ஸ்வர்க்கத்தை விட உயரத்தில் இருக்கும் இருவர் யார்?(Post 10,379)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,379

Date uploaded in London – –   26 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுபாஷிதச் செல்வம்

ஸ்வர்க்கத்தை விட உயரத்தில் இருக்கும் இருவர் யார்?

ச.நாகராஜன்

சரோஜா பட் தொகுத்த சுபாஷித சதகம் என்ற நூலிலிருந்து சில சுபாஷிதங்களைப் பார்த்து வருகிறோம். இதோ இன்னும் ஐந்து

சுபாஷிதங்கள் :-

த்வாவிமௌ புருஷௌ லோகே ஸ்வர்கஸ்யோபரி திஷ்டத: |

ப்ரமுஸ்ச க்ஷமயா யுக்தோ தரித்ரக்ஷ்சைவ தானவான் ||

இந்தப் பூவுலகில் ஸ்வர்க்கத்தை விட உயரத்தில் இருவர் மட்டுமே இருக்கின்றனர். மன்னிக்கத் தெரிந்த, அதிகாரத்தில் இருக்கும் ஒரு அதிகாரியும், தரித்திரனாக இருந்தாலும் தானம் கொடுக்கும் ஒரு ஏழையுமே அவர்களாவர்.

Two persons in this world stand above the heaven. An office-bearer possessed of forgiveness and poor (man) who is liberal.

*

கனகபூஷண சங்க்ரஹணோசிதோ யதி மனிஸ்த்ரபுணி ப்ரணிதீயதே |

ந ஸ விரௌதி ந சாபி ஷோபதே பவதி யோஜயிதுர்வசனீயதா ||

தங்க நகையில் பதிக்கப்பட வேண்டிய நவரத்னமணி ஒன்று ஈய ஆபரணத்தில் பதிக்கப்பட்டால் அது குறையாகக் காணப்படப்போவதுமில்லை அல்லது அழகற்று இருப்பதுமில்லை. நவரத்னமணியை ஈயத்தில் வைத்தானே அவன் தான் கெட்ட பெயருக்கு ஆளாவான்!

If a gem worthy of being set in a golden ornament is lnlaid in lead, it neither grumbles not does it look ugly. The person (who connects the gem with lead) becomes subject to blame.

*

பாத்ரவிஷேஷன்யஸ்தம் குணாந்தரம் வ்ரஜதி ஷில்பமாதாது: |

ஜலமிவ சமுத்ரஷுக்தௌ முக்தாபலதாம் பயோதஸ்ய ||

ஒரு சிற்பியின் கலை ஒரு அருமையான பொருளில் வைக்கப்பட்டால் அது இன்னும் அதிக மேன்மையை அடைகிறது. எடுத்துக்காட்டாகச் சொல்லப் போனால் மேகத்துளிகளானது சிப்பியில் விழும் போது அந்தத் துளிகள் முத்துக்களாகப் பரிமளிக்கின்றன!

The art of sculptor attains more excellence if put in an excellent object. For instance, the water of a cloud, falling in a sea-shell becomes pearls.

*

சீமந்தினீஷு கா சாந்தா ராஜா கோபூத் குணோத்தம: |

வித்வத்பி: கா சதா வந்த்யா தத்ரைவோக்தம் ந புத்யதே ||

பெண்மணிகளுள் சாந்தமானவள் யார்? எந்த ராஜா குணோத்தமன்? வித்வான்களால் எப்போதும் மதிக்கப்படுவது எது? இந்தக் கேள்விகளுக்குப் பதில் இதிலேயே இருக்கிறது! இருந்தாலும் (எளிதில்) புரிந்து கொள்ளப்படுவதில்லை

இந்த மூன்று கேள்விகளுக்கும் விடை இந்த சுபாஷித ஸ்லோகத்திலேயே உள்ளது. ஸ்லோகங்களின் நான்கு பாதங்களில் ஒவ்வொரு பாதத்தின் முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் சேர்த்துப் பார்த்தால் மூன்று விடைகளும் வந்து விடும்!!

சீமந்தினீஷு –  சாந்தா   இதில் சீ + தா = சீதா என்பது முதல் கேள்விக்கு விடை

ராஜா – குணோத்தம:   இதில் ரா + ம = ராம என்பது இரண்டாம் கேள்விக்கு விடை

வித்வத்பி: – வந்த்யா  இதில் வி + த்யா = வித்யா என்பது மூன்றாம் கேள்விக்கு விடை.

