ஐன்ஸ்டீன் மூளை பற்றிய ரகசியங்கள்!

usa e=mc2

Research Article No. 2033

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 1st August  2015

Time uploaded in London : – 13-25

(This is already published in English a few days back)

ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டை விளக்க ஒரு கணித வல்லுநர்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு பேராசிரியர் மிகவும் சிரமப்பட்டு அந்த கொள்கையை விளக்க முற்பட்டார். மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தார். கூட்டத்தில் இருந்த அறிஞர்கள் பொறுமை இழந்தனர்; ஒரு துணிச்சல்காரர் எழுந்து சொன்னார்:

“அன்பரே! ஐன்ஸ்டீனின் தத்துவம் 12 பேருக்கே புரிந்தது என்று கேள்விப்பட்டேன். நீங்கள் பேசியதோ எங்களில் ஒருவருக்கும் விளங்கவில்லை. ஆகவே நீவீர் ஐன்ஸ்டீனுக்கும் மேலான அறிஞரே!”

(பழிகரப்பு அங்கதம் வாழ்க)

Xxxxx

india eistein

நான் கணித மேதை அல்ல!!

சர் வில்லியம் ராதென்ஸ்டைன் என்ற ஓவியர் ஐன்ஸ்டீனின் ஓவியத்தை வரைந்தார். இதற்காக ஓவியருக்கு முன்னால் ஐன்ஸ்டீன் மணிக்கணக்கில் உட்கார வேண்டி வந்தது. ஆனால் ஐன்ஸ்டீன் கொஞ்சமும் நேரத்தை வீணாக்க வில்லை. அவருடன் ஒருவர் வந்திருந்தார். அவர் ஒரு மூலையில் சிவனே என்று அமர்ந்திருந்தார். அவ்வப்பொழுது ஐன்ஸ்டீன் சில கணிதப் புதிர்களைப் போடுவதும் அதை அவர் விடுவிப்பதுமாக இருந்தது.

ஓவியம் வரைந்த பின்னர் ராதென்ஸ்டைன், மெதுவாக ஐன்ஸ்டீனிடம் யார் அந்த ஆசாமி என்று கேட்டார். “அவரா? அவர்தான் என்னிடம் கணிதமேதையாக வேலை செய்பவர். எனக்கு கணக்கு வராது. ஆகையால் அவ்வப்பொழுது நான் போடும் கணக்குகளைச் சரிபார்க்க அவரை வைத்திருக்கிறேன்” என்றார். பணக்காரர்கள் எல்லோரும் கணக்குப்பிள்ளை ஒருவரை வேலைக்கு வைத்திருப்பார்கள் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். விஞ்ஞானிகள் , “கணிதமேதைப்பிள்ளை”-களையே வேலைக்கு வைத்திருக்கிறார்கள்!!

Xxxx

E= mc2

ஐன்ஸ்டீனுக்கு சின்ன மூளை!!!

ஆங்கிலத்தில் யாருக்காவது சின்ன புத்தி இருந்தால் “பறவை அளவுக்குதான் மூளை— bird’s brain பேர்ட்ஸ் பிரயின் – என்று கேலி செய்வர். டால்பின் போன்ற பிராணிகளுக்கு மூளை மிகவும் பெரிதாகையால் அவை மிகவும் புத்திசாலிப் பிராணிகளாக இருக்கின்றன என்றும் படிக்கிறோம். ஆனால் வியப்பான செய்தி ஐன்ஸ்டீனுக்கு நம்மைப் போன்ற சாதாரண ஆட்களைவிட மூளை சிறியது என்பது அவர் இறந்தபின்னர் உடலைப் பரிசோதித்த போதுதான் தெரிந்தது!

ஐன்ஸ்டீனின் மூளையை 240 துண்டு போட்டு உலகெங்கிலும் உள்ள மூளையியல், நரம்பியல் ஆராய்ச்சியாளர்களுக்குக் கொடுத்தனர். அதை ஆரய்ந்ததில் ஒரு குறிப்பிட்ட (ப்ரீ Fராண்டல் கார்டெக்ஸ்) உறுப்பு அவருக்கு சிறப்பாக அமைந்திருந்ததைக் கண்டனர். இதுதான் அவரை உலகப் பெரும் இயற்பியல் விஞ்ஞானியாக்கி இருக்கிறது ((The researchers noted a uniquely formed pre-frontal cortex and concluded that this would explain the kind of abstract thinking Einstein would have needed for his experiments on the nature of space and time – such as imagining riding alongside a beam of light.))

Xxxx

Albert_Einstein_1979_USSR_Stamp

மந்தமான ஐன்ஸ்டீன்!

