பெரியது கேட்கின்….. ஏனிட் பெரிது, அதனினும் பெரிது இலியட், அதனினும் பெரிது… (5344)

WRITTEN by London swaminathan

Date: 20 August 2018

 

Time uploaded in London – 20-23 (British Summer Time)

 

Post No. 5344

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

பெரியது கேட்கின்….. ஏனிட் பெரிது, அதனினும் பெரிது இலியட், அதனினும்  பெரிது… (5344)

 

இன்று அவ்வையாரிடம் யாராவது அவ்வையே இதிஹாசங்களில் எது பெரிதோ? என்று கேட்டால்,

ஐயனே உலகில் பழமையானதும் பெரிதுமான நூல் ரிக் வேதம்; அதில் 40,000 வரிகள் உள்ளன.

ஆனால் நீவீர் இதிஹாசம் பற்றிக் கேட்டதால் அது பற்றி மட்டும் செப்புவேன் கேளீர்:

Image of Virgil

பெரிது பெரிது வர்ஜிலின் ஏனிட் (Aeneid of Virgil) ,

அதனினும் பெரிது ஹோமரின் இலியட்

(Iliad of Homer)அதனினும் பெரிது வால்மீகியின் ராமாயணம்;

அதனினும் பெரிது வியாஸரின் மஹாபாரதம்

 

அதனினும் பெரிது எங்கும் இல்லை, இப்போதும் இல்லை!

 

தாங்க்ஸ் (Thanks), அவ்வை என்று சொல்லி விடைபெற்றால் பல உண்மைகள் புலப்படும்.

 

வர்ஜில் என்பவர் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ரோமானிய புலவர். அவர் எழுதிய காவியம் ஏனிட். அது லத்தீன் மொழியில் உள்ளது அதிலுள்ள வரிகள்- 9868

 

இதற்கு முன், கி.மு 800-ஐ ஒட்டி கிரேக்க மொழியில் ஹோமர் இரண்டு இதிஹாசங்களை இயற்றினார். அவற்றில் இலியட்டின் வரிகள் 15,693. இத்தோடு ஆடிஸி (Odyssey)  என்ற அவரது காவியத்தையும் சேர்த்தால் சுமார் 30,000 வரிகள்தான் வரும். அதற்கு முன் கிரேக்க மொழியில் எந்தப் படைப்பும் இல்லை. ஆனால் இலியட் காவியத்துக்கெல்லாம் முன் மாதிரியாக விளங்கிய வால்மீகி ராமாயணத்தில் 48,000 வரிகள். இதை விட மஹாபாரதம் பெரிது. 2,20,000 வரிகள். அதில் வியாஸர் சொல்லாத, பேசாத விஷயம் எதுவும் இல்லாததால், ‘வியாச்சோசிஷ்டம் ஜகத் ஸர்வம்’ (வியாஸரின் எச்சில்தான் உலகம் முழுதும்) என்பர்.

 

இந்துக்களின் கணக்குப்படி வால்மீகி ராமாயணமே முதல் காவியம். அதில் புத்த மதம் பற்றி ஒரு குறிப்பு இருப்பதாகச் சொல்லி அதை பின்னுக்குத் தள்ளுவர் வெளிநாட்டு ‘அறிஞர்கள்’.

 

மஹாபாரதத்தில் புத்த மதம், சமண மதம் பற்றிய குறிப்புகள் இல்லாமையால் அதை முன் வைப்பர். ஆனால் உண்மையில் எளிமையான காவியமான ராமாயணமே முதல் காவியம். இந்துக்கள் பயன்படுத்தும் ஸ்லோகம் என்பதே வால்மீகியின் சோகத்திலிருந்து வந்ததாக கதையும் உண்டு.

மஹா    பாரதத்துக்குப் பெருமை சேர்க்கும் இரண்டு விஷயங்கள்-

அதிலுள்ள பகவத் கீதை

விஷ்ணு ஸஹஸ்ரநாமம்

 

ராமாயணத்தைப் பார்த்து, அல்லது அதைக் கேட்டு, கிரேக்க நாட்டுக்கு ஏற்ப ஹோமர் ஒரு இதிஹாசம் எழுதினார் என்று சில இலக்கிய விமரிசகர்கள் பகர்வர்:-

ட் ரோ ஜன் யுத்தம்= ராம ராவண யுத்தம்

ட் ராய் நகரம் = லங்கா

ஸ்பார்டா = அயோத்யா

மெனெலஸ் = ராமா

பாரிஸ்= ராவணா

ஹெக்டர் = இந்திரஜித் அல்லது விபீஷணன்

ஹெலன் = சீதா

அகமெம்னன்= சுக்ரீவா

பட் ரோ ஸியஸ்=  லக்ஷ்மணன்

நெஸ்டர்= ஜாம்பவான்

அகில்லிஸ் = அர்ஜுனா+,,,,,,,,மா+ லக்ஷ்மணா

என்று ஒப்பிடுவர்.

இது ஒருவேளை மிகைப்படுத்தப்பட்டது என்று கருதுவோரும் ஒரு விஷயத்தை மறக்க மாட்டார்கள் லத்தீன், கிரேக்க மொழிகளில் காவியங்களோ இதிஹாசங்களோ தோன்றும் முன் இலக்கியம் கிடையாது. ஸம்ஸ்க்ருதத்திலோ இதிஹாஸத்துக்கும் முன்னதாக பிரம்மாண்ட வேத கால இலக்கியம் உண்டு.

ராமாயண, மஹாபாரத இதிஹஸங்களைப் புகழாத இந்தியவியல் (Indologists) அறிஞர் எவருமிலர்.

 

–சுபம்–