‘மயிரும் பயிரும்’- ஒரு பெண் புலவர் பாடிய பாட்டு ! (Post No.10054)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,054

Date uploaded in London – 4 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உலகிலேயே பழைய நூல் ரிக்வேதம். 6000 ஆண்டுகளுக்கு முந்தைய புஸ்தகம் என்கிறார்கள் ஜெர்மன் அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும், சுதந்திரப் போராட்ட வீரர் பலகங்காதர திலகரும். பிரிட்டிஷ் கைக்கூலியாக கிழக்கு இந்திய கம்பெனியின் மொழிபெயர்ப்பாளராக அமர்த்தப்பட்ட பிரிட்டன் வாழ், ஜெர்மன் ஆள் மாக்ஸ்முல்லர் முதலில் கி.மு 1200 என்று உளறிவிட்டு , பேராசிரியர் வில்சன் முதலியோர் கொடுத்த அடி தாங்காமல் ரிக் வேதம் கி.மு 1500 அல்லது அதற்கு முன் உண்டானது; எவரும் இதன் காலத்தைக் கணக்கிடவே முடியாது என்று கதறினார். இப்போது அமெரிக்காவில் இந்துக்களை  எதிர்த்துப் பேசிவரும் விட்சல் இது கி.மு 1700 என்கிறார். இந்துக்களோவெனில் இதை நாலாக வேத வியாசர் பிரித்தது கி.மு. 3150ல் என்கின்றனர். அணுசக்தி ஆராய்ச்சி நிலையம் (BARC) மற்றும் அமெரிக்க விண் வெளி நாசா (NASA) நடத்திய அராய்ச்சிகளோ இதில் குறிப்பிடும் சரஸ்வதி நதி கி.மு 2000க்கு முன் ஓடியதாக சொல்கின்றனர். இவ்வாறு பல்லாயிரம் ஆண்டுப் பழமையான ரிக் வேதத்தில் 20-க்கும் மேலான பெண் புலவர்கள் இருக்கின்றனர். அதுவும் உலக சாதனை. இவ்வளவு பெண் புலவர்களின் பட்டியல் அக்காலத்தில் வேறு எங்கும் இல்லை.

ரிக் வேதத்தில் எட்டாவது மண்டலத்தில் 91-ஆவது துதியாக வருகிறது (RV.8-91)அபாலா என்னும் பெண்மணி பாடிய கவிதை. அவர் இந்திரனை நோக்கி வேண்டுகிறார்.

இதில் பல அதிசய விஷயங்கள் உள்ளன. சோம லதா என்னும் அதிசயக் கொடி மலையில் விளைகிறது, அதை பருந்து கொண்டு தருகிறது என்றெல்லாம் பல புலவர்கள் பாடுகின்றனர் . ஆனால் அபாலா அதை  தான் போகும் வழியில் தண்ணீர் (நீரோடை) அருகில் காண்கிறாள்.அதைச் சாப்பிட்டு குணமும் அடைகிறாள். அவள் தனக்கும் தன்  தந்தைக்கும் இளமை திரும்ப வேண்டுகிறாள் . எப்படி தனக்கும் தத்தையின் வழுக்கைத் தலையிலும் முடி வளருகிறதோ அதே போல பயிரும் செழித்து வளர வேண்டும் என்கிறாள். மூன்று முறை அவளை இந்திரன் தேரின் சக்கரத் துளைகள் வழியாக இழுத்த பின்னர் அவளிடம் இருந்த தோல் வியாதி குணமாகி முடி வளர்ந்தது.

ஆண்டாளும் அபாலாவும்

இங்கு அபாலா  நமக்கு ஆண்டாளை நினைவுபடுத்துகிறார். அபாலாவுக்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த ஆண்டாளும் தேச பக்தி உணர்ச்சி பொங்க , “தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து

ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகள” என்று வேண்டுகிறார்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து

ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!—திருப்பாவை

XXXX

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் தந்தை மீது அவள் கொண்டுள்ள பாசம் மற்றும் விவசாயத்தில் முனைப்பு. ஆக, வெள்ளைக்காரன் சொன்ன நாடோடி விஷயம் பொய்யாகப் போனது ! வேத கால இந்துக்களை விவசாயம் செய்யாத நாடோடி என்று வெள்ளைக்காரர்கள் ‘கப்ஸா’ விட்டனர். அவர்களது முகத்திரையைக் கிழித்து விட்டது அபாலாவின் ரிக்வேதக் கவிதை

அவளுக்கு தோல் வியாதி இருந்ததால் கணவன் அவளை வெறுத்தான் என்பதும் கவிதையில் வருகிறது. ஆகையால் வியாதியுள்ள பெண்களின் அவல நிலையும் நமக்குத் புரிகிறது .

