உலக மஹா கீதம்; வேதத்தில் மேலும் ஒரு தேசீய கீதம்! (Post No.10,326)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,326

Date uploaded in London – –   11 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வியாசர் என்பவரை இந்துக்களின் எல்லா பிரிவினரும் ‘குரு’ என்று ஏற்கின்றனர் ; அது மட்டுமல்ல; வியாசரை விஷ்ணுவின் அ வதாரமாகவும் கொள்கின்றனர். அவரது நினைவாக வியாச பெளர்ணமி தினம் முதல், 4 மாதங்களுக்கு சாதூர் மாஸ்ய விரதமும் அனுஷ்டிக்கின்றனர்.;ஏன் தெரியுமா?

அவர் இறந்தவுடன் கலியுகம் துவங்கப் போவது பஞ்சாங்கக் கணக்குப்படி தெரிந்தது; உடனே அவசரம் அவசரமாக புராண இதிஹாச வேதங்களைத் தொகுத்தார். அவர் பெயரில் உள்ள விஷயங்களைக்  கணக்கிட்டால் பத்து கின்னஸ் புஸ்தகத்தில் எழுதலாம் ; தனக்குப் பின்னர் பிறக்கப்போகும் கலியுகத்தில் மக்களுக்கு வேதங்களைப் பின்பற்ற நேரமும் இருக்காது; நாட்டமும் இருக்காது என்று கருதி 1400 வரிகளில் இந்து மதத்தை  ‘ஜுஸ்’  பிழிந்து பகவத் கீதை என்னும் பெயரில் மஹாபாரதத்தில் சேர்த்தார். மகாபாரதத்தின் மொத்தவரிகள் இரண்டு லட்சம் வரிகள். அதில் ஒரு மில்லியன்- பத்து லட்சம் சொற்கள் உள்ளன !

அதே போல 18 புராணங்களையும் தொகுத்தார். இதை எல்லாம் விட ஒரு அற்புதமான வேலையை அவர் செய்தார். அதில்தான் அவர் உலக மஹா ஜீனியஸ் / மஹா மேதாவி என்பது தெரிகிறது. எழுதக்கூடாது; வாய் மொழி மூலமே பரப்ப வேண்டும்; அதிலும் ஒலி பிசக்கக்கூடாது ; அதிலும் மனம், மொழி, மெய் மூன்றிலும் உண்மை உடையவர்கள் மட்டுமே கற்கவேண்டும் என்று விதி மேல் விதிகளைக் கொண்ட வேதங்களை பலரும் பின்பற்றமுடியாமல், அதாவது நினைவிற் வைத்துக்கொள்ள முடியாமல், தவிப்பதைக் கண்டார். உடனே அத்தனையையும் திரட்டி 4 பிரிவுகளாகப் பிரித்தார். அதை விட முக்கியம் அதைப் பரப்ப 4 சீடர்களைத் தேர்ந்தெடுத்தார் ; ‘இதோ பாருங்கள்; இனி உங்கள் பொறுப்பு இதைப் பரப்புங்கள் என்றார்

. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பாடப்பட்ட சங்கத் தமிழ் நூல்களும் நான் மறை அந்தணர் பற்றீச் சொல்லி, ‘எழுதாக் கற்பு’ என்று வேதங்களைப் புகழ்கின்றன. அது மட்டுமல்ல. தமிழின் மிகப்பழைய நூலான தொல்காப்பியத்துக்கு சர்ட்டிபிகேட் certificate  கொடுத்து இது நல்ல புஸ்தகம்தான் என்று சொல்லியவரும் அப்படிப்பட்ட நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆச்சார்யார் ஆவார் .

xxxx

ரொம்ப நாளா எனக்கு ஒரு சந்தேகம் .

தமிழ் மன்னர்கள் உள்பட இந்தியா முழுதும் மன்னர்கள் வேதப் பிராமணர்களுக்கு ஏன் தங்கக் காசு கொடுத்தனர் (ஹிரண்ய தானம்), ஏன் நில புலனகளைக் கொடுத்தனர் (பிரமதேயம்) என்ற கேள்வி என் மனதில் வரும்; அது மட்டுமா? உலக மஹா தமிழ்க் கவிஞன் சுப்பிரமணிய பாரதி வேதம் என்று வாலாக என்று கொட்டு முரசே என்று ஏன் செப்பினான் என்றும் எண்ணுவேன்.

இதற்கெல்லாம் பதில் ரிக் வேதத்தின் கடைசி பாடலில் இருக்கிறது (10-11) அதுதான் 1028 ஆவது துதி. பத்தாயிரத்து 552 ஆவது மந்திரத்துக்கு மூன்று, நான்கு மந்திரத்துக்கு முந்திய 2, 3 மந்திரங்கள்.

அங்கே வேதத்தின் சாரத்தை செப்பிவிடுகிறார்.

xxxx

ஒற்றுமை! ஒற்றுமை! ஒற்றுமை!

சொல்லிலே, செயலிலே சிந்தனையில் ஒற்றுமை !

முதல் உலக யுத்தம் முடிந்த பின்னர் ஏற்பட்ட LEAGUE OF NATIONS லீக் ஆப் நேஷன்ஸ் என்ற சர்வ தேச சபையும் இதையே சொன்னது;  ஹிட்லரும் முசோலினியும் கேட்கவில்லை இரண்டாவது உலக மகா யுத்தம் வெடித்தது ;  அது  முடிந்த பின்னர் ஐ.நா. சபை தோன்றியது. அதன் சாசனத்திலும் அமைதி, ஒற்றுமை வலியுறுத்தப்பட்டது

நமது காலத்தில் ‘புதியதோர் உலகம் செய்வோம் ; கெ ட்ட போரிடும் உலகினை வேருடன் சாய்ப்போம்’ என்று பாரதி தாசன் பாடினார் ; காஞ் சி பரமாசார்ய சுவாமிகள் ஐ நா சபையில் பாடுவதற்காக எம் எஸ் சுப்புலெட்சுமிக்கு எழுதிக்கொடுத்தித்த ‘மைத்ரீம் பஜத  பாடலிலும் இதையே சொன்னார். ஆனால் உலக மகா மேதாவி வேத வியாசர் இதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ரிக் வேதத்தின் கடைசி பாடலில் முத்தாய்ப்பாக வைத்தார். அதாவது 4 வேதங்களின் 20,000 மந்திரங்களின் மொத்தக் கருத்தே இதுதான் என்பது அவரது துணிபு..

அதைப் பார்ப்பதற்கு முன்னர் இன்னொரு சுவையான செய்தியைச் சொல்கிறேன். “சரி, ஆறு மாதத்தில் ரிக் வேதத்தின் 10,552 மந்தி ரங்களையும் ஆங்கிலத்திலும் தமிழிலும் படித்து முடித்துவிட்டோம்; கடைசி வேதமான அதர்வண வேதத்தையும் படிப்போமே” என்று எடுத்தால், அதில் ரிக் வேதத்தை விட  அருமையான ஒற்றுமை மந்திரம் இருப்பதைக் கண்டு ஆச்சர்யத்தில் மூழ்கினேன்.

xxx

இதோ இரண்டு மந்திரங்களையும் நீங்களும் படியுங்கள்

ரிக் வேதம் 10-191

“எல்லோரும் ஒன்று சேருங்கள்

எல்லோரும் ஒன்றாகப்  பேசுங்கள்

முன் காலத்தில் தேவர்களும் ஒற்றுமையுடன் இருந்து

வேள்வியில் தங்களுக்குரிய பங்கினை ஏற்றார்கள் .

உங்களுடைய மந்திரங்கள் ஒன்றுபோல ஒலிக்கட்டும்

உங்களுடைய அசெம்பிளியில் ஒன்றுபட்ட குரல் கேட்கட்டும்

எல்லோரும் ஒன்று போல சிந்திக்கட்டும்

எல்லோரும் ஒன்றையே  நாடட்டும்

உங்களுடைய அசெம்பிளி தீர்மானமும் ஒன்றாக இருக்கட்டும்

உங்களுடைய இருதயம்/ உள்ளக்கிடக்கை ஒன்றுபோல ஆகட்டும்

உங்களுடைய எண்ணங்கள் எல்லாம் ஒன்றையே சிந்திக்கட்டும்” .

