கடல் பற்றிய 31 பொன்மொழிகள் (Post No.4115)

ஆகஸ்ட் 2017 காலண்டர்

 

Compiled by London Swaminathan
Date: 26 July 2017
Time uploaded in London-6-32 am
Post No. 4115
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

விழா நாட்கள்:- – ஆடிப் பெருக்கு -August 3; வரலெட்சுமி விரதம்—August 4; ரக்ஷாபந்தன்—7; காயத்ரி ஜபம்—8; ஜன்மாஷ்டமி/ கிருஷ்ணன் பிறப்பு—14 & 15;  சுதந்திர தினம்-15; விநாயக சதுர்த்தி—25

 

முகூர்த்த நாள்:- August 31

ஏகாதசி:-  3, 18

பௌர்ணமி- August 7

அமாவாசை- August 21

 

ஆகஸ்ட் 1 செவ்வாய்க்கிழமை

கடலிலே ஏற்றம் போட்ட கதை

 

ஆகஸ்ட் 2 புதன் கிழமை

கடலிலே துரும்பு கிடந்தாலும்,  மன திலே ஒரு சொல் கிடவாது

ஆகஸ்ட் 3 வியாழக் கிழமை

கடலிலே பிறக்கும் உப்புக்கும் மலையிலே விளைகிற நார்த்தங்காய்க்கும் தொந்தம்

 

ஆகஸ்ட் 4 வெள்ளிக் கிழமை

கடலிலே போட்டு சாக்கடையிலே தேடுகிறதா?

 

ஆகஸ்ட் 5 சனிக்கிழமை

கடலிலிட்ட புளி போல

ஆகஸ்ட் 6 ஞாயிற்றுக் கிழமை

கடலில் கையைக் கழுவி விடுகிறதா?

 

ஆகஸ்ட் 7  திங்கட் கிழமை

கடலை அடைக்க கரை போடலாமா?

 

ஆகஸ்ட் 8 செவ்வாய்க்கிழமை

கடல் உப்பையும் மலை நெல்லையும் கலந்தாற்போல

ஆகஸ்ட் 9 புதன் கிழமை

கடல் தண்ணீர் வற்றினாலும் பள்ளச்சி தாலி வற்றாது

ஆகஸ்ட் 10 வியாழக் கிழமை

கடல் திடலாகும், திடல் கடலாகும்

ஆகஸ்ட் 11 வெள்ளிக் கிழமை

கடல் நீர் நிறைந்து என்ன? காஞ்சிரை பழுத்து என்ன?

ஆகஸ்ட் 12 சனிக்கிழமை

கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?

ஆகஸ்ட் 13 ஞாயிற்றுக் கிழமை

கடல் பெருகினால் கரையும் பெருகுமா?

ஆகஸ்ட் 14  திங்கட் கிழமை

கடல் மீனுக்கு நீச்சுப் பழக வேண்டுமா?

 

ஆகஸ்ட் 15 செவ்வாய்க்கிழமை

கடல் மீனுக்கு நுளையன் இட்டது சட்டம்

ஆகஸ்ட் 16 புதன் கிழமை

கடலில் கரைத்த பெருங்காயம் போல

ஆகஸ்ட் 17 வியாழக் கிழமை

கடலில் கையைக் கழுவி விடுகிறதா?

ஆகஸ்ட் 18 வெள்ளிக் கிழமை

கடலுக்கு கரை போடுவார் உண்டா?

ஆகஸ்ட் 19 சனிக்கிழமை

கடலை அடைக்க கரை போடலாமா?

ஆகஸ்ட் 20 ஞாயிற்றுக் கிழமை

கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயைத் தாண்ட கால் இல்லை

 

ஆகஸ்ட் 21 திங்கட் கிழமை

கடல் வற்றில் கருவாடு தின்னலாமென்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு

ஆகஸ்ட் 22 செவ்வாய்க்கிழமை

கடலைத் தூர்த்தாவது காரியத்தை முடிக்க வேண்டும்

ஆகஸ்ட் 23 புதன் கிழமை

கலக்கினும் தண்கடல் சேறு ஆகாதே—வெற்றிவேற்கை

ஆகஸ்ட் 24 வியாழக் கிழமை

கடலாற்றாக் காம நோய், குறள் 1175

 

ஆகஸ்ட் 25 வெள்ளிக் கிழமை

பிறவிப் பெருங்கடல், குறள் 10

ஆகஸ்ட் 26 சனிக்கிழமை

நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் – குறள் 17

 

ஆகஸ்ட் 27 ஞாயிற்றுக் கிழமை

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்

நாவாயும் ஓடாநிலத்து –குறள் 496

 

ஆகஸ்ட் 28 திங்கட் கிழமை

கடலன்ன காமம் – குறள் 1137

ஆகஸ்ட் 29 செவ்வாய்க்கிழமை

கப்பல் ஏற்றிக் கடலில் கவிழ்த்தது போல

ஆகஸ்ட் 30 புதன் கிழமை

கப்பல் அடிப்பாரத்துக்கு, கடற்கரை மண்ணுக்குத் தவுகெட்டாற்போல

 

ஆகஸ்ட் 31 வியாழக் கிழமை

நின் கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்

வெந்தலைப் புணரிக் குட கடற் குளிக்கும் (புறம்.2)

 

–Subham–

 

நம்மாழ்வாரின் 28 அற்புதப் பொன்மொழிகள் (Post No.3590)

Compiled by London swaminathan

 

Date: 30 JANUARY 2017

 

Time uploaded in London:-  19-59

 

Post No. 3590

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

பிப்ரவரி 2017 காலண்டர்

துர்முகி வருடம் (தைமாசி மாதம்)

 

 

முக்கிய நாட்கள்:- பிப்ரவரி 3ரத சப்தமி, 9-  தைப்பூசம், 24-மஹா சிவரத்திரி.

ஏகாதசி- 7, 22; அமாவாசை- 26; பௌர்ணமி– 10

முகூர்த்த நாட்கள்1, 2, 6, 9, 16, 17, 23.

 

பிப்ரவரி 1 புதன்கிழமை

திரு உடம்பு வான்சுடர்; செந்தாமரை கண்; கை கமலம்

திரு இடமே மார்வம்; அயன் இடமே கொப்பூழ்;

ஒருவு இடமும் எந்தை பெருமாற்கு அரனே;

ஒருவு இடமும் ஒன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே (3054)

 

பிப்ரவரி 2 வியாழக்கிழமை

ஆண் அல்லன்; பெண் அல்லன்; அல்லா அலியும் அல்லன்;

காணலும் ஆகான்; உளன் அல்லன்; இல்லை அல்லன்;

பேணுங்கால், பேணும் உரு ஆகும்….. (3062)

 

பிப்ரவரி 3 வெள்ளிக் கிழமை

உன்னைச் சிந்தை செய்து செய்து, உன் நெடு மா மொழி இசைபாடி, ஆடி, என்

முன்னைத் தீவினைகள் முழுவேர் அரிந்தனன் யான் (3069)

பிப்ரவரி 4 சனிக்கிழமை

அனைவது அரவு- அணைமேல்; பூம்பாவை ஆகம்

புணர்வது; இருவர் அவர் முதலும் தானே;

இணவன் ஆம் எப்பொருட்கும்; வீடு முதல் ஆம்-

புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே (3088)

 

பிப்ரவரி 5 ஞாயிற்றுக்கிழமை

கைம்மா துன்பம் கடிந்த பிரானே!

