WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,477
Date uploaded in London – – 23 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அதர்வண வேத பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை-1
பூவுலகத்தைப் பற்றி வேதகால மனிதன் சிந்தித்திருக்கிறான். அது மட்டுமல்ல . அவனுக்கு பூமி பற்றி மிகப் பரந்த விஞ்ஞான அறிவு இருந்திருக்கிறது. .3 விஷயங்கள் வேதத்தில் தெளிவாக உள்ளன.
1.பூமி என்பது வட்ட வடிவமானது .
2.பூமி என்பது அந்தரத்தில் நிற்கிறது.
3.அது விழாமல் இருப்பதற்கு ஈர்ப்பு விசையே காரணம்
பூமியை அண்டம்/முட்டை, கோளம் என்றே வருணித்துள்ளனர்; பிரபஞ்சமே வட்ட வடிவில் பலூன் போல ஊதிப் பெருத்து வருகிறது என்பதையும் அவர்கள் அறிவர் ; தமிழர்களும் இதை பின்பற்றி மிகவும் பிற்காலத்தில் பாடி வைத்தனர்
பூமியை ஏதோ தாங்கி நிற்கிறது? அது எது? என்ற கேள்வியை எழுப்பி விடை காண்கின்றனர். அதிலிருந்து இந்த பூமி விழாமல் இருக்கிறது என்ற கருத்து தொனிப்பதைக் காணலாம். ஏன் ‘தாங்கி’, ‘பாரத்தைச் சுமந்து’ என்ற சொற்கள் வந்தன? பிற்காலத்தில் ஆதி சேஷன் தலையில் பூமி நிற்பதாகவும் , ஆமை முதுகில் நிற்பதாகவும் சொன்னதற்கு வேறு காரணங்கள் உள. .இதற்கு தார்மீக காரணம் ஒன்று; விஞ்ஞான காரணம் ஒன்று. அது பற்றி விரிவாகச் சொல்கிறேன்.
‘கிரஹ’ (GRIP, GRAB, GRAVITY – ALL ARE DERIVED FROM SANSKRIT GRAHA) என்று சூரியன், சந்திரன், பூமி எல்லாவற்றுக்கும் பெயரிட்டனர் முன்னோர்கள். இதன் பொருள் ‘பிடித்தல்’. ‘பாணிக் கிரஹணம்’ என்றால் ‘கைப்பிடித்தல்’ = கல்யாணம்; ‘சந்திர கிரஹணம், சூரிய கிரஹணம்’ என்றால் ஒரு நிழல் அவைகளைப் பிடிக்கிறது. ஆங்கிலத்தில் பிடித்தல், ஈர்த்தல் என்ற எல்லா சொற்களும் ‘கிரஹ’ (GRIP, GRAB, GRAVITY) என்ற வேர்ச் சொல்லில் இருந்தே வருகிறது. ஆக, கிராவிடி GRAVITY என்னும் ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தவர்கள் இந்துக்களே . தமிழர்களும் சம்ஸ்கிருதத்தை அப்படியே மொழி பெயர்த்து ‘கோள்’ என்றனர். கொள் (USED AS SUFFIX IN REFLEXIVE VERBS MEANING YOU KEEP IT FOR YOURSELF- YOU GRAB IT) என்ற வினைச் சொல்லுக்கும் ‘பற்றுதல் , பிடித்தல்’ என்றே பொருள்.
அதர்வண வேதத்தின் 12 ஆவது காண்டத்தின் முதல் துதி பூமி சூக்தம்; 63 பாடல்கள் அல்லது மந்திரங்கள் அடங்கியது. இதை உலகம் முழுதும் கட்டாய பாடமாக (COMPULSORY LESSON FOR ALL STUDENTS) வைக்கவேண்டும். அற்புதமான விஞ்ஞான, சமூக, இயற்கை, மற்றும் புறச் சூழல் விஷயங்களை ஒருவர் அருமையாகப் பாடியுள்ளார்..
அதை விரிவாக ஆராய்வதோடு ஆங்காங்கே ஒப்பிட்டும் காட்டுகிறேன்.
‘வையகமும் துயர் தீர்கவே’ என்று சம்பந்தர் பாடினார் ; அது ‘லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து’ என்பதன் மொழியாக்கம். அந்தக்கருத்து இந்தப்பாடலில் வருகிறது. ‘மைத்ரீம் பஜத’ என்ற சம்ஸ்கிருதப் பாடலை இயற்றி, அதை எம்.எஸ் சுப்புலக்ஷ்மி மூலம் ஐ.நா சபையில் பாடவைத்தார் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் ;அந்தக் கருத்தும் இதில் வருகிறது .
