
Post No. 9822
Date uploaded in London –6 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லெஸ்பியன் Lesbian என்ற சொல்லைத் தந்த கிரேக்க பெண் சாஃப்போ Sappho.
2600 ஆண்டுகளுக்கு முன்னர் கிரீஸ் என்னும் கிரேக்க நாட்டில் ஒரு பெண் கவிஞர் இருந்தார். அவர் பெயர் சாஃப்போ Sappho. அவரைப் பற்றி நிறைய கதைகள் உண்டு. அவர் எழுதியதாகச் சொல்லப்படும் ஒன்பது கவிதை புஸ்தகங்களில் இன்று நமக்குக் கிடைத்திருப்பது சில துண்டுக் கவிதைகள்தான் . பெண்களே பெண்களுடன் உறவு கொண்டு வாழும் அணியை ஆங்கிலத்தில் லெஸ்பியன் LESBIAN என்பர். இதற்குக் காரணம் லெஸ்போஸ் என்னும் தீவு ஆகும்; கிரேக்க நாட்டிலுள்ள அந்தத் தீவில்தான் சாஃப்போ Sappho பிறந்தார்.
ஐரோப்பிய இலக்கியத்தில் மிகவும் புகழ்பெற்ற பெண்மணி சாஃப்போ.
இவருக்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் வாழ்ந்த 30 ரிக் வேத பெண்மணிகள் புனிதவதிகள் ; அவர்கள் இயற்றிய அல்லது ‘கேட்ட’ (Sruti) கவிதைகள் நமக்கு இன்றும் கிடைக்கின்றன. சாப்போவுக்கு 600 ஆண்டுகளுக்குப் பின்னர் ‘வடவேங்கடம் முதல் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகில்’ சுமார் 20 தமிழ்ப் பெண்களும் பாடல்களை இயற்றி இலக்கியத்தில் அழியா இடம்பெற்றனர்.
சாஃப்போ, இவர்களிடமிருந்து வேறுபட்டவர்.
இவர் பற்றிய கட்டுக் கதைகள்தான் அதிகம். உண்மைச் செய்திகள் மிகக்குறைவு. இவர் லெஸ்போஸ் தீவில் பிறந்தவர்;திருமணம் ஆனவர், அவருடைய மகளின் பெயர் கிளையஸ் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.
பிற்கால கிரேக்க எழுத்தாளர்கள் இவரது கவிதைகளை படித்து ரசித்து நமக்கு விட்டுச் சென்ற செய்திகள் மூலம் மேல்விவரம் கிடைக்கிறது. அதே தீவில் வசித்த அல்கேயாஸ் ALCAEUS என்பவரை இவர் மணந்து ஒரு மகளைப் பெற்றார் என்றும் சொல்லப்படுகிறது
பேயோன் PHAON என்ற படகோட்டி மீது இவர் காதல் கொண்டதாகவும் அதன் விளைவாக ஒரு மலை உச்சியிருந்து விழுந்து சாஃப்போ தற்கொலை செய்து கொண்டதாகவும் பிற்கால ரோமானியாக் கவிஞர் ஆவிட் OVID எழுதிவைத்தகத்துள்ளார். ஆயினும் இவைகளை உறுதி செய்யும் வேறு தடயங்கள் கிடைக்கவில்லை.
சாஃப்போ எழுதிய கவிதைகள் எதுவும் நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. துண்டு துண்டாகக் கிடைத்திருக்கின்றன. அவை அனைத்தும் குடும்பம் மற்றும் நண்பர்களைப் பற்றியது. தனக்குத் தோன்றும் உணர்ச்சிகளைக் கவிதையாகக் கொட்டித் தீர்த்த பெண் இவர். ஆகையால் அத்தகைய கவிதைகளை எழுதிய பெண்களின் வரிசையில் இவர் முதலிடம் பெறுகிறார். எளிமையான அழகிய நடை; உணர்ச்சிகளும் புலன் இன்ப உணர்ச்சி கொண்டவை.
பெண்களை நோக்கி சாஃப்போ பாடியதாக பாடல்கள் தென்படுகின்றன. அவரைச் சுற்றி ஒரு தோழிகள் கூட்டம் இருந்ததும் அவர்கள் இவர் கவிதைகளைப் போற்றிப் புகழ்ந்தும் தெரிகிறது . அந்தத் தோழிமார் கூட்டத்துடன் சேர்ந்து கிரேக்க நாட்டு ரதியை, அதாவது அப்ரதித் APHRODITE தேவதையை வழிபடும் சடங்குகளைச் செய்ததாகவும் சொல்லப்படுகிறது..
இதையெல்லாம் ஆதாரமாகக் கொண்டு சாஃப்போ பெண்களுடன் ஓரினச் சேர்க்கை வாழ்வை அனுபவித்தவர் என்று பிற்காலத்து விமர்சகர்கள் செப்பியதுடன் இவ்வாறு வாழ்க்கை நடத்துவோர் லெஸ்பியன் தீவுப் பெண்களைப் போன்றார் என்றும் சொல்லத் துவங்கினர். அதிலிருந்து பெண்களே பெண்களை காம நோக்கில் கண்டால் அவர்களை லெஸ்பியன் என்ற சொல்லால் அழைக்கத் தொடங்கினர்.
சாஃப்போ
பிறந்த ஆண்டு- கி.மு 610
இறந்த ஆண்டு – கி.மு.580
வாழ்ந்த ஆண்டுகள்- 30
கவிதை நூல்கள் —
ஒன்பது தொகுப்புகளாக அவை இருந்தன என்று கருதப்படுகிறது.
ஆனால் இப்போது நமக்குக் கிடைத்தவை முழுக் கவிதை அல்ல.
இடையிடையே வரும் வரிகள்தான். அவைகளும் எப்போது எழுதப் பட்டன என்ற குறிப்பு இல்லை.
2014-ம் ஆண்டில்கூட அவர் எழுதியதாகக் கருதப்படும் ஒரு கவிதையின் 5 பத்திகள் stanza கண்டு பிடிக்கப்பட்டன. இன்னும் சில தற்கால ஆசிரியர்கள் அவரது கவிதைகளுக்கு கண், காது, மூக்கு வைத்து அவரது துண்டுக் கவிதைகளை முழுக் கவிதை ஆக்கிவிட்டதாகச் சொல்லி முழுக் கவிதை நூல்களையும் வெளியிட்டுவருகின்றனர் .




–SUBHAM–
tags- பெண் கவிஞர், Lesbian, சாஃப்போ,லெஸ்பியன், ஓரினச் சேர்க்கை , Sappho