பூமியின் இருதயத்தைப் பிளக்காதே – வேத முனிவன் அறிவுரை (Post.10,581)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,581

Date uploaded in London – –    20 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை 12

புறச் சூழல் பாதுகாவலர்களும் பசுமை நண்பர்களும் தினமும் படிக்க வேண்டியது பூமி சூக்தம்; பரப்ப வேண்டியது பூமி சூக்தம் ; அதில் 35-ஆவது பாடலில்/ மந்திரத்தில் ஒரு அருமையான வரி வருகிறது. “நாங்கள் உன்னுடைய இருதயத்தையோ மர்மஸ்தானங்களையோ தாக்கிவிடாமல் இருக்க வேண்டும்” . இந்த வேண்டு கோள் குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தது. அதாவது பைபிள் என்னும் நூல் உலகில் தோன்றுவதற்கு முன்னர், கிரேக்கர்கள், ரோமானியர்கள், தமிழர்கள் எழுத்தோ இலக்கியமோ அறியாத காலத்தில் அதர்வண வேத முனிவன் பாடியது. என்ன ஆச்சர்யம்!! எதிர்காலத்தில் கலியுகத்தில், விண்வெளியுகத்தில் நடக்கப்போகும் கொடுஞ்செயல்களை உணர்ந்து இப்படிப் பாடினர் போலும்!

மணற் கொள்ளை பற்றி தினமும் படிக்கிறோம்; ஆறுகளை வெட்டிக் குழிதோண்டி, சேரும் சகதியுமாகச் செய்யும் கும்பல்கள் உள ; மற்றோர் புறம் கனிமங்களை, தாது வளங்களை, ரத்தினைக் கற்களை, தங்கத்தைத் தோண்டி எடுக்கும் கும்பல்கள் உள . பூமிக்கு அடியிலும் கடல் நடுவிலும் அணுகுண்டு சோதனைகளையும் ஆயுதப் பயிற்சிகளையும் செய்து பல கோடி மீன்களையும் கடல் தாவரங்களையும் அழிப்பதைக் கேட்கிறோம் . இது தவிர கடல் பவளம், கடல் முத்து என்று அலையும் கும்பல்களும் இருக்கின்றன. பூமாதேவி மீது எப்போதும் மனிதன் தாக்குதலை நடத்திக்  கொண்டு இருக்கிறான். இயக்கையாக நடக்கும் காட்டுத் தீயை விட மனிதன் சுயநலத்துக்காக உண்டாக்கும் காட்டுத் தீ சம்பவங்களையும் பத்திரிகைகள் வெளியிட்ட வண்ணம் உள்ளன. ஆனால் பூமா தேவியோ நம் மீது கருணை கொண்டு நமக்கு உணவு தானியங்களை அளிக்கிறாள்.

33-ஆவது மந்திரத்தில் சூரியனை ‘நண்பன்’ என்று அழைக்கும் சொற்றொடர் முக்கியமானது. ரிக் வேதம் முழுதும் கடவுளை ‘நண்பர்’ என்றே முனிவர்கள் உரிமை பாராட்டுகின்றனர். தாய் தந்தை என்று அழைப்பதை விட ‘நண்பா!’ என்றே அழைக்கின்றனர்.

பிராமணர்கள் தினமும் நடுப்பகலில் சூரியனைப் பார்த்து சொல்லும் மந்திரத்தில் நூறாண்டுக்கு காலம் வாழ்வோமாக; நோய் நொடியில்லாமல் நல்ல கண் பார்வையுடன் உன்னைக் காண்பேனா குக ; நல்லசொற்கள், நல்ல பேச்சு, மகிழ்ச்சி, ஆனந்தம் 100 ஆண்டுகள் கிடைக்கட்டும் என்று வேண்டுகின்றனர். இந்தக் கருத்து எல்லா வேதங்களிலும் வருகிறது. எப்போதும் POSITIVE THINKING  பாசிட்டிவ் சிந்தனை! அது இன்று வரை தொடர்வது அதிசயமே!

34 -ஆவது மந்திரத்தில், மனிதன் புரண்டு படுத்து தூங்குவது பாடப்படுகிறது. ஒட்டு மொத்தக் கருத்து எங்களை நன்றாக தூங்க உதவி செய் என்பதே. மேலை நாட்டில் தூக்கம் வராமல் கஷ்டப்படுவோர்தான் அதிகம். நல்ல உறக்கம், நல்ல கனவு பற்றி தினமும் வேண்டும் மக்கள் இந்துக்கள்.

மனிதன் கனவு காணாமல் தூங்க  முடியாது என்று நவீன அறிவியல் கூறுகிறது. இதை அறிந்த இந்துக்கள் கெட்ட கனவுகள் எனக்கு வேண்டாம் என்று தினமும் வேண்டுகின்றனர். பிராமணர்கள் தினமும் மூன்று முறை செய்யும் சந்தியா வந்தனத்தில் கெட்ட கனவுகள் அழியட்டும் என்று சொல்லி பிரார்த்தனையை முடிக்கிறார்கள். சிவன் கோவிலில் தினந்தோறும் அபிஷேகம் செய்யும் போது சொல்லும் ருத்ரம் சமகத்தில்  ‘இந்த நாள் நல்ல நாளாக இருக்கட்டும்; நல்ல தூக்கம் எங்களுக்கு கிடைக்கட்டும்’ என்று வேண்டுகின்றனர்

சாந்தி பாடம் என்பதைச் சொல்லிவிட்டு நீண்ட துதியைப் பாடுவார்கள். அதில் ‘சயனம் சமே , சுதினம் சமே’ என்ற சொற்கள் எனக்கு ‘நல்ல உறக்கம் தா, நல்ல தினத்தை அருளுக’ என்பது முதலில் வந்து விடும்

35 ஆவது மந்திரம்தான் இன்று எல்லா கட்டிடங்களிலும் கொட்டை எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட வேண்டியது “பூமியின் இருதயத்தையும் மர்ம  ஸ்தானத்தையும் காயப்படுத்தாமல் இருப்போமாகுக”. புறச் சூழலை பாதுகாருங்கள் பூமியைக் காப்பாற்றுங்கள் — என்ற இந்த சிந்தனை குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு முன்னவர் வந்ததை உலகம் முழுதும் பறை சாற்றுவது இந்துக்களின் கடமை.