ஒன்று பரம்பொருள் – நாம் அதன் மக்கள் உலகு இன்பக் கேணி என்று பாரதியார் சொல்லும் கருத்ததும் இப்பாடலினின்று பிறந்த கருத்தே .
காண்டம் 12; சூக்தம் 474; பூமி (12 ஆவது காண்டத்தில் முதல் துதி)
ஸத்யம் ப்ருஹத்துதமுக்ரம் தீக்ஷ தபோ ப்ரஹ்ம யக்ஞ ப்ருதிவீம் தாரயந்தி
ஸா நோ பூதஸ்ய பவ்யஸ்ய பத்ன்யுரும் லோகம் ப்ருதிவீ நஹ க்ருணோது
எவ்வளவு எளிமையான சொற்கள்; இந்திய மொழிகள் அறிந்த அனைவருக்கும் தெரிந்த சத்யம் /வாய்மை, தவம், தீட்சை , ருதம், பிரம்மம் , யக்ஞம், பிருத்வீ , உக்ரம் — இவைதான் முதல் மந்திரத்தில் வருகின்றன .
இந்த உலகம் எப்படி இன்றும் விழாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது ? பூமி முட்டை வடிவில் இருந்தால் சமுத்திர நீர் ஏன் கீழே விழாமல் இருக்கிறது? வட்ட வடிவ அண்டத்தில் (அண்டம் = முட்டை) கீழே இருப்போர் எப்படி தலை கீழாக நின்றும் விழாமல் இருக்கிறார்கள்?
இவ்வளவு கேள்விகளுக்கும் தமிழன் சொன்ன விடை :-
புறநானூறு பாடல் 182. உண்டாலம்ம இவ்வுலகம்!
பாடியவர்: கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி (182).
இவன் புறநானூற்றில் உள்ள இப்பாடலை இயற்றியதோடு மட்டுமல்லாமல், திருமாலின் பெருமையைப் புகழ்ந்து பரிபாடலில் உள்ள 15-ஆம் செய்யுளையும் இயற்றியவன்.
உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.
:”இந்திரனுக்குரிய அமிழ்தம் கிடைத்தாலும், அது இனிமையானது என்று தனித்து உண்ண மாட்டர்கள்; யாரையும் வெறுக்க மாட்டார்கள்; சோம்பலின்றிச் செயல்படுவார்கள்; பிறர் அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சுவார்கள்; புகழ்வரும் என்றால் தம் உயிரையே வேண்டுமானாலும் கொடுப்பர்; பழிவரும் என்றால் உலகம் முழுவதும் கிடைப்பதானாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்; மனம் தளர மாட்டார்கள். இத்தகைய சிறப்புடையவர்களாகித் தமக்காக உழைக்காமல், பிறர்க்காக வலிய முயற்சியுடன் உழைப்பவர்கள் இருப்பதால்தான் இவ்வுலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.”
இதையே வள்ளுவரும் செப்புகிறார்
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. (குறள் – 82)
பொருள்: விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவா மருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தது அன்று.
இன்னொரு குறளில் ,
பண்புடையார் பட்டுண்டு உலகம்; அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன். (குறள் – 996)
பொருள்: பண்புடையவர்கள் இருத்தலால் இவ்வுலகம் உளதாயிருக்கின்றது;. அவர்கள் இல்லையேல் அது மண்ணினுள்ளே புதைந்து மறைந்து போகும்.
பாரத மாதா நவரத்தின மாலையில் கற்றவராலே உலகு காப்புற்றது என்று பாரதியாரும் பாடுகிறார் .