ஆக,

பெண்மணிகளுள் சாந்தமானவள் சீதா!

குணோத்தமனான ராஜா ராமன்!

வித்வான்களால் எப்போதும் மதிக்கப்படுவது வித்யா (கல்விச் செல்வம்)

Who is (most) composed among women? Who was the most religious king? What is always respectable to the learned? (The answers to these questions) are told there only. However they are not understood. (The answers can be obtained by joining the first and last letter of each quarter of the verse as follows : Sita, Rama, Vidya)

*

லோப மூலானி பாபாநி ரஸபூலாஸ்ச வ்யாத்ய: |

இஷ்டமூலாநி ஷோகானி த்ரீணி த்யக்த்வா சுகீ பவ ||

பேராசையே பாவத்திற்கான அடி வேர். வியாதிகள் சுவையை அடைப்படையாகக் கொண்டுள்ளவை. சோகத்தின் காரணம் ஆசைப்படும் பொருள்களை விரும்புவதால் தான்! இந்த மூன்றையும் விடு, சந்தோஷமாக இரு! (சுகீ பவ!)

Greed is the root-cause of evil (deed). Diseases have taste at their basis. The root of grief is desired objects. Give up all the three and be happy.

***

English Translation by Saroja Bhate

Source : Subhasita Shatakam Thanks : Saroja Bhate

tags- பேராசை, பெண்மணி, சீதா, ஸ்வர்க்க,

பேராசைதான் தாடகை – ராம நாமம் தாடகையை வீழ்த்தும் (Post No.8835)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8835

Date uploaded in London – –21 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HARRY POTTER AND JURASSIC PARK AND KAMBAN

கம்பன் சொல்ல வந்த விஷயம் தாடகை வதம் ; சின்னக் குழந்தைகளும் அதை விரும்பிக் கேட்கும். பேய், பூதம், பிசாசு கதைகள் என்றால் லட்சக் கணக்கில் விற்கும். இங்கிலாந்தில் பெண்மணி ஜே கே ரோலிங்  (HARRY POTTER BY J K ROWLING ) நம் ஊரில் உள்ள எல்லா  பேய், பூத , பிசாசு, அரக்கிக் கதைகளை எல்லாம் அழகாக ஆங்கிலத்தில் HARRY POTTER ஹாரிபாட்டர் கதை என்று எழுதி உலகின் மிகப்பெரிய, மிகப் பணக்கார எழுத்தாளர் பட்டியலில் இடம் பெற்றுவிட்டாள்; ஹனுமானின் வீர தீரச் செயல்களை எல்லாம் SUPERMAN, BATMAN  சூப்பர்மேன், பேட்மேன் என்று எழுதி பணமும் ஸம்பாதித்து விட்டனர் பலர்; நிற்க .

குழந்தைகளுக்குக் கதை சொல்லும் போது குரலை ஏற்றி இறக்கி, முகத்தை பல கோரமான வடிவங்களில் காட்டினால் அதன் மனதில் கதை அப்படியே பதிந்துவிடும்; கம்பனும் அவன் யாத்த ராமாயண பால

 காண்டத்தில் தாடகை என்னும் அரக்கியை அப்படித்தான் நமக்கு இண்ட்ரட்யூஸ் INTRODUCE செய்கிறான். ஆனால் சிறு குழந்தை கதைக்கு மேலாகப் போய் இரண்டு விஷயங்களைச் சொல்கிறான்

1.பாவங்கள் அதிகம் செய்தலால் ஒருவர் அரக்கி போல ஆவர்

2.பேராசை வந்தால் அவர்கள் தாடகை போல எல்லாவற்றையும் கபளீகரம் செய்து அழிவினை அடைவர்

யார்   கையால் அழிவினை அடைவர் ? ராம நாமம் சொல்வோர் கையால் அல்லது அவர்களுடைய சீடர்களால் .