36-ஆவது மந்திரத்தில் ஆறு பருவங்களும் வந்து விடுகின்றன. சங்கத் தமிழ் இலக்கியத்திலும் ஆறு பருவங்கள்தான். உலகின் ஏனைய பகுதிகளில்- ஐரோப்பாவில் 4 பருவங்கள். இமயம் முதல் குமரி வரையுள்ள இந்த கருத்து மாக்ஸ்முல்லர் கும்பலுக்கும் மார்க்சீய கும்பலுக்கும் செமையடி, மிதியடி, தடியடி கொடுக்கும் வரிகள். வேத கால இந்துக்கள் குளிர் பிரதேசத்திலிருந்து கைபர் கணவாய் வழியாக வந்தவர்கள் என்று சொல்லுவோரை தமிழர்கள் புரட்டிப் புரட்டி அடிக்கும் வரிகள்; சங்கத் தமிழ் இலக்கியத்தில் 6 பருவங்கள்; வேதத்தில் 6 பருவங்கள் இந்த எல்லா பருவங்களிலும் எங்கள் மீது உணவு மழை பொழிக ! சொரிக என்று முனிவன் வேண்டுகிறான்.

2100 ஆண்டுகளுக்கு முன்னர் காளிதாசன் பாடிய ருது சம்ஹாரம் என்ற பாடல் தொகுப்பு ஆறு பருவங்களை மிக அழகாக சித்தரிக்கிறது . அதைத் தமிழர்கள் சங்க இலக்கியத்தில் அப்படியே பின்பற்றினர். தமிழர்கள் பெரும்பொழுதையும் சிறு பொழுதையும் ஆறு, ஆறாக வகுத்தனர்

காளிதாசன் ஏன் ருதுசம்ஹார என்ற ஆறு பருவ வருணனைக் காவியத்தை கோடை காலத்துடன் துவங்கினான் என்று அறிஞர்கள் வியப்பர். அதற்கு விடை 36 ஆவது மந்திரத்தில் கிடைத்துவிட்டது . அ .வே. புலவனும் ‘க்ரீஷ்ம’ என்று கோடை  காலத்திலேயே துவங்குகிறான்.

இதோ நான்கு பாடல்களும், தமிழில் அவற்றின் பொருளும் —

யாவத் தே அபி விபஸ்யாமி பூமே ஸூர்யேன  மேதினா

தாவன் மே சக்ஷுர்மா மே ஷ்டோ த் தராமுத்தராம்  ஸ மாம் -33

யச்சயானஹ பர்யாவர்தே தக்ஷிணம் ஸவ்யமபி  பூமே பார்ஸ் வம்

உத்தா னாஸ்த்வா ப்ரதீசீம்  யத் புஷ்டீபிரதிசேமஹே

மா ஹிம்ஸிஸ்தத்ர நோ பூமே ஸர்வஸ்ய  ப்ரதீசீவரி -34

யத் தே பூமே விகனாமி க்ஷிப்ரம் ததபி ரோஹது

மா தே மர்ம விம்ருக்வரி மா தே ஹ்ருதயமர்பிபம் – 35

க்ரீஷ்மதே பூமே வர்ஷானி சரத் ஹேமந்தஹ சிசிரோ வசந்தஹ

க்ருதவஸ்தே விஹிதா ஹாயநீரஹோராத்ரே ப்ருதிவி நோ துஹாதாம் -36

xxx

பொருள்

சூரியனை நண்பனாகக் கொண்டு நான் உன்னைப் பார்க்கும் வரை , ஆண்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக உருண்டு ஓடும்வரை, என்னுடைய கண் பார்வை மங்கக் கூடாது – 33

பூமி த தாயே ! உன் மீது நாங்கள்  வலது புறம், இடது புறம் சாய்த்து சாய்த்து உறங்கும்போதும் நிமிர்ந்து படுக்கும்போதும், புரண்டு படுக்கும்போதும் எங்களுக்கு இன்னல் செய்யவேண்டாம் . உன்னுடைய அருளால் எல்லோரும் உறங்குகிறார்கள் -34

நான் உன்னை தோண்டி, அகழ்ந்து எதை எடுத்தாலும் அது மீண்டும் வளரட்டும்; தூய்மை செய்யும் தாயே உன்னுடைய இருதயத்தையும் மர்ம ஸ்தானங்களையும் நாங்கள் காயப்படுத்தாமல் இருப்போமாகுக – 35

கோடை காலமும் குளிர் காலமும் மழைக் காலமும் இலையுதிர் காலமும் முன்பனி காலமும் பின்பனிக் காலமும் உன்னுடைய பருவங்கள் ; அவையே ஆண்டு என்பதையும் அதில் அடங்கிய இரவு பகலையும் உண்டாக்குபவை; அந்தக் காலம் முழுதும் எங்கள் மீது வளத்தை வாரி வழங்குவாயாகுக (பாலைச் சொரி வாயாகுக)-36

To be continued…………………………………

tags- பூமி சூக்த கட்டுரை 12, பூமி, இருதயம், மர்ம ஸ்தானம், பிளக்காதே 

பொறுமைக்கு உதாரணம் பூமாதேவி – தமிழன் கண்ட உண்மை (Post No.10,575)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,575

Date uploaded in London – –    18 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை 11

பொறுமைக்கு உதாரணம் பூமாதேவி – தமிழன் கண்ட உண்மை

PATIENCE AND EARTH

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப்  பொறுத்தல் தலை –குறள் 151

அதர்வண வேத பாடல் / மந்திரம் 28 வரை கண்டோம். 63 மந்திரங்கள் உள்ள இந்த துதியில் இதோ 29-ஆவது மந்திரம் :-

மந்திரம் 29

விம்ருக்வரீம் ப்ருதிவீ மா வதாமிம் க்ஷமாம் பூமிக்கு ப்ரஹ்மணா வாவ்ருத்தானாம்

ஊர்ஜம் புஷ்டம் பிப்ரதிம்மன்னபாகம்  க்ருதம் த்வாபி  நி ஷீதேம பூமே -29

பொருள்

பொறுமையின் சின்னமே பூமியே! தூய்மை செய்பவளே! ஆன்மீக பலத்தால் வலு அடைபவளே ! சக்தி, வளம் ஆகியன உடையவளே ,  உணவையும் நெய் யையும் உடையவளே! உன் மீது உட்கார்ந்து ஓய்வு எடுக்கலாமா? 

இந்த மந்திரத்தில் பூமியின் பொறுமை போற்றப்படுகிறது. இந்த அற்புத விஷயத்தை இமயம் முதல் குமரி வரையுள்ள புலவர்கள் பாடியுள்ளனர். இது இந்துக்களின் சொந்தக் கண்டுபிடிப்பு.