அம்மா! அடியேன் வேண்டுவது ஈதே-3099

(கைம்மா=யானை).

 

பிப்ரவரி 6 திங்கட்கிழமை

மகிழ் கொள் தெய்வம் உலோகம், அலோகம்

மகிழ் கொள் சோதி மலர்ந்த அம்மானே!

மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும்

மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே -3104

 

பிப்ரவரி 7 செவ்வாய்க்கிழமை

கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்

வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்,

வளர் இளம் பொழில் சூழ்மாலிருஞ்சோலை

தளர்வு இலர் ஆகிச் சார்வது சதிரே–3110

 

பிப்ரவரி 8 புதன்கிழமை

வரும்காலம், நிகழ்காலம், கழிகாலம் ஆய், உலகை

ஒழுங்காக அளிப்பாய்! சீர் எங்கு உலக்க ஓதுவனே?-3125

 

பிப்ரவரி 9 வியாழக்கிழமை

கிற்பேன், கில்லேன் என்று இவன் முனம் நாளால்;

அற்ப சாரங்கள் அவை அகன்றொழிந்தேன்;

பற்பல் ஆயிரம் உயிர் செய்த பரமா நின்

நற்பொன் – சோதித்தாள் நணுகுவது எஞ்ஞான்றே?—3137

 

பிப்ரவரி 10 வெள்ளிக் கிழமை

 

எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்

முந்தை – வானவர் வானவர் – கோனொடும்

சிந்து பூ மகிழும் திருவேங்கடத்து

அந்தம் இல் புகழ்க் கார் எழில் அண்ணலே -3144

 

பிப்ரவரி 11 சனிக்கிழமை

சாதி மாணிக்கம் என்கோ?

சவி கொள் பொன்முத்தம் என்கோ?

சாதி நல் வயிரம் என்கோ?

தவிவு இல் சீர் விளக்கம் என்கோ?-3157

 

பிப்ரவரி 12 ஞாயிற்றுக்கிழமை

கும்பிடு நட்டம் இட்டு ஆடி

கோகு உகட்டுண்டு உழலாதார்

தம்பிறப்பால் பயன் என்னே

சாது சனங்களிடையே?–3168

 

பிப்ரவரி 13 திங்கட்கிழமை

கனியை, கரும்பின் இன்சாற்றை,

கட்டியை, தேனை, அமுதை

முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார்

முழுது உணர் நீர்மையினாரே—3170

 

 

பிப்ரவரி 14 செவ்வாய்க்கிழமை

ஒருமை மனத்தினுள் வைத்து,

உள்ளம் குழைந்து, எழுந்து, ஆடி,

பெருமையும் நாணும் தவிர்ந்து

பிதற்றுமின், பேதைமை தீர்ந்தே!-3174

 

பிப்ரவரி 15 புதன்கிழமை

தேவதேவனை, தென் இலங்கை

எரி எழச் செற்ற வில்லியை

பாவநாசனை, பங்கயத் தடங்

கண்ணனைப் பரவுமினோ -3177

 

பிப்ரவரி 16 வியாழக்கிழமை

குலம் தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து, எத்தனை

நலம் தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்,

வலம்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்

கலந்தார் அடியார்- தம் அடியார் எம் அடிகளே -3195

 

பிப்ரவரி 17 வெள்ளிக் கிழமை

அடிஆர்ந்த வையம் உண்டு, ஆல் இலை அன்னவசம் செய்யும்

படியாதும் இல் குழவிப்படி எந்தைபிராந் தனக்கு

அடியார் அடியார் தம் அடியார் அடியார்- தமக்கு

அடியார் அடியார் – தம் அடியார் அடியோங்களே -3196

 

பிப்ரவரி 18 சனிக்கிழமை

சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன்; கேண்மினோ

எந்நாவில் இன்கவி  யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன் –3209

 

பிப்ரவரி 19 ஞாயிற்றுக்கிழமை

மாரி அனைய கை, மால்வரை ஒக்கும் திண் தோள் என்று

பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும்பொய்கள் பேசவே – 3215

 

பிப்ரவரி 20 திங்கட்கிழமை

இடர் இன்றியே, ஒருநாள் ஒரு போழ்தில் எல்லா உலகும் கழிய

படர்புகர்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏற திந்தேர் கடவி

சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை

உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே –3224

பிப்ரவரி 21 செவ்வாய்க்கிழமை

அடிசேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ

இடிசேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்

பொடிசேர் துகளாய்ப் போவார்கள்; ஆதலில் நொக்கெனக்

கடிசேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ -3233

 

பிப்ரவரி 22 புதன்கிழமை

ஏக மூர்த்தி இரு ஊர்த்தி

மூன்று மூர்த்தி பல மூர்த்தி

ஆகி, ஐந்து பூதம் ஆய்,

இரண்டு சுடர் ஆய், அருவு ஆகி – 3255

 

பிப்ரவரி 23 வியாழக்கிழமை

கண்ணன், எம்பிரான், எம்மான்

காலச்சக்கரத்தானுக்கே -3257

 

பிப்ரவரி 24 வெள்ளிக் கிழமை

அறியும் செந்தீயைத் தழுவி

அச்சுதன் என்னும்; மெய் வேவாள்;

எறியும் தண் காற்றைத் தழுவி

என்னுடைக் கோவிந்தன் என்னும்; -3266

 

பிப்ரவரி 25 சனிக்கிழமை

திரு உடை மன்னரைக் காணில்

திருமாலைக் கண்டேனே என்னும்;

உரு உடை வண்ணங்கள் காணில்

உலகு அளந்தான் என்று துள்ளும்;

கரு உடைத் தேவு இல்கள் எல்லாம்

கடல்வண்ணன் கோயிலே என்னும்;

வெருவிலும் வீழ்விலும் ஓவாள்;

கண்ணன் கழல்கள் விரும்புமே -3271

 

 

பிப்ரவரி 26 ஞாயிற்றுக்கிழமை

விரும்பிப் பகவரைக் காணில்

வியல் இடம் உண்டானே என்னும் -3272

(பகவர்= துறவி)

 

 

பிப்ரவரி 27 திங்கட்கிழமை

 

கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் தன்னை

வண்-தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே -3284

 

பிப்ரவரி 28 செவ்வாய்க்கிழமை

கொள்ளமாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என்

வள்ளலேயோ! வையம் கொண்ட வாமனாவோ என்று என்று-3298

 

