ஹேப்பி பர்த் டே டூ யூ! பூமிக்கு பிறந்த நாள்!

Happy_Birthday_Cake_2013

நாம் வாழும் பூமிக்கு அக்டோபர் 23ஆம் தேதி 6017—ஆவது பிறந்த தினம் என்ற செய்தியை லண்டன் மெட்ரோ பத்திரிக்கை சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. உண்மையில் பூமியின் உண்மையான வயது 14 பில்லியன் ஆண்டுகள். அப்படியிருக்கையில் இந்த விந்தையான 6017 என்ற எண் எங்கிருந்து வந்தது? 1654 ஆம் ஆண்டு ஆர்மாக் ஆர்ச்பிஷப் ஜேம்ஸ் உஷர் பூமியின் வயதைக் ‘கண்டுபிடித்தார்’. பைபிள் கணக்குப்படி பூமி தோன்றியது கி.மு 4004 அக்டோபர் 23 என்ற “மகா பெரிய உண்மையை வெளியிட்டார்” என்பதையும் மெட்ரோ பத்திரிக்கை குறிப்பிட்டது.

பூமிக்குப் பிறந்தநாள் ‘கேக்’ செய்ய எவராலும் இயலாது. சந்திரன் அளவுக்கு அல்லவா செய்ய வேண்டும்!
இந்த அபத்தமான கணக்கை கிறிஸ்தவ உலகம் அப்படியே ஏற்றுக்கொண்டது.!! போனால் போகட்டுமே! நமக்கென்ன? என்று இந்துக்கள் சும்மா உட்காரமுடியாது. ஏனெனில் இந்தியாவைப் பற்றியும், இந்துமத நூல்கள் பற்றியும் ஆராய்ச்சி நூல்கள் எழுதிய வெள்ளைத் தோல் கிறிஸ்தவ அறிஞர்கள் கி.மு.4004ல்தான் உலகம் தோன்றியது என்று பலமாக நம்பியதால் ரிக் வேதம் முதலிய நூல்களுக்கு மிகமிகத் தவறான வயதைக் கணித்தார்கள். இந்துமதம் பற்றிய எதையும் பிற்காலத்தியது என்று முத்திரை குத்தினார்கள். அப்போது ஆங்கிலம் கற்ற இந்திய அறிஞர்களும் வாயை மூடிக்கொண்டு அந்த தேதியை ஏற்றுக் கொண்டார்கள்.

manvanatara

இந்தியவியல் பற்றி ஆராய்ந்து இந்துமத நூல்களின் காலத்தை மட்டமாகக் கணக்குப் போட்டு, ஆரிய திராவிட விஷ வித்துக்களை ஊன்றிய வெள்ளைத்தோல் அறிஞர்கள் கிறிஸ்தவ, இஸ்லாமிய, யூதமத நூல்கள் பற்றி குறைகூறவும் இல்லை, விஷமத்தனமான விமரிசனமும் செய்யவில்லை. அங்கே இனப் பூசல்களையும் திணிக்கவில்லை. நிறைய புத்தகங்களைப் படிப்போருக்கு இந்த பெரிய உண்மை வெள்ளிடை மலை என விளங்கும்.

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி ‘பிக் பேங்’ எனப்படும் ‘மாபெரும் வெடிப்பு’ நிகழ்ந்தது 1400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு. இந்துக்கள் சொல்லக்கூடிய மன்வந்தரக் கணக்கும் இதுவும் கிட்டதட்ட ஒத்துப் போகிறது. இந்துக்கள் பூஜை செய்கையில் சொல்லப்படும் சங்கல்பத்தில் “14ஆவது மன்வதரமான வைவஸ்வத மன்வந்தரத்தில் இந்த ஆண்டில் இந்த மாதத்தில் இன்ன திதியில் இதைச் செய்கிறேன்”– என்று சொல்லுவார்கள்.

இறைவன் உலகத்தைத் தோற்றுவித்த ஆறாவது நாளன்று களி மண்ணி லிருந்து முதல் மனிதனைத் தோற்றுவித்தான் என்றும் கிறிஸ்தவ அறிஞர்கள் நம்பினார்கள். இதை எல்லாம் தெரு மூலைகளில் நின்று பாடிக்கொண்டு தேவன் மீண்டும் வரப்போகிறான் என்று கூவிக் கொண்டிருந்த காலையில், இந்துக்களோவெனில் விஷ்ணு சஹஸ்ர நாமம் முதலியவற்றில் சஹஸ்ர கோடி யுக கணக்குகளப் போட்டுக் கொண்டிருந்ததை “இந்துக்கள் கணித மேதைகள்” என்ற போன கட்டுரையில் விளக்கிவிட்டேன். இது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்! இமயத்துக்கும் மண்ணாங்கட்டிக்கும் உள்ள அளவுக்கு அறிவு விரிசல்!

இப்போது புரிகிறதா? ஏன் இந்தியாவுக்கும், இந்துமத நூலகளுக்கும் குறைவான வயதைக் கணித்தார்கள் என்று. பாரதியாரோவெனில்—-

“தொன்று நிகழ்ந்தது அனைத்தும் அறிந்திடும் சூழ்கலைவாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்”

—என்ற நித்திய சத்தியத்தை பாடல் வடிவில் நமக்குப் போதித்து தூங்கிக் கிடந்த இந்துக்களை உசுப்பிவிட்டார்.

history.bigbang
contact london swaminathan:- swami_48@yahoo.com