ஆக உலகம் அழியாமல் இருக்க அமிர்தமே கிடைத்தாலும் அதைப் பகிர்ந்து உண்ணுவோர் இருப்பது ஒரு காரணம். இரண்டாவது பண்புடையோர் இருப்பது மற்றொரு காரணம். பண்புடையோரை வேதமும் பாரதியும் ஆரியர் என்று எல்லாப் பாடல்களிலும் படியிருப்பதைக் காணலாம். ஆரியர் அல்லாதோர் பூரியர் ; தஸ்யூக்கள் ; அ தாவது கிரிமினல்ஸ் CRIMINALS ; இந்தச் சொல் ஆங்கிலத்தில் ஸ்பூரியஸ் SPURIOUS என்று புழக்கத்தில் உள்ளது
ஸ்பூரியஸ் SPURIOUS = பூரியர் (ஆரியரின் ARYA x SPURIOUS எதிர்ப்பதம் )
SPURIOUS = FALSE, FAKE, ILLEGITIMATE
XXXX
அதர்வண வேதம் சொல்லும் காரணம்
சத்தியம், தவம், தீட்சை , வேள்வி ருதம் ஆகியன இருப்பதால்– அதாவது இந்த குணத்தை மதிக்கும் பண்புடையார் இருப்பதால் உலகம் இன்றும் அழியாமல், கீழே விழாமல் இயங்குகிறது
கடலுள் மாய்ந்த இளம்பெரும் வழுதி என்ற பாண்டிய மன்னன் இந்திரர் அமிழ்தம் என்ற ரிக் வேத சொற்களை அப்படியே பயன்படுத்தியதைக் கவனிக்க வேண்டும். அவனோ க்ஷத்ரியன் ; பிராமணன் அல்ல. ஆயினும் ரிக் வேத சொற்களை அப்படியே பயன்படுத்தியுள்ளான் .
அதர்வண வேத முதல் மந்திரத்தில் உள்ள ‘சத்யம்’ இந்தியாவின் தேசீய சின்னத்தில் இருக்கிறது. ருதம் என்ற சொல்லும் இருக்கிறது. இவை இரண்டும் முக்கியமானவை; ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை.
கிறிஸ்தவப் பெண்கள் ரூத் RUTH என்று பெயர் வைத்துக்கொள்வார்கள்; ஆண்களில் பலர் இன்றும் சத்யமூர்த்தி என்றெல்லாம் பெயர் வைத்துக் கொ வதைக் காண்கிறோம் ருதம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லில் இருந்து ரிதம் RHYTHM , ட்ரூத் TRUTH என்ற இரண்டு சொற்கள் இன்றும் ஆங்கிலத்தில் உள்ளன. அதாவது தாள லயம்- ஒழுங்கு விதி = RHYTHM
உலகமே வாய்மையாலும், ஒரு விதி முறையாலும்தான் இயங்குகிறது. மோட்டார் வேய் MOTOR WAY யில் 130 மைல் வேகத்தில் செல்கிறோம்.; நான் திடீர் என்று நிறுத்தினால் என் பின்னால் வரும் கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி 20, 30 பேர் உயிர் இழப்பார்கள். எதிர் திசையில் வருபவன், குடித்துவிட்டு , எனது பாதையில் காரை ஓட்டினால் என் காரில் உள்ளவர்களும் அதற்குப் பின்னால் வருவோரும் உயிர்தப்ப மாட்டார்கள். சாலையைக் கடக்கும் போதும் நாம் கணக்குப்போட்டு கடக்கிறோம் . ஆனால் கார் ஓட்டுபவன் ருதம் RHYTHM என்பதைப் பின்பற்றாவிட்டால் நம் கதி- சகதி – ஆகிவிடும்
இந்த உண்மையும் ருதமும் (SATHYA AND RUTHAM) வேதத்தில் ஆயிரக்கணக்கான இடங்களில் வருகின்றன. உலகில் வேறு எந்த இடத்திலும் இதைக் காண முடியாது. 5 வயதுப் பையன் , குரு குலப் பள்ளியில் நுழைந்தவுடன் வாத்தியார் சொல்லிதத்தரும் முதல் பாடம் “சத்யம் வத = உண்மையே பேசு ; அடுத்தது தர்மம் சர” = தருமம் செய்
முதல் மந்திரத்தில் வரும் ‘தபோ’ என்பது தமிழில் ‘தவம்’ ஆகும் (ப=வ)
இந்த தவத்தை அப்படியே ஸம்ஸ்க்ருதச் சொல்லாகவே 2000 ஆண்டுகளாக தமிழர்கள் பயன்படுத்தி வருகின்றனர்!!