எத்தனை வெட்டுகிறோம், எத்தனை தோண்டுகிறோம்; அப்படியும் அம்மாவை எட்டி உதயும் குழந்தை போல எங்களை அணைக்கிறாயே என்று இந்துக்கள் வியக்கின்றனர். ஆகையால் மீண்டும் மீண்டும் கும்பிடு போடுகின்றனர்.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப்  பொறுத்தல் தலை –குறள் 151

பரிபாடல் என்னும் சங்க இலக்கிய நூலிலும் (2-55) இதே கருத்து வருகிறது

‘நோன்மை நாடின் இருநிலம் யாவர்க்கும்’ (உன்னுடைய பொறுமை நிலத்தைப் போன்றது)

சம்ஸ்க்ருதத்தில் எண்ணற்ற இடங்களில் வருகிறது

ரகு வம்சம் (18-9) என்னும் காவியத்தில் காளிதாசனும் க்ஷமா என்று பூமியைக் குறிப்பிடுகிறான்

XXX

WATER AND PURITY

மந்திரம் 30

சுத்தா ந ஆபஸ்தன்வே க்ஷரந்து ந யோ னஹ ஸேதுரப்ரியே தம் நி தத்மஹ

பவித்ரேண ப்ருதிவி மோது புனாமி –30

சென்ற பாட்டில் உள்ளது போலவே இங்கும் தூய்மை போற்றப்படுகிறது

  எங்கள் உடல் சுத்தம் டைய தூய நதி நீர் பெருக்கெடுக்கட்டும். எங் களை ஆக்கிரமிக்க நினைப்போர் விஷயத்தில் வாளாவிருக்க மாட்டோம். நான் என்னையும் சுத்தம் செய்து கொள்கிறேன்

இந்துக்களின் வாழ்வில் நீர் என்பது பிறப்பு முதல் இறப்புவரை தொடர்புடையது. அதை ரிக் வேதமும் மீண்டும் மீண்டும் விதந்து ஓதுகிறது ; ஆகையால் அவர்கள் தினமும் குளிக்கும் வெப்ப மண்டலத்தைச் TROPICAL zone சேர்ந்தவர்களே; குளிர்ப் பிரதேசத்திலிருந்து வந்தவர்கள் இல்லை.

Xxxx

STUMBLING BLOCKS

மந்திரம்/ பாடல் 31

யாஸ்தே ப்ராசீஹி ப்ரதிசோ யா உதீசிர் யாஸ்தே பூமி அதராத் யாஸ்ச பஸ்யாத்

ஸ்யோநாஸ்தா மஹ்யம் சரதே பவந்து மா நி  பப்தம் புவனே நிஸ்ரியாணஹ –31

பொருள்

உன்னுடைய கிழக்கு திசையில் வசிப்போரும் , வடக்கு, தெற்கு, மேற்கு திசைகளில் வசிப்போரும்

என்னிடம் இனிமை பாராட்டட்டும். அங்கு நான் இன்பமாக பயணிப்பேன் ஆகுக; இந்த உலகில் நான் வாழும் காலம் வரை தடுமாறக்கூடாது”.

இது மிகவும் பொருளுள்ள பாடல். கவச மந்திரங்களை போல நான்கு திசைகளில் இருந்தும் நன்மையே வந்தெய்துக என்று வேண்டிவிட்டு, ‘தடுமாறக்கூடாது என்று சொல்லுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

1. இவ்வாறு நான் நாலு திசையிலும் செல்லும்போது உடல் ஆரோக்கியம் இருக்க வேண்டும்

2. உள்ளத்தில், செய்கையில், சொல்லில் தடுமாறக்கூடாது. அதாவது திரிகரண சுத்தி; மனம், மொழி, மெய் மூன்றிலும் தூய்மை இருக்க அருள்வாயாகுக. ஏற்கனவே சொன்ன தடுமாறக் கூடாது என்ற பதங்கள் மீண்டும் வருவதைக் கருத்திற்கொள்ள வேண்டும். ஒரு முறை, உடல் தடு மாற்றத்தையும் இரண்டாம் முறை, உள்ளது தடுமாற்றையும் மனதிற் கொண்டு பாடியிருப்பார் போலும் !

இதில் இன்னொரு சுவையான மொழி இயல் LINGUISTICS MATTER  விஷயமும் வருகிறது. பிராமணர்கள் தினமும் மூன்று முறை  செய்யும்  சந்தியா வந்தன மந்திரத்தில் அவர்கள் 4 திசைகளையும் நோக்கி மந்திரங்களைச் சொல்லுவார்கள்.அதிலும் பிராச்யை , தக்ஷிணாயை, பிரதீச்யை, உதீச்யை என்றே சொல்லி நமஸ்கரிக்கின்றனர். பல்லாயிரம் ஆண்டுகளாக இந்து திசை வழிபாடு இருக்கிறது. அதுமட்டுமல்ல ,

புறநானூற்றில் கூடலூர்க் கிழார் பாடிய அற்புதப் பாடல் வருகிறது (புறம் 229); சேர மன்னன் மாந்தரஞ் சேரல் இறக்கப்போவதை முன் கூட்டியே அறிவித்தது ஒரு எரி கல் . அதில் ‘பிராச்யை’ என்ற ஸம்ஸ்க்ருத சொல்லை ‘பாசி என்றும்’ உதீச்யை என்ற சொல்லை ‘ஊசி’ என்றும் தமிழ் மயமாக்கியது வியக்கத்தக்க ஒன்று. கூடலூர்க் கிழார் சம்ஸ்க்ருத மன்னன்!!

அவர் தமிழ்ப்படுத்தினாலும் அது மற்றவர்களுக்கும் புரிந்து இருப்பது இமயம் முதல் குமரி வரை சம்ஸ்க்ருதம் புழங்கியதைக் காட்டுகிறது. மேலும் இதே பாட்டில் பங்குனி மாதம், மேஷராசி முதலிய விஷயங்களும் வருவதால் யவனர்களிடமிருந்து இந்துக்கள், நாள் கிழமைகளை கற்றுக்கொண்டனர் என்ற பொய்மை வாதம் தவிடு பொ டி ஆகிறது.

