எதிரிகளை ஒழிக்க அதர்வண வேதத்தை பயன்படுத்து- மநு (Post 7645)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7645

Date uploaded in London – 3 March 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

 மநு நீதி நூல் – பகுதி 48

மானவ தர்ம சாஸ்திரம் என்னும் மனு நீதி நூலில் வெற்றிகரமாக  பத்து அத்தியாயங்களை முடித்து 11ஆவது அத்தியாயத்தில் நுழைகிறோம். முதல் நூறு ஸ்லோகங்களைக் காண்போம். இந்த அத்தியாயம் பிராயச்சித்தம்  என்னும் கழுவாய் பற்றிப் பேசுகிறது. முக்கியமான விஷயம் இதில் பெரும்பாலனவை பிராமணர்களுக்கானது .

முதலில் சுவையான விஷயங்கள் புல்லட் (bullet points)  பாயிண்டுகளில் :–

ஸ்லோகம் 11-76 TO 78

சரஸ்வதி நதியில் நீரோட்டத்துக்கு எதிராக நதி உற்பத்தியாகும் இடம் வரை நடக்கவேண்டும் என்பது ஒரு தண்டனை/ பிராயச் சித்தம். இதிலிருந்து இவர் சிந்து- சரஸ்வதி நாகரீக காலத்தவர் அல்லது அதற்கு முந்தியவர் என்பது தெளிவாகிறது. ஆகவே இவர் பாபிலோனிய ஹமுராபிக்கும் முந்தையவர். உலகத்தில் முதல் முழு நீள சட்டப் புஸ்தகத்தை எழுதிய நிபுணர். ஆனால் எல்லா புராணங்களையும் அப்டேட் UDATE  செய்தது போலவே மனு நீதியையும் புதுப்பித்திருக்கின்றனர். வேதம் சொல்லிக்கொண்டே நுறு யோஜனை / 1000 மைல் நடக்க வேண்டும் என்பது இன்னும் ஒரு பிராயச் சித்தம். இவை அனைத்தும் பிரமணர்களுக்கான கடும் தண்டனைகள். tamilandvedas.com, swamiindology.blogspot.com

தீவிர பிராமண ஆதரவு சுங்க வம்சம் (Sunga Dynasty) வரை அப்டேட் UPDATE ஆனதால் பிராமண ஆதரவு ஸ்லோகங்களையும் காண முடிகிறது. 

ஸ்லோகம் 11-91/99

குடிகார பிராமணர்களுக்கு கடும் தண் டனை விதிக்கிறார் மநு .

ஸ்லோகம் 11-33

பிராமணர்களின் ஆயுதம் வாக்கு தான் ; அவர்கள் அதர்வ வேதத்தைக் கொண்டு எதிரிகளை விழுத்தட்டலாம் என்கிறார் . எதிரிகளை ஒழிக்க அதர்வண வேதத்தைப் பயன்படுத்து என்று அறிவுறுத்துகிறார்.

ஸ்லோகம் 11-65 & 11-69

மரங்களை வெட்டுவது தவறு; ஒட்டகம் கழுதை போன்ற பிராணிகளைக் கொல்வது தவறு என்கிறார். இதிலிருந்து 3000 ஆண்டுகளுக்கு  முன்னரே புறச் சூழல் பற்றி கவலைப்பட்டதும், அஹிம்சையைப் பின்பற்றுவதே நல்லது என்ற உணர்வும் இருந்ததை அறியலாம்.

ஸ்லோகம் 11-15

திருவள்ளுவர் சொல்லுவது (குறள்  1077, 1078) போல மனுவும் கருமிகளின் கையை முறுக்கி முகவாய்க் கட்டையில் குத்து விட்டுப் பொருட்களை பறித்து நல்ல பணிகளுக்கு கொடுப்பதில் தவறு இல்லை என்கிறார் . அதாவது பணக்கரர்களைக் கொள்ளையிட்டு ஏழைகளுக்கு கொடுத்த ராபின்ஹுட் (Robin Hood) ஆக மாறலாம் என்பார் tamilandvedas.com, swamiindology.blogspot.com

 .

பாவ மன்னிப்பு (Confession) ஓ.கே. என்று ஆதரவு தருகிறார். பலர் முன்னிலையிலும் தவற்றை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டால் விட்டுவிடலாம் என்பது மனுவின் மனிதாபிமாதைக் காட்டுகிறது.

ஸ்லோகம் 11-1/2 ஒன்பது விதமான பிராமணர் களுக்கு உதவி செய்யவேண்டும் என்று ஆதரவு தருகிறார்.

ஸ்லோகம் 11-55 பஞ்ச மஹா பாதகங்கள் என்ன என்பதை விளக்குகிறார்.

ஸ்லோகம் 11-49 to 11-54 என்னென்ன பாவங்களுக்கு என்னென்ன நோய்கள் வரும் என்று பட்டியல் தருகிறார். தற்கால டாக்டர்கள் இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இது சரஸ்வதி நதி தீர நாகரீக நம்பிக்கை என்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும்.

பசுவைக் (11-60) கொன்றால் , பிரமணனைக் (11-55) கொன்றால், தங்கத்தைத் திருடினால் (11-49)  , தகாத முறையில் பாலியல் உறவு கொண்டால் என்ன தண்டனை என்றும் விளம்புகிறார் . ஒரு தண்டனை 12 ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டும் மண்டை ஓட்டுக்(11-73)  கொடியுடன்!

11-36 யாருக்குப் புரோகிதம் செய்யும் தகுதி உண்டு என்றும் வரையறுக்கிறார். tamilandvedas.com, swamiindology.blogspot.com

11-25 பிராமணன் யாகத்துக்கான பொருளுதவியைத் தவறாகப் பயன்படுத்தினால் பிணம் தின்னும் கழுகாகவோ காகமாகவோ பிறப்பான் என்று எச்சரிக்கிறார்

subham