பாடலின் மெஸ்ஸேஜ் MESSAGE   இதோ பாடலிலேயே இருக்கிறது –

உளப் பரும் பிணிப்பு  அறா உலோபம் ஒன்றுமே

அளப்பருங்  குணங்களை அழிக்குமாறு போல்

கிளப்ப அருங் கொடுமையை  அரக்கி கேடு இலா

வளப்பரு மருதவைப்பு  அழித்து மாற்றினாள்

பொருள்

உள்ளத்திலே லோபம் எனப்படும் பேராசை எனும் தீய குணம் ஒன்று இருந்தால் போதும் . அது அளவிட முடியாத நற்குணங்கள் அத்தனையையும் அழித்துவிடும் . அது போல மாறாத வளம் ஊட்டும் இம் மருத நிலத்தை அழித்து பாலை நிலம் ஆக்கிவிட்டாள் தாடகை என்கிறார் விசுவாமித்திரர் .

இது எப்போது நடந்தது ?

அழகான கானகம் வழியே சென்றனர். பின்னர் பசுமையான கங்கைச் சமவெளி நிலங்களைக் கண்டனர்  ஒரு பெரிய பரப்பு மட்டும் மரமும் இன்றி பசுமைப் பயிரும் இன்றி வறண்ட பாலையாகக் காட்சி தந்தது; ராமன் ஏன்? என்று  விசுவாமித்ரரிடம் வினவ அவர் இவ்வாறு விடையிறுத்தார் .

பின்னர் தாடகையை வதம் செய்ததை நாம் அறிவோம் ஆக தாடகை என்பது நம் மனதிலுள்ள பேராசை. அதை அழிப்பது ராமன். அதை அழிக்க உதவுவது ராம நாமம் என்பதே கம்பன் சொல்லாமல் சொல்லும் விஷயம் . இதற்குப் பின்னர் கதை இன்னும் சுவாரஸ்யமாகப் போகிறது

தாடகையை ‘எரியும் கருப்புமலை’ — எரிமலை – என்று கம்பன் வருணிக்கவே அவள் எங்கே? என்று ராமன் கேட்கிறான். உடனே கம்பன் JURASSIC PARK ‘ஜுராஸிக் பார்க்’ சினிமா எடுத்த டைரக்டர் ஆகிவிடுகிறான் . உலகம் முழுதும் டைனோசர் என்னும் அழிந்துபோன ராட்சதப் பிராணிகள் பற்றிய படம்  (JURASSIC PARK BY STEVEN SPIELBERG) எடுத்தவர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் . அவர் டைனோசர் பற்றி நமக்கு எப்படி திகில் ஊட்டுகிறார் ? காட்டில் சின்னப் பையன்களுடன் போன குழு,  ‘தும்’ ‘தும்’ என்ற பிரம்மாண்டமான சப்தத்தைக் கேட்கிறது . உடனே ஒருவரை ஒருவர் வினாக்குறி முகத்தில் தோன்ற பார்க்கின்றனர். அப்போது ராட்சத டைனோஸரஸ் புகுந்து எல்லாவற்றையும் அழிக்கிறது . அந்த டைனோஸரஸ் வருவதற்கு முன்னர் தண்ணீரில் அலைகள் எழும்புவதை பார்த்து நாமும் ஏதோ நிகழப்போவதை அறிகிறோம். . இதை ஸ்டிவன் ஸ்பீல்பர்க் , கம்பனிடமிருந்து  ‘காப்பி’ COPY அடித்தாரோ என்று தோன்றுகிறது. தாடகையை மனிதர்களை உண்ணும் கனிபல் CANNIBAL என்று  விஷ்வாமித்ரன் வருணிக்க அவள் எங்கே என்று கேட்கிறான். அதற்கு விசுவாமித்திரர் பதில் சொல்லி முடிப்பதற்குள், ஜுராசிக் பார்க் டைனோசர் வந்தது போல, ‘மைவரை நெருப்பு எரிய வந்தாள் அரக்கி’. அவள் வந்த பொது ஏற்பட்ட குழிகளை கடல் வந்து நிரம்பியதாம். மலைகள் இடம்பெயரும் வண்ணம் பூமி அதிர்ச்சி உண்டாகியதாம். எம தர்மனோ பாதாளத்துக்குள் போய் ஒளிந்து கொண்டானாம். இதை நீங்களே கம்ப ராமாயண பால காண்டத்தில் தாடகை வதைப் படலத்தில் படித்து அறிக.

tags- தாடகை, வதை, ராம நாமம், பேராசை

–SUBHAM–

வியாபாரிகளின் பேராசை- பழைய கதை புதிய வியாக்கியானம் (Post No.6891)