XXXX

பாடல் 32

மா நஹ பஸ்சான்மா  புரஸ்தான்னுதிஷ்டா மோத்தராத்தராதுத

ஸ்வஸ்தி பூமே நோ பவ மா விதன் பரிபந்தினோ வரீயோ யாவயா வதம் –32

பொருள்

மேற்கு திசையில் இருந்தோ கிழக்கு திசையில் இருந்தோ எங்களைத் தள்ளாதே; வடக்கு, தெற்கு திசையில் இருந்தோ எங்களைத் தள்ளாதே”.

பூமாதேவியே எங்களிடம் கருணை காட்டு; வழிப்பறி செய்யும் கொள்ளையர் எங்களைக் காணாமல் போகட்டும்; அதி பயங்கர ஆயுதங்களை எங்களிடமிருந்து தொலைவில் வைப்பாயாகுக –32

கிட்டத்தட்ட சென்ற பாடல் போன்றதே. திசைகளைத் தவிர வழிப்பறி கொள்ளையரும் வருகின்றனர் இது பழங்கால இந்தியாவின் நிலையைக் காட்டுகிறது மஹாபாரதத்தில் தமயந்தி சென்ற வழியில் கொள்ளையர் நடத்திய தாக்குதல் விரிவாக உள்ளது. சங்கத் தமிழ் நூல்களில் வழிப்பறி கொள்ளையர் வருகின்றனர். இப்போதும் கடற்கொள்ளையர்கள் கப்பல்களைக் கடத்திச் சென்று கொள்ளை அடிப்பதை பத்திரிக்கையில் படிக்கிறோம்.; ஆயுதமற்ற அமைதியான சமுதாயத்தை வேண்டுவதும் இப்பாடலின் அச்சிறப்பே.

புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம் என்று பாரதிதாசன் பாடினார் . காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் எழுதிய ஸம்ஸ்க்ருதக் கவிதையை எம்.எஸ். சுப்புலட்சுமி, ஐக்கிய நாடுகள் சபையில் பாடியதால் அது உலகம் முழுதும் ஒலிபரப்பாகியது . உலக நட்புடன் துவங்கும் அந்த மைத்ரீம் பஜத பாடல் யுத்தம் த்யஜத   என்ற வரிகளுடன் முடிகிறது . ‘போர் செய்வதைக் கைவிடுங்கள்’ என்ற அவ்வரிகளின் SOURCE ‘மூலம்’ வேதத்தில் உள்ளது. அதர்வண வேதத்தில் ஆயுதங்கள் தொலைவில் ஒழியட்டும் என்ற வரிகள் உள்ளன..

இமயம் முதல் குமரி வரை நம் சிந்தனை ஒன்றே.

TO BE CONTINUED…………………

TAGS- பூமி, பொறுமை, அகழ்வாரை , பூமிஸூக்தம்-11

முனிவர்கள் விஞ்ஞானிகளா ? பூமியின் வேகம் எப்படித் தெரிந்தது ?(Post.10,538)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,538

Date uploaded in London – –    7 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இந்துக்கள் எவ்வளவு பெரிய மேதைகள் என்பதற்கு ஒரு குட்டிக்கதை உண்டு .

சதுரங்கம் எனப்படும் CHESS செஸ் விளையாட்டைக் கண்டுபிடித்தவர்கள் இந்துக்களே என்பதை உலகமே ஒப்புக்கொண்டுவிட்டது. இதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை. ஒரு முனிவர், ஒரு அரசனிடம் சென்று இந்த அற்புதமான விளையாட்டைச் சொல்லிக் கொடுத்தார். நாள் தோறும் நாற்படைகளுடன் கதைக்கும் மன்னனுக்கு வியப்பிலும் வியப்பு! அன்பரே நீங்கள் என்ன கேட்டாலும் தருகிறேன் என்றான் மன்னன்.

முனிவர் சிரித்துக் கொண்டே , அப்படி ஒன்றும் அதிகம் வேண்டாம். இதோ நான் கற்பித்த செஸ் போர்டில் 64 கட்டங்கள் உள்ளன. முதல் கட்டத்தில் ஒரு அரிசி, அடுத்தகட்டத்தில் 2, அடுத்த கட்டத்தில் 4 என்று இரட்டித்துக் கொண்டே போங்கள் ; 64 கட்டங்களில் எவ்வளவு அரிசி இருக்குமோ அது போதும் என்றார் முனிவர்.

 பூ இவ்வளவுதானா ! இதோ உடனே தருகிறேன் என்றான் மன்னன்.

முனிவர் மீண்டும் சிரித்தார். 32 கட்டங்கள் தாண்டுவதற்கு முன்னர் அவன் நாட்டிலுள்ள கோடிக்கணக்கான மூட்டைகளைக் கொண்டுவந்தாலும் போதாது என்பது பல நாட்களுக்குப் பிறகு புரிந்தது.

நீங்களும் 64 கட்டம் உள்ள ஒரு செஸ் போர்டில் முதல் கட்டத்தில் ஒரு பைசா காசு வையுங்கள். பின்னர், 2, 4, 8, 16 என்று அதிகரித்துக் கொண்டே போங்கள் . உலக மஹா பணக்காரர் ஆகி விடுவீர்கள் !

XXXX

பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை – PART 7

அதர்வண வேதம் (அ .வே.) பூமி சூக்தத்தில் உள்ள  63 மந்திரங்களில் 16 மந்திரங்களைக் கண்டோம். மேலும் காண்போம். இதோ வேத கால முனிவர்களின் அபார அறிவை விளக்கும் பகுதிகள் :–

மந்திரம் 17

பூமியைத்  தருமமே தாங்கி நிற்கிறது; நாங்கள் அவள் மீது நடக்கிறோம்; அவள் எங்கள் மீது கருணை மழை பொழியட்டும் ; அவள் விளைச்சல் மிகுந்தவள் ; தாவரங்களின் ,மூலிகைகளின் தாய் ; அவள் உறுதியாக நிற்கிறாள்

இந்த அற்புதமான மந்திரம் நமக்கு அரிய பல செய்திகளைத் தருகிறது. இந்த உலகம் நிலை நிற்கக் காரணம் தனக்கென வாழாத மக்கள்  இருப்பதுதான்  என்றும் பழியைக் கண்டு அஞ்சும் மக்கள் இருப்பதால் தான் என்றும் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி புறநானூற்றில் பாடியது  இந்த வேதக்  கருத்துதான் . வேத கால புலவன் ஒரே சொல்லில் தர்மம், ருதம் என்று அடக்கிவிட்டான். தாவரங்களும் மூலிகைகளும் , விளைச்சலும் மிக்க பூமி என்பதைப் படிக்கையில் பசுமை மிக்க காடுகள் நிறைந்த, இயற்கை வனப்புமிக்க அழகிய பூமியைக் கவிஞன் நம் மனக் கண் முன் காட்டுகிறான்.

