பெண்கள் வாழ்க-10; 33 காரணங்கள்!(Post No.9466)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9466

Date uploaded in London – –6  APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

28.புரட்சிகர பெண்களை இந்தியாவில் மட்டுமே காணலாம்.கணவனைத் தவறாகக் குற்றம் சாட்டிக் கொன்ற பாண்டியன் அரசவைக்குள் நுழைந்து டேய் அறிவுகெட்டவனே ! (தேரா மன்னா ! செப்புவதுடையேல்!) என்று அழைத்துப் பேசுகிறாள் கண்ணகி. எமனைப் பின்தொடர்ந்து சென்று திறமையான பேச்சினால் கணவனின் உயிரை மீட்கிறாள் சாவித்ரி. தன்னை சூதாட்டத்தில் பணயம் வைக்க உரிமை இல்லை என்று சட்டம் பேசுகிறாள் திரவுபதி; நான் யாருடன் படுத்து கர்ப்பமாகி நீ பிறந்தாய் என்று எனக்கே தெரியாது. குலம் கோத்திரம் கேட்கும் குருவிடம் இதைச் சொல் என்று உண்மை பேசுகிறாள் ஜாபாலா. அவனும் என் அப்பா பெயர் தெரியாது. இதை அம்மாவே சொன்னாள் என்று சொன்னவுடன் குரு நெகிழ்ந்து போய், நீ உண்மை பேசுகிறாய். ஆகையால் நீ பிராமணனே என்று துணிகிறார் குரு . உபநிஷத் கால உண்மைப் பெண்ணுக்கு நிகர் எவர்? சத்யகாம ஜாபாலா என்ற அச்சிறுவன் 2800 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவன். மேலை நாடுகளோ ஒரு ஜோன் ஆப் ஆர்க் Joan of Arc கைக்  காண நமக்குத் பின்னர் 2000 ஆண்டுகள் காத்திருந்தனர்.!!

29.”பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம்” என்று செட்டியார் குல மங்கை புனிதவதி (காரைக்கால் அமமையார்) பாடுவதால் பெண்கள், ஜாதி வித்தியாசமின்றி,  1500 ஆண்டுகளுக்கு முன்னரே , கல்வி பயின்றதை அறிகிறோம்.

30. பெண்களுக்கான விசேஷ விழாக்களின் பட்டியல் மிக நீண்டது. முன்னர் ரக்ஷா பந்தன் போன்ற பெண்களைப் பாதுகாக்கும் விழாக்களைக் கண்டோம் . இதே போல குழந்தைகளையும் கணவரையும் பாதுகாக்க பெண்களும் விரதம் அனுஷ்டிக்கின்றனர் . வட சாவித்ரி விரதம், காரடையான் நோன்பு, கணுப்பொங்கல் வரலெட்சுமி விரதம், ரிஷி பஞ்சமி, நாக பஞ்சமி , கரவா சவுத் போன்ற பல பண்டிகைகளும் உண்டு. வேறு எந்த மதத்திலும் இதைக் காணமுடியாது

31.சங்கப் பாடல்களிலும் ஸம்ஸ்க்ருதப் பாடல்களிலும்.  “இந்தக் கணவனே மறு  பிறப்பிலும் வாய்க்க வேண்டும் என்று பெண்கள் பாடுகின்றனர். மேல் நாட்டிலோ இதற்கு நேர் மாறாக ஒரு வாழ்க்கையிலேயே மூன்று நான்கு பேரை மணந்து விடுகின்றனர்.

  காதலனைப் பற்றி அறிந்து ஓவியம் தீட்டி அவனுக்காக காத்திருந்ததை தமயந்தி, வாசவ தத்தை முதலிய கதைகளிலும் காணலாம்.

32.பெண்களுக்கு அதிபயங்கர சிலபஸ் Syllabus  இருந்தது!! இந்த பாட திட்டம் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய வாத்ஸ்யாயனாரின் காம சூத்திரத்தில் உளது. பெண்கள் கற்காத பாடம் இல்லை. இப்படி 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எவரும் சிந்தித்துக்கூட இருக்க மாட்டார்கள்!

33.பெண்களுக்கு விஷேச  உரிமைகள் :– இந்தியாவில் பஸ் முதலியவற்றில் பெண்களுக்கு என்று ஆசனங்கள். இது தவிர நான் 35 ஆண்டுகள்  வாழ்ந்த மதுரையில் பெண்கள் வந்தால், ஆண்கள் அமர்ந்திருக்கும் இடங்களையும் அவர்களுக்குத் தர வேண்டும். கோவில் போன்ற இடங்களில் அவர்களுக்கு என வரிசை, தரிசனப் பகுதி . பாண்டிய மன்னரின் மீது கோபம் கொண்டு மதுரையைத் தீக்கிரையாக்கிய கண்ணகியும் பசு, பெண்டிர், பார்ப்பனர், வயதானவர் மற்றும் குழந்தைகளை விடுத்து மற்றவர்களை எரிக்க அக்கினி தேவனுக்கு உத்தரவிடுகிறாள் . மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையைக் கடைப்பிடித்ததால் இத்தனை சலுகை. வேத பாட சாலையில் நுழையும் 5 வயது மாணவனுக்கு முதல் பாடம் மாத்ரு தேவோ பவ (தாயே கடவுள் ) என்பது முதல் பாடம் ஆகும்.

இது தவிர இன்னும் பல சுவையான விஷயங்கள் உள்ளன. அவற்றையும் மஹாராணிகளையும் தனியே காண்போம்.

tags- பெண்கள் வாழ்க-10