மனைவியிடமிருந்து தப்பிப்பது எப்படி ??? (Post No.9048)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9048

Date uploaded in London – – 18 DECEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மனைவியிடமிருந்து தப்பிப்பது எப்படி ???

Kattukutty

( கணவன்மார்களேவெட்கப்படாமல் உங்கள் மனைவி,மகள்

மற்றும் சகோதரிகளிடமும் காண்பியுங்கள்)

மனைவிடமிருந்து தப்பிப்பது எப்படி???

“இதைத் தான் ரொம்ப நாளா எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் சார்” என்று நினைத்துக் கொண்டிருக்கும் அன்பர்களுக்கு ஒரு வார்த்தை.

பாத்திரங்களை விட்டெறியும், அல்லது பயங்கரமான ஆயுதங்களான அதாவது விளக்குமாறு, முறம், தடி, காய் வெட்டும் கத்தி, கரண்டி போன்றவற்றை “பிரயோகிக்கும்போது” தப்பிப்பது எப்படி என்ற சொல்லப் போவதில்லை……….. நாம் வழக்கமாக வாரா வாரம் காய்கறி வாங்கி வந்த பின் “வாங்கிக்” கட்டிக் கொள்கிறோமே அதிலிருந்து தப்பிப்பது எப்படி என்பதைப் பற்றி மட்டுமே பற்றி சொல்லப் போகிறேன்.

மனைவி சொல்கிறாள் :-

“எப்படிய்யா ஒரே முத்தல் வெண்டைக்காயையும், முத்தின கத்திரிக்காயையும் வாங்கிட்டு வந்திருக்கீங்க …… அந்த காய்கறிக்காரி, முத்தலும், தொத்தலுமா இருக்கற காயை உங்க தலையில கட்டிருக்கிறாள்……..”

நாம் குற்ற உணர்வுடன் “இது அவள் கொடுக்கவில்லை, நானே

பொறுக்கி எடுத்தேன்”………” என்கிறோம்.

“உங்கம்மா! உங்கள எப்படித்தான் வளர்த்தாளோ உங்கம்மா…..”

எங்கம்மாவுக்கு ஒரு “அடி”

“ஆமா, உங்கப்பா கூட கடைக்கு போவேளே அவர் கூட சொல்லித் தரல்லயா????”

அப்பாவுக்கும் ஒரு “அடி”

“உங்காத்து பரம்பரையிலேயே யாருக்குமே காய்கறி வாங்கத் தெரியாதா???”

எங்க பரம்பரைக்கே ஒரு “ஆப்பு”…….

“கடவுளே, இவங்களையெல்லாம் எப்படித்தான் படைத்தாயோ???”

கடைசியில் வைத்தாள் ஒரு பெரிய ஆப்பு கடவுளுக்கே!!!

இதோ காய்கறிகள் வாங்குவது எப்படி என்ற ஆராய்ச்சியில்

ஈடுபட்டு “மாஸ்டர் டிகிரி”யே வாங்கிவிட்டேன், அதாவது என் மனைவியே பக்கத்து வீட்டு பெண்மணியிடம் “உங்காத்துக்கு

ஏதாவது காய்கறி வேணும்னா சொல்லுங்கோ,

எங்காத்துக்காரரை விட்டு வாங்கிண்டு வரச் சொல்றேன். ஒரு சொத்தை, ஒரு முத்தல் இருக்காது, சுத்தமா புதுசா வாங்கிண்டு வருவார்” என்று சொல்கிறாள் இப்போது!

வெண்டைக்காய் – நுனியை உடைத்தவுடன் படக்கென்று உடைய

வேண்டும் வளையக்கூடாது. அப்படியே உடைந்தாலும் பச்சையாகவும் தொடுவதற்கு மென்மையாகவும் இருக்க வேண்டும்.

பீன்ஸ் – வளைத்தவுடன் படக்கென்று உடையவேண்டும். எல்லா பீனஸையும் உடைக்க முடியாது. ஒருபக்கம் நுனியைக் கிள்ளினால் அதிக நார் இருக்கக்கூடாது, அப்படியே இருந்தாலும் எளிதில் உரிபடும்.(நீங்கள் மனகுவது தெரிகிறது …எப்படி அத்தனையும் உரிச்சு பார்ப்பது) நீங்கள் தொட்டவுடனேயே தெரியும் முத்தலா இல்லையா என்று.

