பூமா தேவியே நீ என் தாய், நான் உன் புதல்வன் (Post No.10,502)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,502

Date uploaded in London – –   28 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை -5

அதர்வண வேத 12-ஆவது காண்டத்தில் முதல் துதி பூமி சூக்தம் ; 63 மந்திரங்களைக் கொண்ட அந்த அற்புதமான துதியைத் தொடர்ந்து காண்போம்.

இரண்டு முக்கியமான விஷயங்கள் கீழே வருகின்றன

1. பூமாதேவியே நீ என்னுடைய தாயார்; நான் உன் மகன் ; பால் தருக

2.இமயம் முதல் குமரி வரை

3000 ஆண்டுகளுக்கு முன்னர், தமிழ் மொழியும், கிரேக்க லத்தீன் மொழியும் இலக்கண இலக்கியம் படைக்கும் முன்னர், இப்படி அற்புதமான, உன்னதமான , நாகரீக முதிர்ச்சி பெற்ற கருத்துக்கள் ஸம்ஸ்க்ருதத்தில் வந்திருப்பது எண்ணி எண்ணி வியக்க வைக்கிறது

மந்திரம் 9

யஸ்யாமாபஹ பரிசராஹா  ஸமாநீரஹோராத்ரே அப்ரமாதம் க்ஷரந்தி

ஸா நோ பூமிபூமிரதாரா பயோ துஹா மதோ அக்ஷது வர்ச்சஸா — 9

எந்த பூமியில் இரவும் பகலும் வற்றாத ஜீவ நதிகள்  எப்போதும் ஒடிக்கொண்டு இருக்கின்றனவோ , அவள் எங்களுக்கு பல்வேறு வழிகளில் பாலைப் பொழியட்டும் ; அதே நேரத்தில் பேரொளியை அளிக்கட்டும் – 9

ஒவ்வொரு பாடலிலும் ‘வர்ச்சஸ்’ என்னும் ஆன்ம ஒளியைப் புலவர் வேண்டுவதைக் கவனிக்கவும்.

‘அஹோராத்ரி’ என்ற சொல்லையும் கவனிக்க வேண்டும். நாம் ‘இரவும் பகலும்’ என்போம். சம்ஸ்க்ருதத்தில் ‘பகலும் இரவும்’ என்றே பெரும்பாலும் வரும். மேலும் ‘அஹ’ என்பது தமிழில் ‘பகல்’ என்றும் ‘ராத்ரீ’ என்பது ‘இரவு’ என்றும் உருமாறுவதையும் கவனிக்க.

தமிழும் ஸம்ஸ்க்ருதமும் ஒரே மூலத்தில் இருந்து பிறந்தவை; அவ்விரண்டும் உலக மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழிகள் என்ற எனது கருத்தை இவை உறுதிப்படுத்துகின்றன.

பயஹ என்பது பயன் USE என்றும் பால்  MILK என்றும் உருமாறுகிறது.

பசுவின் பயன் = பால் MILK ; சம்ஸ்க்ருதத்தில் ‘பயஹ’ என்றால் பால்.

இன்றும் நாம் பயன் USE,  என்ன/ பலன்? BENEFIT  என்ன< / பயன்படுமா ?USABLE ? என்றெல்லாம் பேசுகிறோம் . இந்த பய, உலகின் மிகப்பழைய நூலான ரிக்வேதத்தில் உள்ள சொல். அதுவே தமிழில் பழம் FRUIT என்றும் உரு எடுக்கிறது.

ஆக பயஹ MILK – பால் MILK  – பயன் USE – பலன் BENEFIT – பழம் FRUIT ஆகிய எல்லாம் ஒரே வேரிலிருந்து SAME ROOT பிறந்தவையே!

