

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 9143
Date uploaded in London – –14 January 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கம்ப ராமாயணப் பாடல்களைக் கொண்டு சில சுவையான வி’ஷ’யங்களைக் காண்போம். இந்த வரியையே கொஞ்சம் மாற்றி வி’ட’யங்களைக் காண்போம் என்றும் எழுதலாம்.
வி’ஷ’யம் எப்படி வி’ட’யமாயிற்று?
அந்த வி’ட’யத்துக்கு முன்னர் பூனையைக் கவனிப்போம்.
2000 வரு’ஷ’த்துக்கு முன்னால் – வரு’ட’த்துக்கு — முன்னால் தமிழ் நாட்டுக்குப் போய் எனக்கு ஒரு பூனை வேண்டும்; வீட்டில் எலித்தொல்லை அதிகமாகப் போய்விட்டது என்று சொன்னால்,
நக்கீரன், உங்கள் முன்னர் தோன்றி, ‘தமிழைத் தப்புத் தப்பாகப் பேசாதே பூனை இல்லை. பூசை என்று சொல்லி’ உங்களுக்கு வார்த்தைகளால் பூசை போடுவார்.
இப்போது யாரிடமாவது போய் எலித்தொல்லை அதிகமாகிவிட்டது பூசை வளர்க்கப் போகிறேன் என்றால், என்ன உளறுகிறாய்? குடித்துவிட்டு வந்து விட்டாயா? சனியனே, பூனை என்று சொல் என்பர்.

2000 ஆண்டுகளுக்குள் எவ்வளவு மாற்றம்?
இதே கதைதான் ‘வண்டி’ (cart) கதையும் !
சங்க காலத்துக்கு ‘டைம் மிஷினில்’ ‘ட்ராவல்’ (TRAVEL BY TIME MACHINE BACK IN TIME) செய்து நக்கீரனைச் சந்தித்து ‘ஐயா, இங்கு மாட்டு வண்டியாவது, குதிரை வண்டியாவது கிடைக்குமா? மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போக வேண்டும்; கால் வலிக்கிறது; ஒரு வண்டி வேண்டும்’ என்று சொன்னால் நக்கீரனாருக்கு படா கோபம் வந்து விடும்.
நீவிர் ‘பாண்டில்’ அல்லது, ‘பண்டி’ என்று தூய தமிழில் பேசும்! என்பார்.
ஏனெனில் சங்க காலத்தில் ‘வண்டி’ என்ற சொல் புழக்கத்தில் இல்லை. ‘பாண்டில்’ அல்லது ‘பண்டி’-தான் வழக்கில் இருந்தது. இப்போது ‘பண்டி’ என்றால் பன்றியா ? அது சேரியில் இருக்கும் என்பர்.
எப்படி ‘பண்டி’ 2000 ஆண்டுக்குள் ‘வண்டி’ ஆயிற்று?
இன்று நாம் வங்கம் என்று சொன்னால் வங்காளிகள்- பெங்காலிகள் – பெங்கால் என்று சொல்லுவர்
இன்று நாம் ‘பிரணவ’ குமார முகர்ஜி என்று சொன்னால் வங்காளிகள்- BENGALESE பெங்காலிகள் – ‘பிரணாப்’ என்று சொல்லுவர்
‘வ – ப’ இடம் மாற்றம் அவ்வளவுதான் .



இதை எதற்காக எழுதுகிறேன் என்றால் இப்படி ஏதேனும் ஒரு மாற்றத்தைப் பார்த்துவிட்டால் கால்ட்டுவெல் , மாக்ஸ்முல்லர் கும்பல்கள் அதில் ஆரிய – திராவிட வாதத்தைப் புகுத்துவர். ஆனால் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட உலகின் முதல் இலக்கண நூலான பாணினியின் ‘அஷ்டாத்யாயி’ அதன் மீது எழுந்த ‘வார்த்திக’ , ‘மஹாபாஷ்ய’ உரைகளைப் படிப்போருக்கு இந்த மாற்றங்கள் அக்காலத்திலேயே இந்தியாவில் இருந்தது என்பது விளங்கும். அதுமட்டுமல்ல. நம்முடைய தமிழ் சம்ஸ்கிருதத் சொற்களை கடன் வாங்கியோர் இப்படி மாற்றிப் பேசி இருப்பதையும் அறிவர்.
பாணினி இலக்கணத்துக்கு முன்னர் 64 இலக்கண வித்தகர் இருந்தனர். அவர்கள் பெயர்ப் பட்டியல் இருக்கிறது. அதில் 3, 4 பேரைச் சொல்லி தனது கருத்து வேறுபாட்டையும் பாணினி விளக்குகிறார்.
வேதகால உச்சரிப்பு இலக்கணத்துக்கு ‘பிராதிசாக்யம்’ என்று பெயர். அதில் என்ன எழுத்து, எப்படி மாறும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