மூன்று முறை தேரின் துளை வழியாக இழுத்தனர் என்பது ஒரு சடங்காக இருக்கலாம்.  தேரின் 3 துளை பற்றி ரிக் வேத முதல் மண்டலத்திலும் வருகிறது (1-164)

XXXX

இதோ பாடலின் சுருக்கம் (RV.8-91)

8-91-1.நீரோடைக்குச் சென்ற ஒரு இளம்பெண்  சோம லதை  என்னும் செடியைக் கண்டாள். அதை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றாள் . இந்திரனே உனக்கு இதன் ரசத்தைப் பிழிந்து தருவேன் என்றாள்.

2.நீ வீரன், ஒளியுடன் பிரகாசிப்பவன்; வீடு வீடாகச் செல்பவன். என் பற்களால் கடித்துப் பிழியப்பட்ட  இந்த சோம ரசத்தை யவ /பார்லி பொரியுடனும், கரம்பைக் கஞ்சியுடனும், புரொடச ரொட்டிகளுடனும் சாப்பிடு .

XXXX

இங்கே ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும்; இராம பிரானுக்கு சபரி என்னும் வேடுவ குலக் கிழவி இலந்தைப் பழத்தைக் பல்லால் கடித்து ருசி பார்த்துவிட்டு நல்ல கனிகளை மட்டும் கொடுத்தாள்; அது போல இங்கு ஒரு இளம் பெண் தன் பல்லால் கடித்து பிழியப்பட்ட சோம ரசத்தைக் கொடுக்கிறாள் . அது மட்டுமல்ல. அத்தோடு அவள்  கொடுக்கும் எல்லா உணவு வகைகளும் ‘வெஜிட்டேரியன்’ VEGETARIAN DISHES பண்டங்கள் என்பதையும் கவனிக்க வேண்டும் .XXXX

3. நாங்கள் உன்னை தெரிந்து கொள்ள ஆசைப்பட்டோம். ஆனால் நீயே இங்கு வந்து இருப்பதை அறியவில்லை ; சோம ரசமே முதலில் மெதுவாகவும் பின்னர் வேகமாகவும் பாய்ந்து போ.

4.இந்திரன் எங்களுக்கு அடிக்கடி பலத்தையும் செல்வத்தையும் தருக; கணவனால்  வெறுக்கப்பட்ட பெண்கள் இந்திரன் உதவியை நாடுவோமாகுக.

5. இந்திரனே, மூன்று இடங்களை செழிப்பாக் குவாயாக. என் தந்தையின் வழுக்கைத் தலையையும், பாழாய்ப் போன நிலத்தையும், என் அங்கத்தையும் செழிப்பாக்குக ,

6. இந்திரனே, மூன்று இடங்களை செழிப்பாக் குவாயாக.. என் தந்தையின் வழுக்கைத் தலையையும், பாழாய்ப் போன நிலத்தையும், என் இடுப்புக்கு கீழேயுள்ள வியாதியுள்ள இடத்தையும் செழிப்பாக்குக ,

8-91-7.சதக்ரதுவே; நீ அபலையின் உடலை சகடத்தின் துளையிலே மூன்று முறை செலுத்தி சுகப்படுத்தினாய். அவளுக்கு சூரியனைப் போல ஒளிவீசும் தோலையும் தந்தாய்.

XXXX

இது ஒரு அருமையான, நிறைய தகவல் உள்ள கவிதை. சோமம் என்பது வெள்ளை க்காரன் சொல்லும் போதை பொருள் அல்ல. நோய் தீர்க்கும் ,மருந்து; ஆயுளை நீட்டிக்கும் அபூர்வ மூலிகை ; தோல் வியாதிகளைக் குணப்படுத்தும் .