வேத கால மக்களுக்கு உள்ள பூகோள அறிவும் இங்கே குறிப்பிடப்படும் பாடல்களில் வருகின்றன. ‘எப்போதும் ஓடும்’ ‘நமக்குத் பொதுவான நீர்’ என்பது பாரதம் முழுதும் ஓடும் நதிகளைக் குறிப்பிடுகின்றன. அடுத்த சில பாடல்களிலேயே இமய மலை வந்து விடுகிறது. இவற்றை எல்லாம் 2700 ஆண்டுகளுக்கு முந்தைய பாணினி தரும் தகவலோடு ஒப்பிடுகையில் ஈரான் முதல் அஸ்ஸாம் வரை அவர்களுக்குள்ள அறிவும் தெளிவாகிறது. அது மட்டுமல்ல கங்கை யமுனையில் துவங்கி ஆப்கானிஸ்தான் நதிகளில் முடியும் ரிக் வேத துதியும் உளது. அதுமட்டுமல்ல 99 நதிகள் என்ற குறிப்பும் வேதம் முழுதும் தொடர்ந்து வருகிறது. உலகின் முதல் பூகோளப் பாடல் பூமி சூக்தம்தான்.வெள்ளைக்காரர் குறிப்பிடும் தேதி கி.மு 1000; இந்துக்கள் குறிப்பிடும் தேதி கி.மு 3150 க்கு முன்னர்.

XXXXXX

மந்திரம் 10

யாமசிவனாவமிமாதாம் விஷ்ணுர்யஸ்யாம் விசக்ரமே

இந்த்ரோ யாம் சக்ர  ஆத்மனே அனமித்ராம் சசீபதிஹி

ஸா நோ பூமிர்வி  ஸ்ருஜதாம் மாதா புத்ராய  மே பயஹ — 10

எந்த பூமி அஸ்வினி தேவர்களால் அளக்கப்பட்டதோ எந்த பூமி விஷ்ணுவின் அடிகள்/ பாதங்களால்  படப் பட்டதோ எந்த பூமி இந்திரனால் அவனுடைய எதிரிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டதோ , அந்த பூமியானவள் ஒரு பிள்ளைக்குப் பாலைப் பொழிவது போல எனக்கு பால் சுரக்கட்டும் — 10

அஸ்வினிகளால் அளக்கட்டது  என்பது புதிய விஷயம்; ரிக் வேதம் முழுதும் விஷ்ணு மூன்று அடிகளால் அளந்த விஷயம் வருகிறது; இதை சூரியன் என்று அர்த்தம் செய்து காலை, பகல், மாலை என்றும் ஆண்டின் மூன்று பகுதிகள் என்றும் மனம்போனபோக்கில் வியாக்கியானம் செய்வார்கள். பின்னர்தான் இது வாமன- த்ரிவிக்ரம அவதார “ஓங்கி உலகளந்த உத்தமனுக்கு” சூட்டப்பட்டது என்பர். எப்படியாகிலும் ‘உலகை அளந்த’ என்பது உலகம் முழுதும் வியாபித்த, பரந்த என்ற சிந்தனைப் போக்கைக் காட்டுகிறது. , விருத்திரன் என்ற மேகக் கூட்டத்தை இந்திரன் வென்று, நீர் என்னும் மழையை பூமிக்கு விடுவித்த செய்தி 4 வேதங்களிலும் உளது. இந்திரன் என்ற சொல்லுக்கு நிறைய பொருள் உண்டு. இன்றும் கூட வானவில்லை ‘இந்திர தனுஷ்’ என்போம். ஆக ஒரு இயற்கைச் சக்தி என்பதே இந்திரன் (விருத்ராசுரன் கதையை பொரு த்தமட்டில்)

XXXXXX

மந்திரம் 11

கிர்யஸ்தே  பர்வதா ஹிமவந்தோ அரண் யம் தே ப்ருதிவீ  ஸ்யோநமஸ்து

பப்பரும் க்ருஷ்ணாம் ரோஹிணீம்  விஸ்வரூபாம் த்ருவாம் பூமிம் ப்ருதிவீமிந்த்ரகுப்தாம்

அஜீதோ அஹதோ அக்ஷதோ அத்யஷ்டாம் ப்ருதிவீமஹம் —   11

பூமா தேவியே ! உன்னுடைய பனி படர்ந்த மலைகளும் , குன்றுகளும், காடுகளும் சுகம் தருவதாகுக ; இந்திரனால் பாதுகாக்கப்பட்ட இந்த பழுப்பு, கருப்பு, சிவப்பு முதலிய பல வண்ணக் கலவை மிக்க பூமியில் நான் சுகமாக இருக்கிறேன்; காயங்கள் இல்லை; தோல்வி இல்லை; துன்பமில்லை – 11

VANDEMATARAM BY BANKIM CHANDRA CHATTERJI

அருமையான வரிகள். இதையே பங்கிம் சந்திர சட்டர்ஜி (சட்டோபாத்யாய) எழுதிய வந்தே மாதர கீதத்தில் காண்கிறோம். அதை பாரதியாரும் இரு முறை மொழி பெயர்த்துள்ளார். அவ்விரு கவிஞரையும் ஊக்குவித்தது பூமி சூக்தம் என்பதில் ஐயமில்லை.

