லெட்சுமி வசிக்கும் இடம்; மஞ்சள் மகிமை! (Post No.5688)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 22 November 2018

GMT Time uploaded in London –7-23 am
Post No. 5688

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

 

பெண்கள் மஞ்சள் தேய்த்துக் குளிக்கும் வழக்கம் மறைந்து வருகிறது. பல வகையான சோப்புகளும், கிரீம்களும் அந்த இடத்தைப் பிடித்துவிட்டன. மஞ்சள் தேய்த்துக் குளிப்பதால் பெண்களின் முகத்தில் முடி வளர்வதைத் தடுக்கலாம். பரு முதலியன வராமலும் தடுக்கலாம்.

மஞ்சள் என்பது பாக்டீரியா எதிர்ப்புக் குணம் மிக்க பொருள் என்பதை இப்பொழுது விஞ்ஞானிகளும் ஒப்புக் கொண்டு விட்டனர். மஞ்சள் பொடி போட்டு இந்திய உணவு உருவாக்கப்படுவதை வெளிநாட்டு சமையல் சானல் (channels) கள் மிகவும் சிலாஹித்துப் பேசுகின்றன. சமைத்த பண்டங்கள் விரைவில் கெட்டுப்போகாமல் இருக்க மஞ்சளும் உப்பும் உதவும் என்பது தாய்மார்கள் அறிந்த விஷயமே.

அந்தக்காலத்தில் தெய்வத்தின் பெயரில் எதைச் சொன்னாலும் மக்கள் கேள்வி கேட்காமல் அதை ஏற்றனர். இந்தக் காலத்தில் விஞ்ஞானத்தின் பெயரில் எதைச் சொன்னாலும் மக்கள நம்புகின்றனர். இரண்டுமே விவேகமற்ற செயல். ஒரு காரியத்தின் கருத்தை அறிநதால் அது எக்காலத்திலும் நம்பப்படும்; காப்பி குடித்தால் நல்லது என்று ஒரு கட்டுரை வரும்; அடுத்த வாரம் காப்பி குடித்தால் கெடுதி என்று வரும் அநத ஆராய்ச்சியை யார் எங்கு எத்தனை பேரிடத்தில் நடத்தினர், அது எல்லோருக்கும் பொருந்துமா என்பதை எல்லாம் நாம் முழுதும் ஆராய்வதில்லை. இப்படித்தான் அந்தக் காலத்திலும் காரண காரியங்களை விளக்காமல் ‘அங்கே’ லக்ஷ்மி வசிப்பாள் என்று சொல்லி விட்டார்கள். இன்று அறிவியல் சோதனைகள் மூலம் காரண காரியங்களை விளக்க, விளங்கிக்கொள்ள நமக்கு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.

பழங்காலத்தில் லக்ஷ்மி வாசம் செய்யும் இடங்களைப் பற்றி ஒரு நல்ல ஸ்லோகம் இருக்கிறது. அதை நன்கு சிந்தித்துப்  பார்த்தால் அவர்கள் சொன்னது சரிதான் என்பது தெரியும்.

கணவர்களுக்கு ஆயுளைத் தரும் பெண்களின் அலங்காரங்கள்

ஹரித்ரா குங்குமம் ச ஏவ ஸிந்தூரம் கஜ்ஜலம் ததா

கூர்பாஸகம் ச தாம்பூலம் மங்கள்யாபரணே ததா

கேசஸம்ஸ்கார கபரீ கர்கணாதி பூஷணம்

பர்துர்ராயுஷ்மிச்சந்தி தூஷயேன்ன பதிவ்ரதா

பொருள்

மஞ்சள் பூசிக் குளிப்பது

குங்குமம்,ஸிந்தூரம் தரிப்பது

கண்ணுக்கு மை தீட்டுதல்

ரவிக்கை, தாம்பூலம் (வெற்றிலை பாக்கு)

காது, மூக்குகளில் நகை அணிதல்

வாரின தலை

முதலியன கணவர்களுக்கு ஆயுளைத் தரும் பெண்களின் அலங்காரங்கள்

 

கோலத்தின் மஹிமை

இன்னொரு ஸ்லோகத்தையும் காண்போம்

யத் க்ருஹம் ராஜதே நித்யம் மங்களைரனுலேபனைஹி

தத் க்ருஹே வசதே லக்ஷ்மீ: நித்யம் பூர்ணகலான்விதா

எவள் வீட்டைப் பெருக்கி மெழுகி,  கோலமிட்டு  அலங்கரிக்கிறாளோ அங்கே லக்ஷ்மீ பூரண கலைகளுடன் வசிக்கிறாள்.

அது என்ன பூரண கலை?

நாம் அஷ்ட லக்ஷ்மீ என்று சொல்லும்போது வளத்தை, தனம், தான்யம், வீரம், ஸந்தானம் (மகப்பேறு), ஐஸ்வர்யம், சௌபாக்கியம் என்று எல்லாம் பிரித்துப் பார்க்கிறோம். இவை அனைத்தும் இருந்தால் அது லக்ஷ்மீயின் பூரண அம்சம் ஆகும்.

இந்த இரண்டு ஸ்லோகங்களும் வியாஸர் சொன்னதாக ஒரு புஸ்தகத்தில் படித்தேன். ஆனால் மஹாபாரதத்திலா என்று சொல்லவில்லை.

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.

மஞ்சள் முகமே வருக, மங்களம் என்றும் தருக என்று பாடுவோம்.

tags– மஞ்சள்,மஹிமை,  கோலம், லெட்சுமி

–சுபம்–