கழுதை, நாய், புழு, பூச்சி– ஆகப் பிறக்கும் மாணவர் யார்? மநு பதில் (Post No.4971)

Guru Puja by Good Students

கழுதை, நாய், புழு, பூச்சி– ஆகப் பிறக்கும் மாணவர் யார்? மநு பதில் (Post No.4971)

 

Written by London Swaminathan 

 

Date: 2 May 2018

 

Time uploaded in London – 21-49 (British Summer Time)

 

Post No. 4971

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

மநு நீதி நூல்- Part 16 (Post No 4972)

 

மநு தர்ம ஸ்ம்ருதியின் இரண்டாவது பாகத் தொடர்ச்சி……

 

குரு பக்தி (Chapter Two)

Guru Puja by Vedic Pundits

 

2-175 குரு குல வாசத்தில் புலனடக்கி மறுமைப் பயன்களை அடைய பின்வரும் நோன்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும்

 

2-176.அதி கலையில் எழுந்திருக்க வேண்டும்; குளித்துவிட்டு காலையிலும் மாலையிலும் ஹோமம் வளர்க்கவேண்டும். முன்னோர்களுக்கு நீர்க்கடன் செலுத்த வேண்டும்; இஷ்ட தெய்வத்தை வழிபட வேண்டும்

 

177,178,179. குருகுல வாசத்தில் தவிர்க்கப்பட வேண்டியவை: தேன், சந்தனம், பூ, இனிப்பு, தயிர், பால், நெய், மோர், எண்ணை தேய்த்துக் குளித்தல், கண்ணுக்கு மை இடல், செருப்பு, குடை, காமம், கோபம், கூத்து, பாட்டு, சூதாட்டம், வம்பளத்தல், கோள் சொல்லுதல், பெண்களை காமத்துடன் பார்த்தல், பொய் சொல்லுதல்,துரோகம் செய்தல், கொலை,  (இவை அனைத்தும் தவிர்க்கப்ப டவேண்டியவை. யாரையும் அடிக்கக் கூடாது; வாசனைப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது

 

2-180. நோன்புக் காலத்தில் காம இச்சையால் விந்துவை வெளியேற்றக் கூடாது. பிரம்மசர்யத்தைக் காத்தல் வேண்டும்.தனியாகப் படுத்துறங்க வேண்டும்.

2-181.காம எண்ணம் இல்லாமலேயே விந்து வெளியேறினால் அதிகாலையில் குளித்துவிட்டு மூன்று முறை சூரியனை நோக்கி, எனக்கு என் புலன்களை அதன் கட்டுப்பாட்டுக்குள் வரச் செய் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.

 

2-182.குருவுக்குத் தேவையான நீர், தருப்பை, சாணம், மலர் ஆகியவற்றைக் கொண்டு தரவேண்டும்; பிக்ஷை எடுத்து உண்ண வேண்டும்.

 

2-183.வேதம், ஹோமம், சந்தியாவந்தனம் செய்யும் கிரஹஸ்தன் வீட்டில் பிக்ஷை எடுத்து சாப்பிட வேண்டும்.

 

2-184.குருவின் இல்லத்திலோ அவரது உறவினர் இல்லங்களிலோ பிக்ஷை எடுக்கக் கூடாது. வேறு எவரும் இல்லாத காலத்தே குரு அல்லது தாயாதி அல்லது அவரது உறவினர் இல்லங்களில் பிக்ஷை  எடுக்கலாம்

 

2-185. நல்ல அற ஒழுக்கம் இல்லாத ஊர்களில் மௌனமாகத் திரிந்து, பெரும் பாவிகள் அல்லாத அந்தணர் வீடுகளில் பிக்ஷை எடுக்கலாம்.

 

2-186.காட்டில் தேடிக் கொணர்ந்த சமித்துக் குச்சிக்ளை வெயிலில் அல்லது வீட்டுத் தாழ்வாரத்தில் உலர்த்தி சமிதாதானம் செய்ய வேண்டும்.