என்பதையும் இக்கவிதை உறுதிப்படுத்துகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அக்காலத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் கவிபாடினர். 3000, 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கிரேக்க, பாபிலோனிய, சுமேரிய , சீன, பாரசீக ,எகிப்திய நாகரீகங்களில் பெண் கவிஞர்கள் அரிதிலும் அரிது!

இந்தக் கவிதைகளை நமக்குத் தொகுத்தளித்த வியாசருக்கு வணக்கங்கள்; அதைப் பாதுகாத்து வாமொழியாகவே பரப்பி வரும் பிராமணர்களுக்கும் நமஸ்காரம்.

-SUBHAM-

tags- மயிர், பயிர், அபாலா , ஆண்டாள், வழுக்கைத் தலை, ரிக் வேதம், கவிதை , சபரி

ஜோதிடக் கட்டுரை- சொன்னாலும் வெட்கமடா, சொல்லா விட்டால் துக்கமடா! (8575

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8575

Date uploaded in London – 26 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜோதிடக் கட்டுரைசொன்னாலும் வெட்கமடா, சொல்லா விட்டால் துக்கமடா!

சார்! சார் !! உங்க அப்பாயிண்ட்மெண்ட் வேண்டுமே?? ஒரு

பெண்ணின் குரல்…….

நான்- வாங்க மேடம் (Madam) …..வாங்க, உங்களுக்கென்ன அப்பாயிண்ட்

MISS NILANSHI PATEL WITH LONGEST HAIR IN GUINNESS BOOK OF RECORDS

மெண்ட் appointment ??? என்று பக்கத்துத்  தெரு மேடத்திற்கு ஒரு சேரைப் போட்டு

உட்காரச் சொன்னேன். ரொம்ப தெரிந்தவர் .

பேமலி family friend நண்பரும் கூட….வெகு நேரம் அமைதியாக

உட்கார்ந்திருந்தார் அவர்…….. சோகமே வடிவாக……

உங்களுக்கென்ன கஷ்டம், சின்ன வயசு(40) உங்கள்

வீட்டுக்காரர்  மற்றவருக்கெல்லாம் வீடு கட்டி கொடுக்கிறார்

உங்களுக்கும் 2 வீடுகள் உள்ளன. 2 “ஆடி” (Audi) கார்கள் உள்ளன…..

உங்களுக்கென்ன கொடுத்து வைத்தவர்……என்றேன் நான்.

(எனக்கும் கொஞ்சம்  பொறாமைதான்………)

அவள் மவுனமாக இருந்தாள். நான தயவு செய்து உங்கள்

மனக்குறை என்னவென்று சொல்லுங்கள். என்னால் முடிந்தவரை

தீர்க்க முயற்சிக்கிறேன்

சொல்ல வெட்கமாக இருக்கிறது. எனக்கும் என் மகளுக்கும்

(வயது 12) மயிர் வளர்வதே இல்லை. இருக்கிற முடியும்

கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து கொண்டே வருகிறது.

கல்யாணம் காட்சி என்றால் சவரிக்கொண்டை வைத்து

கிளம்ப நேரமாவதுடன் போதும் போதும் என்றாகி விடுகிறது.

எல்லோரும் என்னையே பார்ப்பது போல் ஓர் உணர்ச்சி……

நன ஷாக் (shock) ஆகி விட்டேன். எவ்வளவோ பேர்கள் என்னிடம்

வந்து , என் மகளுக்கு எப்போ கல்யாணம் நடக்கும்,மகனுக்கு

I I T யில் இடம் கிடைக்குமா? ,மகள் FOREIGN போவாளா?

வீடு இந்த ஜன்மத்தில் வாங்குவேனா?  என்ற கேள்விகளினால்

துளைக்கப்பட்ட நான் “எனக்கு மயிர் முளைக்க வில்லை,வளரவும்

இல்லை” என்ற கேள்விகள் என்னை துளைத்தன.

பழைய பழமொழி ஞாபகத்தற்கு வந்தது.

‘வயிற்றுக்கு கூழு இல்லை என்பவனுக்கும்

காலுக்கு செருப்பு இல்லை எனபவனுக்கும் ஒரே கவலை தான்’–

என்னடா இது மேடத்திற்கு (எனக்கு ) வந்த சோதனை??.??