–subham–

 

 

42 திருவாசகப் பொன்மொழிகள் (Post No.3404)

டிசம்பர் 2016  காலண்டர்

Compiled by london swminathan

 

Date: 30 November 2016

 

Time uploaded in London: 22-09

 

Post No.3404

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

 

contact; swami_48@yahoo.com

 

December 2016  ‘Good Thoughts’ Calendar

டிசம்பர் 12 : கார்த்திகை தீபம், 13- சர்வாலய தீபம், 13- மிலாடி நபி,  25- கிறிஸ்துமஸ்; ஏகாதசி- 10, 24/25; பௌர்ணமி -13;  அமாவாசை-28; முகூர்த்த தினங்கள்–1, 4, 5, 9

 

தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி

அல்லல் அறுத்து ஆனந்தமாக்கியதே – எல்லை

மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்

திருவாசகம் எனும் தேன்

xxx

டிசம்பர் 1 வியாழக்கிழமை

நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க

இமைப்பொழுதும் என் நெஞ்சின் நீங்காதான் தாள் வாழ்க

 

xxx

டிசம்பர் 2 வெள்ளிக்கிழமை

உய்ய என்னுள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற

மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்

ஐயா எனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே

xxx

டிசம்பர் 3 சனிக்கிழமை

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே

மாசற்ற சோதி மலர்ச்சுடரே

 

xxx

டிசம்பர் 4 ஞாயிற்றுக்கிழமை

 

போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே

காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியே

xxxx

டிசம்பர் 5 திங்கட்கிழமை

 

சிவனவன் என் சிந்தையுள் நின்ற அதனால்

அவனருளாலே அவந்தாள் வனங்கி

xxxx

 

டிசம்பர் 6 செவ்வாய்க்கிழமை

 

புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி

………. எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்

—சிவபுராணம்

 

xxx

 

டிசம்பர் 7  புதன்கிழமை

 

மன்னு மாமலை மகேந்திரமதனில்

சொன்ன ஆகமம் தோற்றுவித்தருளியும்

–கீர்த்தித் திரு அகவல்

xxxx

டிசம்பர் 8 வியாழக்கிழமை

அண்டப்பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பருந்தன்மை வளப்பெருங் காட்சி

ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின்

நூற்றொருகோடியின் மேற்பட விரிந்தன

–திருவண்டப்பகுதி

 

xxx

டிசம்பர் 9 வெள்ளிக்கிழமை

சொற்பதம் கடந்த தொல்லோன் காண்க

சித்தமும் செல்லாட் சேட்சியன் காண்க

பக்தி வலையிற் படுவோன் காண்க

–திருவண்டப்பகுதி

xxxx

டிசம்பர் 10 சனிக்கிழமை

 

ஆறுகோடி மாயா சக்திகள்

வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின

ஆத்தமானார் அயலவர் கூடி

நாத்திகம் பேசி நாத்தழும்பேறினர்

–போற்றித் திரு அகவல்

xxx

 

டிசம்பர் 11 ஞாயிற்றுக்கிழமை

சமயவாதிகள் தத்தம் மதங்களே

அமைவதாக அரற்றி மலைந்தனர்

மிண்டியமாயாவாதம் என்னும்

சண்டமாருதஞ் சுழித்தடித்தார்த்து

உலோகாதயனெனும் ஒண்டிறர்பாம்பின்

கலாபேதத்த கடுவிடம் எய்தி

–போற்றித் திரு அகவல்

xxx

டிசம்பர் 12 திங்கட்கிழமை

ஐயா போற்றி அணுவே போற்றி

சைவா போற்றி தலைவா போற்றி

–போற்றித் திரு அகவல்

xxx

டிசம்பர் 13 செவ்வாய்க்கிழமை

தென்னாடுடைய சிவனே போற்றி

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

ஏனக் குருளைக்கருளினை போற்றி

மானக் கயிலை மலையாய் போற்றி

–போற்றித் திரு அகவல்

xxx

டிசம்பர் 14  புதன்கிழமை

 

புலிமுலை புல்வாய்க்கருளினை போற்றி

அலைகடன் மீமிசை நடந்தாய் போற்றி

 

கருங் குருவிக் கன்றருளினை போற்றி

இரும்புலன் புலர இசைந்தனை போற்றி

–போற்றித் திரு அகவல்

xxx

டிசம்பர் 15 வியாழக்கிழமை

நாடகதாலுன்னடியார்

போனடித்து நானடுவே

வீடகத்தே புகுந்திடுவான்

மிகப்பெரிதும் விரைகின்றே

–திருச்சதகம்

xxxx

 

டிசம்பர் 16 வெள்ளிக்கிழமை

 

யாமார்க்குங் குடியல்லோம் யாதும் அஞ்சோம்

மேவினோம் அவனடியாரடியாரோடு

மேன்மேலுங் குடைந்தாடி ஆடுவோமே

–திருச்சதகம்

xxx

டிசம்பர் 17 சனிக்கிழமை

பட்டிமண்டபமேற்றினை யேற்றினை

எட்டினோடும் இரண்டும் அறியேனையே

–திருச்சதகம்

xxx

டிசம்பர் 18 ஞாயிற்றுக்கிழமை

யானே பொய் என்நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்

ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே

–திருச்சதகம்

xxx

டிசம்பர் 19 திங்கட்கிழமை

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே

பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே

–திருவெம்பாவை

xxx

டிசம்பர் 20 செவ்வாய்க்கிழமை

தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானைப்

பெண்ணாளும் பாகனைப்பேணு பெருந்துறையில்

–திருவம்மானை

xxx

 

டிசம்பர் 21  புதன்கிழமை

தேசமெல்லாம் புகழ்ந்தாடும் கச்சித்

திருவேகம்பன் செம்பொற் கோயில் பாடி

–திருப்பொற்சுண்ணம்

xxxx

டிசம்பர் 22 வியாழக்கிழமை

ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமில்லார்காயிரம்

திருநாம் பாடி நாம் தெள்ளெணங் கொட்டாமோ

–திருத்தெள்ளேணம்

xxx

டிசம்பர் 23 வெள்ளிக்கிழமை

 

கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை

தாயுமிலி தந்தையிலி தான்றனியன் காணேடீ

–திருச்சாழல்

xxx

டிசம்பர் 24 சனிக்கிழமை

மண்பால் மதுரையிற் பிட்டமுது செய்தருளித்

தண்டாலே பாண்டியன் றன்னைப் பணிகொண்ட

புண்பாடல் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ

–திருப்பூவல்லி

xx

டிசம்பர் 25 ஞாயிற்றுக்கிழமை

பாலகனார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட

கோலச் சடையற்கே உந்தீ பற

குமரன்றன் தாதைக்கே உந்தீபற

–திருவுந்தியார்

xxx

 

டிசம்பர் 26 திங்கட்கிழமை

 

ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம்

பாழுக்கிறைத்தேன் பரம்பரனைப் பணியாதே

—–திருத்தோணோக்கம்

xxxx

டிசம்பர் 27 செவ்வாய்க்கிழமை

தேன்பழச் சோலை பயிலுஞ்

சிறுகுயிலேயிது கேள் நீ

வான் பழித்திம் மண்புகுந்து

மனிதரை  யாட்கொண்ட வள்ளல்

—குயிற்பத்து

xxxx

டிசம்பர் 28 புதன்கிழமை

தந்ததுன் றன்னைக் கொண்டதென்றன்னைச்

சங்கரா ஆர்கொலோ சதுரர்

அந்தமொன்றில்லா ஆனந்தம் பெற்றேன்

யாது நீ பெற்றது என்பால்

–கோயில் திருப்பதிகம்

xxxx

டிசம்பர் 29 வியாழக்கிழமை

பவளத் திருவாயால்

அஞ்சேலென்ன ஆசைப்பட்டேன்

கண்டாய் அம்மானே

–ஆசைப்பத்து

xxxx

டிசம்பர் 30 வெள்ளிக்கிழமை

 

சொல்லும் பொருளும் இறந்த சுடரை

நெல்லிக்கனியைத் தேனைப் பாலை

நிறையின் அமுதை அமுதின் சுவையை

–புணர்ச்சிப்பத்து

xxxx

 

டிசம்பர் 31 சனிக்கிழமை

 

பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப்பா

பரகதி கொடுத்தருள் செய்யும்

சித்தனே

–அருட்பத்து

xxx

சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி எனையாண்ட

அந்தமிலா ஆனந்தம் அணிகொடில்லை கண்டேனே

–கண்டபத்து

xxxx

சாதிகுலம் பிறப்பென்னும் சுழிபட்டுத் தடுமாறும்

ஆதமிலி நாயேனை அல்லல் அறுத்து ஆட்கொண்டு

–கண்டபத்து

xxxx

பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ

பிறைசேர் சடையாய் முறையோவென்

றழைத்தால் அருளா தொழிவதே

அம்மானேயுன் அடியேற்கே

–குழைத்தபத்து

 

xxx

வேண்டத்தக்கது அறிவோய் நீ

வேண்டமுழுதும் தருவோய் நீ

வேண்டும் அயன்மாற் கரியோய் நீ

வேண்டியென்னைப் பணி கொண்டாய்

–குழைத்தபத்து

xxx

 

மற்றுமோர் தெய்வந்தன்னை

உண்டென நினைந்தெம் பெம்மாற்

கற்றிலாதவரைக் கண்டால்

அம்மநாம் அஞ்சுமாறே

–அச்சப்பத்து

xxx

ஆலமுண்டான் எங்கள் பாண்டிப்

பிரான் தன் அடியவர்க்கு

மூல பண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்துமினே

–திருப்பாண்டிப் பதிகம்

xxxxx

சடையானே தழலாடீ தயங்கு மூவிலைச் ச்சூலப்

படையானே பரஞ்சோதீ பசுபதீ மழவெள்ளை விடையானே

—திருப்புலம்பல்

xxx

மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த

தேவரும் காணாச் சிவபெருமான்

–திருவெண்பா

xxxx

இன்பம்பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றும்

துன்பந் தொடர்வறுத்துச் சோதியாய் – அன்பமைத்து…….

–திருவெண்பா

xxxxxxxxxxx

முன்னை வினை இரண்டும் வேரறுத்து முன்னின்றான்

பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன்

–திருவெண்பா

 

xxx

உய்யுநெறி காட்டுவித்திட்

டோங்காரத் துட்பொருளை

ஐயனெனக் கருளியவா

றார்பெறுவார் அச்சோவே

—அச்சோப்பதிகம்

 

 

 

—subham—

மனைவி ஒரு மருந்து- மஹாபாரதப் பொன்மொழி (Post No.3077)

IMG_4925.JPG

Compiled by London swaminathan

Date: 20th August 2016

Time uploaded in London:  14-23

Post No.3077

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

மஹா பாரதத்தில் 18 பர்வங்கள் உண்டு. அதில் மூன்றாவதாக அமைந்த வனபர்வத்தின் மற்றொரு பெயர் ஆரண்ய பர்வம். இதை வால்மீகி ராமாயணத்திலுள்ள ஆரண்ய காண்டத்துடன் குழம்பிக்கொள்ளக்கூடாது.

 

வனபர்வம் எனப்படும் ஆரண்ய பர்வம் பஞ்சபாண்டவர்களி ன் 12 ஆண் டு கானுறை வாழ்வைச் சித்தரிக்கும் பர்வம். அதற்குள் 21 உட்பிரிவுகள் இருக்கின்றன. அதில் மனைவி பற்றிய ஒரு பாடல் (ஸ்லோகம்) மனைவியை “சர்வ துக்க நிவாரணி” என்கிறது.

IMG_4919

நாம் சர்வ ரோக நிவாரணி – என்று மருந்துகளுக்குக் கொடுக்கும் விளம்பர  ங்களைப் படித்திருக்கிறோம். சர்வ துக்க நிவாரணி என்பதை பொதுவாக கடவுளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம். ஆனால் மஹா பாரதமோ மனைவியை கைகண்ட மருந்து என்றும், எல்லா துக்கங்களையும் போக்குபவள் என்றும் சித்தரிக்கிறது.

 

இதோ அந்த ஸ்லோகம்:–

 

ந ச பார்யா சமம்  கிஞ்சித் வித்யதே பிஷஜாம் மதம்

ஔஷதம் சர்வ துக்கேஷு சத்யமேதத் ப்ரவீமி தே

–ஆரண்ய பர்வம்

 

பொருள்:-

“மனைவிக்குச் சமமான ஒன்றுமே இல்லை; எல்லா துக்கங்களுக்கும் மருந்தாக இருப்பவள் மனைவி என்பவளே. உண்மையைச் சொல்லுகிறேன்.”

 

 

இன்னொரு பாடல் அம்மாதான் நன்கு சாப்பாடு போடுபவள், மனைவிதான் நன்கு சந்தோஷப்படுத்துபவள் என்று பாராட்டுகிறது.

