அந்தி, சந்தி, மந்தி,வந்தி, பந்தி தெரியுமா? (Post No.6442)

Written by London swaminathan


swami_48@yahoo.com


Date: 25 May 2019


British Summer Time uploaded in London – 17-24

Post No. 6442

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

1. – ஜாதகத்தில் இது இருக்கும் இடம் முக்கியமானது; சனியின் புதல்வன்; கலியாணச் சடங்கு, மாமரம்,

2. – ஓணான்; நிறம் மாறும் வகையும் இதிலுண்டு

3. – இனிப்பாக இருக்கும்

4. சாகும் போதூ ஹே ராம் சொன்ன தலைவர்

5. மூன்று முறை சொன்னால் அமைதி ஏற்பாடும்

6. – பிடூகு மண் சுமந்த ஆள் (சிவன்)

7. – அபூர்வ பிள்ளைகள் பெற்ற பெண்

8. – மரத்துக்கு மரம் தாவும்

ANSWERS

1.மாந்தி- ஜாதகத்தில் இது இருக்கும் இடம் முக்கியமானது; சனியின் புதல்வன்; கலியாணச் சடங்கு, மாமரம்,

2.ஓந்தி- ஓணான்; நிறம் மாறும் வகையும் இதிலுண்டு

3.பூந்தி- இனிப்பாக இருக்கும்

4.காந்தி- சாகும் போதூ ஹே ராம் சொன்ன தலைவர்

5.சாந்தி- மூன்று முறை சொன்னால் அமைதி ஏற்பாடும்

6.வந்தி- பிடூகு மண் சுமந்த ஆள் (சிவன்)

7.குந்தி- அபூர்வ பிள்ளைகள் பெற்ற பெண்

8.மந்தி- மரத்துக்கு மரம் தாவும்

குரங்கு கையில் கொடுத்த பூ மாலை போல! (Post No.4285)

Written by London Swaminathan

 

Date:9 October 2017

 

Time uploaded in London- 7-14

 

Post No. 4285

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

எனது தபால் தலை ஆல்பத்தில் பறவைகளுக்கு பூக்களுக்கு, மிருகங்களுக்கு என்று பல தனித்தனி ஆல்பங்கள் வைத்திருக்கிறேன். அதில் குரங்குகள் படங்கள் உள்ள அஞ்சல் தலைகளைப் பார்த்   தவுடன் குரங்குப் பழமொழிகள் ஞாபகம் வந்தது. கூடவே கொஞ்சம் புத்தகத்தையும் பார்த்து எடுத்தேன். பழமொழிகள் பற்றி எனது பிளாக்கில்(BLOGS) 50-க்கும் மேலான கட்டுரைகள் உள. அத்துடன் இதுவும் சேரட்டுமே!

 

 

1.குரங்கானாலும் குலத்திலே கொள்ள வேண்டும்

2.குரங்கின் கை பூ மாலை

3.குரங்கின் கையில் கொள்ளி அகப்பட்ட கதை

4.குரங்கின் கையில் சிக்கிய பாம்பு போல

 

5.குரங்கின் தலையில் கரகம் வைத்து காளி கும்பிட்டது போல

6.குரங்கின் பீயை மருந்துக்குக் கேட்டால் கொடுக்குமா? அடித்து வாங்க வேண்டுமா?

7.குரங்கின் வயிற்றிலே குஞ்சரம் பிறந்த்து போல

8.குரங்கு எல்லாம் கூட்டம் கூட்டமாக இருக்கும்

9.குரங்கு ஏறாத கொம்பு உண்டா?

 

10.குரங்கு கள்ளும் குடித்து, பேயும் பிடித்து, தேளும் கொட்டினால் என்ன கதி ஆகும்?

 

 

11.குரங்கு கையில் குட்டிக்குக் கள் வார்தாற்போல

12.குரங்கு கையில்பூமாலை அகப்பட்டது போல

13.குரங்குக்குப் புத்தி சொல்லி தூக்கணாங் குருவி கூடு இழந்தது (பஞ்ச தந்திரக் கதை)

 

14.குரங்குக்கும் தன் குட்டி பொன் குட்டி (காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு)

 

 

15.குரங்கு தன் குட்டியின் கையைக் கொண்டு பதம் பார்க்கிறது போலப் பார்க்கிறான்.

 

16.குரங்குப்பிடி போல பிடிக்க வேண்டும்

17.குரங்குப் பிடியே பிடி

18.குரங்குப் பிணமும் குறவன் சுடுகாடும் கண்டது இல்லை

19.குரங்குப் புண் ஆறாது

20.குரங்குப்புண் பிரம்மாண்டம்

21.குரங்கு முகமெல்லாம் ஒரு முகம்

 

22.மரத்தில் அறைந்த முளையை மர்க்கடம் பிடுங்கினாற்போல

 

23.மந்தி மயிரை மருந்துக்குக் கேட்டால் மரத்துக்கு மரம் தாவும்

 

24.உண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு- கம்பன்

25.மூஞ்சியைப் பாரு, முகரையைப் பாரு, குரங்கு மூஞ்சி!

26.குற்றாலத்துக் குரங்கே, மரத்தை விட்டு இறங்கு

27.அவன் தம்பி அங்கதன்

 

FROM SANSKRIT :–

28.மற்கட (குரங்கு வழி) நியாயம், மார்ஜர ( பூனை வழி) நியாயம்

குரங்கானது குட்டியைத் தூக்காது; குட்டிதான் பிடித்துக்கொள்ளும்; பூனையின் குட்டியை பூனையே வாயில் தூக்கிச் செல்லும்.

 

–SUBHAM–