Post No. 10,261
Date uploaded in London – 26 OCTOBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ரிக் வேதம் மிகப் பழமையானது; யஜுர் வேதம் ,சாம வேதம் அதைத் தொடர்ந்து வந்தன. கடைசியாக அதர்வண வேதம் வந்தது என்பது வெள்ளைக்காரன் கணக்கு. ஆனால் இந்துக்களோ , வேதங்கள் நான்கையும் நமக்கு வகுத்து, தொகுத்துத் தந்தவர் வேத வியாசர் என்பதில் ஒருமித்த கருத்துக் கொண்டுள்ளனர். அது மட்டுமல்ல அந்த வேத வியாஸருக்குப் பின்னர்தான் கலியுகம் உதித்தது என்று சொல்லி பஞ்சாங்கமும் வெளியிட்டு அதில் கி.மு 3102-ல் கலியுகம் தோன்றியதையும் வருஷம் தோறும் எழுதி வருகின்றனர். இதை மாயன் நாகரீகம், சுமேரிய நாகரீகம், எகிப்திய நாகரீகம் ஆகியனவும் முக்கியமாகக் கருதுகின்றன. மாயா நாகரீக காலண்டரும் அப்போதே துவங்குகிறது. மற்ற இரண்டு நாகரீகங்களில் முதல் மன்னன் மனு அப்போது ஆண்டதாக எழுதுகின்றன. மனு என்பதைக் கொஞ்சம திரித்து மெனஸ் (Menes) என்றெல்லாம் எழுதுவார்கள். ஆகவே நான்கு வேதங்களும் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்தன என்பதுதான் இந்துக்களுடைய கருத்து.
வெள்ளைக்காரர்கள் இந்து மத விரோதிகள்; இந்து மதத்தைப் பின்பற்றாதவர்கள். அதை நம்பாதவர்கள். ஆகையால் அவர்களை ஒதுக்கி விடுவோம்.
சங்க காலம் முதல் தமிழ் இலக்கியம் முழுதும் நான்மறைகள் – ‘4 வேதங்கள்’ – என்றே பகரும்; ஏனெனில் அவை 2000 ஆண்டுகளுக்கு முன்னர்தான் எழுந்த படைப்புகள். அவற்றுக்கும் முந்திய உப நிஷத்துக்கள் புத்தருக்கும் முந்தியவை. அவற்றில் மூன்று வேதங்கள் என்ற சொற் றொடர் பெரும்பாலும் வரும். காரணம் என்னவெனில் யாக யக்ஞங்களில் அதர்வண வேதத்துக்கு அதிகம் வேலை இல்லை. ஆயினும் அதில்தான் ஏராளமான ரகசியங்கள், மருத்துவ விஷயங்ககள் , எதிரிகளை மாய மந்திரத்தால் ஒடுக்கும் விஷயங்கள் உள்ளன. அதுமட்டுமல்ல; ஆன்மீக விஷயங்களைக் கூறும் முண்டக , மாண்டூக்ய உப நிஷதங்களும் அதர்வண வேதகக்காரர்களால் உருவாக்கப்பட்டனவே.
ஈயத்தின் (Lead) மஹத்துவம்
அதர்வண வேதத்தின் இரண்டு துதிகளில் ஈ யம் பற்றிய அதிசயக் குறிப்புகள் வருகின்றன. அவற்றைச் சொல்லிவிட்டு எனது விமர்சனத்தையும் தருகிறேன்.
xxx
முதல் காண்டம் 16ஆவது துதியின் தலைப்பே ஈயம் (Lead) !
“1.சக்தி வாய்ந்த அக்னீ , ஓங்கி வளர்ந்து அமாவாசையில் யாதுதானர்களையும் எங் களைத் தின்பவர்களையும் அழிக்கிறான் அவன் எங்களுக்கு பாதுகாப்பு தருவான்
2.வருணன் ஈயத்தைப் புகழ்கிறான். அக்கினி அதை பலப்படுத்துகிறான். இந்திரன் எனக்கு ஈயத்தை அளித்தான் ; அது பேய்களை விரட்டும்.
3.இது விஷ்கந்தத்தை ஜெயிக்கும்.; இது பகைவர்களைப் பாழாக்கும் இதைவைத்து நான் பிசாசுகளையும் அவற்றின் இனத்தையும் அழிப்பேன்.”
இங்கே யாதுதானர்கள் என்போர் அரக்கர்கள். அத்தோடு மனிதர்களை உண்ணும் காட்டுமிராண்டிகள். அமாவாசையன்று நள்ளிரவில் வரும் பேய்களைப் பற்றியும் மந்திரம் பேசுகிறது
சம்ஸ்க்ருதத்தில் ஸீசம் என்று ஈயத் க்கு பெயர். லத்தீன் மொழியில் ப்ளம்பம் Plumbum என்று பெயர். சம்ஸ்க்ருதத்தில் இருந்து ஈயம் என்ற சொல் வந்திருப்பதை ஒலிக்குறிப்பு மூலம் நாம் அறிய முடிகிறது . ஆங்கிலத்தில் LEAD (லெட்).