2-187.நோய் காரணமாக ஏழு நாட்கள் சமிதாதானம் முதலியவற்றைச் செய்ய முடியாவிட்டால்,  பிக்ஷை எடுக்க முடியாவிட்டால், நோன்பு முறிந்ததாக அர்த்தம்; அத்தகையோர் 11-ஆம் அத்தியாயத்தில் சொல்லப்பட்ட அவகீர்ணி நோன்பை நோற்க வேண்டும்.

 Salute to Gurus by good students

  1. பிக்ஷை எடுக்காமல் பிரம்மச்சாரிகள் பிறருடைய உணவை உண்ணக்கூடாது; அது நோன்பை முறிப்பதாகும்.

189.வேள்வி, திவசம் ஆகியவற்றுக்கு அழைத்தால் கள், மாமிசம் தவிர்த்த உணவுகளை முனிவர்கள் போல சாப்பிடலாம். அது நோன்பை முறித்ததாகாது.

 

  1. பிரம்மசாரிகள் தவிர வேறு யாருக்கும் இப்படிச் செய்ய அனுமதி இல்லை.

 

191.குரு கட்டளை இட்டாலும் இடாவிட்டாலும் வேதம் ஓதுதலும், குருவை வணங்குதலும் பிரம்மச்சாரிகளின் கடமை ஆகும்.

 

192.குருவை நோக்கி கை கூப்பி நிற்க வேண்டும்; அப்போது மனம் மொழி மெய் ஆகிய மூன்றும் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

193.மேலாடைக்கு வெளியே வலக்கரம் தெரியுமாறு மேலாடை அணிய வேண்டும். குரு கட்டளையிட்டால் ம றைக்க வேண்டிய உறுப்புகளை மறைத்து அடக்கத்துடன் அமர வேண்டும்.

 

  1. குருகுல வாசத்தில் சுவையான உணவை நாடி ஓடக்கூடாது. அலங்காரம் செய்து கொள்ளக் கூடாது. குருவுக்குப் பின் தூங்கி முன் எழுதல் வேண்டும்.

 

195.குருவின் கட்டளைகளை நடந்து கொண்டோ, உட்கார்ந்து கொண்டோ, படுத்துக் கொண்டோ,  கவனக் குறைவாகவோ கேட்கக் கூடாது. பதில் பேசக் கூடாது.

196.குரு உட்கார்ந்து இருக்கையில் மாணவன் நின்று கொண்டும், அவர் நிற்கும் போது அருகில் நின்றும்,   அவர் அருகில் வந்தால் அவரை நோக்கியும், அவர் நடந்தால் அவர் பின்னால் ஓடியும்,

  1. அவர் வேறு சிந்தனையில் இருந்தால் அவர் அருகில் சென்றும், அவர் படுத்துக் கொண்டிருந்தால் அவரை வணங்கி நின்றும், தொலைவில் இருந்து பேசினால் அருகே சென்றும் கட்டளையைக் கேட்டு பதில் தர வேண்டும்.

Guru’s Blessings

198.குருவின் படுக்கை, ஆசனம் ஆகியவற்றை விடத் தாழ்வாக இருக்குமாறு அமர வேண்டும். அவர் பார்வையில் படுமாறு விருப்பப்படி உட்காரக்  கூடாது.

199.அவர் இல்லாத போது அவர் பெயரை சொல்லுதலோ, மரியாதைக்கான அடைமொழி இன்றி வாத்தியார் என்று இளப்பமாகவும் பேசுதல் கூடாது; அவரைப் போல நடந்தும் பேசியும் பரிஹாசம் செய்யக் கூடாது.

200.குருவைக் கண்டிக்கும் இடத்திலும் குறை கூறும் இடத்திலும் காதுகளை மூடிக்கொள்ள வேண்டும் அல்லது அவ்விடத்தில் இருந்து அகல வேண்டும்.

