‘திரு ஆதிரை’ (Betelgeuse) என்றும் ‘ஆருத்ரா’ என்றும் அழைக்கப்படும் நட்சத்திரத்திற்கு அதிபதி ருத்ரன். மஹாதேவன், சிவபிரான் என்று பல்வேறு பெயர்களால் துதிக்கப்படும் முக்கண்ணன் தன் உக்கிரப் பார்வையால் மன்மதனை அழித்ததாகப் புராணக் கதை கூறுகிறது. ‘உக்கிரமான பார்வை உடையவன்’ என்றும் ‘
பரிதாபமான நிலைமையை விளக்கிச் செய்தி அனுப்புவதை
இது மட்டுமல்லாமல் இன்னும் பல புராணக் கூற்றுகளையும் அறிவியல் உண்மைகளையும் ஒன்றாக்கி நம்மை வியக்க வைக்கும் ஆதிரையை திருவாதிரை என்று மரியாதையுடன் அழைப்பது பொருத்தம் தானே!
இது மஹத்தாக இருப்பதனாலும் (பெரிதாக இருப்பதாலும்), பாரமாக இருப்பதனாலும் (கௌரவமுள்ளதாக இருப்பதாலும்) மஹா பாரதம் என்று சொல்லப்படுகிறது.
மஹாபாரதம் இயற்ற எவ்வளவு காலமாயிற்று?
பிரபுவும், பகவானுமான வியாஸ முனிவர் சிறந்ததும், புண்யமுமான இந்த பாரதம் முழுவதையும் மூன்று வருஷங்களில் செய்தார்.
வியாஸரின் பெருமை என்ன?
ஸத்யவாதி. ஸர்வஜ்ஞர். விதியை அறிந்தவர். தர்மத்தைப் பற்றிய ஞானம் உள்ளவர். வித்வான். அதீந்திரியர். (இந்திரியங்களை வசப்படுத்தியவர் என்று பொருள்). பரிசுத்தர். தவத்தால் பரிசுத்தமாகச் செய்யப்பட்ட சித்தத்தைக் கொண்டவர். ஐஸ்வர்யத்தில் நிலை பெற்றவர். ஸாங்கியமும் யோகமும் உள்ளவர். அநேக தந்திரங்களை (ஸித்தாந்தங்களை) நன்கு அறிந்தவர்.
பாண்டவர்களின் பராக்ரமம், செல்வம், கீர்த்தி ஆகியவற்றையும் வாசுதேவ கிருஷ்ணனது விளையாட்டையும் , அனைத்து தேவர்களின் பிறப்பையும் ஸாயுஜ்யத்தையும் உலகில் பிரபலப்படுத்துபவர். திவ்ய திருஷ்டியினால் அனைத்தையும் கண்டு மஹாபாரதத்தை இயற்றியவர்.
இதைக் கேட்பதால் என்ன பயன்?
எவன் ஒருவன் இந்த வேதத்தை (மஹாபாரதத்தை) முழுவதும் மனவடக்கத்துடன் கேட்பானோ அவனுடைய பிரம்மஹத்தியினால் ஏற்பட்ட பாவமும் அந்தக் கணத்திலேயே அழிகிறது.
மஹாபாரதத்தையும் புராணங்களையும் ஒப்பிட்டால் பாரதத்தின் பெருமை என்ன?
பதினெட்டு புராணங்களும் எல்லா தர்ம சாஸ்திரங்களும் (ஆறு) அங்கங்களுடன் கூடிய வேதங்களும் ஒரு தட்டிலும் மஹாபாரதம் ஒரு தட்டிலும் (சமமாக) இருக்கின்றன!
மஹாபாரதத்தின் ஏனைய பெருமைகள் என்னென்ன?
ஜயம் என்ற பெயரை உடைய இந்த மஹாபாரதத்தை எப்பொழுதும் பக்தியுடன் கேட்டால் அப்படிக் கேட்டவனுக்குச் செல்வமும், புகழும், கல்வியும் எப்போதும் சேர்ந்தே உண்டாகின்றன.
