Article No.1977
Date: 6 July 2015
Written by London swaminathan
Uploaded from London at காலை 7-56
திருடாதே! பாப்பா! திருடாதே!
இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள்: மற்றவர்கள் எழுதுவதை, எழுதியவர் பெயரை வெட்டிவிட்டு, வெளியிடாதீர்கள். நீங்கள் இப்படிச் செய்தால், அதாவது திருடினால் — உங்கள் கணவரோ, மனைவியோ, மகனோ, மகளோ, அம்மாவோ, அப்பாவோ உங்களை ஏமாற்ற நீண்ட நேரம் பிடிக்காது. மேலும் தமிழும் அழியும்; தமிழ்த் தாயும் உங்களை அழிப்பாள். ஆகையால் திருடுவதை நிறுத்துங்கள். யார் எழுதினரோ அவர்தம் பெயருடன் வெளியிடுக!
Xxxxxxx
பிராம்மணோ போஜன ப்ரியஹ
“பிராமணர்கள் சாப்பாட்டு ராமன்கள்” — என்று இதற்குப் பலரும் பொருள் சொல்லுவர். அது தவறு.
இப்படியும் படிக்கலாம்:—
பிராம்மண! “போ” ஜனப்ரியஹ
ஹே! பிராம்மண! நீ மக்களுக்குப் பிரியமானவன்
இதுவும் வேடிக்கையாகச் சொல்வதுதான். உண்மைப் பொருள் என்ன வென்றால்:
விஷ்ணு அலங்காரப் பிரியன்
சிவன் அபிஷேகப் பிரியன்
சூரியன் நமஸ்காரப் பிரியன்
தேவி பிரதக்ஷிணப் பிரியள்
பிராம்மண: போஜனப் பிரியன்
அதாவது விஷ்ணுவை அலங்காரம் செய்து மகிழ்வித்தால் உனக்கு கேட்டதையெல்லாம் தருவான்.
சிவனை அபிஷேகம் செய்து மகிழ்வித்தால் உனக்கு கேட்டதையெல்லாம் தருவான்.
சூரியனை நமஸ்காரம் செய்து மகிழ்வித்தால் உனக்கு (ஆரோக்கியம் தொடர்பாகக்) கேட்டதையெல்லாம் தருவான்.
தேவியைப் பிரதக்ஷிணம் (வலம் வந்து) செய்து மகிழ்வித்தால் உனக்கு கேட்டதையெல்லாம் தருவாள்.
பிராமணனுக்கு அன்னம் படைத்து மகிழ்வித்தால் உனக்கு பரிபூர்ண ஆசீர்வாதம் (கேட்டதையெல்லாம்) தருவான்.
துஷ்யந்தி போஜனே விப்ரா: – சாணக்ய நீதி தர்பணம்
“பிராமணர்கள் சாப்பாட்டில் சந்தோஷம் அடைவர்” – என்று வேறு ஒரு நூலும் கூறுவது இதே பொருளில்தான்.
அதே போல சூரியனே மனிதர்களின் ஆரோகியத்துக்கு அதிபதி. (கட்டுரையின் இறுதிப் பகுதியில் இது விளக்கப்பட்டுள்ளது)
தமிழில் சொல் விளையாட்டு!
தமிழிலும் இது போல வார்த்தா ஜாலம் (சொற் பிறட்டு) உண்டு:——
பிராமாணர்கள் சாப்பிடும் இடம்.
பிராமணர் “கள்” சாப்பிடும் இடம்! – என்பது போல.
இதுவும் வேடிக்கையாகச் சொல்லுவதே!
கணவன் கெஞ்சிக் கேட்டால் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் பெண்:
1.தெய்வம் தொழாள் கொழுநன் தொழுது எழுவாள் (கடவுளைக் கும்பிட மாட்டாள், கணவன் வந்து கெஞ்சிய பின்னரே எழுவாள்)
2.தெய்வம் தொழாள் கொழுநன் தொழுது எழுவாள் (தெய்வத்தைக் கும்பிட மாட்டாள், கணவனைக் கும்பிட்டு எழுவாள்)- குறள் 55
இரண்டும் தமிழ் இலக்கணப்படி சரியே!!! (மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி ஆசிரியர், எங்கள் குருநாதர் வி.ஜி.சீனிவாசன் சொன்னது)
என் தலைவி திவசம் (என் மனைவிக்கு இன்று திதி)
என் தலை “விதி” வசம் (எல்லாம் என் தலை விதி )
எனது பள்ளி — மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி — தமிழாசிரியர் ம.க. சிவசுப்பிரமணியம் சொன்னது)
லண்டன் சந்துரு குருக்கள், அவருடைய மகனுடன் செய்யும் சூரிய வழிபாடு
லண்டனில் வைட்டமின் “டி” கிடைக்காது !!