அவரை – விதை புடைத்துக் கொண்டு இல்லாமல் வளைய வேண்டும்.

கொத்தவரங்காய் – பீன்ஸ் மாதிரி படக்கென்று உடைய வேண்டும

வாழைத்தண்டு – வெள்ளையாக இருப்பதுடன், நுனியை நகத்தினால் கிள்ளினால், நார் வரக்கூடாது.

முருங்கைக்காய் – விதைகள் புடைத்துக்கொண்டு இல்லாமல் ஒரே மாதிரி பிரம்பு மாதிரியாகவும் முறுக்கினால் நன்றாக வளைய வேண்டும்

வெங்காயம் – கரு நீலம் இல்லாமல் லைட் ரோஸ் கலரில் இருக்க வேண்டும்

சேனைக் கிழங்கு – வெண்மையாக இருக்க வேண்டும். சிவப்பாக

இருந்தால் அரிக்கும். வாங்கி 2 நாள் கழித்தே சமைக்க வேண்டும்.

சேனையை நறுக்கியவுடன் புளித் தண்ணீரில் போட்டால் அரிக்காது.

கருணைக்கிழங்கு – தோலை உரித்தால் சிவப்பாக இருந்தால் நல்லது, சீக்கிரம் வேகும். சுவையாகவும் இருக்கும்

உருளைக்கிழங்கு- பச்சை நிறம் கூடாது. முளையோ, வேரோ, விட்டிருக்கக் கூடாது. அமுங்கக் கூடாது.

முள்ளங்கி – முடி முளைத்திருக்க கூடாது. கையினால் தொட்டால் சாப்டாக வழ வழ என்று இருக்கவேண்டும்.

பச்சை மிளகாய் – கெட்டியாக, மெலிந்ததாக இருக்க வேண்டும்.

தடியாக இருத்தால் உறைப்பு கம்மியாக இருக்கும்

பூண்டு- சிறியதாக இருக்க வேண்டும்

சேம்பு – கூடிய மட்டிலும் உருண்டையாக இருக்கும் படி பொறுக்கவும்.

முட்டை கோஸ் – கெட்டியாக, பச்சையாகவும் கனமாகவும் இலை பிரியாமலும் இருக்க வேண்டும்.

காலி ப்ளவர் – வெண்மையாகவும் இலைகள் பச்சையாகவும், அடர்த்தியாகவும் இருக்க வேண்டும். பூவின் மேல் பிரவுன் நிற

புள்ளியிருந்தாலும் வாங்கலாம். பூ மஞ்சள் நிறமாகவோ, மஞ்சள்

புள்ளிகள் இருந்தாலோ வாங்கக் கூடாது.

தக்காளி -கெட்டியாக, சிவப்பும், பச்சையாகவும் கலந்த நிறமுடையதாக வாங்கவேண்டும் மஞ்சள் நிறம் துளியும்

இருக்கக் கூடாது. மற்ற காய்கறிகளுடன் சேர்த்து வைக்காமல் மூங்கில் தட்டில் அல்லது பிளாஸ்டிக் தட்டில் பரத்தி வைக்க வேண்டும்

வெள்ளரிக்காய் – கெட்டியாக பார்த்து வாங்கவும். இரு புறமும்

நறுக்கி அந்த நறுக்கிய பகுதியைத் தேய்த்தால் நுரை வரும். அதன் கசப்புத்தன்மையும் நீங்கி விடும்.

புடலங்காய் – முறுக்கிப் பார்த்தால் நெளிய வேண்டும். கோடு தெரியக் கூடாது.

பீட்ரூட், கேரட் – பசுமையாகவும், கெட்டியாகவும் இருக்க வேண்டும்.

பாகற்காய் – நல்ல கரும் பச்சை நிறமாக இருக்க வேண்டும்

வாழைப் பூ – கெட்டியாக, கனமாக, இருக்க வேண்டும் இதழ்கள்

பிரிந்திருக்கக் கூடாது்.

சுரைக்காய் – கனமானதாக வாங்க வேண்டும்

முசுப்பலா – தோல், கிள்ள வர வேண்டும்.