 

உடலைப் போஷிக்கும் விஷயங்கள்

IMG_4927

மாத்ரா சமோ நாஸ்தி சரீர போஷணே

பார்யா சமோ நாஸ்தி சரீர தோஷணே

வித்யா சமோ நாஸ்தி சரீர பூஷணே

சிந்தா சமோ நாஸ்தி சரீர சோஷணே

 

உடலை வளர்க்க உதவுவதில் அம்மாவுக்குச் சமமானவள் யாரும் இல்லை;

நம்மை மகிழ்விப்பதில் (சந்தோஷப்படுத்துவதில்) மனைவிக்குச் சமமானவள் எவரும் இல்லை;

ஒருவரை அலங்கரிக்கச் செய்யும் விஷயத்தில் கல்விக்குச் சமமான எதுவும் இல்லை

உடலை வாடச் செய்யும் விஷயத்தில் துக்கத்துக்குச் சமமான எதுவும்  இல்லை

IMG_3212

–Subham–

 

 

பெண்கள், ரத்தினம், கல்வி: எங்கிந்தாலும் பெறுக! (Post No.2945)

assorted-coloured-gemstones-1

Written by London swaminathan

Date: 5 July 2016

Post No. 2945

Time uploaded in London :– 9-24 AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

ஸ்த்ரியோ ரத்னானி அத வித்யா தர்ம: சௌசம் சுபாஷிதம்

விவிதானி ச சில்பானி சமாதேயானி சர்வத:

–மனு ஸ்மிருதி 2-240

 

எல்லா திசைகளிலிருந்தும் எடுத்துக்கொள்ள வேண்டியவை:-

பெண்கள், ரத்னக் கற்கள், கல்வி, தர்மம் (அறச் செயல்கள், அற விதிகள்)

தூய்மை (விதிகள், உணவு),  நல்ல சொற்கள் (பொன்மொழிகள், பழமொழிகள், உபதேசங்கள்)

மனு சொல்வதை புறநானூற்றிலும் காணலாம்

 

நான்கு ஜாதிகளில், தாழ்ந்தவரானாலும், கல்வியில் சிறந்தவன் சொல்லைத் தான் அரசனும் கேட்டு நடப்பான்:–

 

 

வேற்றுமை தெரிந்த நாற்பலுள்ளும்

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,

மேற்பால் ஒருவனும் அவன் கண்படுமே (புறம்.183)

 

மனு, இதை மேலும் அழகான உவமைகளால் விளக்குவான்:-

 

விஷத்திலிருந்து கூட அமிர்தம் எடுக்க முடியும்;

குழந்தையிடமிருந்து கூட அருமையான யோஜனைகள் கிடைக்கும்;

எதிரியிடமிருந்து நற்குணங்களை கற்றுக்கொள்ளலாம்;

அசுத்தமான மண்ணிலிருந்தும் தங்கத்தைக் காய்ச்சி எடுக்கலாம்

மனு 2- 239

 

இந்த உவமைகளைச் சொன்ன பிறகே நல்ல பெண்களை எங்கிருந்தாலும் திருமணம் செய்க என்பான்.

ms garland making

மனு, மற்றொரு இடத்தில் (9-23), கீழ் ஜாதியில் பிறந்த அருந்ததி, உலக மஹா கற்புக்கரசியாக மதிக்கப்படுவதை எடுத்துக் காட்டுவான்.

 

2-241ஆவது ஸ்லோகத்தில் பிராமணர் அல்லாதார் இடமிருந்தும் வேதங்களைக் கற்கலாம் என்கிறார் (உபநிடதங்களில் க்ஷத்ரிய மன்னர்களிடம், பிராமணர்களும் வேதாந்தம் கற்றனர் என்ற குறிப்பு உள்ளது.  க்ஷத்ரிய மன்னர் குலத்தில் பிறந்த கௌதம புத்தரை பிராமண அறிஞர்களும் பின்பற்றியபோது புத்தரின் முகம் தாமரை போல மலர்ந்தது என்று தம்மபத விரிவுரைகள் பகரும்.)

 

வேதங்களைக் கற்பிக்கும் போது அவர்களைக் குருவாக மதிக்க வேண்டும் என்கிறார் மனு. ஜனக மன்னனிடம் பலரும் கற்றதை இங்கே நினைவு கூறலாம்.

 

ஜாதியை விட உயர்ந்தது கல்வியும், நல்லொழுக்கமும் என்று மனு நிறைய இடங்களில் வலியுறுத்திக் கொண்டே போவதை கற்றோர் அறிவர்.

 

–Subham–

மறைந்திருந்தே பார்க்கும் மருமம் என்ன? ஒரு யாழ்ப்பாணக் கதை (Post No 2943)

anthaka kavi 1

Written by London swaminathan

 

Date: 4 July 2016

Post No. 2943

Time uploaded in London :– 16-34

( Thanks for the Pictures)

 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

இது, மன்னன் ஏலேலனும் அந்தகக்கவி வீரராகவனும் சந்தித்தது பற்றிய  சுவையான கதை. கண்கள் பார்க்க முடியாதபோதும் ஏலேலன் திரை மறைவிலிருந்து கண்டதைக் கண்டுபிடித்துப் பாடியவுடன் ஏலேலன் அசந்தே போய்விட்டான். மனைவியுடன் கோபித்துக்கொண்ட கவிஞருக்கு ராஜ உபசாரம் கிடைத்தது.

 

 

கதை சுவையானாலும், ஒரு குறை உளது. அது காலவழுவமைதி ஆகும். ஏலேலன் காலம் வேறு. அந்தகக்கவியின் காலம் வேறு. இரண்டு கவிஞர்கள் ஒரே பெயருடன் இருந்திருக்கலாமே என்று வாதாடக் கூடும். ஆயினும் அந்தகக் கவிராயரின் பாடல், நடை முதலியவற்றைக் காணும்போது அது தற்காலத் தமிழ் நடையாகவே இருக்கிறது. ஏலேலன் என்ற மன்னனோ 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவன்.

 

இது யாழ்ப்பாண சரிதம் என்ற பழைய நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

 

anthakakavi 2

anthaka kavi 4

 

anthaka kavi5

 

anthaka kavi 6

–subham–

 

நாஸ்தீகருக்கு மனுவும் வள்ளுவரும் தரும் சவுக்கடி! (Post No.2940)

valluvar door

Written by London swaminathan

Date: 3 July 2016

Post No. 2940

Time uploaded in London :– 12-48

( Thanks for the Pictures)

 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

punul valluvar

லோப: ஸ்வப்னோ த்ருதி: க்ரௌர்யம் நாஸ்திக்யம் பின்னவ்ருத்திதா

யாசிஷ்ணுதா ப்ரமாதஸ்ச தாமசம் குண லக்ஷணம்

மனு 12-33

பேராசை, தூக்கம், புலனின்ப கட்டுப்பாடில்லாமை, கொடுமை செய்தல், நாத்திகம், தொழில் செய்யாமை, பிச்சை எடுத்தல், சோம்பேறித்தனம் ஆகியன தாமச குண லட்சணம்.

 

வள்ளுவனும் நாத்திகனை பேய்ப்பயல் என்று திட்டுகிறான்:

 

உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து

அலகையா வைக்கப்படும் (குறள் 850)

 

உலக மக்கள் அனைவரும் உண்டு என்று சொல்லுவதை, ஒருவன் இல்லை என்று சொன்னால் அவனை மனித வடிவில் வந்த பேய் என்று கருதவேண்டும்

 

கண்ண பிரானும் கீதையில் இதையே சொல்லி இருக்கிறான்:–

சம்சயாத்மா விநஸ்யதி  சந்தேகபடுபவன் அழிந்தே போய்விடுவான் என்கிறார். மேலும் அத்தகையோருக்கு இக,பர லோகங்களும் இல்லை; சுகமும் இல்லை என்பான் கண்ணன் (4–40)

 

மாணிக்கவாசகரோ நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர்’ என்று திட்டுவார்.

manikkavasagar,US

இவை எல்லாம் தமோ குண லட்சணங்கள்.