வந்தே மாதரம் நமது நாட்டின் இரண்டாவது தேசீய கீதம் என்பது பலருக்கும் தெரியாது . நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இதை தேசீய கீதமாகப் பயன்படுத்தியதும் பலருக்கும் தெரியாது.

BHARATI’S TRANSLATION

18. ஜாதீய கீதம்

(பங்கிம் சந்திர சட்டோ பாத்தியாயர் எழுதிய
வந்தே மாதரம் கீதத்தின் மொழிபெயர்ப்பு)

இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!
தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை!
பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை! (வந்தே)

வெண்ணிலாக் கதிர்மகிழ் விரித்திடும் இரவினை!
மலர் மணிப் பூத்திகழ் மரன்பல செறிந்தனை!
குறுநகை யின்சொலார் குலவிய மாண்பினை!
நல்குவை இன்பம், வரம்பல நல்குவை!

முப்பதுகோடி வாய் (நின்னிசை) முழங்கவும்
அறுபது கோடிதோ ளுயர்ந்துனக் காற்றவும்
திறனிலாள் என்றுனை யாவனே செப்புவன்?
அருந்திற லுடையாய்! அருளினைப் போற்றி!
பொருந்தலர் படைபுறத் தொழித்திடும் பொற்பினை!
(வந்தே)

நீயே வித்தை நீயே தருமம்!
நீயே இதயம் நீயே மருமம்!
உடலகத் திருக்கும் உயிருமன் நீயே! (வந்தே)

தடந்தோ ளகலாச் சக்திநீ அம்மே!
சித்தம் நீங்காதுறு பக்தியும் நீயே!
ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
தெய்விக வடிவமும் தேவியிங் குனதே! (வந்தே)

ஒருபது படைகொளும் உமையவள் நீயே!
கமலமெல் லிதழ்களிற் களித்திடுங் கமலைநீ!
வித்தை நன் கருளும் வெண்மலர்த் தேவிநீ! (வந்தே)

போற்றி வான்செல்வி! புரையிலை நிகரிலை!
இனிய நீர்ப்ப் பெருக்கினை, இன்கனி வளத்தினை
சாமள நிறத்தினை சரளமாந் தகையினை!
இனியபுன் முறுவலாய்! இலங்குநல் லணியினை!
தரித்தெமைக் காப்பாய், தாயே போற்றி! (வந்தே)

—–

19. ஜாதீய கீதம்
(புதிய மொழிபெயர்ப்பு)

நளிர்மணி நீரும் நயம்படு கனிகளும்
குளிர்பூந் தென்றலும் கொழும்பொழிற் பசுமையும்
வாய்ந்துநன் கிலகுவை வாழிய அன்னை! (வந்தே)

தெண்ணில வதனிற் சிலிர்த்திடும் இரவும்
தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும்
புன்னகை ஒளியும் தேமொழிப் பொலிவும்
வாய்ந்தனை இன்பமும் வரங்களும் நல்குவை. (வந்தே)

கோடி கோடி குரல்கள் ஒலிக்கவும்
கோடி கோடி புயத்துணை கொற்றமார்
நீடு பல்படை தாங்கிமுன் னிற்கவும்,
கூடு திண்மை குறைந்தனைஎ என்பதென்?
ஆற்றலின் மிகுந்தனை, அரும்பதங் கூட்டுவை,
மாற்றலர் கொணர்ந்த வன்படை யோட்டுவை. (வந்தே)

அறிவும் நீ தருமம் நீ, உள்ளம் நீ, அதனிடை
மருமம் நீ உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ
தோளிடை வன்புநீ, நெஞ்சகத்து அன்புநீ.
ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
தெய்வச் சிலையெலாம், தேவி, இங்குனதே. (வந்தே)

பத்துப் படைகொளும் பார்வதி தேவியும்
கமலத் திகழ்களிற் களித்திடும் கமலையும்
அறிவினை யருளும் வாணியும் அன்னைநீ! (வந்தே)