இதிலுள்ள ‘அசெம்பிளி’ என்ற ஆங்கிலச் சொல் 100 ஆண்டுகளுக்கு முன்னர் வேதத்தை மொழி பெயர்த்த கிரிப்பித் Ralph T H Griffith தின் சொல். இன்று நாடு முழுதும் பயன்படுத்தும் சபை/ அவை என்ற சொல் சம்ஸ்க்ருத மந்திரத்தில் உள்ளது

XXX

இதோ அதர்வண வேத ஒற்றுமை மந்திரம்

மூன்றாவது காண்டம் 30 ஆவது மந்திரம்

“நான் உங்களுக்கு ஒரே இருதயத்தை, ஒரே மனத்தைக் கொண்டு வருகிறேன்.

வெறுப்பிலிருந்து விடுதலை பெறுக; பிறந்த கன்றுக்குட்டியிடம் தாய்ப்பசுவுக்கு உள்ள பாசம் போல பாசம் பெருகட்டும்

‘தந்தை தாய் சொல் மிக்க மந்திரம் இல்லை’ என்பதை மகன் உணரட்டும் ; கணவனிடம் மனைவி அன்பு மழை பொழியட்டும்; தேன்மிகு இனிமையான சொற்களை பேசட்டும்

சகோதரன் மற்ற சகோதரனை வெறுக்கக் கூடாது; சகோதரி, மற்ற சகோதரியை வெறுக்கவேண்டாம் ; ஒற்றுமை நிலவுக; ஒரே நோக்கம் நிலவுக; மங்கள மொழியை உதிருங்கள்

கடவுளர்/ தேவர்கள் ஒருவரை ஒருவர் வெறுப்பதில்லை ; பிரிந்து செல்வதில்லை; அந்த குணத்தை உங்கள் வீட்டில் நிலை நாட்டுகிறோம் ; உங்கள் வீட்டிலுள்ள புருஷர்கள் அதையே பின்பற்றுவார்களாகுக 

ஒரே எண்ணத்துடன் , ஒரே முயற்சியுடன், இணைந்து வாருங்கள்; பிரிந்து செல்லாதீர்கள் ;ஒருவருக்கொருவர் இனிமையான மொழியைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நான் உங்களை ஒரே நோக்கம், ஒரே எண்ணம் உடையவனாக ஆக்குவேன் (மேலும் வலுப்படுத்துவேன்)

நீங்கள் ஒரே பானத்தை பருகுங்கள்; ஒரே உணவை சம கூறிட்டு உண்ணுங்கள்; நானும் உங்களை அன்பால் பிணைக்கிறேன் ; ஓர் சக்கரத்திலுள்ள ஆரங்கள் போல ஒன்று பட்டு அக்கினி தேவனை வழிபடுங்கள் .

 நான் உங்களை ஒன்றாகக் கட்டும் மந்திரத்தின் மூலம் பிணைக்கிறேன் ஒரே எண்ணத்துடன் ஒரே தலைவரின் கட்டளைக்குக் கீழ்ப்படியுமாறு செய்கிறேன்

தேவர்களைப் போல அமிர்தத்தை போற்றுங்கள்; காலைப் பொழுதும் மாலைப் பொழுதும் அன்பு அலை வீசட்டும் “.

–மூன்றாவது காண்டம் 30 ஆவது மந்திரம் (சூக்தம் 101)

xxx

என் கருத்து

இதற்கு நான் உரையோ விளக்கமோ சொல்லத் தேவை இல்லை; முதலில்  தனி மனிதனிடம் நேசமும் பாசமும் இருக்க வேண்டும்; பின்னர் குடும்பத்தில் அது இருக்க வேண்டும். பின்னர் அது புறச் சூழலில் எதிரொலிக்க வேண்டும். அதன் மூலம் எங்கும் அமைதி ஓ ற்றுமை ஓங்கி வளரும்

இந்த இரண்டு கீதங்களையும், துதிகளையும் எல்லோரும் படித்தா லோ அல்லது வேத பிராமணர்கள் ஒலிக்கும் பொழுது கேட்டாலோ சர்வ மங்களம் உண்டாகும் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமும் உண்டோ!

XXX

RIG VEDA 10-191 (Last Hymn in the RV)

संस॒मिद्यु॑वसे वृष॒न्नग्ने॒ विश्वा॑न्य॒र्य आ ।

इ॒ळस्प॒दे समि॑ध्यसे॒ स नो॒ वसू॒न्या भ॑र ॥ १०.१९१.०१

सं ग॑च्छध्वं॒ सं व॑दध्वं॒ सं वो॒ मनां॑सि जानताम्

दे॒वा भा॒गं यथा॒ पूर्वे॑ संजाना॒ना उ॒पास॑ते १०.१९१.०२

स॒मा॒नो मन्त्रः॒ समि॑तिः समा॒नी स॑मा॒नं मनः॑ स॒ह चि॒त्तमे॑षाम्

स॒मा॒नं मन्त्र॑म॒भि म॑न्त्रये वः समा॒नेन॑ वो ह॒विषा॑ जुहोमि १०.१९१.०३

स॒मा॒नी व॒ आकू॑तिः समा॒ना हृद॑यानि वः ।

स॒मा॒नम॑स्तु वो॒ मनो॒ यथा॑ वः॒ सुस॒हास॑ति ॥ १०.१९१.०४

–subham—

Tags- ரிக் வேதம், அதர்வ வேதம், ஒற்றுமை, தேசீய கீதம், உலக கீதம் , மந்திரம்

எகிப்து, கிரீஸ், ரிக் வேதத்தில் கண் பற்றிய  அதிசயச் செய்திகள் (Post 10,187)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,187

Date uploaded in London – 8 OCTOBER  2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக் வேதம் உலகத்திலேயே பழைய புஸ்தகம் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமேயில்லை. தள்ளிப்போன, உதவாக்கரை வெள்ளைக்கார  சுள்ளான்களும் இப்போது கி .மு.2000-ஐ ஒட்டி என்று பேசத்  துவங்கி விட்டனர். அப்பேற்பட்ட ரிக்வேதத்தில் கண் பற்றிய அதிசயமான விஷயங்களை எகிப்தியர்களும், கிரேக்கர்களும் ‘கள்ளக் காப்பி’ copy  அடித்துப் பாடியுள்ளனர்.

நம்ம ஊரு வள்ளுவர் ‘எண்ணும் எழுத்தும் கண்’ என்றார் . ஆனால் ரிக் வேத முனிவர்களோ கண் என்பது சூரியன் என்கின்றனர். இதை உருவக ரீதியில் பார்த்தால் சரி என்போம். அதாவது கண்ணும் எல்லாவற்றையும் பார்க்கிறது. சூரியனும் எல்லாவற்றையும் பார்க்கிறான். கண்ணை மூடினால் இருள்; சூரியன் அஸ்தமித்தால்  இருள். கண்ணில் எதையும் காண ஒளி அவசியம்; அதை இயற்கையாகவே உமிழ்ப்பவன் சூரியன்;

இரண்டும்  கிட்டத்தட்ட ஒரே வடிவம் உடையவை . கண் இமைகளைப் பார்க்கையில் அது சூரிய கிரணங்கள்/ கதிர்கள் போலத்  தோன்றுகின்றன என்றெல்லாம் சிலர் தத்துவ விளக்கம் சொல்லக்கூடும். ஆனால் இந்துக்கள் அதைவிட முன்னேறிச் சென்று அதிசயமாக சில விஷயங்களை இயம்புகின்றனர் .

Xxx

RV 10-90

எல்லா கோவில்களிலும், சம்பிரதாயங்களைப் பின்பற்றும் பிராமணர் வீடுகளிலும் தினமும் ஒலிக்கும் புகழ்பெற்ற புருஷ சூக்த மந்திரம் ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் உள்ளது (10-90).

இதில் ‘கண் என்பது சூரியனிடமிருந்து பிறந்தது’ என்றும் ‘மனம் என்பது சந்திரனுடன் தொடர்பு உடையது’ என்றும் ஒரு மந்திரம் வருகிறது.

சந்திரமா மனஸோ ஜாதக; சக்ஷ்ஓர் ஸூர்யோ அஜாயத”

பிரபஞ்சம் முழுதும் வியாபித்துள்ள புருஷனிடமிருந்து (கடவுளிடமிருந்து) – “கண்களிலிருந்து சூரியன் வந்தது. அவனுடைய மனதிலிருந்து சந்திரன் பிறந்தது” என்பது இந்த வரியி ன் பொருள்  .

இன்னொரு மந்திரத்தில் யமனுடைய மகன்  ரிஷி  தமனன் பாடுகிறார்:-

10-16-3

(இறந்த) உன்னுடைய கண் சூரியனுக்குச் செல்க ; மூச்சுக் காற்று, காற்றுடன் கலக்கட்டும்; நீ எவ்வளவு புண்ணியம் செய்தனையோ அதற்குத்தக பூமிக்கோ சொர்க்கத்துக்கோ செல்க;உன் கரும பலனுக்கு ஏற்ப தாவரமாகவோ நீர்வாழ் பிராணியாகவோ போ .

