மநு நீதி நூலில் சினிமாப் பாட்டு, பாரதியார் பாட்டு வரிகள்! (Post No.7053)

WRITTEN BY LONDON SWAMINATHAN
swami_48@yahoo.com
Date: 4 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 8–08 AM
Post No. 7053


Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

பெண்களுக்கும் சொத்து உரிமை உண்டு; மநு நீதி நூல் – பகுதி 43

இதுவரை அத்தியாயங்களை முடித்து 9-ம் அத்தியாயத்தில் 54 ஸ்லோகம் வரை கண்டோம். மநு  நீதி நூல் –43 ம் பகுதியில் மேலும் சில முக்கிய விஷயங்களை முதலில் புல்லட் (BULLET POINTS) பாயிண்டுகளில் தருகிறேன். பகுதி-42 ஜூலை 19ம் தேதி இந்த பிளாக்கில் பதிவிடப்பட்டது

இதோ இன்று மநு நீதி நூல் – பகுதி 43

ஸ்லோகம் 9-54ல் சொல்கிறார்– வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் விதை எந்த நிலத்தில் தங்கி விளைகிறதொ அந்த நிலச் சொந்தக்காரருக்கே அந்த மரமோ செடியோ சொந்தம் ஆகும். அதே போல ஒரு பெண் யார் மூலமாகக் கர்ப்பம் அடைந்தாலும் அந்தக் குழந்தை அவளுக்கே சொந்தம். இதை மிருகங்களின் வாழ்க்கையில் கூடக் காண்கிறோம் (ஸ்லோகம் 9-56)

மஹாபாரதத்தில்  விசித்ரியவீர்யனுக்குக்கு   குழந்தைகள் பிறக்கவில்லை. அவன் இறந்த பின்னர் அம்பாஅம்பாலிகா மூலம் வேறு ஒரு ஆண்மகன் மூலம் குழந்தைகள் பெறப்பட்டன. செக்ஸ் திருப்திக்காக இல்லாதபடிவம்ச வ்ருத்திக்கு மட்டும் பயன்படும் இம்முறை மஹபாரத காலத்தில் இருந்தது. இதற்கு நியோகம் என்று பெயர். இது பற்றி மநு நீதி நூலில் எதிரும் புதிருமான கருத்துக்கள் உள்ளன. (இது இடைச் செருகல்களைக் INTERPOLATIONS IN MANU SMRTI காட்டுவதாக நான் நினைக்கிறேன்)

ஸ்லோகம் 9-58 முதல் நியோக முறை பற்றிப் பாடுகிறார். ஒரு பெண்ணோ ஆணோ குழந்தைகள் இல்லாதபோது மற்றொரு ஆண் மூலம் ஒரே ஒரு முறை மட்டும் குழந்தைக்காக முயற்சிக்கலாம். (தற்கால சட்டம் இதற்கு வழிவகை செய்யவில்லை)

9-64 முதல் முரண்பாடான கருத்துகள் உள. அதாவது மநுநியோக முறையையும்விதவை மறுமணத்தையும் எதிர்க்கிறார்.

9-65க்கு வியாக்கியானம் எழுதிய ஒருவர் ரிக்வேதம் 10-40-2ல் இம்முறை வருகிறது என்கிறார். 9-66ல் இவை எல்லாம் வேனன் என்ற கொடுங்கோல் மன்னன் காலத்தில் வந்த மிருக நீதிகள் என்று மநு பழிக்கிறார். வேனனை ரிஷிகள் கடைந்து — PARTHOGENIC METHODS — செயற்கை முறை கர்ப்பம்- திசுக்கள் மூலம் TISSUE CULTURE  ஆண் உடலில் இருந்து குழந்தை உருவாக்கும் அதி நவீன முறை  –CLONING TECHNIQUES — மூலம் பிருது உண்டாக்கப்பட்டான் என்று புராணங்கள் பகரும். இதனால்தான் பூமியை பிருதுவி என்று அழைக்கிறோம். அவன் உத்தமோத்தமன்ஸத்தியவான்)

(இங்கே என் கருத்துக்கு மேலும் ஒரு ஆதாரம் கிடைக்கிறது. வேனன்சுமுகன் போன்ற பழங்கால மன்னர்களை மட்டுமே மநு  குறிக்கிறார். ராமன் கிருஷ்ணன் பற்றிக் கதைப்பது இல்லை. இவர் மிகவும் பழங்காலத்தவர். பாபிலோனிய ஹமுராபிக்கும் முந்தையவர்- உலகின் முதல் சட்ட நிபுணர்- உலகின் முதல் சட்ட நூல் மனு ஸ்ம்ருதிதா ன் – என்ற எனது வாதம் மேலும் வலுப்பெறுகிறது. வேறு சில முக்கிய ஆதாரங்களை முன்னமே காட்டிவிட்டேன்)

9-74 ல் மிக முக்கியமான உளவியல் விஷயத்தைச் செப்புகிறார். ஒருவன் திரைகடல் ஓடித் திரவியம் தேட நீண்ட காலம் மனைவியைப் பிரிந்து சென்றால் அவளது வாழ்க்கைக்கு வழி செய்துவிட்டுப் போக வேண்டும் அல்லது அவள் வேறு ஒருவனுடன் ஓடிப்போய் விடுவாள் என்கிறார்.

தொல்காப்பியமும் கூடத் தமிழ்ப் பெண்கள் கடல் கடந்து வெளிநாடு போகக் கூடாது என்று தடை போடுகிறது (எனது பழைய கட்டுரையில் முழு விவரம் காண்க)

XXX

விவாகரத்து

9-77 மனைவி அடங்காப் பிடாரியாக – சினிமாவில் வரும் நீலாம்பரியாக இருந்தால்- அவளை ஓராண்டுக்குப் பின்னர் வெளியே தள்ளு என்கிறார்.

