ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை; விரலுக்கு ஏற்ற வீக்கம்!

A_White_Sesame_Seed_Ball(எள்ளுருண்டை)

விக்கிபீடியா படம்; நன்றி

Article No. 2052

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 8  August  2015

Time uploaded in London : – 10-37 am

 

மேலும் சில சம்ஸ்கிருதப் பொன்மொழிகளும், அவைகளுக்கிணையான தமிழ்ப் பழமொழிகளும்:–

 

1.யதா ராஜா ததா ப்ரஜா:- சாணக்ய நீதி தர்பணம்

மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி

 

2.ப்ரஷ்டவ்யா: சத்பதம் வ்ருத்தா:

நல்வழியை பெரியோரிடம் கேட்க வேண்டும்

(பெரியார் சொல் கேள்)

 

3.பந்தனமாயாந்தி சுகா யதேஷ்ட சஞ்சாரிண: காகா:

கிளிகள் கூண்டில் அடைபட்டுள்ளன; காகங்கள் சுதந்திரமாகப் பறக்கின்றன.

(பழுத்த மரம் தான் கல் அடிபடும்)

 

4.பாந்த்யா நைவ விஜானாதி குர்வீம் ப்ரசவ வேதனாம் – குவலயானந்த:

மலடிக்குத் தெரியுமா பிரசவ வேதனை?

(முன்னப்பின்ன செத்தாத்தான் சுடுகாடு தெரியும்)

 

 

5.பஹுப்ரஜா: க்ருச்ர மாபத்யத இதி பரிவ்ராஜகா:

அதிக குழந்தைகள் இருந்தால் கஷ்டம் என்று பரிவ்ராஜகர்கள் சொல்கிறார்கள்.

 beautiful-rings

6.பஜேதவஸ்தோசிதாம் வ்ருத்திம்

தகுதிக்கு ஏற்ற வேலை செய்

((ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை;

விரலுக்கு ஏற்ற வீக்கம்/மோதிரம்))

 

7.க: ப்ராக்ஞோ வாஞ்சதி ஸ்நேஹம் வேஸ்யாசு சிகதாசு ச –கதாசரித் சாகரம்

எந்த அறிவாளி தவசிகளிடமிருந்து அன்பையும், மண்ணிலிருந்து எண்ணையையும் எதிர்பார்ப்பான்?

 

 

8.பின்னருசிர் ஹி லோக: – ரகுவம்சம்

உலகம் பலவிதம்

Variety is the spice of life

 மீன் பிடித்தல்

9.மத்ஸ்ய ஏவ மத்ஸ்யம் கிலதி – சதபத ப்ராம்மணம்

மீனை மீனே விழுங்கும்

(சின்ன மீனைப் போட்டால்தான் பெரிய மீனைப் பிடிக்கலாம்)

 

10.முஹூர்த்தம் ஜ்வலிதம் ஸ்ரேயோ ந ச தூமாயிதம் சிரம் – மஹாபாரதம்

நிரந்தர இருளை விட ஒரு முகூர்த்தம் ஒளிவிட்டாலும் போதும்

 

11.முகூர்த்தமபி ஜீவேத் நர: சுக்லேன கர்மணா

கொஞ்ச காலம் வாழ்ந்தாலும் நல்ல காரியத்தைச் செய்ய வேண்டும்

 

12.ம்ருகா ம்ருகை: சங்கமனுவ்ரஜந்தி

மான்கள் மான்களோடு கூடும்

(இனம் இனத்தோடு சேரும்)

மான்

-subham–