WRITTEN BY London Swaminathan


swami_48@yahoo.com

  Date: 17 AUGUST 2019  


British Summer Time uploaded in London – 7-35 am

Post No. 6891

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

தேவையும், பேராசையும்! (Post No.5462)

Written by S NAGARAJAN

Date: 24 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 5-50 AM (British Summer Time)

 

Post No. 5462

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

ச.நாகராஜன்

 

1997ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த காட்வின் சமரரத்னே (தோற்றம் : 6-9-1932 மறைவு 22-3-2000) ஹாங்காங்கில் ஒரு தொடர் சொற்பொழிவை நிகழ்த்தினார். 6-10-1997இலிருந்து 11-10-1997 முடிய ஆறு நாட்கள் நடந்த சொற்பொழிவைத் தொடர்ந்து ஏழாவது நாள் முடிவுரை நிகழ்த்தப்பட்டது. முடிவுரையில் அவர் தேவை பற்றியும் பேராசை பற்றியும் தனது உரையில் குறிப்பிட்டார்.

அதன் சுருக்கம் இங்கு தரப்படுகிறது.

 

 

முதலில் காட்வினைப் பற்றிச் சிறிது தெரிந்து கொள்வோம்.

காட்வின் இலங்கையில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். நூலகராக கெகல்லே பொது நூலகத்தில் 1956ஆம் ஆண்டு சேர்ந்து வாழ்க்கையைத் தொடங்கினார். புத்தமதத்தில் ஆர்வம் ஏற்படவே அதைப் பற்றி நிறையப் படிக்கலானார்.

 

 

மறுபிறப்பு பற்றி ஆய்வு நடத்திய புகழ் பெற்ற விஞ்ஞானியான ஐயான் ஸ்டீவன்ஸன் இலங்கைக்கு வந்த போது அவருக்கு ஏராளமான உதவிகளைச் செய்ததோடு அவருக்கு மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார். அதீத உளவியல் பற்றி அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.

 

 

புத்த தியான முறையில் அவருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படவே, பல நாடுகளிலிருந்தும் அவருக்கு தியான பயிற்சிகள் நடத்துவதற்காக அழைப்புகள் வந்தன. அதையேற்றுப் பல நாடுகளுக்கும் அவர் சென்றார்.

கல்மிஷம் இல்லாத எளிய சாதாரண வாழ்க்கையை மேற்கொண்ட அவரைப் பார்த்தால் பெரிய அபிப்ராயம் ஒன்றும் தோன்றாது. ஆனால் அவரைச் சந்தித்துப் பழகிய சில நிமிடங்களிலேயே அவர் சற்று வித்தியாசமான மனிதர் என்று தோன்றி விடும்.

 

 

அவரது சொற்பொழிவில் ஏராளமான நகைச்சுவைத் துணுக்குகளும், உவமைகளும், குட்டிக் கதைகளும் இடம் பெறும்.

தன்னைக் கேலி செய்யும் சம்பவங்களைக் கூட ஒளிக்காமல் அவர் பயிற்சியாளர்களிடம் பகிர்ந்து கொள்வார். அதில்  ஒரு சம்பவம் இது:

 

 

மேலை நாட்டில் நடந்த பயிற்சி முகாம் ஒன்றில் நிறைவு நாளன்று ஒரு பெண்மணி அந்த பயிற்சி முகாமில் அவர் கற்றதையெல்லாம் ஏற்கனவே அவரது நாயிடமிருந்து கற்று விட்டதாக கூறினார்.

 

 

இதைக் கேட்ட காட்வினுக்கு ஆவல் உந்தியது. “அப்படியா! அந்த நாய் பற்றி இன்னும் கொஞ்சம் விவரியுங்களேன்!” என்றார்.

அந்தப் பெண்மணி கூறினார்: “ நீங்கள் எப்போதும் நிகழ்காலத்தில் வாழ வேண்டும் என்று சொல்கிறீர்கள். என் நாய் எப்போதும் நிகழ்காலத்தில் தான் வாழ்கிறது! நீங்கள் எப்போதும் நன்றி உடையவராக இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்; என் நாய் எப்போதுமே நன்றியுடன் இருக்கிறது! “ இதைத் தொடர்ந்து அந்தப் பெண்மணி அவளுடைய நாயின் நடத்தையை இன்னும் விவரமாகக் கூறிக் கொண்டே போனாள்.