கத்தரிக்காய் – கரு நீலம் கூடாது. வெளிர் நீலம் சுவையாக இருக்கும் பாவாடை( மேல் உள்ள பச்சைத்தோல்) கத்தரிக்காயை ஒட்டி இருக்க வேண்டும். அழுத்தினால் மென்மையாக இருக்க வேண்டும்.

வாழைக்காய் – பட்டையாக மூன்று புறமும் கெட்டியாக இருக்க வேண்டும். நுனி கருத்திருக்கக் கூடாது.

கீரைகள் – தண்டு கனமாக இருக்கக் கூடாது. தண்டை ஒடித்தால்

படக்கென்று ஒடிய வேண்டும் சிறிய இலைகளாக இருக்க வேண்டும் இலைகளில் ஓட்டை இருந்தாலும் பரவாயில்லை.

காய்களை நறுக்கும் போது வாழைத்தண்டு, வாழைப்பூவை நறுக்கும் போது, மோர் கலந்த நீரிலும், கத்தரிக்காய், சுண்டைக்காய், பாகற்காய்களை நறுக்கும்போது அரிசி

கழுவிய நீரிலும், போட்டால் அதன் நிறம் மாறாது. கசப்பு துவர்ப்பு, உவர்ப்பு போன்றவை குறையும்.

கருணை, சேனை நறுக்கும்போதே புளித்தண்ணீரில் போட்டு புளித்தண்ணீரில் வேக வைத்தால் சாப்பிடும் போது நமைச்சல் இருக்காது.

கீரைகளை சமைக்கும்போது மூடி வைக்கக் கூடாது.

முருங்கைக் கீரையை ரொம்பவும் வேக வைக்கக் கூடாது

பச்சை நிறம் மாறக்கூடாது.

அகத்திக் கீரையை நன்றாக வேக வைக்க வேண்டும்.

அதாவது பச்சை நிறம் மாற வேண்டும்

பழ மொழி – “வெந்து கெட்டது முருங்கைக் கீரை

வேகாமல் கெட்டது அகத்திக்கீரை”!

வெந்தயக்கீரை சாம்பார் செய்யும்போது, பருப்பு கரைத்து விடும் முன் கீரையை சாம்பாரில் போட்டு சிறிது நேரம் வேக வைத்தால் சாம்பார் கசக்காது.

தண்டு கீரையின் தண்டு கனமாக இருக்கும். மலச்சிக்கலைப் போக்கும். அதன் தோலை சற்று லேசாக சீவி மூன்று மூன்று

அங்குலமாக நறுக்கி சாம்பாரிலோ, மோர் குழம்பிலோ போடலாம்.

நாம் காய் வாங்கும்போது “கொசுறு” அதாவது இலவசம் என்று

கொத்தமல்லியும்கறிவேப்பிலையும் தருவார்கள்அது மாதிரிதான் இதுவும் “கொசுறு!!!

சில காய்களின் மருத்துவ குணங்கள்

அவரைக்காய் – நரம்புகள் வலுப் பெறும், மலச்சிக்கலைப் போக்கும்

கத்தரிக்காய் – உடலின் உஷ்ணத்தைத் தணிக்கும்

வெண்டைக்காய் – ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

முருங்கைக்காய் – ஆண்மைக் குறைவு, கருப்பை கோளாறுகளை நீக்கும்

வெள்ளரிக்காய் – கல்லீரல் பலம் பெற,மஞ்சள் காமாலை குணமாக, தாகத்தை தணிக்க,குளிர்ச்சியைத்தர, எளிதில் ஜீரணிக்க

