பறவைகள் பலவிதம் ; ஒவ்வொன்றும் ஒருவிதம் –  அதர்வண வேதப்புலவன் பாட்டு (Post No.10,636)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,636

Date uploaded in London – –    6 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை 15

பாடல் 47 பொருள்

மக்கள் செல்வதற்காக நீ எத்தனை வழிகளைப் படைத்தாய் ; தேர்கள் செல்லும் வழிகளையும் , நல்லவர்களும் பொல்லாதவர்களும் செல்லும் வழிகளையும் திருடர்கள் இல்லாதபடி செய்வாயாகுக. அந்த வழிகள் எங்களுக்கு வெற்றி தருவதாகுக

இந்தப் பாட்டில் அந்தக் கால போக்குவரத்து வசதிகள் பற்றி நமக்குத் தெரிகிறது. ரதங்களும் வண்டிகளும் டும் தெருக்கள் இருந்தன. அதே நேரத்தில் திருடர் பயமும் இருந்தது. இன்றும் நாம் போக்குவரத்தின்போது திருடர்கள் பற்றி பயப்படத்தான் செய்கிறோம். விமான நிலையத்தில் கூட ஒரு நிமிடம் அசந்தால் நம் பெட்டிகள் உள்ள வண்டியை TROLLEYS ஒரு நொடிப்பொழுதில் அசத்திச் செல்லும் திருடர்களும் எல்லா நகரங்களிலும் பிக் பாக்கெட்டு PICK POCKETS களும்  இருக்கத்தான் செய்கின்றனர். அது மட்டுமல்ல; பாஸ்போர்ட்டுகளைத் PASSPORTS திருடி அடையாள அட்டையை மாற்றி உபயோகிக்கும் கும்பலையும் காண்கிறோம்.

மொழியியல் விஷயத்தில் ரத/ தேர் இரண்டும் ஒரே மூலமுள்ள சொற்கள். ரத என்பதை மாற்றிப் (MIRROR IMAGE OF RATH IS THER IN TAMIL)  போட்டால் தேர்.

ஜனா/ மக்கள் , பந்தி/ வழி போன்றவை இன்றும் பயன்படுகின்றன.

யே தே பந்தானோ பஹவோ ஜநாயனா ரதஸ்ய வத்ர் மாநஸ் ச யாதவே

யைஹி சஞ்சரன் த்யுபயே பத்ரபாபாஸ்தம் பந்தானம்

ஜயேமானமித்ர மதஸ்கரம் யச்சிவம்  தேன நோ ம்ருட – 47

xxx

பாடல் 48 பொருள் 

பூமியில் முட்டாள்களும் அறிவாளிகளும் உளர்.  எல்லோரும் இற க்கத்தான் செய்கின்றனர் . ஆண் காட்டுப் பன்றிகள் உலவும் இடத்தில்பெண் பன்றிகளும் திரிகின்றன

அண்மைக்காலத்தில் ராமலிங்க சுவாமிகள் பாடிய பாடலிலும் கூட ‘நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே’ என்று இறைவனைப் போற்றுகின்றார். . அதற்கு முன்னர் ‘கல்லார்க்கும் கற்றவர்க்கும் களி ப்பருளும் களிப்பே’  என்று இறைவனைத் துதிக்கிறார்… இரண்டாவதாக வரும் ஆண் , பெண்  காட்டுப்பன்றிகள் பற்றி எந்த உரைகாரரும் விளக்கவில்லை.

மல்வம் பிப்ரதீ குரு ப்ருத் பத்ர பாபஸ்ய நிதனம் திதிக்ஷுஹு

வராஹேன  ப்ருதிவீ  ஸம்விதானா ஸூகராய வி ஜிஹீத ம்ருகாய –48

XXXX

பாடல் 49 பொருள்

உன் காடுகளில் சிங்கம், புலி, மனிதனைப் புசிக்கும் வன விலங்குகள் உருமித் திரிகின்றன; .கழுதைப் புலிகளும், ஓநாய்களும் நரியும் , கரடியும் அவற்றின் தீய வழிகளில்  திரிகின்றன. ராக்ஷஸர்களும்  இருக்கிறார்கள்  அவைகளை எங்களிடம் வராமல் தொலைவில் விரட்டி விடு .

நகரங்களையும் , விவசாய நிலங்களையுயம் சித்தரித்த புலவன் வன விலங்குகளையுயம்  வருணிக்கத் தவறவில்லை. அவைகளை அழிக்கக் கூடாதென்று  தூரத்தில் விரட்டி விடும்படி வேண்டுகிறான்.. கொல்லும்படி சொல்லவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இந்தப் பாடலில் ஆரண்யம்/காடு , சிம்மம்= சிங்கம், வ்யாக்ர=வேங்கை என்பன பலரும் அறிந்த சொற்களே.