அறம், பொருள், இன்பம், வீடுகளைப் பற்றி இதில் உள்ளது தான் மற்றதிலும் இருக்கின்றது.
இதில் இல்லாதது ஓரிடத்திலும் இல்லை.
ஜயம் என்ற பெயரை உடைய மஹாபாரதமானது எப்பொழுதும் எவ்விடத்தில் படிக்கப்படுகின்றதோ அவ்விடத்தில் ஸ்ரீயும், கீர்த்தியும், வித்தையும் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கின்றன.
பாரதத்தைச் சொல்லுகின்றவனையும், கேட்பவர்களையும், எழுதுகின்றவர்களையும், சித்தர்களும், பரம ரிஷிகளும் மிக்க சந்தோஷத்துடன் பூஜிக்கின்றார்கள்.
மஹாபாரத்தைச் சொல்பவனை இவ்வுலகில் எந்த மனிதர்கள் பூஜிக்கவில்லையோ அவர்களுடைய எல்லா நற்கர்மங்களும் நசித்து விடும்.
அவர்களைத் தேவர்களும் சபிப்பர்.
ஜயம் என்ற பெயருள்ள இந்த இதிஹாஸமானது வெற்றியை விரும்புகின்ற அரசனாலும், அரச குமாரர்களாலும், கர்ப்பிணிகளாலும் கேட்கத் தக்கது.
கர்ப்பிணியானவள் புத்திரனையாவது மிக்க பாக்கியமுள்ள புத்திரியையாவது அடைவாள்.
மஹாபாரதத்தில் எத்தனை ஸ்லோகங்கள் உள்ளன?
வியாஸர் நான்கு வேதங்களையும் அவற்றைக் காட்டிலும் வேறான அறுபது லக்ஷம் சம்ஹிதைகளையும் செய்தார். அவற்றுள் முப்பது லக்ஷம் சம்ஹிதைக்ள் தேவ லோகத்திலும் பித்ரு லோகத்தில் பதினைந்து லக்ஷம் சம்ஹிதைகளும், யக்ஷ லோகத்தில் பதினான்கு லக்ஷம் சம்ஹிதைகளும் வைக்கப்பட்டன. ஒரு லக்ஷம் சம்ஹிதைகள் மானிட லோகத்தில் சொல்லப்பட்டன.
இதை யார் யார் தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும், யக்ஷர்களுக்கும், மனிதர்களுக்கும் சொன்னார்கள்?
இதை நாரதர் தேவர்களுக்குச் சொன்னார். அஸிதர் என்னும் தேவலர் பித்ருக்களுக்குச் சொன்னார். சுகர் ராக்ஷஸர்களுக்கும் யக்ஷர்களுக்கும் சொன்னார். வைசம்பாயனர் மனிதர்களுக்குச் சொன்னார்.
*
மஹாபாரதத்தின் இப்படிப்பட்ட பெருமையை ஸ்வர்க்காரோஹண பர்வத்தில் இறுதி அத்தியாயமான ஐந்தாம் அத்தியாயத்தில் காணலாம். இக்கட்டுரையில் அந்த அத்தியாயத்தின் சுருக்கமே தரப்பட்டுள்ளது.
(மனித குலத்தில் உள்ள) மொழிகளில் எல்லாம் பாரதத்தில் உள்ள ஸம்ஸ்க்ருத மொழி இனிமையானது, மிக முக்கியமானது, தெய்வீகமானது மதுரமானது. அதிலும் அதில் உள்ள காவியங்கள் இனிமையானவை; அதிலும் இனிமையானவை அதில் உள்ள சுபாஷிதம்!