இதை மாணிக்க வாசகரும் திருவாசகத்தில் சிவபுராணத்தில் சொல்லிவிட்டார்.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் – 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

—சிவபுராணம் – திருவாசகம்

xxx

இந்துக்கள் சொன்ன 3 அதிசயங்கள்

மனது , கண் பற்றி விஞ்ஞானிகளுக்கும் இதுவரை தெரியாத மூன்று விஷயங்களை முதலில் காண்போம்.

1. சந்திரனையும் தாவரங்களையும் தொடர்புபடுத்தி இந்து மத நூல்கள் அனைத்தும் பேசுகின்றன. ஆனால் விஞ்ஞானிகள் இதுபற்றி ஒன்றுமே சொல்லவில்லை. சூரிய ஒளி மூலம் நடக்கும் போட்டோசிந்தசிஸ் photosynthesis என்னும் ஒளிச் சேர்க்கை மூலம் மட்டுமே தாவரங்கள் உணவு தயாரிக்கின்றன என்று மட்டும் சொல்கிறார்கள். ஆனால்  ஒரு காலத்தில் நாம் சொன்ன உண்மையை அறிவியலும் ஒப்புக்கொள்ளும்.

.2.இரண்டாவது விஷயம் மனதுக்கும் சந்திரனுக்கும் உள்ள தொடர்பை ரிக்வேத மந்திரம் (10-90) வெளிப்படையாகவே பேசுகிறது. இதையும் விஞ்ஞானிகள் ஏற்பதில்லை. ஆயினும் கடல் பொங்கக் கூடிய அமாவாசை, பெளர்ணமி தினங்களில் பைத்தியங்களின் மனமும் கொந்தளிப்பதை மருத்துவ மனை ரிகார்டுகள்/ பதிவேடுகள் hospital records  காட்டுகின்றன. பூமியில் 70 சதம் நீரால் மூடப்பட்டுள்ளது. மனித உடலிலும் 70 சதம் நீர் உள்ளது. ஆகையால் இப்படி ரத்தத்திலும் பாதிப்பு இருக்கலாமே என்பது நம்புவோர் வாதம்; ஆனால் அப்படியெல்லாம் நாங்கள் ஒன்றும் அந்த நாட்களில் மன நோயாளிகளுக்குக் கூடுதல் மருந்து கொடுக்கவில்லையே என்பது சைக்கியாட்ரிஸ்ட் PSYCHIATRISTS மருத்துவர்களின் பிடிவாதம் !

3.கண்ணுக்கும் சூரியனுக்கும் உள்ள தொடர்பினை மேலே இரண்டு ரிக் வேத மந்திரங்களில் கண்டோம். இதையும் விஞ்ஞானிகள் ஏற்பதில்லை ; ஆனால் இக்கருத்து எகிப்து, கிரீஸ் வரை சென்றுவிட்டது.அவர்களும் இதைப்  பாடி வைத்துள்ளனர்  . இன்றும்கூட லட்சக் கணக்கானோர் அதிகாலையில் , குறிப்பாக R S S ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர், சூரிய நமஸ்காரம் செய்கின்றனர். ஜோதிடத்திலும் சூரியனே ஆரோக்கியகாரகன். கண்ணுக்கும் பகலவனுக்கும் உள்ள தொடர்பினை  ஏற்காத விஞ்ஞானிகள், சூரிய ஒளியிடமிருந்து vitamin D வைட்டமின் டி கிடைக்கிறது என்று ஒப்புக்கொள்ளத் துவங்கியுள்ளனர். அத்தோடு மேலை நாடுகளில் சூரிய ஒளி குறைவானதால் இப்போது வைட்டமின் டி சாப்பிடுங்கள் என்று ஆலோசனை வழங்கத் துவங்கிவிட்டனர். வருங்காலத்தில் இந்துக்கள் சொன்னதை அவர்கள் 100 சதம் ஏற்பார்கள் என்பதில் ஐயப்பாட்டுக்கு இடமில்லை.

xxx

கிரீஸ்

கிரீஸ் எனப்படும் கிரேக்க Greece நாட்டில், எல்லா கலைகளும் நமக்கு பின்னர் தோன்றின. ஆனால் வெள்ளைக்கார சுள்ளான்களுக்கு இந்திய இலக்கியம் தெரியாது. ஆகையால் உலகத்திலுள்ள எல்லாவற்றுக்கும் கிரேக்க நாடுதான் ஆதாரம் என்று உளறிவிட்டார்கள். சாக்ரடீசும், அவர் சிஷ்யர் , பிளாட்டோவும், அவர் சிஷ்யர் அரிஸ்டாட்டிலும், அவர் சிஷ்யர் அலெக்ஸ்சாண்டரும் இந்து மத தத்துவங்களையே சொன்னார்கள் என்று கிரேக்கர்களே எழுதிவைத்துள்ளனர். இவர்களுக்கு எல்லாம் மூத்த பிதகோரஸ் Pythagoras Theorem தியரம் முதலியன இந்தியாவில் இருந்து சென்றதே. அவரும் ஒரு வெஜிட்டேரியன் என்றெல்லாம் இப்போது தெரிகிறது; சாக்ரடீஸ் விஷம் குடித்து சாவதற்கு முன்னர், கிரீட்டோ என்ற சிஷ்யனை அழைத்து ‘காளி ஆத்தாவுக்கு கோழி அடிச்சு கும்பிட மறந்துடாதே’ என்று சொல்லிட்டு செத்துப்போனார். அந்த அளவுக்கு இந்து மதத்தில் நம்பிக்கை.

ஒரு கிரேக்க புலவர் Theia தேவியை நோக்கி பாடுகிறார்

There is a Greek prayer referring to the goddess Theia in terms of sun:-

“Thou beam of the sun

Far seeing mother of the eyes”.

தேவி என்பதை அவர்கள் தெய்யா , தேவி , தெய்வி என்று அழைப்பர்

அம்மா நீயே சூரியனின் ஒளி

தொலை நோக்கு பார்வை உன்னுடையது.

பிராமணர்கள்  தினமும் சொல்லும் காயத்ரீ மந்திரத்தில் இது உள்ளது. அதை விட அவர்கள் மூன்று நேரங்களிலும் சூரியனைப் பார்த்து சொல்லும் மந்திரங்கள் ஏராளம். என்ன அதிசயம்!! உலகில் உள்ள பழங்க்கால கடவுளர் எல்லாம் மியூசியக் கடவுளாகவும் படிம அச்சுக் கடவுளாகவும் Museum Gods and Fossil Gods  போய்விட்டார்கள் ; பிராமணர்களும் காயத்ரீ சொல்லும் இந்துக்களும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கங்கை-சிந்து-சரஸ்வதி நதிக்கரையில் கற்ற மந்திரங்களை இன்றும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்! அதுவும் எழுத்தில் இல்லாமல் வாய் மொழியாகவே பரப்பி வருகிறார்கள்.

பின்வரும் மந்திரத்தை பார்ப்பனர்கள் தினமும் மதியவேளையில் சொல்லுவார்கள். அதுவும் சூரியனை இரண்டு கைகளின் விரல்களையும் கோர்த்து அதில் ஒரு இடைவெளி விட்டு அதன் வழியாக சூரியனைப் பார்த்துச் சொல்லுவார்கள். கடுமையான சூரிய ஒளி கண்களைப் பாதிக்கும் என்ற உண்மை, ஐயர்களுக்குத் தெரியும். அதனால் அவர்களாக கண்டுபிடித்த Hand Telescope கை டெலஸ்க்கோப் மூலம் பார்த்து இந்த மந்திரத்தைச் சொல்லுவார்கள்

பஸ்யேம சரதஸ் சதம்

ஜீவேம சரதஸ் சதம்

நந்தாம சரதஸ் சதம்

மோதாம சரதஸ் சதம்

பவாம சரதஸ் சதம்

ஸ்ருணவாம சரதஸ் சதம்

ப்ரப்ரவாம சரதஸ் சதம்

அஜீதாஸ்யாம சரதஸ் சதம்

பொருள்

சூரிய தேவனை நூறாண்டுக் காலம் காண்போமாக

(அவ்வாறே) நூறாண்டுக் காலம் வாழ்வோமாக

நூறாண்டுக் காலம் உற்றார் உறவினருன் கூடிக்குலவுவோமாக

நூறாண்டுக் காலம் மகிழ்வோமாக

நூறாண்டுக் காலம் புகழுடன் விளங்குவோமாக

நூறாண்டுக் காலம் இனியதைக் கேட்போமாக

நூறாண்டுக் காலம் இனியதைப் பேசுவோமாக

நூறாண்டுக் காலம் தீமைகளால் வெல்லப்படாமல் வாழ்வோமாக.