மேடத்தின் முகம் சோகத்தால் நிரம்பியது. கண்களில் கண்ணீர்,

வராத குறைதான் …………

கேவலம் ஒரு மயிருக்குக்குப்போய் இவ்வளவு மரியாதையா???

சரி, இனிமேல் “அவரை “மரியாதையாக “அந்த “வார்ததையை

வாபஸ் வாங்கிக் கொண்டு முடி “என்றே அழைப்போம்.

இதில் அவருடைய புருஷனுக்கும் முடி நரைத்து வருகிறதாம்

ஏன் என்ன செய்யலாம்? என்று கேட்டுக் கொண்டு வா…….

ஆனால் எனக்கு என்று சொல்லாதே……”எங்க பேமலி (family) யில்

ஒருத்தருக்கு என்று சொல்”

தடுக்கி விழுந்தால் beauty parlours வாசப்படிமேல் தான் விழுகிறோம்.

தெருவுக்குத் தெரு அழகு நிலையங்கள் (பெண்களுக்கு மட்டும்

போர்டுகள . T V.யில்ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் விதம் விதமான

கம்பேனியிலிருந்து விதம் விதமான விளம்பரங்கள்!!!

ஐஸ்வர்ய ராய் முதல் எல்லா உலக அழகிகளும், இனிமேல்

உலக அழகிகளாகப் போகிறவர்களும் முடியை இப்படி திருப்பி

அப்படித் திருப்பி ,கழுத்தை வெட்டி, விளம்பரங்களைப் பார்த்து

அலுத்து விட்டது……..இது பெண்களுக்கு…..

(பெண்களின் அழகே முடியில் தான் இருக்கறது்

சீவி சிங்காரிச்சு…….. எத்தனை சினிமாவில் பாட்டு கேட்டிருறோம்)

ஆண்களுக்கு பத்ரிக்கையில் விதமான டோபா விளம்பரங்கள்

அதிலும முடியை கருப்பாக மாற்ற T V மிலிடரி வளம்பரங்கள்

எக்கச்சக்கம் போங்கள்!!!!

WORLD FAMOUS PICASSO WITH BALD HEAD

இதையெல்லாம் பார்த்துதான் காலஞ்சென்ற திரு சோ அவர்கள்

தலையை மொட்டை அடித்துக் கொண்டார். தலைக்கு வார

சீப்பு வேண்டாம், எண்ணெய் வேண்டாம்,தலையை அதிகமாக

துவட்ட வேண்டாம்,பார்பர் ஷாப்பில் மணிக்கணக்காக உட்கார

வேண்டாம்,அதற்கான பணமும் மிச்சம்……நேரமும் மிச்சம்

நான் எந்த விதமான மூலிகைத் தைலமோ,மருந்தோ

அல்லது டோபாவோ வைத்துக் கொள்ளச் சொல்லப் போவதில்லை.

ஆனால் எந்த கிரகத்தினால் இப்படி வருகிறது….அதற்கென்ன,

பரிகாரம்???

என்ன….எவ்வளவு பெரிய சமாசரத்தை இவ்வளவு சிம்பிளாக

முடிக்கிறீங்களே??? என்று நீங்கள் கூறுவது என் காதில்

விழுகிறது……..

மேட்டரை இத்தோடு விடுங்கள்…. ஏனென்றால் உலகெங்கும்

முடியைப் பற்றி 1232 ஆராய்சி நிலயங்கள் முடியை பிய்த்துக்

கொண்டு ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருக்கின்றன!!!!

நல்லொதொரு ரிசல்ட் வர அந்த ‘திருப்பதி பெருமாளை’த்தான்

வேண்டுகிறேன். திருப்பதி, முடி, என்றவுடன் ஞாபகத்துக்கு வந்தது

ஒரு விஷயம்.

2019 வருடம் மொட்டை அடித்துக்கொண்டவர்கள்

12 லட்சத்து 88ஆயிரம் பேர்.

முடியின் எடை-17,ஆயிரத்து 200 கிலோ!