பூசணிக்காய் – இருமல் காச நோய் குணமாக

சுரைக்காய் – சிறு நீரக கோளாறுகள் நீங்க, பொட்டாசியம் தர

வாழைக்காய் – மலச்சிக்கலைப் போக்க

மணத்தக்காளிக்காய் – குடல் புண்களைப போக்க

பாகற்காய் – வயிற்றிலுள்ள புழு பூச்சிகள் நீங்க, குளிர்ச்சி தர

முட்டைகோஸ் – நெஞ்சுவலி வராமல் தடுக்க, ஜீரணத்திற்கு

சுண்டைக்காய் – நரம்பு வலுப்பெற, எலும்பு வளர்ச்சியடைய

தேங்காய் – கருப்பை, வயிற்றிலுள்ள புண்களை ஆற்ற

மாங்காய் – ரத்தத்தை விருத்தி செய்ய

கோவைக்காய் – தொண்டை, நாக்கு வெடிப்பு புண்களை ஆற்ற

நெல்லிக்காய் – கண்ணோய் அகல, மூளை நரம்புகள் பலப்பட

அத்திக்காய் – ரத்த சோகை போக

வாழைத்தண்டு – சிறு நீரக கற்களை கரைக்க

பீட்ரூட் – நார்ச்சத்து மலச்சிக்கலை போக்கும்

உருளைக்கிழங்கு -இரும்பு, பாஸ்பரஸ் சத்து அதிகமாக

சேப்பங்கிழங்கு – எலும்பு, பற்களுக்கு உறுதி தர

கேரட் – மாலைக்கண், கண் கோளாறுகளைப் போக்க

பீனஸ் – புரதச் சத்து அதிகரிக்க, கால்ஷியம் அதிகரிக்க

புடலங்காய் – எலும்பக்க உறுதி தர

கொத்தவரங்காய் – நார்சத்து மலச்சிக்கலைப் போக்க

சௌ சௌ – பற்களுக்கு, எலும்புகளுக்கு உறுதி தர

முள்ளங்கி – பொட்டாசியம் பற்றாக்குறையை நீக்க

தக்காளி – அமினோ அமிலம் உற்பத்தியாக்கும், ரத்த விருத்திக்கும் நல்லது.

பூசணிக்காய் – நீர்ச்சத்தை அதிகரிக்க, ரத்த விருத்தி, குளிர்ச்சி தர

கருணைக்கிழங்கு -மலச்சிக்கல், மூலநோய் தீர, எலும்பு வளர்ச்சிக்கு

குடை மிளகாய் -அஜீரணத்தைப் போக்க

நூல் கோல் – பாஸ்பரஸ் அதிகரிக்க, மலச்சிக்கலைப் போக்க

வெங்காயம் – அதிக பாஸ்பரஸ் உள்ளது கொழுப்பைக் கரைக்க

மணத்தக்காளி -வாய் மற்றும் வயிற்றுப்பண்களை நீக்க

(கீரைகள், மற்றும் பழங்கள் பற்றி நேயர்கள் விரும்பினால் தொடரும்)

***

tags–   மனைவி, தப்பிப்பது, எப்படி,

மனைவி ஒரு மாணிக்கம் !!!- part 1 (Post No.8882)

COMPILED  BY KATTUKKUTY

Post No. 8882

Date uploaded in London – – 2 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மனைவி ஒரு மாணிக்கம் !!!- part 1

(படித்தில் ரசித்த ஹை க்யூ கவிதைகள்-   தொகுத்தது கத்துக்குட்டி)

ஆசீர்வாதம்

மனைவியை

தீர்க்க சுமங்கலி- என

வாழ்த்தினான்

தான் நீண்ட நாள் வாழ…….

தடை

ஒன்றுக்கு

மேல் வேண்டாம்

குழந்தை மட்டுமல்ல

மனைவியும்!!!

மனைவி

உரசியவுடன்

பற்றிக்கொள்ளும்

தீக்குச்சி

மனைவி…….

தூண் தூண்

மஹால் தூண்களை

எண்ணி முடித்தேன்

கணக்கில்

ஒன்று கூடியது

ஒருவேளை மனைவியையும்

சேர்த்து எண்ணிவிட்டேனோ????

கரப்பான் பூச்சி

கடவுளே

அடுத்த ஜன்மத்தில்

நான் கரப்பான் பூச்சியாக

பிறக்க வேண்டும்…..

அதற்குத்தான் என மனைவி

பயப்படுகிறாள்

இரை

கணவன் அடித்த காயங்கள் வலிக்கவில்லை,

மாமியார் ஊற்றிய மண்ணெண்ணய் கூட நாற்றமில்லை,

பரதேசி மகளென்று புகுந்த வீடு கூறியது கூட துக்கமில்லை,

ஆனால் துணிப்பையோடு ஓவ்வொரு முறையும் பிறந்த வீட்டில்

படியேறும்போது நெஞ்சம் கனக்கிறது

பணம் தின்னி கழுகுகளுக்கு என் தந்தையின் முதுகெலும்புதான்

இரையாக வேண்டுமா???