 

XXX

 

 

மனுவானவர் சத்துவ, ராஜச குணங்களையும் விளக்குகிறார். இவை பகவத் கீதையில் மிக விரிவாக உள்ளது (அத்தியாயம் 14, குணத்ரயவிபாக யோகம்)

 

வேதாப்யச: தப: ஞானம் சௌசம் இந்த்ரிய நிக்ரஹ:

தர்மக்ரியா ஆத்மசிந்தா ச சாத்விகம் குணலக்ஷணம்

மனு 12-31

வேதம் ஓதுதல், தவம், ஞானம், தூய்மை, புலனடக்கம், அறச்செயல் (தர்ம கைங்கர்யம்), ஆத்மசிந்தனை (அகநோக்கு) ஆகியன சத்வ குணத்தின் லட்சணங்கள்

XXX

 

ஆரம்பருசிதா தைர்யம் சத்கார்ய பரிக்ரஹ:

விஷயோபசேவா ச அஜஸ்ரம்  ராஜசம் குணலக்ஷணம்.

தொழிலில் சூரத்தனம், நிலையற்ற தன்மை, கெட்ட செயல்களில் ஈடுபடுதலில் உறுதி, புலன் இன்ப நாட்டம் ஆகியன ராஜச குண லட்சணம்.

XXX

 

இறுதியாக மூன்று குணங்களின் முக்கியக் கொள்கை என்ன என்பதையும் மனு, சுருக்கமாக ஒரே பாடலில் சொல்லிவிடுகிறார்.

 

தாமச குணமுடையோரின் லட்சணம் புலனின்பம், ராஜச குணம் உடையோரின் லட்சணம் செல்வத்தை சேகரித்தல், சத்துவ குணம் உடையோரின் லட்சணம் அறப் பணி செய்தல்.

தமசோலக்ஷணம் காமோ ரஜச: அர்த்தம் உச்யதே

சத்வஸ்ய லக்ஷணம் தர்ம: ஸ்ரோட்யம் ஏஷாம் யதோத்தரம்

மனு 12-38

 

 

-SUBAM-

 

எச்சரிக்கை! ஒன்பது பேர் உங்களை கண்காணிக்கிறார்கள்! (Post No 2938)

hindu wedding

Written by London swaminathan

 

Date: 3 July 2016

Post No. 2938

Time uploaded in London :– 6-38 AM

( Thanks for the Pictures)

 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

egyptian

Egyptian Inscription

 

9 கர்ம சாக்ஷிகள்

சூர்ய: சோமோ யம: காலோமஹாபூதானி பஞ்ச ச

ஏதே சுப அசுபஸ்ய இஹ கர்மனோ நவ சாக்ஷிண:

 

நாம் ரகசியமாக ஒரு காரியத்தைச் செய்தால் யாருக்குத் தெரியப்போகிறது என்று நினைத்துக்கொண்டு தனி அறையிலோ, தனி இடத்திலோ ஒரு காரியத்தைச் செய்கிறோம். ஏனெனில் இரண்டாவது ஆள் ஒருவருக்குத் தெரிந்தால் அதன் பெயர் “ரஹசியம்” அல்ல என்பதும் அந்த ஆள் எவ்வளவுதான் நெருங்கிய உறவினராக இருந்தாலும், நண்பராக இருந்தாலும் அது வெளியே பரவ வாய்ப்பு உண்டு என்றும் நமக்குத் தெரியும். ஆனால் இந்துமதம் என்ன சொல்கிறது என்றால் நீங்கள் செய்யும் எதுவுமே ரகசியம் அல்ல; ஏனெனில் ஒன்பது பேர் எப்போதும் உங்களைக் கண்காணிக்கிறார்கள்; அந்த ஒன்பது சாட்சிகளை மீறி எதையும் செய்ய முடியாது.

 

யார் அந்த ஒன்பது பேர்?

 

பஞ்ச பூதங்களான நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்(வெற்றிடம்); இது தவிர சூரியன், சந்திரன்,யமன், காலம்(நேரம்).

 

பஞ்சபூதம் என்று சொல்லிவிட்டாலேயே எல்லாம் அடங்கிவிடும். இருந்த போதிலும் சூரியனும், சந்திரனும் நன்கு தெரிந்த பிரகாசமான பொருள் என்பதால் அதைச் சேர்த்தனர். அல்லது இரவும் பகலும் — 24 மணி நேரமும்– என்று பொருள் கொள்ளவும் அவை உதவும்.

 

யமன் என்பவன் யார்? அவனுடைய கணக்குப்பிள்ளை சித்திர குப்தன் என்பர் இதன் பொருள் என்ன வென்றால் நாம் செய்யும், நாம் நினைக்கும் ஒவ்வொரு விஷமும் ஒரு சித்திரத்தை — படத்தை உருவாக்குகிறது. அந்தப் படம் நமக்குத் தெரியாமல் (குப்த=ரகசியமாக) இருக்கிறது. இந்த விஞ்ஞான உண்மையையே இந்துக்கள் ‘சித்திர’ ‘குப்த’ என்றனர்.

 

ஒரு கொசு நீரில் உட்கார்ந்தால் கூட நீரில் அதிர்ச்சி ஏற்பட்டு வளையங்கள் உண்டாகும். ஆனால் நமக்கு கண்ணுக்குத் தெரியாது.அது கொசுவுக்குத் தெரியும். ஒரு எறும்பு ஊர்ந்து சென்றால்கூட ஒரு வழித்தடம் உண்டாகும். அது நமக்குத் தெரியாது. எறும்புக்கு அந்தப் பாதை தெரியும். அதுபோல நாம் எண்ணும் ஒவ்வொரு எண்ண்மும் ஒரு படத்தை உண்டாக்கும்; அது நமக்குத் தெரியாது; சித்திரகுதன் அல்லது யமனுக்குத் தெரியும்.

 

சித்திரகுபதன் அல்லது யமன் என்பவன் ஒரு சூப்பர் கம்ப்யூட்டர். நம்முடைய எல்லா நல்ல, கெட்ட செயல்கள், எண்ணங்கலையெல்லாம் கூட்டிக் கழித்து பாவ புண்ணியங்களைப் பட்டியல் போட்டுவிடுவர்.

nabonidus-praying-to-the-sun-moon-and-venus

Nabonidus praying to Sun, Moon and Venus

நீர், நெருப்பு, ஆகாயம் முதலியன இல்லாத இடமே இல்லை. அவர்கள் நம்மைக் கவனிக்கிறார்கள் என்பதைச் சொல்லத் தேவையே இல்லை. இந்துக்களுத் தான் இந்த விஞ்ஞான உண்மைகள் தெரியும். இதுவரை வேறு யாருக்கும் அது தெரியாது.