9-78 மனைவி குடிகாரியாகவோஊதாரியாகவோ இருந்தால் நகைகளைப் பிடுங்கி மாதம் தனியே வை என்கிறார். (ஆக அந்தக் காலத்திலும் வீட்டுக்குள் சூர்ப்பநகைகள்தாடகைகள் இருந்தனர் போலும்).

ஸ்லோகம் 9-80 முதல் சுவையான செய்திகள் உள. சோரம் போகும் பெண்களை விலக்கலாம்எட்டு ஆண்டுகளுக்கு மலடியாக உள்ளவளை விலக்கலாம். பெண் குழந்தைகளை மட்டுமே பெற்றால்அவளைப் புறக்கணித்து வேறு ஒருவருடன் வாழலாம் என்பன  9-85 வரை உள்ளன.

குடிகாரிக்கு தங்க குந்துமணி அபராதம் போடு என்ற வாசகம் அந்தக் காலத்தில் நாணய முறை இருந்ததைக் காட்டும் (9-84)

XXXX

கல்யாண வயது

கோவலன் 16, கண்ணகி 12 வயதானபோது கல்யாணம் கட்டியதாக தமிழ் காவியம் சிலப்பதிகாரம் செப்பும். தமிழ்ப் பெண்கள் பருவம் எய்திய உடனே ஓடிப்போன செய்திகளை சங்க காலப் பாடல்களில் காண்கிறோம். இதே போல மநுவும் மிக இளம் வயதில் கல்யாணம் செய்வது பற்றிப் பேசுகிறார்- ஸ்லோகம் 9-94

XXX

மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம்!

ஒரு சினிமா பாட்டு கேட்டு இருப்பீர்கள்அது மநு சொன்ன வாசகம்.

ஸ்லோகம் 9-95ல் சொல்கிறார்- கடவுள் கொடுத்த பரிசுதான் மனைவி. ஆகையால் குணமுள்ள பெண்களைப் போற்றிக் காப்பாற்றினால் இறைவன் அருள் மழை பொழிவான்.

(இதுவரை எவ்வளவோ நூல்கள் படித்து விட்டேன். மநு போல பெண்களுக்கு ஆதரவாகக் கதைத்தவர் எவரும் இலர். பெண்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால்அவர்களுக்குக் குழந்தையே இல்லாவிடினும்அவர் அனுமதியின்றி வெளியேற முடியாது என்கிறார். பெண்களை அழவிட்டால்குடும்பம் வேறோடு சாய்ந்து அழியும் என்கிறார். சகோதரிகளுக்கு சகோதரர்கள் ஆடை ஆபரணங்களை அளித்து க மகிழ்ச்சிக் டலில் மிதக்க விட வேண்டும் என்கிறார்.

இந்த ஒன்பதாம் அத்தியாயத்தில் பெண்களுக்கு சொத்து உரிமை உண்டு என்கிறார். இத்தனையும் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியது.

XXX

 பாரதியார் சொன்ன மநு பாட்டு

பெண்களுக்கு மட்டும்தானா கற்பு? கற்பு நிலை என்று சொல்ல வந்தால் அதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம் என்கிறார் உலக மஹா கவி சுப்ரமண்ய பாரதியார். இது மநு 9-101ல் சொல்லும் வாசகம்.

சாகும் வரை இருவரிடத்திலும் கற்பின்மை வரக்கூடாது. இதுதான் ஆண்-பெண் உறவில் தலையாய கடமை- ஸ்லோகம் 9-101

XXX

ஸ்லோகம் 9-103- ஆண்-பெண் செக்ஸ் உறவு முறைகள் பற்றியும் குழந்தைகள் பெறாவிடில் அபூர்வமாகக் கையாள வேண்டிய விதிகளையும்  இதுவரை சொன்னேன்இனிமேல் பாகப் பிரிவினை பற்றிக் கதைப்பேன்

சொத்து உரிமை

9-104 மூத்த மகனுக்கே அதிக உரிமை

9-112 பாகப் பிரிவினை விகிதாசாரம்.

9-126 இரட்டையரில் யார் முதல்வர்?

9-127 ஆண் குழந்தையே இல்லாவிடில்மகளுக்கு சொத்து.

XXXX

தட்சனின் 10+13+ 27 + 50 மகள்கள்

9-129 தக்ஷப் பிரஜாபதி என்ன செய்தார்? அவருக்கு 50 பெண்கள்தான் பிறந்தனர். அவர் 10 பேரை தர்மருக்கும், 13 பேரை காஸ்யபருக்கும், 27 பேரை சந்திரனுக்கும் (27 நட்சத்திரங்கள்) கொடுத்தார்

9-130- ஒரு மகன் என்பவன் தந்தையைப் போன்றவன்மகள் என்பவளோ  அந்த மகனுக்குச் சமம் ஆனவள்இப்படி இருக்கையில் மகன் இடத்தை நிரப்ப வந்த பெண்ணின் சொத்தை வேறு யார் எடுக்க முடியும்?

10-131 அம்மாவின் முழுச் சொத்தும் மகளுக்கேஅவள் இறந்துவிட்டால் அது மகளின் மகனுக்கே!!


மற்ற விஷயங்களை ஒரிஜினல் ஸ்லாகங்களில் படியுங்கள்இதோ ஸ்லோகங்கள்:–

SLOKAS 66-69

78- 86


SLOKAS 87 – 90

ஸ்லோகம் 90, 91 – காதல் கல்யாணம் சரிதான்!

96– 105
106-110
111-115
115- 123

MISSING PAGES WILL BE POSTED LATER

TO BE CONTINUED….