 

 

கடைசியில் அவள் நிறுத்தியவுடன் காட்வின் அவளை நோக்கி, “உங்கள் நாய்க்கும் எனக்கும் வித்தியாசமே இல்லையா?” என்று கேட்டார்.

 

அதற்கு அந்தப் பெண்மணி, “ஏன் இல்லை? நீங்கள் பேசிக் கொண்டே இருக்கிறீர்கள். என் நாய் பேசவே பேசாது” என்றாள்.

இப்படி காட்வின் தனக்கு நேர்ந்த அனுபவத்தை வெளிப்படையாக நகைச்சுவையுடன் சுவைபடக் கூறினார்.

2

இனி அவர் தேவை பற்றியும் பேராசை பற்றியும் தனது உரையாடலில் கூறியதைப் பார்ப்போம்.

 

அவர் இலங்கையில் நடத்தி வந்த தியான மையத்தில் ஏற்பட்ட ஒரு சுவையான அனுபவத்தைப் பற்றி அவர் விவரிக்க ஆரம்பித்தார்.

 

அவரது நண்பர் ஒருவர் இந்தியாவுக்குச் சென்றிருந்தார். அவர் ஒரு நாள் கோவில் ஒன்றிற்குச் சென்றார். கோவிலின் வாயிலில் பிச்சைக்காரர் ஒருவர் உட்கார்ந்திருந்தார். தனக்கு முன்னால் ஒரு சின்னத் துண்டை அவர் விரித்திருந்தார். அதில் பிச்சைக் காசு போடுவோர் போட்டுக் கொண்டிருந்தனர். அவர் கண்களை மூடிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்த நண்பர் அவரது முகத்தில் இருந்த அமைதியையும் அவர் கண்களை மூடி அமர்ந்திருந்த பாங்கையும் பார்த்து ஒரு ஓரமாக நின்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.

 

திடீரென்று அந்த பிச்சைக்காரர் கண்களை விழித்துக் கொண்டு எழுந்தார். துண்டிலிருந்து சில காசுகளை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை தரையில் விட்டெறிந்தார்.அருகிலிருந்த ஒரு கடைக்குச் சென்று சாப்பிடுவதற்கு ஏதோ ஒன்றையும் குடிப்பதற்கு ஒரு பானத்தையும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து எங்கேயோ நடந்து சென்றார்.

 

தனக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு பிச்சைக்காரராக இருந்த போதிலும் மீதியை அங்கேயே விட்டு விட்ட அந்தச் சம்பவம் நண்பர் மீது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்ப்டுத்தியது.

 

உடனடியாக அவர் மனதில் ஒரு கவிதை தோன்றியது “

 

He who knows his need

And yet without greed

Whatever be his creed

He is a saint indeed.

 

இது தான் அந்தக் கவிதை!

 

எவனுக்குத் தன் தேவை தெரியுமோ

தெரிந்திருந்தும் பேராசைப் படவில்லையோ

அவன் எந்த சமய நம்பிக்கை கொண்டவனாகத் தான் இருக்கட்டுமே

உண்மையில் அவனே ஒரு மகான்!

 

இதை எழுதி சமையலறையில் அவர் மாட்டி வைத்தார்.

இதை காட்வின் கூறி விட்டு, “ நீங்கள் உங்கள் பணத்தை எறிய வேண்டும் என்று நான் கூறவில்லை. தேவைக்கு உரியதை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். திருப்தியுடன் வாழுங்கள். இந்த ஆன்மீக குணம் தம்மத்தில் (புத்தமத தர்மத்தில்) அதிகமாக வலியுறுத்தப்படுகிறது. பாலி மொழியில் அருமையான ஒரு வார்த்தையால் இந்தக் குணம் விவரிக்கப்படுகிறது. அந்த வார்த்தை சந்துத்தி (Santutthi).

 

திருப்தி என்பது ஒரு பெரிய செல்வம்” என்று  முடித்தார்.

***

பாவத்தின் தந்தை யார்? (Post No.4031)

Written by S NAGARAJAN

 

Date: 28 June 2017

 

Time uploaded in London:-  6-18 am

 

 

Post No.4031

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

ஹிந்து தர்ம அறநெறிக் கதை

பாவத்தின் தந்தை யார்? அரசனின் கேள்வி – பண்டிதரின் திண்டாட்டம்!