 

நீரை மந்த்ரம் மூலம் அனுகுண்டாக மாற்றும் வல்லமை நம் ரிஷி முனிவர்களுக்கு இருந்தது. ஒரு உள்ளங்கை நீரை மந்திரம் மூலம் சாபமாகவோ வரமாகவோ மாற்றும் அரிய வித்தை அவர்களுக்கு மட்டுமே தெரியும். இதனால்தான் பெண்ணைக் கல்யாணம் செய்துகொடுத்தாலும், தானங்களை செய்தாலும் நீரைப் பயன்படுத்தினர். சாபம் கொடுக்கவும் வரம் கொடுக்கவும் நீரைப் பயன்படுத்தினர்.

 

நெருப்பு என்பது இல்லாமல் மனிதன் முன்னேறமுடியாது. உடம்பிலுள்ள அக்னி ஜடராக்னி. வெளியே உள்ள அக்னி சாட்சியாக திருமணம் செய்துவிட்டால் அதை மீறக்கூடாது. பழைய அரசர்கள் அக்னி சாட்சியாக உடன்படிக்கை செய்ததை நமது கல்வெட்டுகள் கூறுகின்றன. அக்கினி சாட்சியாக கோவலன் – கண்ணகி திருமணம் செய்து கொண்டதை தமிழ் காப்பியம் சிலப்பதிகாரம் சொல்லும். நீர் ஆறாக ஓடும்படி தாரைவார்த்து தானம் செய்ததை சங்க இலக்கியம் செப்பும்.

 

கல்வெட்டுகளில் “சூரியர் சந்திர சாட்சியாக” என்ற சொற்களையோ இரண்டின் படங்களையோ காணலாம்.

 

காலம் (நேரம்) என்பது நம்மைக் கவனிக்கிறது. அதை நிறுத்த யாராலும் முடியாது. கடிகாரம் ஓடிக்கொண்டிருபாது போல ஒவ்வொன்றும் கணக்கிடப்படுகிறது.

 

persian 500 bce

Sun and Moon in Persian Inscription 500 BCE

விண்ணில் உலவும் செயற்கைக் கோள்கள், நம் வீட்டு கொல்லைபுறத்தைக் கூடப் படம் பிடிக்கும்; கூகுள் மேப் மூலம் நம் நண்பர் வீட்டிற்குள் யார் வந்து செல்கிறார்கள் என்பதை நம் வீட்டுக் கம்ப்யூட்டரிலேயே காணமுடியும்; சி.சி. டிவி மூலம் கொலைகாரனைக் கூடக் கண்டுபிடிக்கமுடியும். இன்ப்ரா ரெட் காமிரா, பைனாகுலர் மூலம் இருட்டில் நடப்பதையும் காணமுடியும். ஆனால் இவைகளிடமிருந்து தப்பிக்க வழி உண்டு. இந்துக்கள் சொன்ன ஒன்பது கர்ம சாட்சிகளிலிருந்து தப்பிக்க யாராலும் முடியாது!!!

 

ஆகவே ஒன்பது சாட்சிகளுக்குப் பயந்து நாம் நல்ல காரியங்களையே செய்ய வேண்டும்; நல்ல காரியங்களையே எண்ண வேண்டும்.

 

ஒன்றே செய்க; அதுவும் நன்றே செய்க; அதையும் இன்றே செய்க.

 

–சுபம்–

 

கலியுகத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்!! (Post No 2936)

yugas

Written by London swaminathan

 

Date: 2 July 2016

Post No. 2936

Time uploaded in London :–9-56 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

கடைகளுக்குப் போனால் “இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்” என்று பல பொருள்கள் மீது எழுதியிருப்பதைக் காண்கிறோம்.

 

அதே போல “ஐந்து பொருள் வாங்கினால் இவ்வளவு தள்ளுபடி, பத்து வாங்கினால் இவ்வளவு தள்ளுபடி” என்றெல்லாம் விளம்பரங்களைப் படிக்கிறோம்.

 

இதுபோலக் கடவுளும் கூட பக்தர்களுக்கு தள்ளுபடி சலுகைகளை அறிவிக்கிறார். இது விஷ்ணு புராணத்திலுள்ள விஷயம். புராணங்களில் மிகவும் பழமையானதும், புகழ்பெற்றதும் ஆகும். ஆகையால் இந்த செய்திக்கு மதிப்பு அதிகம்.

 

வியாசரிடம் போய்  முனிவர்கள் சந்தேகம் கேட்ட போது அவர் கங்கையில் குளித்துவிட்டு இந்த தகவலைத் தந்தார்.

 

கிருதயுகத்தில் தவம், தானம், பிரம்மசர்யம் முதலிய சிறந்த குணங்களுடன் இருப்பவர்க்கு நீண்டகாலம் தவம் செய்து கிடைக்கக்கூடிய பலன் கலியுகத்தில் சுலபமாகக் கிடைத்துவிடும்.

 

கலியுகத்தில் சங்கமே சக்தி என்பர். ஆதாவது கூட்டாகச் செய்யும் காரியத்துக்குப் பலன் அதிகம். அது மட்டுமல்ல யாக யக்ஞாதிகள் செய்யாமல் வெறும் “சிவ சிவ” அல்லது “ராம ராம” என்று நாம ஜபம் செய்தாலேயே புண்ணியம் சம்பாதித்துவிடலாம்.

 

 

Yugas

 

யத்க்ருதே தசபி: வர்ஷை: த்ரேதாயாம் ஹாயனேன யத்

த்வாபரே யது ச  சமாசேன அஹோராத்ரேண தத்கலௌ

 

தபஸோ ப்ரஹ்மசர்யஸ்ய ஜபதிஸ்ச பலம் த்விஜா:

ப்ராப்னோதி புருஷஸ்தேன கலிகலிஸ்ஸாத்விதி பாஷிணம்

விஷ்ணு புராணம் அங்கம் 6, அத்தியாயம் 2

 

கிருத யுக பத்து வருஷ தவம் = திரேதா யுகத்தில் ஒரு வருஷம் = துவாபர யுகத்தில் ஒரு மாஸம் = கலியில் ஒரே நாளுக்கு ஸமமாகும்.

 

தவம், ஜப , பிரம்மசர்ய பலன்களை இந்த ரீதியில் அடைகின்றனர்.

அதாவது ஒர் ரிஷியோ முனிவரோ பத்து வருஷம் தவம் செய்து கிடைக்கும் பலனை, திரேதாயுகத்தில் பிறந்தவர் ஒரு வருஷம் செய்தாலேயே அடைந்து விடுவார்.

 

அதே முனிவர், த்வாபர யுகத்தில் பிறந்திருந்தால் ஒரு மாதம் யாக, யக்ஞங்களைச் செய்தால் போதும்

 

அவரே கலியுகத்தில் பிறந்தால் ஒரே நாள் தவம் செய்தால் போதும்.