(இதை எல்லோருமே தினமும் சொல்லலாம் என்பது என் சொந்தக் கருத்து) .

இதிலும் முதல் மந்திரமே 100 ஆண்டுக் காலம் சூரியனைப் ‘பார்க்க’ வேண்டும் என்ற கருத்து வந்து விடுகிறது.

2400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கிரேக்க அறிஞர் சோபோக்ளீஸ் Sophocles எழுதிய நாடக ம் ‘ஈடிபஸ் கலோனஸ் ; Oedipus Colonus; அதில் அவரும் இதையே சொல்கிறார் ‘ உலகம் முழுதையும் பார்த்துக் கொண்டிருக்கும் சூரியதேவன் என்னைப் போலவே நீண்ட ஆயுளைக் கொடுக்கட்டும் ‘

இதே போல அரிஸ்டோபனிஸ் Aristophanes என்ற அறிஞர் ‘உருண்டோடும் சூரிய தேவன் சக்கரம்’ பற்றி பேசுகிறார். சூரியனை ஒரு சக்கரமுடைய 7 குதிரை பூட்டிய ரதத்தில் செல்வதாகவே வேதங்களும் சங்கத் தமிழ் நூல்களும் பாடுகின்றன.

xxx

ரிக் வேதம் 10-37-1 மந்திரத்தைக் காண்போம்

சூரியனை நோக்கிச் சொல்லும் துதி இது .

மித்திரனுக்கும் வருணனுக்கும் கண்களாகத்  திகழும் தேவனுக்கு வணக்கத்தைத் தெரிவியுங்கள் .அவன் தொலை நோக்குடையோன். வானத்தில் கொடி (போலப் பட்டொளி வீசிப் பறக்கிறான்). அவன் தேவர்களிடையே  பிறந்தவன். மகத்தான அந்த கடவுளுக்கு இந்த வேள்வியைப் படைப்போமாகுக. வானத்தின் மகனான சூரியனின் புகழ் பாடுவோம்”

இவ்வாறு துவங்கி இன்னும் 11 மந்திரங்களில் சூரியனைப் பாடிப் பரவுகின்றார் ரிஷி அபித பவன்

அதில் எட்டாவது மந்திரம் (10-37-8) – கடலின் மீது எழும் உன்னை நாங்கள் தினமும் கண்டு வாழ்த்த நீடுழிக் காலம் வாழ்வோமாகுக. நீதான் எல்லோருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறாய்

.xxxxx

எகிப்தில்

எகிப்தில் உட் ஜட் கண் Udjat Eye என்று அழைக்கும் தாயத்து உள்ளது. இதை அதிர்ஷடம் அளிக்கும் தாயத்தாகக் கருதி பழங்கால எகிப்தியர்கள் அணிந்தனர்.

ஹோரஸ் Horus என்பது சம்ஸ்க்ருத கருடன் என்பதன் மரூஉ இந்தக் கருடனுக்கும் சேத Seth என்னும் தேவதைக்கும் நடந்த சண்டை கருடர்- நா கர் சண்டையின் வேறு படைப்பாகும். இந்தக் கருடனின் கண்களை உட்ஜட் கண் என்று அழைப்பர். இதற்கு மூன்று குணங்கள் உண்டு ;

1.பாதுகாப்பு 2.குணப்படுத்தும் ஆற்றல் 3. பொதுவான ஆரோக்கியம்.

அதாவது நாம் கருட மந்திரம், கருடன் தாயத்து, கருடன் கிழங்கு ஆகியவற்றுக்கு என்ன என்ன எல்லாம் சொல்கிறோமோ அவை அனைத்தையும் உட்ஜட்  கண் தாயத்தில்  காணலாம். இவை அனைத்தும் வேத காலத்துக்குப் பின்னர் வளர்ந்த கதைகள். இந்துக்களைப் போலவே எகிப்திலும் நூற்றுக் கணக்கில் தெய்வங்கள் இருக்கின்றன. காலப்போக்கில் அவைகளைப்ப பற்றிய கதைகள் நம்முடைய 18 புராணங்கள் போல் வளர்ந்தன. நம்முடைய இலக்கிய அளவைப் பார்க்கையில் எகிப்தின் பழைய இலக்கியம் மிகக்குறைவு. அதில் மகா குழப்பம். காரணம் என்னவெனில் பல தெய்வங்களுக்குப் பல பகுதிகளில் பல கதைகள் உண்டு.

எகிப்தில் இந்த வளர்ச்சிக்கு  மாக்ஸ் முல்லர் கும்பலும் திகிடுதத்த மார்க்சீய கும்பல்களும்  இனவாதப் பூச்சு பூசவில்லை. ஆரிய-திராவிடம் பற்றி எதுவும் பேசவில்லை. இந்தியாவில் ஏதேனும் இரண்டு முரணான விஷயங்களைப் பார்த்தால் உடனே அதற்கு ஆரிய -திராவிட பிரிவினை முத்திரைகளைக் குத்தி விடுகின்றனர் . சிந்து சமவெளி முத்திரைகளைத் தோண்டி எடுத்த மார்ஷல், மகே , மார் டிமர் வீலர் போன்றோர் ஆரம்பத்தில் இருந்தே இந்த அயோக்கியத் தனத்தில் இறங்கியதால் இன்றுவரை சிந்துவெளி முத்திரைகளைப் படிக்க முடியவில்லை  உட் ஜட் கண்பற்றிய கதைகளிலும் இது போல குழப்பம் உள்ளது. காலப்போக்கில் எந்த ஒரு விஷயத்துக்கும் பத்து, பதினைந்து விளக்கங்கள் சொல்ல முடியும். திருக்குறளுக்கே நாம் பத்து உரைகள் கண்டோம். ஏன் ? கருத்து சுதந்திரம். ஆயினும் உரை எழுதியோர் பாரதீய மரபுகளை மீறாமல் எழுதினார்கள்,; நேற்று வந்த வெள்ளை-சிவப்பு விஷமிகள் விஷம் கக்கி வைத்துள்ளனர். அவற்றை அகற்றுவது நம் கடமை..

சுவாமி விவேகானந்தர் சொன்னது போல, இந்து மஹா சமுத்திரத்தின் அடியிலுள்ள அத்தனை சக்தியையும் இவர்கள் மீது வீசி எறிந்தாலும் அது சரியான, உரிய தணடனை ஆகாது. பாரதியார் சொன்னது போல ‘ஆயிரம் ஆண்டு அன்பிலா அந்நியர் ஆட்சி’யில் எழுதப்பட்ட விஷமத்தை , விஷத்தை அகற்ற வேண்டும்

–சுபம்–

tags-

உட்ஜட் கண், எகிப்து, கிரேக்கம், ரிக் வேதம், கண், மந்திரம் , பஸ்யேம

மந்திரங்களைத் தவறாக உச்சரித்தால் பாதிப்பு வருமா? (Post.8784)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8784

Date uploaded in London – – 7 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

5-10-2020 அன்று ஞானமயம் கேள்வி-பதில் நிகழ்ச்சியில் ((Facebook.com/Gnanamayamஒளிபரப்பப்பட்ட கேள்வி – பதில்

மந்திரங்களைத் தவறாக உச்சரித்தால் பாதிப்பு வருமா?

ச.நாகராஜன்

QUESTION ASKED BY SENTHAMANGALAM GANESAN; THANKS

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.

மந்திரங்களைத் தவறாக உச்சரித்தால் பாதிப்பு வருமா? என்ற கேள்வி வந்துள்ளது.

பதில் : தவறாக உச்சரிக்காமல் உரிய முறைப்படி ஓதினால் நிச்சயம் அதற்குரிய பலன் முழுமையாகக் கிடைக்கும் என்பது தான்.

விளக்கத்தைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

மந்திரம் என்றால் என்ன?

மனனாத் த்ராயதே இதி மந்த்ர: மனத்தினால் மீண்டும் மீண்டும் சொல்லி அதாவது ஜபித்து உய்வைப் பெறுகின்ற ஒன்றே மந்திரம் ஆகும்.

சில மந்திரங்கள் பிரார்த்தனை மந்திரங்கள். சில பலன்களை எதிர்பார்த்து ஓதப்படும் மந்திரங்கள்.