தமிழ் மாதங்கள் என்று நமது காலண்டரில் பொறிக்கப்படும் சித்திரை முதல்- பங்குனி வரையான 12 மாதங்களும் ஸம்ஸ்க்ருதப் பெயர்கள். இதை எப்படி தமிழ்ப் படுத்தினர் என்பதை இலக்கண வாயிலாக காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) விளக்குகிறார். அதைச் சொல்லிவிட்டு ஒரு அபூர்வமான விஷயத்தையும் சொல்கிறார். தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் ஒரு மூல மொழி இருந்திருக்க வேண்டும் என்று!! அதையே நானும் இதுவரை 100 கட்டுரைகளில் குறிப்பிட்டுவிட்டேன். உலக மொழிகள் அனைத்தும் தமிழ், சம்ஸ்கிருதத்தில் இருந்து கிளை விட்டுப் பிரிந்த மொழிகளே என்றும் எழுதி வருகிறேன்.
TION = SION
கம்பன் பா’ஷை’ என்பதை பா’டை’ என்பான் . அதை ஒட்டியே நாமும் வி’ஷ’யம் என்பதை வி ‘ட’ய ம் , வரு’ஷ’ம் என்பதை வரு’ட’ம் என்று எழுதி வருகிறோம். கம்பன் ஓ’சை’/ ஒலி என்பதை ஓ’தை’ என்று பாடுகிறான்.
இப்படி ‘ஷ’ என்பது ‘த’ அல்லது ‘ட’ ஆக மாறுவது இன்று நூற்றுக்கணக்கான ஆங்கிலச் சொற்களில் உளது. டியன் TION என்று எழுதிவிட்டு SION ஷன் என்று படிக்கிறோம்.
ஆகையால் மாக்ஸ்முல்லர் கால்டுவெல் கும்பல்களோ அதைப் பின்பற்றும் திரா விடக் கும்பல்களோ ஏதேனும் ஆரிய- திராவிட என்ற இன பேதத்தைப் புகுத்தினால் உடனே பழைய பாடல்களைப் படியுங்கள். அவர்கள் குட்டு வெளிப்பட்டுவிடும். உலகம் எங்கும் இப்படி சொற்கள், எழுத்துக்கள் பிறழ்வதற்கு நமது உடலில் இயற்கையாக ஏற்படும் மாற்றங்களே காரணம். சில மொழிகளில் சில எழுத்துக்கள் இராது. சில மொழிகளில் கூடுதலாக எழுத்துக்களைச் சேர்ப்பர்.
கம்பன், பூசை (CAT), பாடை (LANGUAGE) பற்றிப் பாடிய பாடல்கள்


தேவ பாடையின் இக்கதை செய்தவர்
மூவர் ஆனவர் தம்முளும் முந்திய
நாவினான் உரையின்படி நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய பண்பு அரோ
தேவ பாடை என்பது தேவ பாஷை எனும் வடமொழியைக் குறிக்கும். அம்மொழியில் இந்த இராமகாதையை மூன்று பேர் பாடியுள்ளார்கள். அம்மூவர் –வால்மீகி, வசிட்டர், போதாயனர் ஆவர். ”அவர்களில் முதன்மையான நாவன்மை நிரம்பப்பெற்றவரான வால்மீகி உரைத்த முறையே நான் இக்காப்பியத்தைச் செய்த முறையாகும்.” என்று கம்பன் கூறுகிறான்.
பூனையும் பாற்கடலும்
வால்மீகி முனிவன் வடமொழியில் எழுதிய இராமகாதையைக் கம்பன் தமிழ் மரபிக்கேற்ப எழுதத் தொடங்குகிறான். எந்தப் புலவனும் நூல் தொடங்குமுன் அவையடக்கம் பாடுவது மரபு. கம்பனும் அவையடக்கம் பாடுகிறான்.
”ஓசை பெற்று உயர்பாற்கடல் உற்று ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ” [4]
[ஓசை= ஒலி; பூசை=பூனை; அறைதல்=சொல்லுதல்; காசு=குற்றம்]
xxxx
கருடன் – கலுழன் ஆன கதை R=L, D=L
இதைவிட சுவையான கதை ‘கருடன்’ ‘கலுழன்’ ஆன கதை. ஆழ்வார்களும் கம்பனும் கருடனை (FALCON/ EAGLE) ‘கலுழன்’ என்பர்.
‘ட’ – ஒலி ‘ல /ழ’ – ஒலியாக மாறியது ஆரிய- திராவிட தொடர்பால் என்று மார்கசீய சிகாமணிகளும் மாக்ஸ்முல்லர் கும்பல்களும் எழுதி வைத்துள்ளன. ஆனால் இது அசோகர் கல்வெட்டிலும், பாணினீய வார்த்திக உரையிலும், சோழர் கல்வெட்டிலும் கூட உள்ளன. அதாவது 2000 ஆண்டுகளாக “சோழ – சோட- சோர” (CODA, COLA, COROMONDAL COAST) என்ற மூன்று வடிவங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆகையால் எவராவது ஆரிய- திராவிட என்று பேசப் புகுந்தால் ‘அரை வேக்காடுகள்’ என்று சொல்லி காதை பொத்திக்கொள்ளுங்கள். முடிந்தால் பேசுவோரின் வாயையும் பொத்திவிடுங்கள்.

–SUBHAM–

tags– பூசை, பூனை, ஓதை, பாடை , கருடன், கலுழன்,