ச.நாகராஜன்

 

அரசன் ஒருவனுக்குத் திடீரென்று சந்தேகம் ஒன்று வந்தது.

பாவத்தின் தந்தை யார்?

அரசவையில் இருந்த பண்டிதரை தனது நண்பன் போலவே அவன் நடத்தி வந்தான்.

அவரை நோக்கி, “பாவத்தின் தந்தை யார்? இதற்கான சரியான பதிலை நீங்கள் சொல்ல வேண்டும்.” என்றான்.

 

பண்டிதருக்கோ பெரும் குழப்பம் ஏற்பட்டது.

யார் பாவத்தை உருவாக்கினார்கள்? யாரைப் பாவத்தின் தந்தை என்று சொல்வது?

அவரது முகத்தில் நிலவிய குழப்பத்தைக் கண்ட அரசன், “சரி, இதற்கு உடனடியாகப் பதில் சொல்ல வேண்டாம். ஒரு வாரத்திற்குள் பதில் சொல்லுங்கள். ஆனால் சரியான பதிலைச் சொல்லாவிட்டால் தகுந்த தண்ட்னை உண்டு” என்று எச்சரித்தான்.

 

 

வீடு திரும்பிய பண்டிதர் தனக்குத் தெரிந்த நூல்களை எல்லாம் புரட்டினார். சரியான பதிலைக் காணோம். தெரிந்தவர்களிடம் கேட்டுப் பார்த்தார். அவர்கள் உதட்டைப் பிதுக்கினர்.

நாட்கள் கழிந்தன.

 

ஊரில் ஓடும் நதிக்கரையின் ஓரமாக சோகமான முகத்துடன் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

நாளைக்குள் பதில் சொல்ல வேண்டுமே!

அவர் முகத்தில் நிலவிய குழப்பதைப் பார்த்த தாசி ஒருத்தி பண்டிதரை அழைத்தாள்.

 

“என்ன பண்டிதரே! எப்போதும் உற்சாகமாகப் போவீர்கள். இன்று ஒரே சோகமாக இருக்கிறது முகம். என்ன விஷயம்?” என்று கேட்டாள்.

பண்டிதர், “பாவத்திற்குத் தந்தை யார் என்று தெரியாமல் தவிக்கிறேன்” என்று புலம்பினார்.

 

 

“அட, இது தெரியாதா? எனக்குத் தெரியுமே” என்று அவள் லேசாகச் சொன்னாள்.

பண்டிதருக்குத் தூக்கிவாரிப் போட்டது.

இவ்வளவு நம்பிக்கையுடன் சொல்கிறாளே, பதில் தெரியும் என்று!!

 

 

“பதிலைச் சொல்லேன்” என்று கெஞ்சினார் பண்டிதர்.

“சொல்கிறேன். ஆனால் இங்கல்ல, எனது வீட்டிற்கு வாரும். அங்கு வர தட்சிணையாக ஒரு பொன் காசு தருகிறேன்.” என்ற அவள் ஒரு பொற்காசைத்  தந்தாள்.

 

அதை வாங்கிக் கொண்ட பண்டிதர் தன் மனதிற்குள் இதற்கு பிராயச் சித்தம் செய்து கொள்ளலாம் என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டார்.

தாசியின் வீட்டை அடைந்த பண்டிதர், “இப்போது பதிலைச் சொல்லேன்” என்றார்.

 

 

“என் படுக்கை அறைக்கு வாருங்கள். இருபது பொற்காசு தந்து பதிலைச் சொல்கிறேன்” என்றாள் அவள்.

பண்டிதர் அவளது படுக்கை அறைக்குச் சென்றார். அடடா, என்ன அற்புதமான சயன அறை!

 

“சரி, இப்போது பதிலைச் சொல்லேன்” என்றார் பண்டிதர்.

“வந்தது வந்தீர்கள். என் மடியில் அமரந்து கொண்டு பதிலைக் கேளுங்கள். வாயில் கொஞ்சம் சுவையான மாமிசத்தை வேறு சாப்பிடலாம்” என்றாள் அவள்.

 

“சும்மா உட்கார வேண்டாம். நூறு பொற்காசுகள் தருகிறேன். என் மார்பைப் பாருங்கள். அதை அலங்கரிக்கும் வைர மாலையையும் கூடவே தருகிறேன்” என்றாள் அவள்.

