WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,650
Date uploaded in London – – 11 FEBRUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை 16
Veni, vidi, vici is a Latin phrase that literally translates to “I came, I saw, I conquered.” – Julius Caesar said it.
ஜூலியஸ் சீசர் என்னும் மன்னன், படையெடுத்து வெற்றி பெற்ற பின்னர் சொன்ன சொற்கள் வந்தேன், கண்டேன், வென்றேன் Veni, Vidi, Vici .
இதுதான் பாசிட்டிவ் எண்ணங்கள்; வெற்றித் திருமகனின் வாசகங்கள். ‘தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்றான் வள்ளுவன். உண்மையில் வள்ளுவனும் சீஸரும் பகவத் கீதை (11-33) யைக் காப்பி அடித்தார்கள். அதாவது ‘உத்திஷ்ட, யசோ லப = எழுந்திரு புகழடை’ என்று அர்ஜுனனை உசுப்பி விடுகிறான் (11-33) கண்ணன். அதற்கு மூலம் உபநிஷத்தில் உள்ளது
உத்திஷ்ட, ஜாக்ரத , ப்ராப்யவரான் நிபோதத – கடோபநிஷத்
எழுந்திரு, விழித்திரு, குறிக்கோளை அடையும் வரை நிற்காதே! என்பது விவேகானந்தர் அடிக்கடி இடி முழக்கம் செய்யும் வாசகம்
இதற்கெல்லாம் மூலம் அதர்வண வேதத்தில் உள்ளது !!!!!!!
XXXX
அதர்வண வேத பூமி சூக்தத்தில் உள்ள 63 பாடல்களில் முதல் 51 பாடல்களை/ மந்திரங்களை 15 கட்டுரைகளில் கண்டோம். இதோ மேலும் பல சுவையான செய்திகள் :
பாடல்/ மந்திரம் 52
யஸ்யாம் க்ருஷ்ணமருணம் ஸம்ஹிதே அஹோராத்ரே விஹிதே பூம்யாமதி
வர்ஷேண பூமிஹி ப்ருதிவீ வ்ருதா வ்ருதா ஸா நோ ததாது பத்ரயா ப்ரியே தாமனிதாமனி -52
பொருள்
எந்த பூமியில் கருப்பும் சிவப்பும் இணைகிறதோ, பகலும் இரவும் ஏற்படுகிறதோ, மழை மேகம் என்னும் மேற் கூரையால் வேயப்பட்டிருக்கிறதோ அந்த பூமாதேவியானவள் எல்லா அன்பு இல்லங்களிலும் மங்களத்தை நிரப்புவாளாக
அனைத்து ‘தாம’ங்களிலும் என்ற சம்ஸ்க்ருத சொல்லுக்கு இருப்பிடம் என்று பொருள். அதிலும் ‘ப்ரிய’ / அன்புமிக்க என்ற சொல்லும் சேர்ந்திருப்பதைக் கவனிக்கவும். ‘பத்ரம்’ என்பதன் பொருள் மங்களகரமான. ஆக மொத்தத்தில் எல்லாம் POSITIVE WORDS பாசிட்டிவ் சொற்கள் . அத்தோடு அழகான இயற்கை வருணனையும் உள்ளது. பூமியில் தினமும் கருப்பும் சிவப்பும், அதாவது இரவும் பகலும் தோன்றுகிறது ; அங்கே மழை என்னும் கூரையும் உளது. ‘அருணன்’ என்னும் செஞ் சூரியனும் REDDISH SUN கருத்த மேகங்களும் வளம் மிக்க பூமியை சித்தரிக்கிறது
XXX
பாடல்/ மந்திரம் 53
த்யவ்ஸ் ச ம இதம் ப்ருதிவீ சாந்தரிக்ஷம் ச மே வ்யசஹ
அக்நி ஸூர்ய ஆபோ மேதாம் விஸ்வே தேவாஸ் ச ஸம் ததுஹு -53
பொருள்
பூமியும் வானமும் இடைவெளியும் எனக்கு இந்த மாபெரும் இடத்தை அளித்துள்ளது . சூரியனும், அக்நியும் , தண்ணீரும், எல்லா கடவுளரும் எனக்கு அறிவைக் கொடுத்துள்ளனர்.