ஏலம் போன தொகை -7 கோடியே 69 லட்சம்!!!- (தகவல்கூகுள்)

சுமார் ஒரு.  கிலோ முடி விலை சுமார் ரூ4, 700/-

உலகத்திலேயே அதிக முடி ஏற்றுமதி இந்தியாவிலிருந்துதானாம்

சரி விஷயத்திற்கு வருவோம்.

அழகான முடிக்கு அதிபதி சுக்கரன். கேதுவுக்கும் பங்கு உண்டு.

 ஆனால மெயின் பங்கு சுக்கிரனுக்கே!!!

சுக்கிரன் லக்னத்தில் இருந்தாலோ, ஆட்சி உச்சம் பெற்றாலோ

அந்த பெண் ‘லக்கி கேர்ல்!!!’ அவ்வளவு அழகான முடி அமையும்  

மகரத்தில் உச்சமானால்  கேட்வே  வேண்டாம்  நீளத்திற்கு!,,,

சரி உதிர்வதற்குக் காரணம் உடல்சூட்டினால்..

சூரியன் உச்சமானலோ செவ்வாயுடன் சேர்ந்திருந்தாலோ,செவ்வாய்

சனியுடன் ராகு சேர்தந்திருந்தாலோ முடி கொட்டோ

கொட்டுன்னு கொட்டும்.(.கொல்லை பக்கம் நின்று தலையை வாரவும்)

சனி , ராகு,கேது, சூரியன் ,செவ்வாய் இவர்களை எல்லாம் நீங்களே

வைத்துக் கொள்ளுங்கள்…… பரிகாரம் என்ன ???

தினமும்சூரிய நமஸ்காரம் செய்வது,( இது உடம்புக்கும் நல்லது)

சூரியன் சம்பந்தமான ஸ்தோஸ்திரங்கள்  சொல்வது;

உடல்சூடு தணிக்கும் உணவுப் பண்டங்களை உண்பது,

சூடு தணிக்கும் தைலங்கள் உபயோகிப்பது,

மகாலட்சுமியை வணங்கி ஸ்தோஸ்திரம் சொல்வது

பணம் வருவதற்கும் இவளே காரணம்; ஆகையினால் ஒரே கல்லில்

இரண்டு மாங்காய்!!! நிறைய முடி வளர என் ஆசீர்வாதம்!!!

திருப்தியுடன் சென்றாள் அந்தப்  பெண்மணி…….

முடி புராணம் முற்றியது…….

TAGS – சொன்னாலும் வெட்கமடா, மொட்டை, முடி, மயிர்

தலையில் இருந்தால் முடி, கீழே விழுந்தால் மயிர்- வள்ளுவர் குறள் (Post No.3566)

Written by London swaminathan

 

Date: 22 January 2017

 

Time uploaded in London:- 15-42

 

Post No.3566

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

 

contact: swami_48@yahoo.com

 

தமிழ்ப் புலவர்கள், நமக்குச் சொல்ல வேண்டிய விஷயங்களை எவ்வளவு வலுவாக– வலியுறுத்திச் சொல்ல வேண்டுமோ– அவ்வளவுக்குச் சொல்லுவர் அதற்கேற்ற உவமைகளையும் எடுத்தாள்வர்.

 

வள்ளுவப் பெருமான் “மயிர்” என்ற சொல்லை இரண்டு குறள்களில் பயன்படுத்துகிறார். மானம் என்ற , அ,,,,,,காரத்தில் அவைகளை வைத்திருப்பது பொருத்தமாக உள்ளது. நாம் யாரையேனும் அல்லது எ தையேனும் மட்டம் தட்ட வேண்டுமானால் “என் மயிர் போச்சு” என்று இழித்துரைக்கிறோம்; பழித்துப் பேசுகிறோம். ஆனால் அதே மயிர் தலையில் இருக்கும் வரை அதைச் சீவி முடித்து சிங்காரித்துப் பாராட்டுகிறோம். மயிருள்ள சீமாட்டி எஸ் கொண்டையும் போடுவாள் ஒய் கொண்டையும் போடுவாள் என்பது பழமொழி. அது மட்டுமல்ல. கணவன் வெளியூர் சென்றுவிட்டால் மனைவி சிகை அலங்காரம் செய்ய மாட்டாள் என்பது சம்ஸ்கிருத , தமிழ் இலக்கியங்களில் உள்ளது.  இமயம் முதல் குமரி வரை ஒரே பண்பாடு என்பதை  இது காட்டுகிறது. ஆரிய-திராவிட இனவெறிக் கொள்கை உடையோரின் மூஞ்சியில் இது  கரி பூசுகிறது.