 

பண்டிதர் அவர் மார்பகங்களைப் பார்த்தார். அதில் அலங்கரிக்கும் வைர மாலை அவர் கண்களைக் கவர்ந்தது.

“சரி, பெரிதாக பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டியது தான்!” என்று அவர் மனதை சமாதானப் படுத்திக் கொண்டு அவள் மடியில் அமர்ந்தார்.

ஒரு மாமிசத் துண்டை கையில் எடுத்து வாயில் போட இருந்த தருணம், அந்த தாசி திடீரென் எழுந்தாள். பண்டிதரைத் தூக்கித் தள்ளியதோடு பளார் என்று  ஒரு அறை அவரது கன்னத்தில் விட்டாள்.

 

பண்டிதர் துடிதுடித்துப் போனார்.

 

“இப்போது தெரிந்ததா, விடை? பாவத்தின் தந்தை ஆசை, பண்டிதரே, பேராசை. தெரிந்ததா, பதில்?” தாசியின் குரல் பண்டிதரின் மனதில் ஆழப் பதிந்தது.

அவருக்கு க்ஷண நேரத்தில் ஞானம் கிட்டியது.

கையில் இருந்த பொற்காசுகளை எல்லாம் தூக்கி எறிந்தார்.

சாலை வழியே “விடை தெரிந்து விட்டது, விடை தெரிந்து விட்டாது” என்று கத்திக் கொண்டே ஓடலானார்.

 

நேராக அரண்மனைக்குச் சென்ற பண்டிதர் மன்னரைச் சந்தித்தார். மக்கள் கூட்டமும் பெருகி விட்டது.

“மன்னா! விடை தெரிந்து விட்டது. பாவத்தின் தந்தை யார் என்று எனக்குத் தெரிந்து விட்டது” என்று சொல்லி விட்டு நடந்ததை அனைத்தும் அப்படியே சொன்னார்.

 

“மன்னா! எனக்குத்  தகுந்த தண்டனை கொடுத்து விடுங்கள். பண்டிதராய் இருந்தும் ஒரு இழிவான காரியத்திற்கு இணங்கினேன். என்னை தேச பிரஷ்டம் செய்து விடுங்கள்” என்று உருக்கமாக வேண்டினார்.

 

“ஆஹா! பாவத்தின்  தந்தை ஆசையா? பேராசையா. சரியான் பதில்” என்று மகிழ்ச்சியுடன் கூவிய மன்னன் பண்டிதரை ந்ண்பன் என்ற முறையில் கட்டிக் கொண்டார்.

 

“நாட்டை விட்டு வெளியேறுவதா? ஒருக்காலும் இணங்க மாட்டேன் அதற்கு! உங்களுற்க்கு ஞானம் வந்து விட்டதை உணர்கிறேன். இந்தக் கணம் முதல் நீங்களே எனது குரு. ஒரு நாளும் தவறான வழியில் செல்ல முடியாத நீங்களே எனக்குத் தகுந்த வழிகாட்டி. என்னை சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றான் மன்னன். பண்டிதரை அடி பணிந்து வணங்கினான்.

ஆமாம், பாவத்தின் தந்தை பேராசை தான்!

 

***

கஞ்சக் கோமுட்டி, பேராசைப் பிராமணன் கதை

brahmin 2

Compiled by London swaminathan

Article No. 1793;11th  April 2015

Uploaded from London at   5-34 am

 

 

ஒரு ஊரில் ஒரு கோமுட்டிச் செட்டி இருந்தார். அவர் மஹா கஞ்சன். அதே ஊரில் புரோகிதம் செய்யும் ஒரு பிராமணர் இருந்தார். அவர் மிகவும் பேராசைக்காரர். ஒரு ஆடி அமாவாசை அன்று எல்லோரும் நதிக்கரையில் நீத்தார் நினைவாக தர்ப்பணம்-திதி கொடுத்தனர். கோமுட்டி செட்டியாரும் அவ்வாறு செய்ய எண்ணினார். காலையில் போனால், ஐயருக்கு நாலு அணா தட்சிணை கொடுக்க வேண்டி இருக்கும், நாம் மெதுவாக உச்சிப் பொழுதில் போவோம் என்று உச்சிப் பொழுதில் நதிக் கரைக்குப் புறப்பட்டார்.