யார் சரியில்லை???

அம்மாதான் பெண் பார்த்தாள்,

அம்மாதான் ஜாதகம் பார்த்தாள்,

அம்மாதான் நகை, நட்டு கேட்டாள்,

அம்மாதான் ஆசீர்வதித்தாள் ,

இன்று அம்மாதான்

அவள் சரியில்லை என்கிறாள்

நடைமுறை

அவளை கோவிலில் சந்தித்தேன்,

அர்ச்சனை அவள பெயருக்கு,

வீட்டில் என் பெயருக்கு !!!

விஷக்கடி

முதலிரவில்

பஞ்சு மெத்தைக் கட்டிலில்

படுத்திருந்த

புது மாப்பிள்ளையை

கடித்தது

மூட்டைப்பூச்சி

அல்ல- பேன்!!!

CONVICT

ECAPE முயற்சிகள் தோற்கும் நேரத்தில்,

கண்ணாலே RAID செய்து,

சொல்லாலே சரிக்கட்டி,

அன்பாலே இழுத்துச் சென்று

நெஞ்சமென்னும் LOCKUP பில் பூட்டி விட்டாள் ஒருத்தி

பின் வேறொருத்தி

பாடலென்னும் FINE கட்டி- அந்த

துன்பத்திலிருந்து என்னை ஜாமீன் எடுத்தாள்

விடுதலை பெறாமல் அந்தப் (பெண்)ஜட்ஜ்

முன் நின்றாலும், ஆயுள் தண்டனை பெற்றாலும்

APPEAL செய்யப்போவதில்லை

To be continued ……………………………………..

 tags- மனைவி, மாணிக்கம்,

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

மனைவி ஒரு மருந்து- மஹாபாரதப் பொன்மொழி (Post No.3077)

IMG_4925.JPG

Compiled by London swaminathan

Date: 20th August 2016

Time uploaded in London:  14-23

Post No.3077

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

மஹா பாரதத்தில் 18 பர்வங்கள் உண்டு. அதில் மூன்றாவதாக அமைந்த வனபர்வத்தின் மற்றொரு பெயர் ஆரண்ய பர்வம். இதை வால்மீகி ராமாயணத்திலுள்ள ஆரண்ய காண்டத்துடன் குழம்பிக்கொள்ளக்கூடாது.

 

வனபர்வம் எனப்படும் ஆரண்ய பர்வம் பஞ்சபாண்டவர்களி ன் 12 ஆண் டு கானுறை வாழ்வைச் சித்தரிக்கும் பர்வம். அதற்குள் 21 உட்பிரிவுகள் இருக்கின்றன. அதில் மனைவி பற்றிய ஒரு பாடல் (ஸ்லோகம்) மனைவியை “சர்வ துக்க நிவாரணி” என்கிறது.

IMG_4919

நாம் சர்வ ரோக நிவாரணி – என்று மருந்துகளுக்குக் கொடுக்கும் விளம்பர  ங்களைப் படித்திருக்கிறோம். சர்வ துக்க நிவாரணி என்பதை பொதுவாக கடவுளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம். ஆனால் மஹா பாரதமோ மனைவியை கைகண்ட மருந்து என்றும், எல்லா துக்கங்களையும் போக்குபவள் என்றும் சித்தரிக்கிறது.

 

இதோ அந்த ஸ்லோகம்:–

 

ந ச பார்யா சமம்  கிஞ்சித் வித்யதே பிஷஜாம் மதம்

ஔஷதம் சர்வ துக்கேஷு சத்யமேதத் ப்ரவீமி தே

–ஆரண்ய பர்வம்

 

பொருள்:-

“மனைவிக்குச் சமமான ஒன்றுமே இல்லை; எல்லா துக்கங்களுக்கும் மருந்தாக இருப்பவள் மனைவி என்பவளே. உண்மையைச் சொல்லுகிறேன்.”

