Written by London swaminathan
Date: 26 January 2017
Time uploaded in London:- 9-24 am
Post No.3578
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com
பெண்களுக்கும் மரங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று சம்ஸ்கிருத, தமிழ்ப் பாடல்கள் சொல்கின்றன.. கீழ்க் கண்ட தமிழ், சம்ஸ்கிருதப் பாடல்கள் பெண்கள் என்ன செய்தால் மரங்கள் என்ன செய்யும் என்று விளக்குகின்றன.
மகளிரால் மலரும் மரங்கள்:-
மகளிர் சுவைத்தால் மலர்வது- மகிழம்
நட்பாட மலர்வது- ஏழிலைப் பாலை
நிந்திக்க மலர்வது – பாதிரி
நகைக்க மலர்வது- முல்லை
ஆடுவதால மலர்வது புன்னை
அணைக்க மலர்வது- குரா
உதைக்க மலர்வது- அசோகு
பாட மலர்வது- குருக்கத்தி
பார்க்க மலர்வது- மரா
நிழல்பட மலர்வது – சண்பகம்
இவைகளை விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து உண்மையை அறிதல் நலம் பயக்கும்.
எண்மா தவிசண் பகம்பாலை புன்னை யெழிற்படவி
கொண்மா மகிழ மராவொ டசோகு குராமுல்லையின்
பண்பாட னீழற் படனட்ட லாடற் பழித்தலுண்ணல்
கண்ணோக்கு தையனைணத் தல்சிரித் தற்கலர்க் காடுருமே
—உவமான சங்கிரஹம்-ரத்தினச் சுருக்கம்
எண்- மதிக்கத் தக்க
மாதவி- குருக்கத்தி
சண்பகம், பாலை, புன்னை-சண்பகம், பாலை, புன்னை
எழில் படலி- அழகிய பாடலி (பாதிரி)
கொள்மா – கொள்ளுதர்க்குரிய மா மரம்
மகிழ் – மகிழ்
அம் மராவுடனே- அழகிய மரா உடனே
அசோகு – அசோகம்
குரா- குரா
முல்லை-முல்லை
மின் (ஆகிய இவைகள் முறையே)
பண்பாடல்- இருக்கத்தக்க
னீழல்படல்- சண்பக மரம்
நட்டல்- ஏழிலைப் பாலை மரம்
ஆடல் – புன்னை
பழித்தல் -பாதிரி
உண்ணல்-மகிழ மரம்
கண்ணோக்கு- மரா,
உதை- அசோகு
அணைத்தற்கு- குரா
சிரித்தல்- முல்லைக்கொடி
அலர்க் காடுருமே – மலர்கள் பூத்துக் குலுங்கும்.
ஐந்தாண்டுக்கு முன் நான் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி
பொம்பளை சிரிச்சா, உதைச்சா, பார்த்தா போச்சு (Posted on 23 June 2012)
சம்ஸ்கிருதத்தில் ஒரு செய்யுள் இருக்கிறது. அது பெண்களுக்கும் மரத்துக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு பற்றிப் பேசுகிறது. அசோக மரத்தைப் பெண்கள் உதைத்தால் அது பூக்கும் என்று 2000 ஆண்டுகளாக வடமொழிப் புலவர்கள் பாடினர். இதோ அவர்கள் தரும் பட்டியல்:
பெண்கள் உதைத்தால் பூக்கும் அசோக மரம்
பெண்கள் சிரித்தால் பூக்கும் செண்பக மரம்
பெண்கள் பேசினால் பூக்கும் நமேரு மரம்
பெண்கள் தழுவினால் பூக்கும் குராபக மரம்
பெண்கள் பார்த்தால் பூக்கும் திலக மரம்
நாலிங்கிதக் குரபகஸ் திலகோ ந த்ருஷ்டோ
நோ தாடிதஸ்ச சரணை சுத்ரசாம் அசோக:
சிக்தோ ந வக்த்ரம் அதுனா பகுளாஸ் ச சைத்ரே
சித்ரம் ததாபி பவதி ப்ரஸவ அவகீர்ண என்பது சம்ஸ்கிருதப் பாடல்.
-SUBHAM-