
Post No. 10,023
Date uploaded in London – 26 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ரிக் வேதம் போலவே பாரதி பாடல்கள் முழுதும் ஆக்கபூர்வ எண்ணங்களையும், சிந்தனையையும் தூண்டும் வரிகளையும், சொற்களையும் அடைமொழிகளையும் காணலாம் . அவரே வேதம் பற்றி அக்கினி என்ற நூலையும் எழுதியுள்ளார். ‘வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே, வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே’ என்றும் பாடுகிறார். ரிக் வேத மந்திர எண்களையும் அவை உள்ள பாரதி பாடல் வரிகளையும் தனியே தருகின்றேன். இங்கு பாரதி சொல்லும் நேர்மறைச் சொற்களைக் காண்போம் (Positive words and thoughts) . பாரதி பாடலில் எதிர்மறைச் சொற்கள் (negatives) மிகவும் குறைவு. அப்படி இருந்தாலும் அவை அதர்மத்திற்கு எதிரான சொற்களாகவே இருக்கும் .
இதோ பாரதியின் பாசிட்டிவ் (Positive words) சொற்கள்-
இவற்றில் பெரும்பாலான வரிகள் ரிக் வேதத்தில் இந்திரன் மற்றும் அக்னீ பற்றிய துதிகளில் உள்ளன:–
‘வேதங்கள் சொன்னபடிக்கு மனிதரை
மேன்மையுறச் செய்தல் வேண்டும்’
‘நூறு வயது புகழுடன் வாழ்ந்து உயர்
நோக்கங்கள் பெற்றிட வேண்டும்’
‘செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் – அவன்
எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக’ ( காயத்ரீ மந்திரம்)

ஒளிபடைத்த கண்ணினாய் வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா
களிபடைத்த மொழியினாய் வா வா
கடுமைகொண்ட தோளினாய் வா வா
தெளிவுபெற்ற மதியினாய்
ஏறு போல நடையினாய்
நோய்களற்ற உடலினாய்
நொய்மையற்ற சிந்தையாய்
இளைய பாரதித்தனாய்
எதிரில்லா வலத்தினாய்
வெற்றி கொண்ட கையினாய்
விநயம் கொண்ட நாவினாய்
முற்றி நின்ற வடிவினாய்
முழுமை சேர் முகத்தினாய்
எல்லாரும் ஓர் குலம்
எல்லாரும் ஓர் இனம்
எல்லாரும் ஓர் நிறை
எல்லாரும் இந்நாட்டு மன்னர்
‘எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறை
இந்தியா உலகிற்களிக்கும்’

‘எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்’
‘அச்சமில்லை, அச்சமில்லை ‘
‘பொறுத்தாரன்றே பூமி ஆள்வார்’
‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல்
இமைப்பொழுதும் சோரா திருத்தல்’
‘ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்
உலகு இன்பக் கேணி’
‘ஓம் சக்தியால் உலகில் ஏறு’
‘ஓம் சக்தி சக்திஎன்று சொல்லு – கெட்ட
சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு’
‘சக்தி சக்தி என்பார் சாகார்’
சக்தியருள் வாழ்கவென்று வாழ்த்து
‘பின்னை ஒரு கவலையுமிங்கில்லை
பிரியாதே விடுதலையைப் பிடித்துக்கொள்வாய்’
‘செல்வங்கள் கேட்டால் நீ கொடுக்க வேண்டும்
சிறுமைகள் என்னிடம் இருந்தால் விடுக்க வேண்டும்
கல்வியிலே மதியினை நீ தொடுக்கவேண்டும் ‘
‘மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்’
‘திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்’

‘வல்லமை தாராயோ – இந்த மாநிலம்
பயனுற வாழ்வதற்கே’
‘விசையுறு பந்தினைப்போல் – உள்ளம்
வேண்டியபடி செலும் உடல்’
நசையறு மனம்
சுடர்தரும் உயிர்
அசைவறு மதி
சக்தியைப் பாடும் நல் அகம்
‘பாட்டுத் திறத்தாலே – இவ்வையத்தைப் பாலித்திடல் வேண்டும்’
‘தெண்டமிழ் பாடல் ஒரு கோடி மேவிட ச் செய்குவையே’
‘யாவிரும் வாழிய! யாவிரும் வாழிய!’
‘பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்
பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்’
‘பாரத நாடு பார்க்கெல்லாம் திலகம்’
‘வானவர் விழையும் மாட்சியார் தேயம்’
‘கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும்’
‘அருவிபோலக் கவிபொழிய
எங்கள் அன்னை பாதம் பணிவேனே ‘

‘வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க
நன்மை வந் தெய்துக தீதெலாம் நலிக’
‘அறம் வளர்ந்திடுக , மறம் மடிவுறுக’
‘சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக’
‘கிருத யுகம் எழுக மாதோ’
‘தெள்ளு கலைத்தமிழ் வாணி ! நினக்கொரு
விண்ணப்பஞ் செய்திடுவேன்
எள்ளத்தனைப் பொழுதும் பயனின்றி
இராதென்றன் நாவினிலே
வெள்ளமெனப் பொழிவாய் சக்தி வேல் சக்தி
வேல், சக்தி வேல், சக்தி வேல் ‘
Xxxx
எல்லினைக் காணப் பாயும் இடபம் போல் முற்படாயோ
இறப்பின்றித் துலங்குவாயே
இறவாய் , தமிழோடிருப்பாய் நீ
இன்று புதிதாய்ப் பிறந்தோம்
தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா
கடமை புரிவார் இன்புறுவார்
உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர்
வாழ்க வையம், வாழ்க வேதம்
அன்பென்று கொட்டு முரசே – மக்கள் அத்தனை பேரும் நிகராம்
ஒன்றென்று கொட்டு முரசே
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே
உயிர்களிடத்தில் அன்பு வேணும் – தெய்வம்
உண்மையென்றுதானறிதல் வேண்டும்
காக்கை குருவி எங்கள் ஜாதி
நிமிர்ந்த நன்னடை
நேர்கொண்ட பார்வை
நிமிர்ந்த ஞானச் செருக்கு
மங்கும் தீமை, பொங்கும் நலமே
நல்ல காலம் வருகுது! நல்ல காலம் வருகுது !
மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும்
வாழ்க நிரந்தரம், வாழ்க தமிழ் மொழி
xxxx
இது ஒரு சாம்பிள் sample தான். இன்னும் நூறு வரிகள் உள .
ரிக் வேதமும் பாரதியும் என்ற கட்டுரையில் மேலும் தருகிறேன்

–சுபம்-
tags – பாரதி பாடல், மந்திரச் சொற்கள்,