக்க வைக்க வேண்டும் என்றும் உலகிற்கு புத்திமதி சொல்கிறார். சுத்த மான இடங்கள் எவை என்பதை பட்டியலிடுகையில் பெண்களின் வாய் எப்போதும் சுத்தமானது என்றும் சொல்லுகிறார் மனு (எனது பழைய கட்டுரைகளில் ஸ்லோக எண்களுடன்  மேல் விவரம் காண்க)

 

மேல் நாட்டு இலக்கியங்களில் பெண்களின் அழகை வருணிப்பர்; அவர்களைத் தூற்றுவர். ஆங்கில  மஹா கவி ஷேக்ஸ்பியர் நாடக வசனங்களிலும் இதைக் காணலாம்; கம்பனிலும் இதைக் காணலாம். நீதி வெண்பாவிலும் இதைக் காணலாம்; திருக்குறளிலும் இதைப் படிக்கலாம்.

 

ஆனால் தாய், சஹோதரி என்ற நிலையில் நாம் புகழ்வோம்; மேல்நாட்டு இலக்கியங்களில் அப்படி இல்லை!

 

அதிகம் கேட்டிராத நீதி வெண்பாப் பாடலைப் பார்ப்போம்:

 

அத்தி மலரும் அருங்காக்கை வெண்ணிறமுங்

கத்து புனல் மீன் பதமுங் கண்டாலும் — பித்தரே

கானார் தெரியற் கடவுளருங் காண்பரோ

மானார் விழியார் மனம்.

 

பொருள்:

பித்தரே= பெண் மயக்கம் கொண்ட பித்தர்களே; பைத்தியக்காரர்களே!

 

அரு = பார்ப்பதற்கு அருமையான

அத்தி மலரும் = அத்திப் பூவும்

காக்கை வெண்ணிறமும் = காக்கையின் வெள்ளை நிறமும்

கத்து புனல் மீன் பதமும் = ஒலிக்கின்ற கடலில் உள்ள பெரு மீன்களின் கால்களும்

கண்டாலும் = ஒருக்கால் பார்க்க இயன்றாலும்

(பெண்களின் மன நிலையை நம்மால் காண/ அறிய முடியாது)

(நாம் மட்டும் அல்ல)

கான் ஆர் தெரியல் கடவுளரும் = மணம் பொருந்திய மாலைகளை உடைய தேவரும்

மான் ஆர் விழியார் மனம் = மான் பார்வை போலும் மருண்ட கண்களை உடைய அப்பெ ண்களின் நெஞ்சத்தைக் காண்பரோ = காண்பார்களோ?

(அவர்களும் காண மாட்டார்)

 

ஷேக்ஸ்பியர் என்ன சொல்கிறார்?

புலியின் இதயம், பெண்ணின் அழகிய தோலுக்குள் மறைந்திருக்கிறது

ஹென்ரி 6- பகுதி 3

Oh tiger’s heart wrapped in a woman’s hide – York

Henry VI Part 3

 

ஒரு விலைமாது போல சொற்களால் என் இதயத்தைத் திறந்து காட்டுவேன்– ஹாம்லெட்

Must, like a whore, unpack my heart with words – Hamlet

 

ரிக் வேதத்தில் ஊர்வசிக்கும் (10-95) புரூருவசுக்கும் இடையே நடை பெறும் அற்புதமான உரையாடல் உளது; அதில் ஊர்வசி சொல்கிறாள்

 

வேண்டாம்; புரூருவஸ், இறந்து விடாதே, றைந்து விடாதே. கெட்ட ஓநாய்கள் உன்னை விழுங்கிவிடக் கூடாது.

 

பெண்களுடன் நிரந்தர நட்பு என்று எதுவுமே கிடையாது; பெண்களின் இதயம் புலியின் (கழுதைப் புலி) இதயம் போன்றது.

 

ஷேக்ஸ்பியர் சொன்ன அதே சொற்கள்!

Nay, do not die Puruvas, nor vanish;

let not the evil-omened wolves devour thee.

With women, there can be no lasting friendship; hearts of the hyenas are the hearts of women.

RV 10-95-15

கம்பன், வள்ளுவன், வேத கால ரிஷி, ஷேக்ஸ்பியர் ஆகியோர் எச்சரிக்கும் அழகே தனி! ஒப்பிட்டு மகிழ்க!

 

My Old Article:

  1. பெண்களின்எதிரி | Tamil and Vedas

tamilandvedas.com/tag/பெண்களின்…

Posts about பெண்களின் … பெண்களின் எதிரியா? … கம்பன், …

 

 

 

TAGS: பெண் மனம், புலியின் இதயம், ஷேக்ஸ்பியர், ரிக்வேதம், நீதி வெண்பா

 

–Subham–