ஐன்ஸ்டீன் சிறுவயதில் யாருடனும் அதிகம் பேச மாட்டார். தனியாகவே விளையாடுவார். உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி ஆகியன எல்லாம் வயதுக்கேற்றவாறு இல்லை .பேச்சே வரவில்லை. டாக்டரிடம் அழைத்துச் சென்றனர். அவரும் இந்தக் குழந்தை – கொஞ்சம் மந்தம்தான் – என்று சொல்லிவிட்டார். பெற்றோர்களுக்கோ பெரும் கவலை.

ஒரு நாள் இரவுச் சாப்பாட்டிற்கு அனைவரும் மேஜையில் அமர்ந்தனர். திடீரென சின்னப் பயல் ஐன்ஸ்டீன், “அம்மா இந்த சூப்பு மிகவும் சூடாக இருக்கிறது” என்று தாய்மொழியில் (ஜெர்மன் மொழியில்) கத்தினான். பெற்றோர்களுக்குத் தூக்கிவாரிப்போட்டது. பேரானந்தம்! ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

“அடப் பாவி மகனே! தேனே! பாலே! கற்கண்டே! என் அமுதமே! குஞ்சு மணியே! ஏனடா இவ்வளவு காலம் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை?” என்று சொல்லி கட்டி அணைத்துக் கொண்டனர்.

சின்னப் பையன் ஐன்ஸ்டீன் சொன்னான்:

“இவ்வளவு காலம் வரை எல்லாம் சரியாக இருந்தது!” (அதனால் பேசத் தேவை எழவில்லை).

இதற்குப் பின்னர் இப்படி சிறு வயதில் வளர்ச்சி குன்றி, பிற்காலத்தில் பெரும் மேதைகளாக வரும் “நோய்க்கு” ஐன்ஸ்டீன் சிந்Dரோம் என்று பெயர் சூட்டினர் மருத்துவ வல்லுநர்கள்.

உங்கள் பிள்ளை கொஞ்சம் மந்தமாக இருந்தால் கவலைப்படாதீர்கள்” யார் அறிவார்? ஐன்ஸ்டீனை விடப்பெரிய கண்டுபிடிப்புகளைச் செய்யக் கூடும்!!!

Xxxxxx

mocambiqe

ஐன்ஸ்ட்டீனும் கடவுளும்

ஐன்ஸ்டீனுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா? அவரே சொன்ன பதில்:–

ஒரு சிறுவன் ஒரு நூலகத்தில் நுழைகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தச் சிறுவன் வியப்பான் இவ்வளவு புத்தகங்களையும் யார் எழுதியது? எவ்வளவு மொழிகள்? யாரோ இதை அழகாக ஒரு வரிசையில் வைத்திருக்க வேண்டும் என்று அந்தைப் பையன் வியப்பான். நூல்களை அடுக்கியவரோ, புத்தகத்திலுள்ள மொழிகளோ , அவைகளின் ஆசியரோ – யாரையும் அவனுக்குத் தெரியாது.

எவ்வளவு பெரிய அறிஞரானாலும் இப்படித்தான் பிரபஞ்சத்தைப் பார்த்து வியப்பார்கள் என்று நான் நம்புகிறேன். ஒரு மர்மமான முறையில் இந்தப் பிரபஞ்சமே இயங்குகிறது. அற்புதமான, அபாரமான ஒரு வரிசைக் கிரமத்தில் இந்தப் பிரபஞ்சம் இயங்குகிறது. அதன் முழு விளக்கங்களும் நமக்குப் புரிவதில்லை”.

s_einstein-8

யானை இருந்தாலும் ஆயிரம் பொன்………………………

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்…….. என்று தமிழில் ஒரு பழ மொழி உண்டு. இது போல எல்விஸ் பிரஸ்லி என்ற பாடகர், மர்லின் மன்றோ என்ர நடிகை முதலான பத்துப் பேர் இறந்த பின்னரும் அவர்களின் பாடல், நடிப்பு, பெயர்கள், பிராண்டுகள் மூலம் ஏராளமான ராயல்டி தொகை கிடைக்கிறது. அதாவது உலகிலேயே பெரிய பத்து – செத்துப் போன—இப்போது பணம் உண்டாக்கும் பணக்காரர்கள்– என்று சொல்லலாம். இந்த பத்துப் பேரில் ஐன்ஸ்டீனும் ஒருவர். ஆண்டுக்கு அவர் பெயர் – புகழ் – மூலம் கிடைக்கும் வருவாய் இருபது மில்லியன் ( 2 கோடி) டாலர்கள்!!!

Einstein.stamp

–சுபம்–