மந்திரம் 17

விஸ்வஸ்வம் மாத ரமோஷதீனாம்  த்ருவாம் பூமிம் ப்ருதிவீம்  தர்மணா த்ருதாம்

சிவாம் ஸ்யோனாமனு சரேம விஸ் வஹா –17

Xxx

மந்திரம் 18

பூமாதேவியே , நீ மஹத்தானவள்; உன்னுடைய வேகமும் , நடுக்கமும் குலுங்கலும் மஹத்தானது .. பலம் வாய்ந்த இந்திரன் உன்னைப் பிழையின்றி பாதுகாக்கிறான்.ஓ பூமியே , எங்களைத் தங்கம் போல ஜொலிக்கச் செய்வாயாகுக. எவரும் என்னை வெறுக்கக் கூடாது

பூமியின் நடுக்கம் என்னும் பூகம்பம் EARTHQUAKE குறித்து சங்கத் தமிழ் பாடல்களிலும் பிற சம்ஸ்க்ருத புஸ்தககங்களிலும் உள . ஆனால் பூமியின் ‘மஹான் வேகம்’ GREAT SPEED என்ற சொல் ஊன்றி ஆராய வேண்டியவிஷயம் .

சைன்டிபிக் அமெரிக்கன் SCIENTIFIC AMERICAN என்ற புகழ்பெற்ற அறிவியல் பத்திரிக்கை சொல்கிறது :–

பூமி அதன் அச்சில் தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் வேகம் மணிக்கு 1000 மைல் .

பூமி, பிற கிரஹங்களைப் போலவே சூரியனையும் சுற்றுகிறது. அப்போது பூமியின் வேகம் மணிக்கு 67,000 மைல்.

சூரியன் எல்லா கிரஹங்களையும் துணைக்கிரஹங்களையும் இழுத்துக்கொண்டு பால்வெளி மண்டலத்தை வலம் வருகிறது. அப்போது அதன் வேகம் மணிக்கு 4,90,000 மைல்

எப்படி பூமியின் வேகம் பற்றி அதர்வண வேதப்  புலவன் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் பாடினான்? இந்த வேகம் என்ற ஒரு சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு நான் வியாக்கியானம் செய்யவில்லை. பிரபஞ்சத்தில் உள்ள பூமி முதல் எல்லாவற்றுக்கும் வடிவம் வட்டமே என்று அறிந்து OVAL, GLOBULAR, CIRCLE அண்டம் (முட்டை) என்றும் வானில் சுற்றும் சூரியன், சநதிரன் , குரு ஆகியவற்றுக்கு ஈர்ப்பு விசை இருப்பதை அறிந்து கிரஹ GRIP, GRAB, GRAVITY என்ற சொல்லை பயன்படுத்தினான். எப்படி மிகப்பெரிய கிரகத்துக்கு குரு (வியாழன், ஜுபிட்டர் ) என்று பெயரிட்டான் என்பதை மனைதிற்கொண்டு இதை ஆராய வேண்டும். . முனிவர்கள் மாபெரும்  விஞ்ஞானிகள் !!

இப்போது கடைசி இரண்டு வரிகளைப் பார்ப்போம்.

“எங்களைத் தங்கம் போல ஜொலிக்க வை” என்று புலவன் இறைஞ்சுகிறான். தங்கத்தின் மதிப்பை அறியாதார் உலகில் இல்லை. உலகம் முழுதும் அரசசாங்க வங்கிகளில் ஒவ்வொரு நாடும் குவித்து வைப்பது தங்கக் கட்டிகள்தான் .உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் தங்கம் வருகிறது. ரிக் வேத கால மக்கள் மிகவும் செல்வ செழிப்பில் திகழ்ந்த விவசாயிகள். தானியம், குதிரை, பசு மாடுகள், தங்கம், வீடு, சபை பற்றிய குறிப்புகள் அவர்கள் நாகரீகம் மிக்கவர்கள் , நகர வாழ் மக்கள் என்பதைக் காட்டுகிறது. மேலும் ஒரே மந்திரம், இந்திரன் இருபது மன்னர்களை வென்றதாகச் சொல்லி, 5, 6 மன்னர்களின் பெயர்களையும் சொல்கிறது !

சொர்ணம், ஹிரண்யம், என்ற சொற்களை நாம் இன்றும் பயன்படுத்துகிறோம். 16 வகைத் தானங்களில் ஹிரண்ய தானத்தை தமிழ்க் கல்வெட்டுகளும் செப்புகின்றன. சொர்ணம் என்ற பெயரை இன்றும் பெண்கள் பெயர்களில் காண்கிறோம்.

இதிலுள்ள “மஹா” என்ற சொல் மூலம் ஐரோப்பிய மொழிகளில் மெகா MEGA புகுந்தது.

ஓஷதி என்ற சொல்லை ஓளஷதம் / அவுடதம் என்று இன்றும் தமிழ் மருத்துவ நூல்கள் புகலும் .

கடைசி வரிதான் மிகப் பிரமாதமான வரி !

என்னை யாரும் வெறுக்க வேண்டாம். ராமலிங்க சுவாமிகளும்  ‘திருவருட்பா’வில் இதை இறைவனிடம் வேண்டுகிறார். நான் யாரையும் சீ , நாயே பேயே என்று திட்டக்கூடாது என்று இறைவனிடம் கெஞ்சுகிறார் ; “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடும் அன்பு” நம்மிடம் இருந்தால் நம்மை யாரும் வெறுக்க முடியாது அல்லவா?