 

 

இன்னொரு பாடல் அம்மாதான் நன்கு சாப்பாடு போடுபவள், மனைவிதான் நன்கு சந்தோஷப்படுத்துபவள் என்று பாராட்டுகிறது.

 

உடலைப் போஷிக்கும் விஷயங்கள்

IMG_4927

மாத்ரா சமோ நாஸ்தி சரீர போஷணே

பார்யா சமோ நாஸ்தி சரீர தோஷணே

வித்யா சமோ நாஸ்தி சரீர பூஷணே

சிந்தா சமோ நாஸ்தி சரீர சோஷணே

 

உடலை வளர்க்க உதவுவதில் அம்மாவுக்குச் சமமானவள் யாரும் இல்லை;

நம்மை மகிழ்விப்பதில் (சந்தோஷப்படுத்துவதில்) மனைவிக்குச் சமமானவள் எவரும் இல்லை;

ஒருவரை அலங்கரிக்கச் செய்யும் விஷயத்தில் கல்விக்குச் சமமான எதுவும் இல்லை

உடலை வாடச் செய்யும் விஷயத்தில் துக்கத்துக்குச் சமமான எதுவும்  இல்லை

IMG_3212

–Subham–

 

 

சாக்ரடீசும் அவ்வையாரும்!

GREECE - CIRCA 1998: A postage stamp printed in the Greece shows bust of ancient Greek Tragedian Sophocles, circa 1998

GREECE – CIRCA 1998: A postage stamp printed in the Greece shows bust of ancient Greek Tragedian Sophocles, circa 1998

Article No.1985

Compiled by London swaminathan

Date 10th July 2015

Time uploaded in London: காலை 8-21

((தமிழன்பர்களுக்கு அன்பான வேண்டுகோள்: மற்றவர் கட்டுரைகளை எடுக்கையில் அவர்தம் பெயரையும், அவருடைய பிளாக்–கின் பெயரையும் அப்படியே வெளியிடுங்கள். என் கட்டுரைகளில், படங்கள் என்னுடையதல்ல. அதைப் பயன்படுத்துவோர் சட்டபூர்வ வழக்குகளைச் சந்திக்க நேரிடும்.))

சாக்ரடீஸ் என்பவர் புகழ்பெற்ற கிரேக்க ஞானி; தத்துவ வித்தகர். அவருக்கு வாய்த்த மனைவியோ சரியான அடங்காபிடாரி; ராக்ஷஸி. அவ்வையார் புகழ்பெற்ற தமிழ் கவிஞர், அறிஞர், இறையன்பர். சங்க காலம் முதல் தற்காலம் வரை ஆறு அவ்வையார்கள் இருந்தனர்; சிலர் மூவர் என்பர். மொழியியல் அடிப்படையில் கட்டாயம் முவர் அல்லது அதற்கு மேலும் இருந்திருக்கலாம் என்பது எனது கணிப்பு. ஆனால் எந்த அவ்வையார் படியதாக இருந்தாலும் சரி அவை அத்தனையும் ஆனி முத்து; தமிழர்களின் சொத்து. ஆத்திச் சூடி பாடிய கடைசி அவ்வையாரா, அதியமானைக் கண்ட சங்க கால அவ்வையாரா என்று ஆராய வேண்டிய அவசியமில்லை.

அதிசயம் என்னவென்றால் அவ்வையாரும் சாக்ரடீசும் ஒரே கருத்தைச் சொல்லியுள்ளனர்.

ஒருமுறை சாக்ரடீஸ் தத்துவச் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். அவரது மனைவியோ ஞான சூன்யம். மேல் மாடியில் இருந்து எட்டிப் பார்த்து, பேச்சை நிறுத்தச் சொல்லி இடி முழக்கம் செய்தார். சாக்ரடீஸோ நிறுத்தவில்லை. ஒரு வாளி தண்ணீரை மேலேயிருந்து கொட்டினார். யார் தலையில்? சாக்ரடீஸ் தலையில்! அவர் அசரவில்லை; அவர் சொன்னார்:

“அன்பர்களே! இவ்வளவு நேரம் இடிமுழங்கியது; இப்பொழுது மழை பெய்கிறது!”

