பெண்கள் விளையாட்டுகள் (Post No.3537)

Written by London swaminathan

 

Date: 12 January 2017

 

Time uploaded in London:- 9-31

 

Post No.3537

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

பெண்கள் விளையாட்டுகள்:

 

அந்தக் காலத்தில் திருமணமாகும் வரை பெண்கள் என்ன என்ன விளையாடினர் என்று ஒரு பாட்டின் மூலம் தெரிகிறது. இது முற்றிலும் சரி என்பது சங்கத் தமிழ் பாடல்களாலும், ராமாயண, மஹாபாரத நூல்களாலும் உறுதியாகிறது:-

 

மருங்குவளர் பூங்கா மலர்வாவி யூச

றிருந்துமணி செய்குன்று தேமா- விரும்பமுத

பானங்கிளி பூவை பந்துகன்னங் கழங்கன்ன மயின்

மான்முல்லை பந்தர் வளர்ப்பு

–உபமான சங்கிரஹம் இரத்தினச் சுருக்கம்

72363-broken2bbest

1.பூங்காவில் பூக்கள் பறித்து விளையாடினர்.

2.பொய்கை, கிணறுகளில் நீராடிப் பொழுது போக்கினர்.

3.வீட்டிலும் மரத்தடியிலும் ஊஞ்சல் கட்டி ஆடினர்.

4.பணக்காரர் வீடுகளில் செயற்கையாக குன்று எழுப்பி அதில் ரத்தினக் கற்களைப் பதித்துவைத்து அதன் மேல் ஆடி ஓடி சாடினர்.

5.தேமாமரம் விளையாடினர் (மாமரத்தில் ஏறி அல்லது கல் விட்டெறிந்து மாங்காய், மாம்பழம் எடுத்துச் சாப்பிடுதல்) .

6.அமிர்தம் போன்ற பானங்கள் செய்து குடித்தனர்.

7.காய்களை வைத்து கழங்கு ஆடினர்;

8.பூப்பந்து ஆடினர்.

9.கிளி, பூவை (சாரிகைப் பறவை), அன்னம், மயில் ஆகிய பறவைகள் வளர்த்து பொழுது போக்கினர்.

10.முல்லைப் பூச்செடிக்கு பந்தல் கட்டி வளர்த்து அதைப் பராமரித்தனர். முல்லை என்றால் அது போன்ற பிறவகை மலர்ச் செடிகளும் அதில்  அடங்கும்.

 

ஐந்து தொழில்கள்

அம்பொற்றொடியணிமினார் தங்கைக்கைந்து தொழில்

செம்பவள மென்விரலைச் சேர்த்தெண்ணலம்பெழுதல்

பூசித்திலை கிள்ளல் பூத்தொடுத்தல் பண்ணெழில்யாழ்

வாசித்தலென்றுரை செய்வார்

–உபமான சங்கிரஹம் இரத்தினச் சுருக்கம்

 

பொருள்:-

அழகிய பொன்னினாற் செய்யப்பட்ட வளையலை அணிந்த மாதர் கைகளுக்கு ஐந்து தொழில்கள் உண்டு. (அவையாவையெனின்) 1.செம்பவளம் போன்ற மென்மையான விரல்களைச் சேர்த்து எண்ணுதல்,

2.அம்பின் உருவத்தை எழுதல்,

3.பூசை செய்து இலை பறித்தல்,

4.மலர் தொடுத்தல்,

5.பண்ணொடு கூடின அழகாகிய வீணை வாசித்தல் என்று சொல்வர்.

 

சங்க இலக்கியத்திலும் சம்ஸ்கிருத இலக்கியத்திலும் இந்த விளையாட்டுகள்வரும் இடங்களை தனியே எழுதுகிறேன்

–Subahm–