Among all the language (of mankind) Sanskruta the language of Bharat i.e India is the sweetest, the most distinct and truly divine. Sanskrutas poetic verses are so very melodious, and amonst them again the most delightful are her Subhasitas. (Translation by Manhar Jai)
*
கீர்வாண வாணீஷு விசிஷ்ட புத்திம்
தஸ்மாபி பாஷாந்தரலோலுபோஹம் |
யதா சுராணமம்ருதே ஸ்திதேபி
ஸ்வர்காங்கநாநாமமதராஸாவே ருசி: ||
அனைத்து மொழிகளின் மீதும் எனக்கு ஆசை உண்டு என்றாலும், எனக்கு கடவுளரின் மொழியில் – ஸம்ஸ்கிருதத்தின் மீது – ஒரு விசேஷமான ஆர்வம் உண்டு. ஏனெனில் எப்போதுமே அம்ருதம் கடவுளர் முன்னே இருந்தாலும் கூட ஸ்வர்க்க தேவதைகளின் அதர பானத்தில் அவர்களுக்கு ருசி உண்டு, அது போல!
I have a special intrest in the speech of the gods (Sanskrit language), nevertheless I have a liking for the other languages; for, though nectar is ever present before them, the gods have a taste for the liquor of the lips of the divine damsels. (Translation by S.B. Nair)
*
ப்ருதிவ்யாம் த்ரீணி ரத்னானி ஜலமன்னம் சுபாஷிதம் |
மூடை: பாஷாணகண்டேஷு ரத்னசம்ஞா விதீயதே ||
உலகில் மூன்றே மூன்று ரத்னங்கள் தாம் உள்ளன; ஜலம், அன்னம், சுபாஷிதம் ஆகியவையே அந்த மூன்று. மூடர்கள் பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட சிறிய கற்களையே ரத்னம் என்று மதிக்கின்றனர்.
There are but three precious jewels on this earth: Water, food and gems of Speech. But ignoramuses (dull an stupid people) highly regard as precious, shining bits of stone (dug out from the bowels of the earth) (Translation by Manhar Jai)
*
ஏகவித்யாப்ரதானோபி பஹுஞானி பவேத் நர: |
சுபாஷிதானி சிக்ஷேத் யானி சாஸ்த்ரோத்வதானி வை ||
ஒரு குறிப்பிட்ட அறிவை மனிதன் கொண்டிருக்கும் போது அது அவனை அதிக அறிவு கொண்டதாக ஆக்குகிறது; அது தான் சுபாஷிதங்களிலிருந்து அவன் பெரும் அறிவாகும்.
Particularly one knowledge when possessed by a man renders him rich; it is the knowledge learnt from wise sayings (Subhasita-s) drawn from the
sastra-s.
*
உத்கோசபாரிதோஷக பாடசுபாஷிததரார்தசௌர்யாஷா: |
தத்க்ஷணமேவ க்ராஹ்யா: ஷடயந்தகாலே ந லப்யதே ||
ஒரு மனிதனுக்கு ஆறு விஷயங்கள் முதல் தடவை தரப்படும், அந்தக் கணத்தின் போதே, ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்; ஏனெனில் அவற்றைப் பெறும் இரண்டாவது வாய்ப்பு கிடைப்பது அரிது. அவையாவன, லஞ்சம், நல்ல விஷயத்திற்காகத் தரப்படும் பரிசு, வாடகை, சுபாஷிதம், திருட்டுப் பொருள்கள், பாரம்பர்ய சொத்திலிருந்து கிடைக்கும் ஒருவனுக்குரிய பங்கு.
There be six things a man should take the moment they are offered, lest he get no second chance of taking them; a bribe, a reward for good tidings, rent, a good saying (Subhasita), stolen goods, and one’s share of heritage. ((Translation by P.Peterson)
*
உச்சை: ஸ்திதீனாம் விதுஷாம் பதமாரோத்மிச்சவ: |
சத்சுபாஷிதசோபான- சேவின: சந்து சாதவ: ||
பண்டிதர்களிடையே உயர்நிலைக்குச் செல்ல விரும்புவோர் ஏணிப்படிகளாக அமையும் நல்ல சுபாஷிதங்களைக் கற்க வேண்டும்.