தவம் –
சங்க இலக்கியத்தில் சுமார் 50 இடங்களில் தவ/ம் என்ற சொல் வருகிறது; மஹா சம்ஸ்க்ருத மேதையான வள்ளுவன், பத்து குறள்களில் தவ/ம் என்ற சொல்லை பயன்படுத்துகிறான். சிலப்பதிகாரம், மணிமேகலையில் நிறைய இடங்களில் ‘தவம்’ வருகிறது இந்த வேத காலச் சொல்லை அறியாத தமிழன் இல்லை; அறியாவிட்டால் அவன் தமிழனும் இல்லை
தீட்சை யக்ஞம் ,பிரம்மம் முதலியன ஆன்மீக இலக்கியங்களில் மட்டும் வருகின்றன. ஆயினும் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் ஒரு நல்ல பாயிண்ட் POINT சொல்கிறார். சங்க இலக்கியத்திலேயே ‘வேள்வி’ என்ற மொழிபெயர்ப்பு இருப்பதால் (யக்ஞ = வேள்வி) இது தமிழர்களும் இந்துக்களும் ஒரே வேத கலாசாரத்தில் வந்ததைக் காட்டுகிறது என்கிறார். வெள்ளைக்கார கிறிஸ்தவ மகா பாவிகள், இதை இறக்குமதி விஷயம் என்று சொன்னதற்கு அவர் மிதியடி கொடுக்கிறார் .
யஜ = அக்கினியில் ஆஹுதி கொடுத்து வேண்டுதல் = யக்ஞம் ;
வேட்கை – தீ மூட்டி, நெய்ச் சோறு பெய்து , வேண்டுவதைப் பெறுவது வேள்வி ; யஜ் =வேள்
XXX
முதல் மந்திரத்தில் இன்னும் ஒரு அற்புத தகவல் வருகிறது !
பூமியை ராணி என்று வருணிக்கிறார். பின் னொரு மந்திரத்தில் தாய் என்று இந்த ரிஷி வருணிக்கிறார் . அதை விட முக்கியமான விஷயம் எதிர்காலம் பற்றிப் பேசு வதாகும் ; ‘பூத, பவிஷ்ய’ என்ற இரண்டு சொற்களைக் காணலாம். விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் முதல் ஸ்லோகத்திலேயே பூத, பவிஷ்ய, பவத் என்று முக்காலமும் வருகிறது. இங்கு நிகழ் காலத்தைச் சொல் லத் தேவை இல்லை. புலவர் பாடிக்கொண்டிருக்கிறார். கடந்த காலம் போலவே வருங்காலமும் இருக்கட்டும் ; இந்த உலகம் மேலும் விரிவடைந்து காக்கட்டும் என்ற அருமையான வாசகம் உள்ளது. பூமியை பத்னி (மனைவி) என்று சொல்லி இருக்கிறார். இதை மகா ராணி என்றும் சொல்லலாம்.
ஆனால் புறநானூற்றுப் புலவரும் ‘நில மடந்தை’ என்று பாடுகிறார் . மன்னரின் மனைவி பூமி; அதாவது ராஜ்ய லக்ஷ்மி ; எல்லா மன்னர்களும் என்னை மட்டும் விட்டு விட்டுப் போகின்றனரே ; நான் மட்டும் தொடர்ந்து பூ பாரத்தைச் சுமந்து கொண்டிருக்கின்றேனே என்று மார்கண்டேயனார், புறநானூறு 365ல் பாடுகிறார் . புலவரின் பெயர் என்றும் 16 வயதுடன் வாழ்ந்த மார்க்கண்டேயனின் புராணக்கதையை நினைவுபடுத்தும். பாடலில் பூமாதேவி தன்னை ‘விலை நலப் பெண்டிர்’ என்று தாழ் த்திக்கொள்ளுவது நிலையாமையை வலியுறுத்தவே. முடிசார்ந்த மன்னரும் பின்னர் பிடி சாம்பலாய்ப் போனதை நிலமகள் சொல்லி அழுகிறாள் என்கிறது புறநானூறு.
ஆக, பூத, பவிஷ்ய, பத்னி என்பதற்கெல்லாம் பெரு விளக்கம் தேவைப்படும் மந்திரம் முதல் மந்திரம்.
இன்னும் 62 மந்திரங்கள் இருக்கின்றன இந்தப் பாடலில்!! தொடர்ந்து காண்போம்.
Xxx subham xxxx
tags-
பூமி சூக்தம் , அதர்வண வேதம், உண்டாலம்ம , நிலமகள் சத்யம், ருதம், தவம்
You must be logged in to post a comment.