இவற்றை குரு மூலமாகக் கற்று ஓதுவதே சிறப்பாகும்.

ஒவ்வொரு  மந்திரத்திற்கும் ஆறு பகுதிகள் உண்டு.

  1. மஹரிஷி – குறிப்பிட்ட ஒரு மந்திரத்தைக் கண்டவர்.
  2. ஸ்வரம் – அந்த மந்திரத்திற்கான குறிப்பிட்ட உச்சரிப்பு அல்லது இசை அமைப்பு
  3. தேவதா – அந்த மந்திரத்தின் அதி தேவதை
  4. பீஜம் – மந்திரத்தின் வித்து போன்ற ஜீவ ஒலி.
  5. சக்தி – மந்திரத்திற்கான திவ்ய சக்தி
  • கீலகம் – கீலகம் என்றால் தூண் என்று பொருள்படும். அதை ஓதுபவர் இடைவிடாது முயன்று மந்திரத்தை அப்யசிப்பதை இது குறிக்கிறது.

இவை அனைத்தையும் அறிந்தவரே குரு. குறிப்பிட்ட மந்திரத்தை அப்யசித்து சித்தி பெற்று, உரிய சீடர்களுக்கு அவர் வழங்குவார்.

உச்சரிப்பு என்பது மிக முக்கியம். வேதங்களை ஓதுவதற்கென்று குறிப்பிட்ட மரபு, வரைமுறை உள்ளது.

உதாத்தம், அனுதாத்தம், ஸ்வரிதம், தீர்க்க ஸ்வரிதம் ஆகிய இந்த நான்கும் உச்சரிப்பில் கையாளப்படுகின்றன.

உதாத்தம் என்றால் சாதாரண ஸ்வரத்தில் உச்சரிப்பதாகும்

அனுதாத்தம் என்றால் சாதாரண ஸ்வரத்திலிருந்து ஒரு  மாத்திரை இறக்கி உச்சரிக்க வேண்டும்.

ஸ்வரிதம் என்றால் சாதாரண ஸ்வரத்திலிருந்து ஒரு மாத்திரை ஏற்றி உச்சரிக்க வேண்டும்.

தீர்க்க ஸ்வரிதம் என்றால் சாதாரண ஸ்வரத்திலிருந்து இரண்டு மாத்திரைகள் ஏற்றி உச்சரிக்க வேண்டும்.

மந்திரத்தில் ஒலி அதாவது உச்சரிப்பு மிக முக்கியமானது என்பதை உணர்த்த யஜூர் வேதத்தில் வரும் ஒரு சம்பவத்தை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

ஒரு சமயம் இந்திரனைக் கொல்ல எண்ணிய விருத்ராஸுரன் என்னும் அசுரன் தவம் செய்து இறைவனின் தரிசனத்தைப் பெற்றான்.

‘இந்த்ர சத்ரு வர்தஸ்வ’ என்று இந்திரனைக் கொல்ல வேண்டி அவன் கோரியது, ஸ்வர பேதத்தால் – அதாவது ஒலியை மாறுபட்டு உச்சரித்ததால் – இந்திரன் கொல்லும்படியான சத்ரு என்று ஆகியது; அவன் இந்திரனால் கொல்லப்பட்டான்.

இன்னும் ஒரு சம்பவம்.

தேவர்களை இல்லாமல் செய்வதற்காக பிரம்மனை நோக்கி கும்பகர்ணன் ஒரு பெரும் யாகம் செய்தான். பிரம்மா தரிசனம் தந்தார். அவரிடம் அவன் கேட்க நினைத்தது நிர்தேவத்வம் – அதாவது தேவர்கள் இல்லாத நிலை. ஆனால் அவன் கேட்டதோ நித்ராவத்வம். எப்போதும் தூங்குவது என்பதை! பிரம்மா அவன் கேட்டதைத் தந்தார்.பின்னர் அவன் வேண்டுதலின் பேரில் எப்போதும் தூங்காமல் ஆறு மாத தூக்கம், ஆறு மாத விழிப்பு என்ற நிலையைப் பெற்றான்.

ஆகவே சொல்லுக்கு சொல் தனித் தனியே பொருள் உண்டு.

ஓம் என்ற பிரணவ மந்திரத்தை 170 விதமாக உச்சரிக்க முடியும் என்று மந்திர சாஸ்திரங்கள் கூறுகின்றன. அன்னிபெஸண்ட் அம்மையாரோ இந்த பிரணவ மந்திரத்தை 250 விதமாக உச்சரிக்க முடியும் என்று கூறுகிறார். ஒவ்வொரு உச்சரிப்பிற்கும் பலன் வெவ்வேறாக இருக்கும். அதாவது அடையக் கூடிய சித்திகள் வேறு வேறாக இருக்கும்.

மந்திரத்தில் பிரதானமாக இருப்பது ஒலி. ஒலிக்குச் சக்தி உண்டு என்பதை க்ளாட்னி என்ற விஞ்ஞானி நிரூபித்திருக்கிறார்.

ஒரு தகட்டின் மீது நுண்ணிய  மணலைப் பரப்பி அதன் ஓரத்தில் வில் ஒன்றை இணைத்து வில்லை அதிரச் செய்வதன் மூலம் மணல் துகள்கள் அசைந்து அதிர்விற்கு ஏற்பப் பல்வேறு வடிவங்கள் உருவாவதை அவர் நிரூபித்துக் காட்டினார். இந்த வடிவங்களுக்கு க்ளாட்னி சித்திரங்கள் என்று பெயர். Chladni Patterns என்று  youtubeஇல் பதிவிட்டால் இவற்றை நீங்கள் பார்க்க முடியும்.

சரி அப்படியானால் மந்திரங்களை உச்சரிக்கவே முடியாதோ என்று யாரும் பயப்படத் தேவை இல்லை. இறைவன் திருமுன்னர் மனமும் நம் உணர்ச்சியுமே முக்கியம். எளிய உச்சரிப்பை யார் வேண்டுமானாலும் சுலபமாகச் சொல்ல முடியும். ராம, நமசிவாய, நாராயணா, ஹரே கிருஷ்ணா போன்றவற்றை யார் வேண்டுமானாலும் உச்சரிக்க முடியும்.

 மந்திரத்தை ஒருமுனைப்பட்ட மனதுடனும் ஈடுபாட்டுடனும், பக்தியுடனும் சொல்ல வேண்டும் என்று பெரியோர் சொல்கின்றனர்.

மந்திர ஹீனம் கிரியா ஹீனம் என்று ஆரம்பிக்கும் ஸ்லோகம் ஒன்றை பூஜை முடிவில் சொல்வது மரபு.

 அதாவது மந்திரத்தைத் தவறாக உச்சரித்தல், அல்லது பூஜை கிரியைகளில் சிலவற்றை விட்டு விட்டிருப்பது ஆகியவற்றை மன்னித்து எனது பிரார்த்தனையை ஏற்று அருள்க என ஒவ்வொரு பூஜையும் முடிவிலும் நாம் சொல்வது பாரம்பரிய மரபாகும்.

ஆகவே குரு மூலமாக மந்திரத்தை உச்சரிப்புடன் கற்று மனதை ஈடுபடுத்தி ஓதுவதால் நல்ல பலன் ஏற்படும் என்பது உறுதி. அதே சமயம், இறைவனது நாமங்களை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம். அவையும் நலம் தரும் மந்திரங்களே என்று கூறி வாய்ப்பளித்த ஞானமயம் குழுவினருக்கும் கேட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன்.

நன்றி,வணக்கம்!

tags – மந்திரம், சக்தி, உச்சரிப்பு

ரஹசியம்! பரம ரஹசியம்! எல்லா மதத்திலும் உண்டு! (Post No.4300)

Written by London Swaminathan

 

Date:14 October 2017

 

Time uploaded in London- 7-43 am

 

 

Post No. 4300

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

பாரசீக நாட்டில் (ஈரான்) ஜொராஸ்டர் (Zoroaster or Zarathusthra) என்பவர் பின்பற்றிய மதம், வேத கால சமயம் போன்றது. அவர்களும் தீயை (யாக, யக்ஞம்) வணங்கினர். ஆயினும் சில கருத்துக்களில் மாறுபட்டார். ஒற்றுமை அம்சங்களே அதிகம்; அதில் ஒன்று மந்திரங்களை எல்லோருக்கும் கற்றுத் தராதே என்பதாகும். இது எல்லா சமயங்களிலும் உள்ள உண்மை.