ஆரோக்யம் பாஸ்கராத் இச்சேத் – பூஜாப்ரகாச:
அதாவது “சூரியனிடம் ஆரோக்கியத்தைக் கேள்” – என்பது இந்தப் பொன் மொழியின் பொருள்.
இந்தியாவில் வசிப்போருக்கு சூரிய ஒளி இயற்கையாகவே கிடைப்பதால், இதன் அருமை பெருமை தெரிவதில்லை. வைட்டமின் – டி – என்னும் முக்கியச் சத்தை இது கொடுக்கிறது. அந்தக் காலத்தில் இந்துக்களுக்கு சிறு வயது முதல் சூரிய நமஸ்காரத்தைக் கற்றுக் கொடுத்தனர். இப்பொழுது ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மூலமக இது மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது.
எங்கள் லண்டனில் இப்பொழுது எல்லோருக்கும் – டாக்டரிடம் அடிக்கடி போகும் எல்லோருக்கும் –– குறிப்பாக கிழக்கு லண்டனில் முஸ்லீம் பெண்கள் எல்லோருக்கும் – வைட்டமின் “டி” கொடுக்கின்றனர். இது கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் நடை பெற்ற ஆராய்ச்சியில் குறைந்த சூரிய வெளிச்சமுள்ள மேலை நாடுகளில் இதுதான் உடல்நலப் பிரச்சனைகளுக்கு மூல காரணம் என்று தெரிந்தவுடன் அரசாங்கமே எல்லோருக்கும் – குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு — இதை இலவசமாக வழங்க உத்தரவிட்டுள்ளது. யார் ரத்த பரிசோதனைக்குப் போனாலும் இதற்கான சோதனையும் செய்யப்படுகிறது. மற்ற எந்த சமூகத்தின ரையும்விட உடல் முழுவதையும் போர்த்திக் கொள்ளும் முஸ்லீம்களுக்கு வைட்டமின் டி – இன்னும் மிகவும் குறைவாக இருக்கிறது!
நான் முதல் பத்தியில் “சூர்யன் நமஸ்காரப் ப்ரியன்” என்று சொன்னதற்கு இதுவும் ஆதாரமாகும். சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்!
நூறாண்டுக் காலம் வாழ்க!
நோய் நொடியில்லாமல் வாழ்க!
பிராமணர்கள் நாள்தோறும் மதிய நேரத்தில் செய்யும் சந்தியா வந்தன வழிபாட்டில் ஒரு அருமையான துதி உள்ளது. அதை சினிமா பாட்டிலும் நூறாண்டுக் காலம் வாழ்க! நோய் நொடியில்லாமல் வாழ்க! என்று மொழிபெயர்த்துள்ளனர்.
சூரியனைப் பாதுகாப்பாகப் பார்க்க பிராமணச் சிறுவர்களுக்கு சிறு வயதிலேயே கற்றுத் தருவர்.
சூரியனை நோக்கிச் சொல்லப்படும் இந்த துதி:
பஸ்யேம சரதஸ் சதம்: நூறு ஆண்டுகள் சூரியனைக் கண்டு வணங்குவோம்
ஜீவேம சரதஸ் சதம்: நூறு ஆண்டுகள் வாழ்வோம்
நந்தாம சரதஸ் சதம்: நூறு ஆண்டுகள் உறவினர்களுடம் கூடிக் குலவுவோம்
மோதாம சரதஸ் சதம்: நூறு ஆண்டுகள் மகிச்சியுடன் இருப்போம்
பவாம சரதஸ் சதம்: நூறு ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் இருப்போம்
ஸ்ருணுவாம சரதஸ் சதம்: நூறு ஆண்டுகள் இனியதையே கேட்போம்
ப்ரப்ரவாம சரதஸ் சதம்: நூறு ஆண்டுகள் இனியதையே பேசுவோம்
அஜீதாஸ்யாம சரதஸ் சதம்: நூறு ஆண்டுகள் வெற்றியுடன் வாழ்வோம் (தீமைகளை வெல்லுவோம்)
ஜ்யோக் ச சூர்யந் த்ருசே: இவ்வாறு சூரியனை அனுதினமும் காண்போமாக
–தைத்ரீய ஸம்ஹிதை & ஆரண்யகம்
எல்லோரும் வாழ்க! இன்பமே சூழ்க!!
You must be logged in to post a comment.