நாம் சிலரைக் கண்டதும் காதல் கொள்கிறோம் . சிலரை காரணம் இல்லாமல் வெறுக்கிறோம். பிள்ளைப் பேறு கூட இல்லாத எம்.ஜி.ஆர் . MGR என்ற நடிகரைக் காண்பதற்காக பல லட்சம் பெண்கள் இரவு மூன்று மணி வரை பொதுக்கூட்ட அரங்கில் காத்திருந்ததை நாம் படித்து இருக்கிறோம். அவரை வீட ஆண் அழகன் உலகில் இல்லையா? இதற்கெல்லாம் ஜாதகமே காரணம். நம் பூர்வ புண்ய பாபம் நம்மை நிழல் போல தொடர்ந்து வரும் என்பது ஆன்றோர் வாக்கு. ஆக நம்மை வெறுக்காமல் இருக்க நாம் யாரையும் வெறுக்காமல் இருக்கவேண்டும். இதை வள்ளுவன் குறளிலோ , வள்ளளாரின் பாடலிலோ காண்பதில் வியப்பில்லை. பூமி சூக்தத்தின் இடையில் இதை நுழைத்தானே வேதப் புலவன், அவனைத்தான் பாராட்டவேண்டும்

மந்திரம் 18

மஹத் சதஸ்தம்  மஹதீ பபூவித  மஹான் வேக ஏஜதுர்வேபதுஷ்டே

மஹான்ஸ்வேந்த்ரோ  ரக்ஷத்ய ப்ரமாதம்

ஸா நோ பூமே ப்ரரோச்ய  ஹிரண்யஸ்யேவ ஸம்த்ருசி  மா நோ த்விக்ஷத கஸ்சன

  ஈயென்று நானொருவரிட நின்று கேளாத
        
இயல்பு மென்னிட மொருவரீ
        
திடுவென்ற போதவர்க் கிலையென்று சொல்லாம
        
லிடுகின்ற திறமும் இறையாம்
    
நீயென்று மெனைவிடா நிலையும் நானென்று முன்
        
னினை விடா நெறியு மயலார்
        
நிதியொன்று நயவாத மனமு மெய்ந்நிலை நின்று
        
நெகிழாத திடமு முலகில்


    
சீயென்று பேயென்று நாயென்று பிறர்தமைத்
        
தீங்கு சொல்லாத தெளிவும்


        
திரமொன்று வாய்மையும் தூய்மையும் தந்துநின்
        
திருவடிக் காளாக்கு வாய்
    
தாயொன்று சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
        
தலமோங்கு கந்த வேளே
        
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
        
சண்முகத் தெய்வ மணியே– திருவருட்பா

தொடர்ந்து காண்போம் அடுத்த கட்டுரையில் ………..

To be continued……………………

tags-  ஈயென்று நானொரு, முனிவர்கள், விஞ்ஞானி, பூமி,வேகம்

பரதநாட்டியம் பூமிக்கு வந்த கதை ! (Post No.9930)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9930

Date uploaded in London – 3 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

முன்னொரு கட்டுரையில் பரத நாட்டியம் தோன்றியது எப்படி? அதை பரத முனிவர் 6000 சம்ஸ்க்ருத ஸ்லோக ங்களில் சுருக்கி வரைந்தது எப்படி என்பனவற்றைக் கண்டோம் .அது 36 அத்தியாயங்களைக் கொண்ட  நாட்டிய சாஸ்திரத்தின் முதல் அத்தியாயத்தில் உள்ள கதை. இப்போது 36ஆவது, அதாவது கடைசி அத்தியாயத்தில் உள்ள சுவை மிகு கதையைக்  காண்போம். இதுவும் பரத முனிவரே சொல்லும் பாணியில் அமைந்துள்ளது.

இதோ ஸ்லோகம் வாரியாக சுவையான கதை—

ஸ்லோகம் 1-15

முனிவர்கள் சொன்னார்கள்- நாட்யவேதம் பற்றி நீங்கள் சொன்னதைக் கேட்டோம். ஒரு சந்தேகம் உளது. அதைத் தெளிவு செய்யுங்கள்; உம்மைத் தவிர வேறு எவருக்கு நாட்யவேதம் பற்றிய அறிவு உளது? உமக்கு சவால் விடுக்கும் தொனியிலோ நக்கல் செயய்யும் பாணியிலோ , விரோதம் காரணமாகவோ நாங்கள் இதைக் கேட்பதாக என்ன வேண்டாம். முன்னரே நாங்கள் கேட்காததற்கு கரணம், உம்மை இடையில் தொந்தர வு செய்யக் கூடாதென்பதற்காகவே. இப்போது எங்களுக்கு இந்த ரஹஸ்யத்தைக் கூறவும் . உலக நடை முறையே நாடகம் என்று நீவீர் சொன்னீ ர் ; இதில் மறைந்துள்ள ரஹஸ்யம் ஏதேனும் உளதோ? பூர்வாரங்கத்தி ல் உள்ள து யாது? சங்கீதம் ஏன் அங்கு வந்தது? அதன் பொருள் என்ன? சூத்ரதாரனே தூய்மையானவனே ! பின்னர் எதற்காக அவர் சுத்திகரிப்பு சடங்குகளை செய்கிறார் ? சொர்க்க லோகத்திலிருந்து நாடிய நாடகம் பூமிக்கு எப்படி வந்தது/? உங்கள் சந்ததியினர் நடிகர்களை அறிந்தது எப்படி? இவற்றையெல்லாம் உள்ளது உள்ளபடியே விளம்புங்கள்.

((சில பகுதிகளை விட்டு விட்டு நாடகம் பூமிக்கு வந்த கதையை மட்டும் பார்ப்போம்.))

ஸ்லோகம் 32-35

என்னுடைய மகன்களுக்கு செருக்கு ஏற்படவே முனிவர்களையும் ரிஷிகளையும் கிண்டல் செய்து ‘காமடி’ (Prahasana) நாடகம் நடத்தினர். ரிஷிகள் கோபப்பட்டு உங்கள் நாடகம் அழிந்து ஒழியட்டும் என்று சாபமிட்டனர். நீங்களும் உங்கள் சந்ததியினரும் பூமியில் பிறந்து கீழ் ஜாதியினர் போல நடத்தப்படுவீர்களாகுக என்று சபித்தனர்.

இந்திரன் அவர்களிடம் மன்றாடவே நாடகம் அழியாது இருக்கட்டும் ; ஏனைய சாபம் பலிக்கட்டும் என்றனர்

 என் மகன்கள் என்னிடம் வந்து முறையிட்டு கதறவே இதை அழியாது காக்க நாடகமாக நடித்துவிடுவோம் என்று  சொல்லி, ஒரு பிராயச்சித்தமாக அப்சரஸ் பெண்களுக்கு அதைக் கற்பித்தனர் .