 

நான் தினமும் படிக்கும் விநாயகர் கவசத்தில் கடைசியில் வரும் வரிகள் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக உளது என்பது எனக்கு வியப்பை ஏற்படுத்தியது!

அன்பு உறுதி ஆசாரம் உடையார்க்குக்கிக்

கவசத்தை அறைக அல்லார்க்கு

என்பெறினும் உரையற்க எனக்கிளந்து

மரீசி தனது இருக்கையுற்றான்

என்று விநாயக கவசம் முடியும். அதாவது அன்பு, உறுதி, ஆசாரம் ஆகியன எவருக்கு இருக்கிறதோ, அவர்களுக்கு மட்டும் இக்கவசத்தைச் சொல்லிக்கொடு; மற்றவர்கள் என்ன கொடுத்தாலும், அவர்களுக்குச் சொல்லி விடாதே என்று கூறிவிட்டு மரீசி முனிவர் அவருடைய இருப்பிடத்தை அடைந்தார் என்பதாகும்.

 

புத்தரும் ஒரு சொற்பொழிவில், எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும்; அவைகள் எல்லாவற்றையும் நான் சொல்லித் தரப்போவதில்லை என்று கூறுகிறார். அதிக விடயங்களைச் சொல்லச் சொல்ல குழப்பம் அதிகரிக்கும் என்பது அவருக்கும் தெரியும்.

 

ஜொராஸ்டர் சொல்லிய கருத்துக்கள் ஜெண்ட் அவஸ்தா (Zend Avesta) என்ற புனித நூலில் உள்ளது. சந்தஸ் என்ற சம்ஸ்கிருதச் சொல்லே ஜெண்ட் (ZEND) என்று திரிந்ததாக ஆன்றோர் கூறுவர். இந்தப் புனித நூலில் மூன்று இடங்களில் இந்த மந்திரங்களை யாருக்குச் சொல்லித் தரவேண்டும்,எப்படி சொல்லித் தர வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது.

 

தந்தை ஒருவர் மகனுக்குக் கற்பிக்கலாம்; அல்லது சஹோதரன் ஒருவன் மற்ற சஹோதரனுக்கு உபதேசிக்கலாம்; அல்லது அதர்வண் (புரோஹிதர்) தனது சீடனுக்குச் சொல்லித் தரலாம் என்று ஜொராஸ்டருக்கு அஹுரமஸ்தா (AHURA MAZDA அசுர மஸ்தா= பெரிய கடவுள்) சொன்னதாக ஆறாவது அமேஷா ஸ்பெண்டாவில் (Sixth Amesha Spenta) வருகிறது. இதே போல யாஸ்ட் 14, 46 (Yasht 14, 46) ஆகியவற்றிலும் சொல்லப்பட்டுள்ளது.

இந்து மதத்தில் எல்லா மந்திரங்களும் குரு மூலமாகவே கற்பிக்கப்படுகிறது. பிராமனர் உள்பட மூன்று வருணத்தார் பூணுல் போடும்போதும் அவர்களுக்கு தந்தைதான் காயத்ரீ மந்திரத்தை உபதேசிப்பார். அப்பொழுது மகனையும் தந்தையையும், புரோஹிதரையும் ஒரு பட்டு வேஷ்டியால் போர்த்தி மறைத்து விடுவர். இதன் பொருள் இது ரஹசிய மந்திரம்; அந்த ரஹசியத்தைக் காக்க வேண்டும் என்பதாகும்.

பிருஹத் ஆரண்யக (பெருங் காட்டு) உபநிஷதத்திலும் (6-3-12), சாந்தோக்ய உபநிஷத்திலும் (3-2-5-6) இவ்வாறு எழுதப்பட்டுளது. அதாவது மகனோ அல்லது தனது மாணவரோ இல்லாவிடில் மந்திரங்களைக் கற்பிக்காதே என்பது கட்டளை.

 

மதத்தில் தீட்சை பெற்றவர்களுக்கே ரஹசிய ஞானம் கிடைக்கும் என்று கிறிஸ்தவ புனிதர் பால் (St.Paul) கூறுகிறார்.

 

பாபிலோனியா, எகிப்து போன்ற நாகரீகங்களிலும் சில விஷயங்கள் எல்லோருக்கும் கிடைக்காது என்றும் அதில் சேர்ந்தவர்களுக்கு (Initiated)  மட்டுமே கிடைக்கும் என்றும் வரலாற்று அறிஞர்கள் எழுதியுள்ளனர்.

 

ரோமானிய சாம்ராஜ்யத்தில் பரவிய மித்ர (Mithra Cult) வழிபாடு நிலத்து அடியிலுள்ள குகைகளில் கற்பிக்கப்பட்டது. அது மட்டுமல்ல அந்த வழிபாட்டில் தீட்சை எடுத்துக் கொள்வோர் சவுக்கடியும் (flagellation) பெறவேண்டும்.

மித்ரனைப் போற்றும் ஒரு மந்திரத்தில் (யாஸ்ட் Yasht 10-122) சவுக்கடி விதிகள் கூறப்படுகின்றன. மூன்று பகல், மூன்று இரவில் குளித்த பின்னர் 30 சவுக்கடி அல்லது சாட்டை அடி பெறும், சாத்திரங்களைக் கற்ற அறிஞர்களே மித்ர பானத்தை அருந்தலாம் என்று ஜோராஸ்டருக்கு அசுர மஸ்தா கூறுகிறா

ர் என்று இந்த யாஸ்ட் சொல்கிறது. சில சந்தர்ப்பங்களில் இரண்டு பகல் இரண்டு இரவுகளில் குளித்து விட்டு இருபது கசையடிகள் வாங்கிய பின்னர் மித்ரனுக்காக தயாரிக்கப்பட்ட பானத்தை அருந்தலாம் என்றும் அதே மந்திரம் சொல்லும்.

 

ஐயப்ப விரதம் இருப்போர் குருமார்களிடம் தீட்சை பெறுவது இப்போதும் உள்ளது.  அதற்கு 41 நாள் விரதம் இருக்க வேண்டும். இதே போல விஜயாவாடவில் பவானி விரதம் இருப்போர் 41 நாட்களுக்கு சிவப்பு ஆடைகளை அணிந்து கோவில் குருமாரிடம் தீட் சை பெறுகின்றனர்.

 

ஏன் இந்த ரஹசியம்?

கண்ட கண்ட தோழான் துருத்திகளுக்கு மந்திர உபதேசம் செய்தால், அவர்களுடைய நடை உடை பாவனைகள் அந்த மந்திரத்தின் மதிப்பைக் குறைத்து விடும்; மக்கள அதில் நம்பிக்கை இழந்து விடுவர். எல்லா மதங்களிலும் போலி சாமியார்கள் உண்டு; அவர்கள் எல்லாம் நாஸ்தீகவாதிகளுக்கு உதவி செய்யவும் மதங்களின் மதிப்பைக் குறைக்கவும் பிறந்தவர்கள். மந்திரத்தின் மதிப்பையும் சக்தியையும் காப்பாற்ற ரஹசியம், பரம ரஹசியம் அவசியம்!

Source: M P Khareghat Memorial Volume-1, Bombay, 1953 (A Symposium on Indo-Iranian Subjects)

TAGS: ரகசியம், ரஹசியம், பரம, மந்திரம், ஜொராஸ்டர்

இது தொடர்பான எனது பழைய கட்டுரைகள்:–

போலி சாமியார் பற்றிய பழந்தமிழ்ப் …

https://tamilandvedas.com/…/போலி-சாமியார்-பற…

2 days ago – போலி சாமியார் பற்றிய பழந்தமிழ்ப் பாடல்கள் (Post No.4294) … கூடா ஒழுக்கம் என்னும் அதிகாரத்தில், போலி வேடம் போடும் ஆட்கள் …

மந்திரங்களை யாரும் கற்கலாமா? | Tamil and …

https://tamilandvedas.com/…/மந்திரங்களை-யாரு…

6 Nov 2013 – ஏன் சில மந்திரங்களை ஒரு சில வகுப்பினர் மட்டுமே கற்கலாம் என்று … எல்லோருக்கும் முன்பாக மன்னர் தனக்கும் காயத்ரீ மந்திரம் …

மந்திரங்களை யாரும் கற்கலாமா? | Swami’s …

swamiindology.blogspot.com/2013/11/blog-post_6.html

6 Nov 2013 – ஏன் சில மந்திரங்களை ஒரு சில வகுப்பினர் மட்டுமே கற்கலாம் என்று … எல்லோருக்கும் முன்பாக மன்னர் தனக்கும் காயத்ரீ மந்திரம் …

 

–SUBHAM–

 

மந்திரமும் யந்திரமும் யாருக்குப் பலன் தரும்? தமிழர் கண்டுபிடிப்பு! (Post No.3840)

Written by London swaminathan

Date: 22 APRIL 2017

Time uploaded in London:- 14-59

Post No. 3840

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

ஏழு விஷயங்களில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் அதில் பலன் கிடைக்கும்; நம்பிக்கை இல்லாமற் செய்தால் பலன் கிடைக்காது. இது இந்துக்கள் கண்டுபிடித்த உண்மை. இப்பொழுது விஞ்ஞானிகளும் இதை மெதுவாக — ஜாக்கிரதையாக- ஒப்புக்கொள்ள ஆரம்பித்துள்ளனர். இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு எனது இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கையில் இந்துக்கள் சொன்னது முழுக்க முழுக்க உண்மையே என்று எழுதியிருப்பார்கள்!