அப்போதுதான் பிராமணர் தர்ப்பைக்கட்டு எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் புறப்படத் தயாரானார். செட்டியாரைப் பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சி. வாங்கோ செட்டியார்வாள், என்ன தாமதம்? அதனால் என்ன, வாங்கோ, உங்களுக்கும் பண்ணி வைக்கிறேன் என்று தர்ப்பைக் கட்டை அவிழ்த்து ஆயத்தமானார்.

ChettiarBommai

செட்டியார் பொம்மை (கொலுவில்)

செட்டியாருக்கு  தர்ம சங்கடமான நிலை. பிராமணரிடம் மாட்டேன் என்று சொல்லி அவர் சாபத்துக்கு ஆளாக முடியாது. அடடா, இடுப்பில் பணத்தை முடிந்துகொள மறந்துவிட்டேனே, என்றார்.

அட, செட்டியார்வாள், உமது கிருஹம் (வீடு)தான் எனக்கு நன்றாகத் தெரியுமே. நாளை நானே வீட்டுக்க்கு வந்து தட்சிணை வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி அவருக்கு தர்ப்பணம் செய்துவைத்தார். செட்டியார் மனதில் பலா  ஐடியாக்கள் உதித்தன. சரி என்று சொல்லி உட்கார்ந்து எல்லாம் முடிந்தபின்னர் விடை பெற்றுக் கொண்டார்.

அந்தப் பிராமணர், மறுநாள் அதிகாலையில் செட்டியார் வீட்டுக்குப் போய் கதவைத் தட்டினார். ஜன்னல் வழியாகப் பிராமணரைப் பார்த்தவுடன் மனைவியிடம், “நான் செத்துப் ஓய்விட்டேன் என்று சொல்லி விடு, அவர் பணம் வாங்க வந்திருக்கிறார்” என்று சொன்னார். மனைவியும் அழுத கண்ணீரும் சிந்திய மூக்குமாக வந்து கதவைத் திறந்து, ஐயஹோ, அவர் போய்விட்டாரே என்று கதறினார்.

 

பிராமணர் மனதில் கொஞ்சம் சந்தேகம் ஏற்பட்டது. அதற்கென்ன நானே காரியம் எல்லாம் செய்து முடிக்கிறேன், கவலைப் படாதீர்கள் என்று சொல்லி ஈமக் கிரியைகளுக்கு ஆட்களை ஏற்பாடு செய்தார். செட்டியார் கொஞ்சமும் பயப்படவில்லை. பிணமாகக் கிடந்தார். வீட்டின் முன்னால் பாடை தயாராகி, அவரைத் தூக்கி வைத்தனர். சங்கு ஊதியது, மணி அடித்தது, இறுதி ஊர்வலமும் புறப்பட்டது. ஐயர் முன்னே செல்ல நெருங்கிய உறவினர்கள் பின்னே வர, ஊர்வலம் சுடுகாட்டை அடைந்தது.

அந்தப் பிராமணர் எல்லா கிரியைகளையும் முடித்த பின்னர் சிதைக்குத் தீ மூட்டப்பட்டது. சுடுகாட்டில் பிணத்துக்கு தீ வைத்த பின்னர் யாரும் திரும்பிப் பார்க்கக்கூடாது என்ற சம்பிரதாயம் உண்டு. ஆகவே பிராமணர் திரும்பிப் பார்க்காமல் சென்று ஒரு மரத்தின் பின்னர் ஒளிந்து கொண்டார். சிதைத் தீ கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது. யாரும் இல்லை என்பதை ஓரக் கண்ணால் பார்த்த செட்டியார், தாவிக் குதித்து வெளியே வந்தார். அப்பாடா, அந்தப் பிராமணனுக்குக் காசு கொடுக்காமல் தப்பிக்க எவ்வளவு சிரமப் பட்டுவிட்டேன் என்று சொல்லி பெருமூச்சு விட்டார். மரத்துக்குப் பின்னால் ஒளிந்திருந்த பிராமணருக்குச் செட்டியாரின் குரல் தேன் போல ஒலித்தது. செட்டியார் முன்னால் தாவிக் குதித்து வந்து, எங்கே என் நாலணா? என்று கேட்டார்.

brahmin

“கள்ளனுக்குக் குள்ளன்” — என்பது தமிழ்ப் பழமொழி

நீ பாய்க்கு அடியில் போனால் நான் கோலத்துக்கு அடியில் போவேன் என்பது – கன்னடப் பழமொழி!

swami_48@yahoo.com