201.குருவிடம் உண்மையாகவே பிழை இருந்தாலும் அதை விமர்சித்துக் கண்டிப்பவன் கழுதையாகவும், வேண்டுமென்றே தவறு கற்பிப்பவன் நாயாகவும், குருவின் உடமைகளை அனுபவிப்பவன் புழுவாகவும், அவர்  மீது பொறாமைப்படுபவன் பூச்சியாகவும் பிறப்பான்.

202.தான் ஒதுங்கிக்கொண்டு பிறரை ஏவி குருவுக்குப் பணிவிடை செய்யப் பணித்தல் கூடாது. தான் வாஹனத்தில் இருந்தால் இறங்கி அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும். அவர் மனைவியுடன் இருந்தால் அவரை அணுகக்கூடாது; தனக்கு கோபம் இருந்தால் குருவை அணுகக் கூடாது

 

எதிர்க் காற்றிலோ பின்னால் இருந்து வரும் காற்றிலோ குருவுக்கு முன்னர்  அமரக் கூடாது. அவர் கேளாத விஷயங்களை எடுத்துச் சொல்லக் கூடாது.

204.மாடு, குதிரை, பூட்டிய வண்டிகள், ஒட்டகம், படகு ஆகியவற்றில் செல்லுகையில் குருவுடன் அமரலாம்.

  1. குருவுக்கும் குருவானவர் வருகையில் அவரையும் குருபோலக் கருதல் வேண்டும்

தாய் தந்தையரே வந்தாலும் குருவின் அனுமதியின்றி பெற்றோர்களை வணங்குதல்  கூடாது.

 

Great Guru Swami Vivekananda

எனது கருத்து:

 

கழுதை, நாய், புழு, பூச்சியாகப் பிறப்பவன் யார்?

 

குருகுலத்தில் வசிக்கையில்  என்ன செய்யக்கூடாது?

 

குருவிடம் எவ்வளவு மரியாதை, பணிவு காட்ட வேண்டும்?

 

என்பன உலகில் வேறெங்கும் காணாத விஷயங்கள் ஆகும்.

 

திருப்பாவையில் நோன்புக் காலத்தில் பெண்கள் என்ன செய்ய மாட்டார்களோ அதை ஆண் மாணவர்களுக்கும் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Vedic Guru and Sishyas (disciples)

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

திருப்பாவை 2

 

அந்தக்காலத்தில் மாணவர்களும் அலங்காரப் பிரியர்களாக இருந்தது கண்ணுக்கு மை இட்டுக்கொண்டது, சென்ட், perfume ‘பெர்ப்யும்’ பயன்படுத்தியது தெரிகிறது

தொடரும்……………

 

–Subham–

 

வசந்த கால வருகையும் புண்ணிய பலனும்!

spring-blooming-trees

Article No.1746; Date:- 24  March, 2015

Written by S.NAGARAJAN

Uploaded at London time  காலை 10-47

 

சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

26. வசந்த கால வருகையும் புண்ணிய பலனும்!

.நாகராஜன்

நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:

तृणजालुकन्यायः

trnajalauka nyayah

த்ருணஜாலுக நியாயம்

புழு பற்றிய நியாயம் இது.

earthworm_2561331b

ஒரு புழுவானது தான் இருக்கும் இலையை விட்டு இன்னொறு பற்றுக்கோடு இல்லாமல் அகல்வதில்லை. இது போலவே ஒருவன் இன்னொரு நல்ல வேலை கிடைக்காமல் இருக்கும் போது கையிலிருக்கும் வேலையை விட்டு விடக் கூடாது. இன்னொரு வருவாய்க்கான வழி இல்லாமல் இருக்கும் போது கையில் இருக்கும் வேலையை விடலாமா?