திருநி றைந்தனை, தன்னிக ரொன்றிலை!
      தீது தீர்ந்தனை, நீர்வளஞ் சார்ந்தனை
மருவு செய்களின் நற்பயன் மல்குவை
      வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை
பெருகு மின்ப முடையை குறுநகை
      பெற்றொ ளிர்ந்தனை பல்பணி பூண்fடணை.
இருநி லத்துவந் தெம்முயிர் தாங்குவை,
      எங்கள் தாய்நின் பாதங்கள் இறைஞ்சுவாம்! (வந்தே)

(Thanks to Project Madurai website)

வந்தே மாதரம்!.. வந்தே மாதரம்!..
ஸுஜலாம் ஸுபலாம் மலயஜ சீதளாம்
ஸஸ்ய ஸ்யாமளாம் மாதரம்
வந்தே மாதரம்!..

ஸுப்ரஜ் யோத்ஸனா புலகிதயாமினிம்
புல்லகுஸுமித த்ருமதல ஸோபினிம்
ஸூஹாஸினீம் ஸூமதுர பாஷினிம்
சுகதாம் வரதாம் மாதரம்
வந்தே மாதரம்!..

கோடிகோடி கண்ட கலகல நி னாத கராலே
கோடிகோடி புஜைத்ருத கரகரவாலே 
அபலாகேனோ மா யேதோ பலே
பஹூபல தாரிணீம் நமாமி தாரீணீம் 
ரிபுதல வாரிணீம் மாதரம்!.. வந்தே மாதரம்!.. 

துமி வித்யா துமி தர்மா
துமி ஹ்ருதி துமி மர்மா த்வம்ஹி ப்ராணா: சரீரே 
பாஹூதே துமி மா சக்தி 
ஹ்ருதயே துமி மா பக்தி 
தோமராயி ப்ரதிமாகடி மந்திரே மந்திரே!.. வந்தே மாதரம்!..

த்வம் ஹி துர்கா தசப்ரஹரண தாரீணீம் 
கமலாம் கமல தள விஹாரிணீம் 
வாணீ வித்யா தாயினீம் 
நமாமி த்வாம் நமாமி கமலாம் அமலாம் அதுலாம் 
சுஜலாம் சுபலாம் மாதரம்!.. வந்தே மாதரம்!.. 

ஸ்யாமளாம் ஸரளாம் 
ஸூஸ்மிதாம் பூஷிதாம் 
தரணீம் பரணீம் மாதரம்!.. 
வந்தே மாதரம்!.. வந்தே மாதரம்!..

By Bankim Chandra Chatterji

அதர்வண வேதத்தில் ஒரு அற்புதப் பாடல்! – Tamil and …

https://tamilandvedas.com › அதர்…

21 Sept 2013 — “இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை” என்றும் பின்னர் “நளிர்மணி நீரும் …

GEOGRAPHICAL KNOWLEDGE

11 ஆவது மந்திரம் மிகவும் முக்கியமானது. இமய மலை பற்றிய குறிப்பும் காடுகள்/ ஆரண்யம் பற்றிய குறிப்பும் வருகிறது. ஹிமய பர்வதம் என்றால் = பனி மலை. 19,000 அடிக்கு மேல் உள்ள எல்லா மலைகளிலும் ஐஸ் கட்டி இருக்கும். ஆனால் இந்தியர்களுக்கு அவர்களின் பூகோள எல்லையாக அமைந்த இமய மலைதான் பனி மலை  ஆகும்.. அது பற்றிய குறிப்பு பூமி ஸூக்தத்தில் வருவது குறிப்பிடத்தக்கது ; 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த புறநானூற்றுப் புலவனும் இமயத்தையும் பொதியத்தையும் குறிப்பிடுகிறான். ரிக் வேதத்தில் மட்டுமே 100க்கும் ,மேலான  கடல் பற்றிய குறிப்புகள் உள்ளன . ஆகவே பாரத பூமி பற்றிய தெளிவான இயற்கை அமைப்பு அவர்களுக்கு இருந்தது. ஒருவித தகவல் தொடர்பு, போக்குவரத்து இல்லாத காலத்தில் பர்மா எல்லை முதல் ஈரான் எல்லைவரை வேதகாலத்தில் அறிவு இருந்தது உலக அதிசயம்தான். 2300 ஆண்டுகளுக்கு முன்னர் அலெக்சாண்டர் படை எடுக்கும் வரை வேற்று நாட்டு மக்களுக்கு இந்தியா பற்றி சரியான சித்திரம் கிடையாது; பராபரியாகக் காதில் கேட்ட விஷயங்களை ஹெரெடோட்டஸ் HERODOTUS   போன்றோர் எழுதிவைத்தனர்