இது பற்றி அடிக்குறிப்பு எழுதிய கிரிப்பித் (Ralph T H Griffith) என்ற வெள்ளைக்காரர் இதை குதிரை லாடத்துடன் (Horse shoe) தொடர்பு படுத்துக்கிறார் . இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளில், குறிப்பாக ஐ ரிஸ்காரர்கள் வசிக்கும் வீடுகளின் கதவுகளில் குதிரை லாடம் ஆங்கில எழுத்து U போல மேல் நோக்கி பொருத்தப்பட்டிருக்கும். சில இடங்களில் ஆணி அடித்தும் சில இடங்களில் தொங்கவிட்டும் இருப்பர். இது ஈயமோ இரும்போ ஏதோ ஒரு உலகத்தில் இருக்கும் இதற்குப் பேயை விரட்டுமாற்றல் உண்டு; மேலும் சூன்யம், மாயாஜாலம் ஆகியன எவரையும் பாதிக்காமல் தடுக்கும். ஆரோக்கியத்தைத் தரும் என்பது அவர்களுடைய மத நம்பிக்கை . அந்த வகையில் மேற்சொன்ன அதர்வண வேத மந்திரத்துடன் ஒத்துப் போகிறது
விஷக்கந்தை என்பது பற்றி எங்கும் முழுவிளக்கம் இல்லை. ஆனால் இந்த வேதத்தில் பல இடங்களில் வருகிறது. இதன் விளக்கத்தை பார்க்கையில் இது கீல் வாதம், மூட்டு வலி என்று உரைகாரர்கள் கூறுவார்கள்..
இந்திய இலக்கியங்களில் குதிரை லாடம் பற்றிய மாயாஜால மந்திர நம்பிக்கை எதுவும் இல்லை.
Xxxx
தமிழ் இலக்கியத்தில் பேய், பிசாசு
கடைசியாக, பிசாசுகள் பற்றிப் பார்ப்போம். பிசாசு, பைசாசம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் கலித்தொகை முதலிய சங்கஇலக்கிய நூலிலும் உளது. பேய் என்பது சங்க இலக்கியத்தில் நிறைய இடங்களிலும் வருகிறது இது தவிர பேய் என்பதற்குத் தமிழில் உள்ள அலகை , கூளி , கழுது முதலியனவும் ஆங்கிலம் உளபட பல மொழிகளில் இருக்கிறது. திருக்குறளில் வரும் அலகை – ஒளி மாறும் ஆல்கால் (Algol- Double Star System) நட்சத்திரம் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.
XXX
இதோ இன்னும் ஒரு மந்திரம்
12 ஆவது காண்டத்தில் 21-33 (எண் .475) மிருத்யு தேவதைக்கானது . முதல் மந்திரத்தில் ‘இந்த ஈயம் உன்னுடையது வா’ என்று அழைக்கிறார் ரிஷி.
20, 21, 53 மந்திரங்களுக்கு அந்தக் காலத்தில் உரை எழுதியோர் இது தலைவலியை நீக்கும் டி.பி (TB= Tuberculosis) என்னும் காச நோயைப் போக்கும் மந்திரம் என்று எழுதியுள்ளனர்
“ஈயத்திலே மாசைத் துடைத்து விடுங்கள்” என்று மந்திரம் சொல்கிறது (மாசு = அழுக்கு). 53 மந்திரங்கள் உள்ள இந்த துதியில் பொருத்தமில்லாத, தொடர்பில்லாத விஷயங்கள் வருவதாக வெளிநாட்டார் எழுதிகியுள்ளனர்.
xxx
என் கருத்து
பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் நாம் இதை படிப்பதால் பொருத்தம் இல்லாதது போலத் தோன்றுகிறது
அந்தக் காலத்தில் இதைப் பயன்படுத்தியோருக்கு இதில் சொல்லாமல் விடுபட்ட விஷயங்கள் தெரிந்திருக்கலாம்.
U letter in Indus Valley Script
நான் லண்டனில் என் வீட்டிலிருந்து தினமும் ரயிலைப் பிடிக்க, ஸ்டேஷனுக்கு நடக்கும்போது, பல வீடுகளில் ‘u’ வடிவ லாடம் அடித்திருப்பதைப் பார்த்து வியப்பேன் . இப்போதும் லாட நம்பிக்கை இருக்கிறது.
குதிரை லாட தாயத்து அதிர்ஷ்டத்தையும் ஆரோக்கியத்தையும் கொணரும் என்றும் நம்புகின்றனர். குதிரை லாயத்திலும் இதைக் கதவில் அடித்து வைத்திருப்பார்கள்.
இறுதியாக ஒரு விஷயம். சிந்து சமவெளி எழுத்துக்களில் ‘U’ வடிவ எழுத்துக்களே அதிகம். அவைகளுக்கும் வெளி நாடுகளில் கதவில் பொருத்தப்படும் குதிரை லாடங்களுக்கும் ஏதேனும் பொருத்தம் இருக்கிறதா என்பதும் ஆராய்ச்சிக்குரியது
ஆக, ஈயம் பற்றிய துதியில் நோய் விரட்டலும், பேய் விரட்டலும் வருகிறது .
நோய்க்கிருமிகளையே இவர்கள் பேய் பிசாசு என்று சொல்கிறார்களோ என்று நினைக்கிறேன். கிரஹணம் என்பது விண்வெளில் உலவிவரும் சூரியன், சந்திரன், பூமி தொடர்பான நிழலே என்று தெரிந்தபோதும் பாமர மக்களுக்காக சூரியனையோ சந்திரனையோ பாம்பு விழுங்குகிறது என்று சொன்னார்கள். அது போலநோய்க் கிருமிகள் என்று சொல்லாமல் இப்படி பேய் பிசாசு என்று சொல்லியிருக்கலாம். எங்கெல்லாம் பேய், பிசாசு என்ற சொல் வருகிறதோ அங்கெல்லாம் வைரஸ் அல்லது பாக்டீரியா என்ற சொல்லை பிரயோகித்தான் போதும் ! அப் போது நம் முன்னோர்களின் மருத்துவ அறிவு பளிச்சென விளங்கும்
–Subham —
tags- குதிரை லாடம், ஈயம், பேய், பிசாசு நோய், விரட்டும்
You must be logged in to post a comment.