எவ்வளவு சலுகை பாருங்கள்!!

 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய புராணத்தில் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது.

 

உலகிலேயே மிகவும் அறிவியல் பூர்வமாக அமைந்தது இந்துமதம். முரட்டுத் தனமான, பிடிவாதமான கொள்கைகள் இதில் கிடையா. எல்லாம் செயல் முறைக்கு உகந்த மாதிரி, கால, தேச, வர்த்த மானங்களுக்கு அணுசரனையாக சொல்லப்பட்டிருக்கும்.

 

ஜெட் விமானத்தில் பறந்து, அலுவலக வேலைகளைச் செய்பவர்கள் கிருத யுகம் போல 12 ஆண்டு யாகம், 100 ஆண்டு யாகம் முதலியவற்றை செய்ய வேண்டியதில்லை. செய்யவும் முடியாது என்பதும் நம் முன்னோர்களுக்குத் தெரியும்.

 

ஆனால் கடையில் எவ்வளவுதான் சலுகைகளை அறிவித்தாலும், எத்தனை பொருட்களை வாங்குவது என்பது நம் கையில்தான் உள்ளது. அதாவது அந்த அளவுக்கு பர்ஸில் காசு வேண்டும் அல்லது கிரெடிட் கார்டில் உத்தரவாதம் வேண்டும். அது போல, இவ்வளவு சலுகைகளை கடவுள் அறிவித்தாலும் நல்ல குணமும் நல்ல எண்ணமும் தூய்மையும் வேண்டும். அப்போதுதான் கடவுள் அறிவித்த சலுகை, நமக்குக் கிடைக்கும்.

 

கலியுகத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்!!

 

–சுபம்–

 

 

இளம் பெண்களும், கிழட்டு கணவன்மார்களும்! (Post No.2752)

women9

Translated  by London swaminathan

Date: 24 April 2016

 

Post No. 2752

 

Time uploaded in London :– 12-15

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

woman mirror2
பெண்கள் பற்றிய 150 சம்ஸ்கிருதப் பழமொழிகள்- பகுதி 6

87.உயர்குலப் பெண்களின் மனது பூப்போல மென்மையானது

புரந்த்ரீணாம் சித்தம் குசும சுகுமார ஹி பவதி –உத்தம ராம சரிதம்

Xxx

88.காதல் வயப்பட்ட, உயர்குலப் பெண்களின் மனது, புரிந்து கொள்ளமுடியாதது.

புரந்த்ரீணாம் ப்ரேம  க்ரஹிலம் அவிசாரம் கலு மம: –கௌமுதீ மித்ரானந்த

Xxx

89.ஒரு பெண்ணுக்கு கணவனின் மரணம்தான் முதல் அடி.

ப்ரதமம் மரணம் நார்யா  பர்துர் வைகுண்யம் உச்யதே- வால்மீகி ராமாயணம்

Xxx

90.அடாவடியான பெண்களுக்கும் கூட, கணவன் மீது கோபம் கொள்ள சரியான காரணம் தேவைப்படுகிறது.

ப்ரபவந்த்யோபி ஹி பர்த்ருஷு காரண கோபா: குடும்பின்ய: — மாளவிகாக்னிமித்ரம் 1-18, காளிதாசன்

Xxx

91.மனைவியர் , கணவன்களைப் பின்பற்றுவதை முட்டாள்களும், அறிவர்.

ப்ரதமா: பதிவர்த்மகா இதி ப்ரதிபன்னம் ஹி விசேதனைரபி – குமார சம்பவம் 4-33, காளிதாசன்

Xxx

92.கணவனின் அன்பு குறையும்போது, பெண்கள் பெருமூச்சு விடுகிறார்கள்.

ப்ராணாஸ்தூர்ணம் ஹி நாரீணாம் ப்ரியப்ரணயதானவே – ப்ருஹத் கதா மஞ்சரி

Xxx

 

women23

93.வயதான கணவர்களை, அழகான இளம் பெண்கள், திறமையாக சமாளிக்கின்றனர்.

ப்ராய: ப்ராகல்ப்யம் ஆயாந்து தருண்ய: ஸ்தவிரே வரே- ராமாயண மஞ்சரி

Xxx

94.புதல்வியரின் விஷயங்களை மனைவியின் கண்கள் ஊடாகவே கணவர்கள் காண்கின்றனர்.

ப்ராயேண க்ருஹிணீ நேத்ரா: கன்யார்தேஷு குடும்பின: -– குமார சம்பவம், 6-85, காளிதாசன்

Xxx

 

95.காதல் வயப்பட்ட கணவனுக்கு, மனைவியின் கெட்டபுத்தியும் கண்ணுக்குத் தெரிவதில்லை.

ப்ராயேண பார்யாத் ஔசீல்யம்  ஸ்நேஹாந்தோ நேக்ஷதே ஜன: – கதாசரித் சாகரம்

Xxx

96.உயிரையும் விட மேலானவள் மனைவி.

பார்யா ப்ராணேப்யோ அபி அதிகப்ரியா– கதாசரித் சாகரம்

Xxxx

97.பார்யா ரூபவதீ சத்ரு: – சாணக்யநீதி 9-12

அழகான மனைவி – ஒரு எதிரி

Xxx

98.துன்பப்படும் அனவருக்கும் மூத்த சகோதரரின் மனைவி, தாயாராகி விடுகிறார்.

ப்ராத்ருஜாயா ஹி சர்வேஷாம்  தீனானாம்  வாமலோசனா – கஹாவத்ரத்னாகர்

Xxx

99.உங்கள் மனைவியைக் காப்பாற்றுவதுபோல, மாற்றார் மனைவியருக்கும் பாதுகாப்பு அவசியம்.

யதா தவ ததா அன்யேஷாம் தாரா ரக்ஷ்யா – வால்மீகீ ராமாயணம் 5-21-8

Xxx

100.மனைவியர் இருக்கும் வரை, வேலைகளும் இருக்கத்தான் செய்யும்

யாவத் க்ருஹிணீ, தாவத் கார்யம்- கஹாவத்ரத்னாகர்

Xxx

IMG_3350

101.சக்களத்தி என்பவள், துன்பத்தின் ஊற்று

சபத்னீ சர்வதா சிந்த்யா — கதாசரித் சாகரம்.

Xxx

102.காதல் நோய்க்கு அருமருந்து, காதலியின் – அமுதம் போன்ற அணைப்புதான்.

ஸ்மர ஜ்வர சிகித்சா ஹி தயித ஆலிங்கன அம்ருதை: – ப்ருஹத் கதா மஞ்சரி

Xxx

103.வெண்சாமரம் போன்ற ப்ரகாசமான, புன்னகை மிளிரும் அன்புள்ள மனைவியை யார்தான் போற்றமாட்டார்?

ஸ்மேர சாமர  ஹசின்ய: வல்லபா: கஸ்ய ந ப்ரியா:? – பாரத மஞ்சரி

–சுபம்–