 

மந்திரமுந்  தேவு மருந்துங் குருவருளு ந்

தந்திரமும் ஞானந்  தருமுறையும் — யந்திரமும்

மெய்யெனில் மெய்யாய் விளங்குமே மேதினியிற்

பொய்யெனிற் பொய்யாகிப் போம்

 

–நீதிவெண்பா

பொருள்:

மேதினியில்=உலகத்தில்

மந்திரமும் = மறை (வேத) மொழிகளும்

தேவும் = கடவுளும்

மருந்தும் = மருந்துகளும்

குரு அருளும் = ஆசார்யனின் அருளும்

தந்திரமும் = தந்திரம் பற்றிக்கூறும் நூல்களும்

ஞானம் தரும் முறையும் = வழிபாட்டு முறைகளும்

யந்திரமும் = மந்திர எழுத்துக்கள் எழுதிய தகடுகளும்

 

(ஆக இவ்வேழும்)

மெய்யெனில் = மெய்யென்று நம்பினால்

மெய்யாய் விளங்கும் = உண்மையாகவே பலன் கொடுக்கும்

பொய்யெனில் = பொய்யென்று நினைத்தால்

பொய்யாகிப் போம் = பலிக்காது

 

மந்திரம் என்றாலேயே “நினைத்தவரைப் பாதுகாப்பது” என்று பொருள். அப்படிப்பட்ட ஒன்றை நம்பிக்கை இல்லாமல் சொல்லவே முடியாது.

 

நம்பிக்கை இருந்தால் பலன் கிடைக்கும் என்பதை நான்கு வேதங்களும் சொல்லுகின்றன:-

 

நம்பினார் கெடுவத்தில்லை இதுநான்கு மறை தீர்ப்பு

அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிகம் வரம் பெறலாம்

-என்பது மஹா கவி பாரதியின் வாக்கு.

 

சம்யாத்மா விநஸ்யதி (சந்தேகப் படுபவன் அழிவான்) என்பது கண்ண பிரானின் வாக்கு (பகவத் கீதை 4-40)

 

வள்ளுவனும் சொல்லுவான்:-

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்

வானம் நணிய துடைத்து (குறள் 353)

 

பொருள்:-

முதலி சந்தேகத்துடன் ஆரம்பித்து, பின்னர் ஐயம் தெளிந்து உண்மைப் பொருளை அறிந்தார்க்கு பூமியைவிட, தேவலோகம் மிக அருகில் வந்துவிடும்.

விஞ்ஞானமும் ஒப்புக்கொள்கிறது!

 

சோதனை செய்யப் போகும் புதிய, மருந்துகளின் உண்மைப் பலனைக் கண்டுபிடிக்க நோயாளிகள் பல பேருக்கு போலி மருந்துகளைக் (Placebo)  கொடுப்பார்கள் இன்னும் பலருக்கு உண்மை மருந்துகளைக் கொடுப்பார்கள்; சோதனைக்குட்படும் நோயாளிகள் மட்டும் இதில் பங்கு பெறுவார்கள்; டாக்டர்களுக்கோ நோயாளிகளுக்கோ யார் போலி மருந்தை , யார் உண்மை மருந்தைச் சாப்பிட்டனரெ ன்று தெரியாதவாறு பெயர் இல்லாமல் நம்பர்கள் எழுதி ரகசியமாக இந்த சோதனையை நடத்துவர்.

 

இதில் சில நேரங்களில் போலி மருந்து சாப்பிட்டோர், உண்மை மருந்து சாப்பிட்டவர்களைவிட விரைவில் குணமடைந்தனர். இதற்கு அவர்களின் (Placebo Effect) நம்பிக்கையே காரணம்.

placebo effect

noun

  1. a beneficial effect produced by a placebo drug or treatment, which cannot be attributed to the properties of the placebo itself, and must therefore be due to the patient’s belief in that treatment.

 

புதிய இயற்பியல் துறையான பார்டிகிள் பிஸிக்ஸ், குவாண்டம் பிஸிக்ஸ் (Particle Physics, Quantum Physics)  துறையில் கூட ஒருவர் கவனிப்பதால் சப் அடாமிக் பார்டிகிள்ஸ் (Sb Atomic Particles) பாதிக்கப்படுகின்றன என்று கண்டுள்ளனர். ஆக இந்தத் துறை வளர வளர இந்துமத உண்மைகள் மேலும் வலுப்படும்.

 

அறிவியலில் இரண்டு ஹைட்ரஜன் அணுக்களையும் ஒரு ஆக்ஸிஜன் அணுவையும் சேர்த்தால் தண்ணீர் உருவாகும். இது எல்லோருக்கும் பொது. ஆனால் ஆன்மீகத்தில் அப்படியல்ல. எவ்வளவு நம்பிக்கையுடன், மனம் மொழி மெய் ஆகிய மூன்று வழிகளில் — எவ்வளவு உண்மையைக் கடைப்பிடிக்கிறோமோ அந்த அளவுக்கு அது பலன் தரும். இதை நாலே வரிகளில் விளக்குகிறது நீதி வெண்பா.

சுபம்–

தென்புலத்தாருக்கு 96 கும்பிடு!

rameswaram

Rameswaram Agni Theertham where ancestors are worshiped on important days.

ஆராய்ச்சிக் கட்டுரையாளர்- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்- 1371: தேதி 26 அக்டோபர் 2014

தந்யம் யசஸ்யம் ஆயுஷ்யம் ஸ்வர்க்யம் சத்ரு விநாசனம்
குல சந்தாரகம் சேதி ச்ராத்தமாஹூர் மநீஷிண:
-மஹா பாரதம், அநுசாஸந பர்வம் ஸ.145

“ இறந்தோரை உத்தேசித்துச் செய்யப்படும் தர்ப்பணமானது செல்வம், புகழ், ஆயுள், ஸ்வர்கம் முதலிய நன்மைகளை அளிக்கும். எதிரிகளை ஒழிக்கும், தன் குலம் தழைத்தோங்கச் செய்யும்” —மஹா பாரதம், அநுசாஸந பர்வம் ஸ.145

உலகில் மிகவும் ஆச்சர்யமான பிறவிகள் இந்துக்கள். முன்னோர்களை அவர்கள் வழிபடும் முறை தனிச் சிறப்புடைத்து. இவர்கள் போல இறந்து போனோரைக் கொண்டாடும் இனம் உண்டோ என்றில், இல்லை என்று பகர ஒரு நொடியும் தேவை இல்லை. பெரிய தலைவர்கள் இறந்தால் அடக்கம் நடைபெறும் போது 21 முறை பீரங்கிக் குண்டு வெடித்து மரியாதை செய்வர். இதற்கு கடற்படை சம்பிரதாயமே காரணம் என்று கலைக் களஞ்சியங்கள் செப்பும். பின்னர் ஆண்டுதோறும் அவர்கள் கல்லறைக்குச் சென்று மலர் தூவுவர். ஆனால் இந்துக்களோ ஆண்டுக்கு குறைந்தது 96 முறை வணங்குவர். ஆதிகாலத்தில் மூன்று வர்ணத்தாரும் செய்த இக்கடன் இப்போது குறுகிப்போய் ‘’பிராமணர் மட்டும்’’ என்று ஆகிவிட்டது. அதுவும் அருகிப் போய் 96 முறைக்குப் பதில் 12 அல்லது 24 முறை என்று சுருங்கிவிட்டது. காலத்தின் கோலம்!!

தினமும் முன்னோர்களை வழிபடும் வழக்கத்தைப் “பஞ்ச யக்ஞம்” என்ற தினசரிக் கடமைகளில் காண்கிறோம். அது என்ன ஐவேள்வி?