ஸ்லோகம் 52-70

காலம் உருண்டோடியது. பூலோக மன்னனான நஹுஷன் என்பான், தனது  திறமையால் சொர்க்கலோக பதவி பெற்றான். அவன் இசையுடன் கூடிய நாட்டியத்தை அங்கே கண்டான். நாம் பூமிக்குத் திரும்புகையில் என் வீட்டிலும் இது நடைபெறவேண்டும் என்று எண்ணினான். தேவர்களைக் கேட்டபோது அப்சரஸ் பெண்கள் பூவுலக மக்களுடன் தொடர்புகொள்ள முடியாது; ஆகையால் உமது கோரிக்கையை ஏற்கமுடியாது என்று பிருஹஸ்பதி சொன்னார். அவர்கள் இந்தக் கலையின் ஆசார்யரான பரத முனிவனைக் கேட்டால் ஒரு வழி பிறக்கலாம் என்றார்  பிருஹஸ்பதி.

நஹுஷனின் பூர்வீக அரண்மனையில் ஊர்வசி தனது தோழிகளுடன் நாட்ய பயிற்சி செய்தபோது . திடீரென்று ஒருநாள் மறைந்தவுடன் அப்போது அங்கிருந்த மன்னன் ஏக்கத்தில் இறந்தான் . பின்னர் நான் பூமியில் இதை நடத்த திட்டமிட்டேன் நஹுஷனும் பல பெண்களின் நளின அபிநயத்துடன் இது அவனது அரண்மனையில் நடக்க வேண்டும் என்று கூறியதால் என்  மகன்களை அழைத்து இதை பூவுலகில் நடத்துங்கள். பிரம்மா உண்டாக்கிய கலையால் அவர் அனுமதித்து விட்டார். ஒரு அபவாதமும் ஏற்படாது. கோகல என்பவர் உங்களுக்கு மேலும் பல உதவிகளை வழங்குவார் என்றேன்.

என் மகன்களும் பூமிக்குச்சென்று நஹுஷனின் அரண்மனையில் நாட்டிய நாடகம் நடத்தி  அங்குள்ள பூலோக பெண்களை மணந்து பிள்ளைகளையும் பெண்களையும் பெற்றுக்  கொடுத்துவிட்டு விண்ணுலகம் வரவே அவர்களை பிரம்மாவும் அனுமதித்தார்.ஆகையால் சாபத்தின் ஒரு பகுதியின்படி, பூமியில் நடிகர் பரம்பரை தோன்றியது இது பிரம்மாவிடமிருந்து தோன்றிய கலை ஆதலால் சர்வ மங்களும் சுபிட்சமும் உண்டாகும்.

இதன் பின்னார் ஸ்லோகம் 71-82ல் மங்களம் கூறுவதுடன்

பரத முனிவர் எழுதிய நாட்டியசாஸ்திர நூல் நிறைவு அடைகிறது

–சுபம்–

tags- பரதநாட்டியம்,  பூமி,  கதை, பரத முனிவர்,  நாட்டியசாஸ்திரம்

பூமியைக் காப்பாற்றுங்கள்

SAVE MOTHER EARTH

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

Compiled  by ச. நாகராஜன்

Date: 30  September 2015

Post No: 2201

Time uploaded in London :– 6-06 (காலை)

(Thanks  for the pictures) 

 

MY BROTHER S NAGARAN IS A REGULAR CONTRIBUTOR TO BHAGYA MAGAZINE: swaminathan

அறிவியல் துளிகள் தொடர், பாக்யா வார இதழில் கடந்த நாலரை ஆண்டுகளுக்கு மேல் வந்து கொண்டிருக்கிறது. அதில் 238வது அத்தியாயமாக    11-9-2015இல் வெளியான கட்டுரை இது!

 

பூமியைக் காப்பாற்றுங்கள் ஒரு விண்வெளி வீரரின் உருக்கமான இறுதி உரை!

.நாகராஜன்

 

நமது பூமி பெரும் ஆபத்தில் இருக்கிறது! என்ன நடவடிக்கையை நீங்கள் எடுக்கப் போகிறீர்கள்?”  – பூமியைக் காப்போம் என்ற இயக்கத்தின் ஸ்லோகன்களில் ஒன்று

 

 

நெதர்லாந்திலிருந்து முதலில் விண்வெளிக்குச் சென்ற பெருமையைப் பெற்றவர்    இயற்பியல் வல்லுநரான உப்போ ஜோஹன்னஸ் ஓகெல்ஸ் (Wubbo Johannes Ochkels பிறப்பு 28, மார்ச்,1946 மறைவு 18, மே,2014).

 

யூரோப்பியன் ஸ்பேஸ் ஏஜென்ஸி மூலம் 1985ஆம் ஆண்டு இவர் விண்வெளிக்குப் பயணமானார்.

இயற்பியல் வல்லுநரான இவரது சிந்தனைகள் புதியவை. மலைக்க வைப்பவை.

 

TED என்ற நிறுவனம் தொழில்நுட்பம், பொழுதுபோக்கு மற்றும் வடிவமைப்பு  (Technology, Entertainment and Design) ஆகியவற்றை இணைத்து புதிய சிந்தனைகளைத் தரும் சொற்பொழிவுகளை 1984ஆம் ஆண்டிலிருந்து ஏற்பாடு செய்து வருகிறது. நிபுணர்கள் பேசும் இந்தப் பேச்சுக்கள் பிரபலமானவை. 18 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் பேச்சுக்கள் இவை.

 

இந்த டெட் சொற்பொழிவில் உப்போ ஓகெல்ஸின் ஆம்ஸ்டர்டாம் சொற்பொழிவு மிகவும் பரவலாகப் பேசப்படும் ஒன்றாக அமைகிறது.

இதில் காலம் பற்றிய ஒரு புதிய சிந்தனையை முன் வைத்தார் ஓகெல்ஸ். காலம் என்பதே மாயை என்பது இவரது வாதம்.

காலத்தை யாராலும் அளக்க முடியாது. ஏனெனில் அதில் பிரிக்கக் கூடிய சிறு பகுதி என்று ஒன்று இல்லை. ஒளியின் வேகம் நிலையானது. அந்த வேகத்தில் ஒளியோடு ஒருவர் பயணிக்க முடிந்தால் அவருக்கு காலமே கிடையாது.

 

 விண்வெளி வீரர்

இவரது 18 நிமிட டெட் பேச்சைக் கேட்டவர்கள் அசந்து போனார்கள். இதனால் காலத்தைப் பற்றிப் புதிய பார்வையில் ஆய்வு நடக்க ஆரம்பித்துள்ளது.

விண்வெளியில் பறந்த போது இவருக்குப் பெரும் ஆன்மீக அனுபவம் ஏற்பட்டது. ஒரு விரிந்த பார்வை இவருக்கு வந்தது.