ஆங்கிலப் பழமொழியான ‘A bird in hand is worth two in the bush’ என்ற பழமொழியை இங்கு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

द्राविडप्राणायामन्यायः

dravidapranayama nyayah

த்ராவிட ப்ராணாயாம நியாயம்

ப்ராணாயாமத்தை செய்ய வேண்டிய முறையில் செய்யாமல் மிகவும் கஷ்டமான முறையில் செய்வது பற்றிய நியாயம் இது.

yogic_pranayama_

பிராணாயாமம் செய்வதற்கான வழி முறைகள் உள்ளன. மூக்கை கைவிரல்களால் பிடித்து மூச்சை உள்ளிழுத்து, நிறுத்தி, பின்னர் வெளியே விடுவதற்கு உரிய முறையை குருவிடமிருந்து கற்க வேண்டும். ஆனால் இப்படிச் செய்யாமல் கையைக் கழுத்தைச் சுற்றி வளைத்து மூக்கைத் தொட்டால் அது எப்படி இருக்கும்?

சுலபமாகச் செய்ய வேண்டிய ஒரு காரியத்தை அப்படிச் செய்யாமல் சுற்றி வளைத்துக் மிகவும்கஷ்டப்பட்டுச் செய்யும் போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்.

धर्मवसन्तागमन्यायः

dharmavasantagama nyayah

தர்ம வசந்தாகம நியாயம்

செய்த தர்ம காரியங்கள் பற்றிஅதாவது புண்ணியம் பற்றியும் வசந்தகால வருகையையும் பற்றிய நியாயம் இது.

வசந்த காலம் வரும் போது இயற்கையின் மலர்ந்த சூழ்நிலை மனதைக் கவரும் ஒன்று. மரங்கள் செழிக்கும். புஷ்பங்கள் பூத்துக் குலுங்கும். மனோரம்யமான சூழ்நிலை உருவாகும். அனைவரின் மனதிலும் ஆனந்தம் ஏற்படும். இது போல தர்ம காரியகளினால் ஏற்படும் புண்ணியம் சேர்ந்தவுடன் செல்வமும் ஆனந்தமும் தானே தொடர்ந்து வரும்.

தர்மம் செய்ய வேண்டுவதன் அவசியத்தை இந்த நியாயம் வலியுறுத்துகிறது.

spring red

 

धान्यपलालन्यायः

dhanyapalala nyayah

தான்யபலால நியாயம்

நெல்லும் களையும் பற்றிய நியாயம் இது.

நெல்லை விதைக்கும் போது சரியாக விதைக்க வேண்டும். இல்லையேல் களையாக மாறி விடும். இதே போல ஞானம், பக்தி ஆகிய விதைகள் மனதில் சரியாக விதைக்கப் பட வேண்டும். தேவையற்ற களை போன்ற எண்ணங்களை விளைவிக்க வழி வகுத்து விடக் கூடாது. கவனம் தேவை என்கிறது இந்த நியாயம்.

natru nadal

नष्टाश्वदग्धरथन्यायः

nastasvadagdharatha nyayah

 

நஷ்டாஸ்வதக்த ரத நியாயம்

அஸ்வம்குதிரை; ரதம்வண்டி

சேதம் அடைந்த வண்டியையும் குதிரையையும் பற்றிய நியாயம் இது.

kuthiraivandi

இந்த நியாயம் எழுந்ததற்கான கதை இது தான்:- ஒருநாள் இரண்டு பேர்கள் தங்கள் தங்கள் வண்டியில் அயலூருக்குப் புறப்பட்டுச் சென்றனர். செல்லும் வழியில் ஒருவனது  குதிரை தொலைந்து விட்டது. இன்னொருவனுடைய வண்டியோ இரவில், கிராமத்தில் வண்டியை நிறுத்தி இருந்த சமயத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் எரிந்து விட்டது. இருவரும் சேர்ந்து குதிரையை இருக்கின்ற வண்டியில் பூட்டி தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். ஒற்றுமையே பலம் என்பதை உணர்த்த வந்த நியாயம் இது. ஒருவருக்கொருவர் உதவினால் அனைவருமே பயன் பெற முடியும்!

Pictures are used from face book and other sites;thanks.

*************