புதிய வானம்… புதிய பூமி
புதிய வானம் புதிய பூமி
எங்கும் பனி மழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ண பூமழை பொழிகிறது… ஒஹோ ஹோ
புதிய வானம் புதிய பூமி
எங்கும் பனி மழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ண பூமழை பொழிகிறது… ஒஹோ ஹோ
புதிய சூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே
புதிய சூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே
இமயத்தில் இருக்க்கும் குளிர் காற்று
இன்று இதயத்தை தொடுகிறது
— என்ற தமிழ்த் திரைப்படப் பாடல் வரிகளை நினைவுபடுத்தும் மந்திரம் இது.
பொழுது புலர்ந்தது; யாம் செய்த தவத்தால்
புன்மை இருட்கணம் போயின யாவும்;
எழுபசும் பொற்சுடர் எங்கனும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி;
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்கு உன்
தொண்டர் பல்லாயிரர் சூழ்ந்து நிற்கின்றோம்
விழிதுயில்கின்றனை இன்னும் என் தாயே
வியப்பிது காண் பள்ளி எழுந்தருளாயே!
——பாரதியாரின் பாரத மாத திருப்பள்ளி எழுச்சி
சுய முன்னேற்ற புஸ்தகங்கள் அனைத்தும், இப்படி சிந்தித்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்று சொல்கிறது. அதாவது எனக்கு இறைவன் அறிவைக் கொடுத்துவிட்டான்; பிரமாண்டமான இடத்தையம் கொடுத்துவிட்டான். இதில் நான் முன்னேறுவேன்; வெற்றி பெறுவேன் என்ற சொற்களை தினமும் சொல்ல வேண்டும். இதை அடுத்த மந்திரம் காட்டுகிறது .
Xxxx
பாடல்/ மந்திரம் 54
அஹமஸ்மி ஸஹமான உத்தரோ நாம பூம்யாம்
அபிஷாடஸ்மி விஸ்வாஷா டா சாமாசாம் விஷா ஸஹி ஹி -54
நான் வெற்றி வீரன்; இந்த பூமியிலேயே மிகவும் உயர்ந்தவன் நான்; எங்கும் வெற்றி; எதிலும் வெற்றி ; எல்லா திசையிலும் வெற்றி (எங்கு நோக்கினும் அங்கு நானே வெல்வேன்)
இதுதான் கடோபநிஷத், பகவத் கீதை, திருக்குறள், ஜுவலியஸ் சீசர் ஆகியவற்றில் கண்டோம்.
ஜூலியஸ் சீசர் என்னும் மன்னன், படையெடுத்து வெற்றி பெற்ற பின்னர் சொன்ன சொற்கள் Veni, Vidi, Vici வந்தேன், கண்டேன், வென்றேன்
இதற்கெல்லாம் மூலம் அதர்வண வேதத்தில் உள்ளது
அதர்வண வேதம் செய்த இந்த முழக்கத்தை பாரதியும் செப்பினான்:
எடுத்த காரியம் யாவினும் வெற்றி
எங்கு நோக்கினும் வெற்றி மற்றாங்கே
விடுத்த வாய்மொழிக் கெங்கணும் வெற்றி
………………….
…………………….
என்னுமெண்ணங்கள் யாவினும் வெற்றி
எங்கும் வெற்றி எதனினும் வெற்றி
வேதத்தைப் படிப்பதும், பாரதியைப் படிப்பதும் ஒன்றே.
வெற்றி உறுதி
XXX Subham xxxx
tags- ஜூலியஸ் சீசர் , Veni, Vidi, Vici , வந்தேன், கண்டேன், வென்றேன் , பூமி சூக்த கட்டுரை 16, எடுத்த காரியம், வெற்றி,