திருவள்ளுவர் பதில் சொல்கிறார்:
தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை — (குறள் 43)

தென்புலத்தார்= தெற்கு திசையில் வசிக்கும் முன்னோர்கள்
தெய்வம்= கடவுள் என்பதன் சம்ஸ்கிருதச் சொல்
விருந்து = வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் (சாது, சந்யாசிகள்)
ஒக்கல் = சுற்றத்தார்,
தான் = தான் (அதாவது தனது சொந்தக் குடும்பம், அவர் வளர்க்கும் ஆடு, மாடு, மரத்தில் வசிக்கும் காக்கை, குருவி, வீட்டில் ஓடும் எறும்பு முதலியன. இதை பூத யக்ஞம் என்பர்= உயிரின வேள்வி)
என்று = என்ற
ஐம்புலத்து = ஐந்து இடங்களில் செய்ய வேண்டிய (பஞ்ச வேள்வி)
ஆறு= வழியினை
ஓம்பல் = பாதுகாத்தல்
தலை= சிறந்த அறம் ஆகும் (தர்மம்)
மனு ஸ்மிருதியில் 3-72 ஸ்லோகத்தில் கூறியதற்கும் இதற்கும் சிறிதும் வேறு பாடு இல்லை — மேலும் குறள் 41-ல்
இல் வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை (41)
என்பது மனு ஸ்மிருதியின் 3-78 ன் மொழியாக்கம் என்பதையும் இரண்டையும் கற்ற சான்றோர் உணர்வர்.

அதாவது கிருஹஸ்தன் என்பவன் வானப் ப்ரஸ்தம், சன்யாசம், பிரம்மசர்யம் என்ற மற்ற மூன்று நிலையில் உள்ளவர்க்கும் உதவுவதால் அதுதான் சிறந்த அறம் — கல்யாணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு மற்ற மூன்று நிலையில் உள்ளவர்களையும் ஆதரிப்பவர்கள் போற்றுதலுக் குரியவர்கள்.

thai amavasya

இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், பிள்ளை பெறுவது எதற்காக என்று புற நானூற்றில் கோப்பெருஞ்சோழன் சொல்கிறான் — சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கு வந்த பல புலவர்களில் ஒருவர் பொத்தியார். அவருக்கு இடம் தர மறுத்த சோழ மன்னன் புதல்வன் பிறந்த பின் வருக — என்கிறான். புதல்வர் எதற்காக? பிண்டோதக் கிரியை என்னும் இறுதி யாத்திரைக் கிரியை செய்வதற்காகும் என்று உரைகாரர்கள் நவில்வர்.

உரைகாரர் சொன்னால் நாங்கள் நம்பவேண்டுமா? என்போருக்கு அகநானூற்றுப் புலவர் செல்லூர் கோசிகன் கண்ணனார் — (கௌசிக கோத்ரத்துதித்த கிருஷ்ணன் என்னும் புலவர்) — வாய்மொழியாக உண்மை அறிதல் நலம்:

“இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மறு இன்று எய்துப
செறுநரும் விழையும் செயிர்தீர்காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்மலோர்” எனப்——— அகம்.66

பிள்ளைகள் இல்லாவிட்டால் நரகமா?

பிள்ளைகள் எள்ளும் நீரும் இரைத்து தர்ப்பணம், திதி முதலியவற்றைச் செய்தால் மறுமை இன்பம் கிடைக்கும் என்றால், பிள்ளைகள் பெற்றுக் கொள்ளாதோருக்கும், பிள்ளைகளே பிறவாதோருக்கும், இது பற்றி அறியாத ஜாதியினருக்கும் நரகம் வாய்க்குமா?

இல்லை. இல்லவே இல்லை. ஏனெனில் அவர்களுக்கும் சேர்த்து பிராமணர்கள் எள்ளும் நீரும் தெளித்து விடுகின்றனர். ஐயர்கள் சொல்லும் தர்ப்பண மந்திரங்களை அறிந்தோருக்கு இது தெள்ளிதின் விளங்கும் —( ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் வெளியீடுகளில் அண்ணா அவர்கள் எழுதிய தமிழ் மொழியாக்காத்தையும் உரையையும் அனைவரும் பயிலுதல் நன்று )

இதனால்தான் பிராமணர்களுக்குப் பொன்னும் பொருளையும் தமிழ் மன்னர்கள் வாரி வழங்கியதை சங்க இலக்கியத்திலும் 80,000 கல்வெட்டுகளிலும் காண்கிறோம்.

TharpaNam Pic

இதோ அவர்கள் சொல்லும் அற்புத மந்திரங்கள்:
எவர்களுக்குத் தாயோ தந்தையோ, சிநேகிதரோ, தாயாதிகளோ, பந்துக்களோ இல்லையோ — (தர்ப்பணம் செய்ய) — அவர்கள் எல்லாம் தர்ப்பை நுனியால் விடும் தீர்த்தத்தால் திருப்தி அடையட்டும்.

ஆகாய வழியாக வந்து இந்தத் தர்ப்பைப் புல்லில் எழுந்தருளுங்கள் என்று வேண்டும் போது அவர்கள் சொல்லும் மந்திரம் எல்லா இடங்களிலும் மங்களத்தையும் அமைதியையும் உண்டாக்கும்:

காற்று இனிமையாக வீசட்டும்
நதிகள் இனிமையைப் பெருக்கிக்கொண்டு ஓடட்டும்
செடி கொடிகள் இனிமை அளிக்கட்டும்
காடுகளில் உள்ள மரங்கள் இன்பம் தரட்டும்
சூரியன் மகிழ்ச்சி அளிப்பானாகுக
பசுக்கள் இனிமையான பாலைப் பொழியட்டும். (மதுவாதே ருதாயதே…..)

இவ்வாறு ஒரு ஆண் — தனது வம்சத்தில் பிறந்து இறந்த தந்தை, தாத்தா, கொள்ளுத் தாத்தா ஆகிய மூவருக்கும் நீர்க்கடன் செலுத்திய பின்னர், தாயின் வம்சத்திலும் தந்தை, தாத்தா, கொள்ளுத் தாத்தா என்று எள்ளும் நீரும் இரைப்பர். இந்த ஆறு பேருடைய மனைவிமார்களும் இதே போல மரியாதை பெறுவர். எல்லோரும் இறந்து போயிருந்தால் இப்படி 12 பேருக்கும் வழிபாடு நடக்கும். இந்த அற்புத முறையை உலகில் வேறு எங்கும் காண முடியாது!!

இனி இந்துக்கள் – குறிப்பாக பிராமணர்கள் செய்ய வேண்டிய 96 இறந்தார் கடமைகளைத் தருகிறேன் (ஸ்ரீரங்கம் பி.ஜே.ஸ்ரீனிவாசன் எழுதிய நூலில் இருந்து)
அந்தக் காலத்தில் தீ மூட்டி சிரார்த்தமாக நடந்தவை பின்னர் காலத்தின் கோலத்தினால் நீர்க்கடனாக மாறியது. அதில் ஆண்டுக்கு குறைந்தது 96 முறை இதைச் செய்ய வேண்டும் என்று சான்றோர் எழுதிய சாத்திரங்கள் கூறும்:

adi amavasya

12 மாதப் பிறப்பு தர்ப்பணங்கள்
12 அமாவாசை தர்ப்பணங்கள்
12 அஷ்டக தினங்கள் (மார்கழி, தை,மாசி,பங்குனி ஆகிய 4 மாதங்களின் சப்தமி,அஷ்டமி, நவமி தினங்கள்)
16 மஹாளய பட்ச தினங்கள் (சூரியன் கன்யா ராசியில் பிரவேசிக்கும் போது புரட்டாசி மாதத்தில் கிருஷ்ண பக்ஷத்தில் செய்யப்படும்)
4 யுக நாட்கள் (கிருத, த்ரேதா, த்வாபர, கலி யுகம் தொடங்கிய யுகாதி நாட்கள்)
14 மன்வந்தர நாட்கள் (14 மனுக்களின் ஆட்சி துவங்கிய நாட்கள்)
26 வ்யதீபாத—வைக்ருதி—விஷ்கம்ப தர்ப்பணங்கள் (27 வகை யோகங்களில் வ்யதீபாத யோகம் வரும் 13 + வைக்ருதி—விஷ்கம்ப யோகம் வரும் 13 தர்ப்பணங்கள்)
இது தவிர கிரகண காலங்களிலும் இறந்தோர் திதி வரும் நாட்களிலும் செய்வர்.

-சுபம்-