Those good men who wish to climb to the position of learned scholars occupying high positions, (should) resort to the (study of) staircase of good poetry. (subhasita-s) (Translation by A.A.R.)
பாரில் உள்ள தேசங்களில் எங்கள் தேசம் உயர் தேசம் என்று ஆனந்தமாக இந்தியர்கள் பாடினால் அது பொருள் பொதிந்த ஒரு விஷயமாகும்.
ஏனெனில் உலகில் உள்ள நாகரிகங்களில் எல்லாம் பழமையான ஜீவனுள்ள ஒரே நாகரிகம் ஹிந்து நாகரிகம் மட்டுமே தான்!
எகிப்திய, அஸிரிய, ரோமானிய நாகரிகங்கள் உள்ளிட்ட பல பழம் பெரும் நாகரிகங்கள் அழிந்து பட்ட போதிலும் இன்றும் தன் இளமை மணம் மாறா நாகரிகமாக உலகில் இருக்கும் ஒரே நாகரிகம் ஹிந்து நாகரிகம் தான்!
பாரத தேசத்தின் பெருமையை விஷ்ணு புராணம் இப்படிச் சொல்கிறது:
காயந்தி தேவா: கில கீதகானி
தன்யாத் து தே பாரதபூமிபாகே
ஸ்வர்கார்பவர்காஸ்பதமார்கபூதே
பவந்தி பூய: புருஷா: சுரத்வாத்
தேவர்களாயிருந்தும் கூட மனிதர்களாக பாரதவர்ஷத்தில் பிறந்தவர்கள் சந்தோஷமுள்ளவர்களே! ஏனெனில் கடவுளரும் அவ்ர்களது கீதத்தை இசைக்கின்றார்கள். ஏனெனில் அதுவே சொர்க்க இன்பங்களுக்கான நுழைவாயில் அல்லது முக்திக்கான பெரிய இன்ப வழியாகும்
தேவர்களும் கூட பாரதத்தில் பிறப்பு எடுக்க ஏங்குகின்றனராம்!
இதை ஹெச் ஹெச் வில்ஸன் ஆங்கிலத்தில் இப்படி மொழிபெயர்த்துள்ளார்:
Happy are those who are born, even from the conditions of gods as men in Bharatvarsha as the gods sings their songs and as that is the way to the pleasures of the paradise, or the greater blessing of final liberation . (H.H. Wilson)
பரம பூஜனீய குருஜி ஸ்ரீ எம். எஸ். கோல்வால்கர் தனது பஞ்ச் ஆஃப் தாட்ஸ்(Bunch of thoughts) என்ற நூலில் இந்த ஸ்லோகத்தை மேற்கோள் காட்டியதோடு பாரதத்தின் அருமை பெருமையை மிக நன்றாக விளக்கியுள்ளார்.
ஸ்வாமி விவேகானந்தர் மேலை நாட்டிலிருந்து திரும்பி தாயகம் வருகையில் 15-1-1897 அன்று கொழும்பில் அற்புதமான உரை ஒன்றை ஆற்றினார். அதில் பாரதத்தின் பெருமையைக் கூறும் போது,
“If there is any land on this earth that can lay claim to be the blessed Punya Bhumi, to be the land to which all souls on this earth must come to account for Karma, the land to which every soul that is wending its way Godward must come to attain its last home, the land where humanity has attained its highest towards gentleness, towards generosity, towards purity, towards calmness, above all, the land of introspection and of spirituality — it is India. “
என்று உரைத்தார்.
பாரதத்தின் பெருமை உரைக்க ஒண்ணா ஒன்று. தேவர்களும் பிறக்க விரும்பும் புண்ணிய பூமி பாரதம்!
You must be logged in to post a comment.