பெரிய கப்பலை சிறிய ஓட்டையே மூழ்கடிக்கிறது (Post No.8890)

COMPILED  BY KATTUKKUTY

Post No. 8890

Date uploaded in London – – 4 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

புத்தி புகட்டும் பொன் மொழிகள்

Compiled by Kattukutty

புத்திமதி என்பது விளக்கெண்ணெய் போல……..

சொல்வது சுலபம், உள்ளே எடுத்துக் கொள்வது தான் கஷ்டம்…….

XXX

உலகில் மகிழ்ச்சியைப் பெருக்க ஒரே வழி, அதை அனைவருடனும்

பகிர்ந்து கொள்வது தான் !!!

XXX

முதுமை தான் மனிதனுக்கு ஏற்படக்கூடிய மிகப் பெரிய கொடுமை…..

பிற கொடுமைகளெல்லாம் நாளாக நாளாக மறைகிற போது

இது மட்டும் வளர்ந்து கொண்டே போகிறது……….

XXX

வராந்தாவிலிலிருந்த வயதான தந்தை

ஹாலுக்கு வந்தார் புகைப்படமாய், இறந்த பின் !!!

XXX

ஒரு ரகசியத்தை ரகசியமாக வைத்திருக்கும் வழி, அது ரகசியமான

விஷயம் என்பதை ரகசியமாக வைத்திருப்பதுதான்!!!!

XXXX

பறித்த மலரை ஆண்டவனுக்கு வைத்தாலென்ன,

கல்லறையில் வைத்தாலென்ன,

மலருக்கென்னவோ பறித்தவுடன் வந்தது மரணம்!!!

XXX

பெரிய கப்பலை சிறிய ஓட்டையே மூழ்கடிக்கிறது.

சில்லறைச செலவுகளில் எச்சரிக்கையாய் இரு….

XXXX..

கடவுள் பாவத்தை மன்னித்து விடுகிறார்…….

இல்லாவிட்டால் சொர்க்கம் முழுக்கவே காலியாக இருக்கும்!!!!

XXX

நாம் இளமையின் ரகசியத்தை புரிந்து கொள்ளுமுன் அது நம்மை

கடந்து போய் விடுகிறது …………

XXX

வானத்தில் நட்சத்திரமாக ஜொலிக்கா விட்டாலும் உன் அறையில்

சிறிய விளக்காகவாது இரு………….

XXXX

சர்க்கரை இல்லை, கொழுப்பு இல்லை

எஜமானோடு வாக்கிங் போகுது ஜிம்மி (DOG) !!!

XXX

இந்த உலகத்திலேயே மிகவும் மலிவாக கிடைக்கும் சரக்கு

அன்பு தான்!!!

அது வாங்குபவனைக் காட்டிலும்,கொடுப்பவனுக்கே

பல மடங்கு லாபம்!!!

XXX

பிறர் உன்னைப் பார்க்க வேண்டுமானால், எழுந்து நில்,

கேட்க வேண்டுமானால் பேசு,

உன்னைப் பாராட்ட வேண்டுமானால், வாயை மூடு!!!!

XXXX

பெரிய மனிதனாக பிறப்பது ஒரு நிகழ்ச்சி

பெரிய மனிதனாக இறப்பது ஒரு முயற்சி

XXX

களை – வயலில் இருந்தால் பிடுங்கி எறிகிறோம்

களை – முகத்தில் இருந்தால் சந்தோஷப்படுகிறோம்!!!

XXX

ஐந்நூறு பக்கங்கள் உடைய ஒரு புத்தகத்தைப் படிக்க

எவ்வளவு நாளாகும்???

எழுத்தாளர் – ஓரு வாரம்

மருத்துவர் – இரண்டு வாரங்கள்

வக்கீல் – ஒரு மாதம்

மாணவன் – ஓரே இரவு போதும்

(அதுவும் பரிட்சைக்கு முதல் நாளிரவு)

XXXX

நேற்றை விட நாளை நன்றாக இருக்க வேண்டுமானால்,

இன்று ஏதாவது உருப்படியாகச் செய் !!!

XXX

பணமும் சந்தோஷமும் ஜன்ம விரோதிகள்

ஒன்று இருக்கும் இடத்தில் மற்றொன்று இருப்பதில்லை!!!!

XXX

சாதம் சமைக்க இது அவசியம் தேவை ,

“அ “வில் ஆரம்பிக்கும் அது எது???

நீங்கள் நினைத்தது தப்பு………

விடை- அப்பா!!!!

PICTURE OF KATTUKUTY

XXXX XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

TAGS– பொன்மொழிகள், பெரியல்,  சிறிய ஓட்டை