BREST FEEDING

தாய்ப் பாலின் மஹத்துவதை வலியுறுத்தி மேலை நாட்டு சுகாதாரத் துறைகள் இன்றும் பிரசுரங்களை வெளியிட்டு, கர்ப்பிணிப் பெண்க ளுக்கு வகுப்புகள் நடத்துகின்றனர். ஆனால் வேதம் முழுதும் தாய்ப்பால் (MOTHER’S MILK- BREAST FEEDING )உவமை உளது!

பதினோராவது மந்திரத்தில் பூமியின் வர்ணங்கள் வருகின்றன; அவர்களுக்கு தாதுவளம் நிறைந்த, ரத்தினைக் கற்கள் நிறைந்த இடங்கள் (MINERAL SOURCES AND GEM STONES ) தெரிந்து இருந்தன. ஆகையால்தான் இந்த வண்ண வருணனை வருகிறது

XXXXX

மந்திரம் 12

யத்தே மத்யம்  ப்ருதிவி யச்ச நப்யம் யாஸ்த உர்ஜஸ்தன்வஹ ஸம்பபூவுஹு

தாஸு நோ கே ஹ்யபி நஹ பவஸ்வ மாதா  பூமிம்  புத்ரோஹம் ப்ருதிவ்யாஹா

பர்ஜன்யஹ பிதா ஸ உ நஹ பிபர்து —- 12

பூமியே நீ என் தாய் ; நான் உன் புதல்வன் ; பர்ஜன்யன்/ மழை எங்கள் தந்தை ;அவன் எங்களைக் காப்பான் ஆகுக ; எங்களை எல்லாப் பகுதிகளில் இருந்தும் சுத்தப் படுத்து; தூய்மை ஆக்கு. உன்னுடைய உடலின் நடுவிலுள்ள நாபியிலிருந்து என்னை நிறுத்தி , உன் உடலில் இருந்து புறப்படும் சக்தியில் நிலை நாட்டுவாயாக — 12

இந்த மந்திரத்தில் உலகப் புகழ் பெற்ற சொற்றொடர்  வருகிறது- பூமாதேவி தாய், நாம் அதன் புதல்வர்கள்  ; இன்று உலகமே அதை ஏற்று மதர்லாண்ட் MOTHERLAND என்ற சொல்லை உருவாக்கி இருக்கிறது. உலகில் இதை முதல் முதலில் உருவாக்கிய பெருமை இந்துக்களையே சாரும். அது எங்களைத் தூய்மையாக்கட்டும்; தந்தை போன்ற மழை பொழியட்டும். பூமியின் மத்தியில் நிறுத்தி முழு சக்தியையும் பெரும் வழியைச் செய்யட்டும் என்பதெல்லாம் உயர்ந்த மற்றும் பாசிட்டிவ் எண்ணங்களைக் POSITIVE THOUGHTS  காட்டுகின்றன. பூமி சூக்தம் முழுதும் பாசிட்டிவ்- ஆக்கபூர்வ சித்திரத்தையே காண்கிறோம் .

இதிலுள்ள ஸம்ஸ்க்ருதச் சொற்களை  அப்படியே தமிழிலிலும் ஆங்கிலத்திலும் இன்றும் பயன்படுத்துவதால் ஸம்ஸ்க்ருதத்தை என்றும் நாம் பேசிக்கொண்டே இருப்பதையும் உணர்கிறோம்

நாபி – நேவல் NAVEL  – தொப்புள்

மத்ய – மிடில் – MIDDLE மத்தியத்தில்

மாதா – மதர் – MOTHER மாது , மாதர்

புத்ர – புதல்வன் PUTRA= PUTHALVA IN PURANANURU  (புறநானூறு காண்க)

TO BE CONTINUED………….

tags- பூமி சூக்த கட்டுரை 5, பூமா தேவியே, நீ என் தாய், நான் உன் புதல்வன்,