யே த அரண்யாஹா பசவோ ம்ருகா வனே ஹிதாஹா ஸிம்ஹா  வ்யாக்ராஹா புருஷாதஸ் சரந்தி

உலம் வ்ருகம் ப்ருதிவி துச்சுனாமித ருக் க்ஷீ காம் ரக்ஷ்ஓ  அப பாதயாஸ்மத்  — 49

XXX

APSARAS PAINTING IN SITHANNAVASAL

பொருள் 50

பூமியே, கந்தர்வர்களையும், அப்சரஸ்களையும், அராயர்களையும்  கிமீதின்களையும் , பிசாசுகளையும். ராக்ஷஸர்களையும்  துரத்திவிடு

இந்தப் பாடலில் வரும் கிமிதீன் , அராயர் என்ற கொடியோர் பற்றி வேதத்தில் எங்கும் விளக்கம் இல்லை. தீய சக்திகள் என்பதுமட்டும் தெரிகிறது. கந்தர்வர், அப்சரஸ் ஆகியோர் மேலுலத்தில் இருந்து வந்து மக்களை மயக்குவர் என்ற அச்சம் உளது; விசுவாமித்திரர்- மேனகா , புரூரவஸ்- ஊர்வசி கதைகளில் அப்சரஸ் மோகம் பற்றி விளக்கப்படுகிறது. பல கந்தர்வர்கள் சாபத்தினால் இங்கு அருவருக்கத் தக்க விதத்தில் வாழ்ந்த கதைகளும் புராணங்களில் உள்ளன.

யே கந்தர்வா அப்சரஸோ யே சாராயாஹா கிமீதினஹ

பிசாசாந்த் ஸர்வா ரக்ஷ்ஆம்சி தாநஸ்மத் பூமே யாவய -50

XXXX

பாடல் 51 பொருள்

பறவைகள் சிறகடித்துப் பறக்கும் இந்த பூமி, அன்னங்களும் கழுகுகளும் , பல வண்ணப் பறவைகளும் பறக்கின்ற பூமி, வேகமாக வீசி மரங்களை வளைத்து தூசிப் படலத்தை எழுப்பும் காற்று , அவற்றிடையே அலைக்கழிக்கப்படும்  மேகங்கள் பளிச்சிடுகின்றன………..

(அடுத்த பாடலில் அந்த பூமி மங்கலம் தரட்டும் என்று முடிகிறது.)

இது அருமையான இயற்கை வருணனை. சென்ற பாடலில் அடர்ந்த காடு, இந்தப் பாடலில் இனிய பறவைகள். அத்தோடு அவ்வப்போது வீசும் சூறாவளிக காற்று என்று புலவர் வருணிக்கிறார்.. இது “ஆற்று வெள்ளம் நாளை வரத்தேற்றுதே குறி, மலையாள மின்னல் ஈழ மின்னல் சூழ வீசுதே” போன்ற பள்ளுப் பாடல்களையும் குற்றாலக் குறவஞ்சிப் பாடல்களையும் நினைவு படுத்தும். நல்ல இயற்கை வருணனை.

யாம் த்வி பாதஹ பக்ஷிணஹ  ஸம் பதந்தி ஹம்ஸாஹா சுபர்ணாஹா சகுனா வயாம்ஸி

யஸ்யாம் வாத மாதரிஸ்வேயதே ரஜாம்ஸி  க்ருண்வம்ஸ்ச்யாவயம்ஸ்ச வ்ருக்ஷ்ஆன்

வாதஸ்ய  ப்ரவாமுபவாமனு வாத்யர் சிஹி –51

ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி – மலை

யாளமின்னல் ஈழமின்னல் சூழ மின்னுதே

நேற்றும் இன்றும் கொம்பு சுற்றிக் காற்று அடிக்குதே – கேணி

நீர்ப்படு சொறித் தவளை கூப்பிடுகுதே

சேற்று நண்டு சேற்றில் வளை ஏற்று அடைக்குதே – மழை

தேடி ஒருகோடி வானம் பாடி யாடுதே

போற்றுதிரு மால்அழகர்க்கு ஏற்றமாம் பண்ணைச் – சேரிப்

புள்ளிப் பள்ளர் ஆடிப்பாடித் துள்ளிக் கொள்வோமே

(முக்கூடற் .பள்ளு . 30)

XXX

தொடரும்

TAGS- பூமி சூக்த கட்டுரை 15, பறவைகள் பலவிதம், கிமிதீன் , அராயர், கந்தர்வர், அப்சரஸ்