சாக்ரடீஸின் மனைவியை பற்றி நன்கு அறிந்தவர் ஒருவர் சாக்ரடீஸிடம் சென்று திருமணம் செய்துகொள்வது பற்றி தங்கள் கருத்து என்னவோ? என்று கேட்டார்.

அவர் சொன்னார்:

எந்த முடிவு எடுத்தாலும் இறுதியில் வருத்தப்படுவாய்!

இன்னொரு முறை அவர் சொன்னார்:

“நல்ல மனைவி கிடைத்தால் நன்கு மகிழ்ச்சியாக வாழலாம்; கெட்ட மனைவி கிடைத்தாலோ தத்துவ வித்தகர் ஆகலாம்.”

Adhiyaman_wiki

Avvaiyar with Athiyaman; picture from wikipedia

அவ்வையாரும் இதையே சொல்கிறார்:

பர்த்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டானால்

எத்தாலும் கூடி வாழலாம்; — சற்றேனும் ஏறுமாறாக

இருப்பாளே யாமாகில்

கூறாமல் சந்யாசம் கொள்

 

பொருள்: கணவனுக்கேற்ற பதிவிரதையாக இருந்தால், எவ்வளவு கஷ்டம் வந்தலும் அவளை விட்டு விடாதே. அவள் பிடாரியாக இருந்தாலோ, அவளிடம் போகிறேன் என்று சொல்லக்கூட வேண்டாம். பேசாமல் போய் சந்யாசம் வாங்கிக் கொள்.

பழைய முறத்தால் அடி!

சாக்ரடீஸ் மனைவி போலவே ஒரு கொடுமைக்காரியை மனைவியாகப் பெற்ற ஒரு சாதுவின் வீட்டுக்கு அவ்வையார் போனார். பாவம், அவர்தான் அவ்வையாரை சாப்பிட அழைத்தார். அவ்வையை வாசல் திண்ணையில் அமரவைத்துவிட்டு உள்ளே சென்று மனைவியின் முகத்தை நன்கு துடைத்து, பொட்டு வைத்து அலங்கரித்து, தலையில் உள்ள ஈரும் பேனும் எடுத்துவிட்டு, தலைவாரிவிட்டு, மெதுவாக அவ்வையாருக்கு அமுது இடும்படி  கொஞ்சும் மொழியில் கெஞ்சினார். அவளோ எடுத்தால் அருகிலிருந்த பழைய முறத்தை! புடைத்தாள் நைய அவனை. பேயாட்டம் ஆடினாள்; வசை மொழிகளை வாரி இரைத்தாள். அவன் வெளியே ஓடிவந்தான்; அப்பொழுதும் அந்த நீலாம்பரி முறத்தைக் கையில் ஓங்கியவாறு ஓடி வந்தாள்: அவ்வையாருக்கு ஒரு புறம் சிரிப்பு; மறுபுறம் அனுதாபம். அவனுக்கோ ஒரே பதைபதைப்பு.

அவ்வையார் பாடினார்:

இருந்து முகம் திருத்தி, ஈரோடு பேன் வாங்கி

விருந்து வந்தது என்று விளம்ப – வருந்திமிக

ஆடினாள், பாடினாள்; ஆடிப் பழமுறத்தால்

சாடினாள் ஓடோடத்தான்.

அவ்வையாருக்கு பிரம்மா மீதே கோபம் வந்து விட்டது. இப்படி நல்ல சாதுவுக்கு இவ்வளவு மோசமான மனைவியா என்று. இது பெண்ணா? பேயா? வறண்ட மரம் போன்ற பெண்ணை இந்த மகனை முடிச்சுப்போடச் செய்தானே என்று நினைத்து பிரம்மா மட்டும் என் முன்னே வரட்டும் நான்கு தலைகளையும் திருகிவிடுகிறேன் என்றார்.

உடனே பாடினார்:

அற்றதலை போக அறாத தலை நான்கினையும்

பற்றித் திருகிப் பறியேனோ? – வற்றும்

மரம் அனையாட்கு இந்த மகனை வகுத்த

பிரமனையான் காணப்பெறின்.

அற்றதலை= ஏற்கனவே பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றை சிவன் கிள்ளி எறிந்த கதை புராணத்தில் உள்ளது.

-சுபம்-

swami_48@yahoo.com