 

இவர் தனது மறைவிற்கு முன்னர் நீட்டித்த ஆற்றல் தீர்வுகள் பற்றி ஒரு கடிதம் உலகத்தினருக்கு எழுதினார். அதில், “நாம் உணர்வற்று காலனிகளை அமைக்கும் தேனீக்கள் இல்லை. நாம், இணைந்து சேர்ந்து சிந்திக்க வல்ல திறமை இருப்பதை அறியாத நியூரான்களும் இல்லை. நாம் அறிவார்ந்தவர்கள். நமது சமூகத்தின் நடத்தையைப் பார்த்து கவனிக்கும் வல்லமை பெற்றவர்கள். மனித குலம் எங்கே செல்கிறது என்பதை நாம் நன்கு அறிவோம். நாம் அனைவரும் இணைந்து செயலாற்றினால் மனித குலத்தை இன்னும் பிரமாதமான திசை நோக்கி நடத்திச் செல்லலாம். அனைவரையும் இணைக்கும் ஒரு புதிய மதத்தை மனித குலத்தின் மீது ஒரு புதிய நம்பிக்கை கொண்டு நாம் உருவாக்கலாம்.

 

பல மதங்கள் உள்ளன. மக்களை இணைக்கின்றன. ஆனால் அனைத்து மக்களையும் அவை இணைக்கவில்லை. மக்கள் நம்பும் வெவ்வேறு கடவுள்கள் மனித குலத்தைப் பிரிக்கின்றனர். இந்தப் பிரிவினைகள் பிரச்சினைகளுக்கு வழி வகுக்கின்றன. பூமியுடன் இந்த மதங்கள் மனித குலத்தை ஒன்றாக இணைக்கவில்லை. அவை நீடித்திருப்பவை அல்ல.

ஆனால் முழு மனித குலத்தின் மீதும் நாம் நம்பிக்கை கொண்டிருப்போமானால் ஒரு பிரச்சினையும் இருக்காது. ஏனெனில் நம்மிடம் தான் பிரிவினை இருக்காதே, ஒன்றுபட்டு அல்லவா இருப்போம்! மனித குலத்தின் கடவுள் நம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறார். நம்மை விட்டு வெளியே கடவுள் இல்லை. நாம் இந்தக் கடவுளிடமிருந்து ஒளிந்து கொண்டிருக்க முடியாது. ஏனெனில் நாமே கடவுள்

 

சமாதானத்துடன் ஒரே மனதைக் கொண்ட, சண்டை இல்லாத மனித குல எழுச்சிக்காக அறைகூவுகிறார் ஓகெல்ஸ்.

விண்வெளியிலிருந்து பூமிப் பந்தைப் பார்த்த போது அவருக்கு உயரிய ஆன்மீக அனுபவம் ஏற்பட்டு நல்ல புதிய சிந்தனைகள் மலர்ந்தன.

 

அருமையான மனைவி, குழந்தைகள், பேரப் பிள்ளைகள் என நல்ல வாழ்வு வாழ்ந்த அவருக்கு 2005ஆம் ஆண்டு  மாரடைப்பு ஏற்பட்டது. ஒருவழியாக மீண்டார். ஆனால் 2013, மே மாதம் அவருக்கு சிறுநீரகத்தில் புற்று நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு டாக்டர்கள் அவருக்கு இரண்டு வருடம் என்றுநாள் குறித்துவிட்டனர்.

 

2014, மே மாதம் 18ஆம் தேதி மரணமடைந்த அவர் இறப்பதற்கு முதல் நாள் மருத்துவ மனையில் படுத்திருந்தபடியே தொலைக்காட்சி ஒன்றிற்குத் தனது கடைசி பேட்டியை அளித்தார். உணர்ச்சி ததும்ப மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு அனைத்து சக்தியையும் ஒருங்கிணைத்து, சக்தி வாய்ந்த தனது பேச்சில் அவர் உலகினரிடம் இந்த பூமி மிகவும் மதிப்பு வாய்ந்தது என்றும் அதை எப்படியேனும் காக்க வேண்டும் என்றும் உருக்கமாக வேண்டிக் கொண்டார். “இது ஒன்றே தான் நமக்கான வசிப்பிடம். இரண்டாவது பூமி இல்லைஎன்றார் அவர்.

 

தனக்கு வந்தது போல பூமிக்கும் கான்ஸர் வந்து விடக் கூடாது என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்திய அவர்,” நம்முடைய பூமி கான்ஸரினால் பீடிக்கப்பட்டிருக்கிறது. எனக்கு கான்ஸர் உள்ளது. மக்களில் ஏராளமானோர் கான்ஸரினால் இறக்கின்றனர். எல்லோரும் இறக்கத் தான் வேண்டும். ஆனால் மனித குலம் எப்போதும் நீடித்து இருக்க போதுமான அளவு மனிதர்கள் உள்ளனர்.

 

நாம் நமக்கே சொந்தமான நமது பூமியைக் காக்க வேண்டும். ஒரு விண்வெளி வீரரின் உற்சாகமும் ஆர்வமும் உள்ளொளியும் அணுகுமுறையும் இருக்கும் போது மற்றவர்கள் நேசிக்க முடியாத அளவிற்கு பூமியை நீங்கள் நேசிக்க ஆரம்பிப்பீர்கள். ஒன்றை உளமார நேசிக்க ஆரம்பித்து விட்டால் அதை விட உங்களுக்கு மனமே வராது.

 

என் மனைவியைப் பாருங்கள். அவளுக்கு என்னை இழக்க விரும்பவில்லை. என்னவெல்லாமோ முடியுமோ அதையெல்லாம் செய்து என்னை வாழ வைக்க அவள் விரும்புகிறாள். அந்த அன்பும் அணுகுமுறையுமே மனித குலம் பூமியை வாழ வைக்கத் தேவையானவை!”

 

அவரது தொலைக்காட்சி பேட்டியைக் கண்டோர் நெகிழ்ந்து உருகியதில் அதிசயமே இல்லை.

7 நாட்கள் 44 நிமிடங்கள் விண்வெளியில் பறந்த வீரர் மண்ணில் வாழும் மாந்தருக்குக் கூறிய அறிவுரைகளும் புதிய சிந்தனைக் கருத்துக்களும் வளமானவை; வரவேற்கப்பட வேண்டியவை; வாழ்ந்து காட்டப்பட வேண்டியவை!

 

–சுபம்–