 

 

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்

நிலயின் இழிந்தக் கடை (குறள் 964)

 

மக்கள் நெறி தவறி, உயர்ந்த நிலையிலிருந்து கீழே விழுந்தால், தலையிலிருந்து விழுந்த மயிர் போல ஆவர்.

 

மயிர் நீப்பின் வாழாக் கவரி மா அன்னார்

உயிர் நீப்பர் மானம் வரின்  (குறள் 969)

 

தன் உடம்பிலிருந்து ஒரு மயிர் நீங்கினாலும் வாழ விரும்பாத கவரிமானைப் போன்றவர்கள், மானம் போனால் உடனே உயிர் நீப்பர்.

 

விவேக சிந்தாமணி என்னும் நூலிலும் இதே கருத்தைக் கூறும் இரண்டு பாடல்கள் உள்ளன:-

 

மானம் உள்ளோர்கள் தன்னோர்

மயிர் அறின் உயிர் வாழாத

கானுறு கவரிமான் போல

கனம்பெறு புகழே பூண்பார்

மானம் ஒன்று இல்லார் தாமும்

மழுங்கலாய்ச் சவங்களாக

ஈனமாம் கழுதைக்கு ஒப்பாய்

இருப்பர் என்று உரைக்கலாமே.

 

இந்தப் பாடல் குறளில் வரும் அதே கவரிமான் கதையைச் சொல்லுகிறது. இன்னொரு பாடல், அது அது இருக்க வேண்டிய இடத்தில்தான் மதிப்பு என்கிறது.

 

சங்கு வெண் தாமரைக்குத்

தந்தை தாய் இரவி தண்ணீர்;

அங்கு அதைக் கொய்துவிட்டால்

அழுகச் செய்து அந்நீர் கொல்லும்;

துங்க வெண் கரையில் போட்டால்

சூரியன் காய்ந்து கொல்வான்;

தங்கள் நிலைமை கெட்டால்

இப்படித் தயங்குவாரே

 

பொருள்:-

சங்கு போன்ற வெள்ளைத் தாமரைக்கு, சூரியனும் தண்ணீரும் தாய், தந்தை ஆவர். ஆனால் அதே தாமரையைக் கொய்து தண்ணீரில் போட்டால் அதுவே அழுகச் செய்து விடும். கரையில் போட்டாலோ சூரியன் காயவைத்துக் கொல்வான். அது போலவே தங்களுடைய நிலை கெட்டு வேறிடத்தில் இருந்தால் கஷ்டப்படுவர்.

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா

 

கவிஞர் கண்ணதாசனும் இக்கருத்தை வலியுறுத்தும் பாடலை சூரியகாந்தி படத்தில் பாடி இருக்கிறார்.

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது

 

–subham–

எது அழகு? நான்கு கவிஞர்கள் கருத்து (Post No.2787)

bob painting 3

Written by london swaminathan

 

Date: 6 May 2016

 

Post No. 2787

 

Time uploaded in London :– 10-27 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

bob painting 2

கல்வி அழகு

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்

மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து

நல்லம் யாமென்னு நடுவு நிலைமையால்

கல்வியழகே அழகு – நாலடியார் 131

 

சிகை அலங்காரமும், ஆடையினது கரை அழகும், மஞ்சள் பொடி பூசியதால் ஏற்படும் அழகும் அழகல்ல. மனத்தினால் நாம் நல்லவர் என்று எண்ணும் நடுநிலைமையால் கல்வியால் உண்டாகும் அழகே அழகு. (கல்விகற்றால், நல்லவர் ஆவர். அதுவே அழகு)

நாலடியார் என்பது பல கவிஞர்கள் சேர்ந்து படிய 400 பாடல்களைக் கொண்ட நூல்.

xxx

சொல் அழகு

மயிர் வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்

உகிர் வனப்பும் காதின் வனப்பும்– செயிர் தீர்ந்த

பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த

சொல்லின் வனப்பே வனப்பு

–சிறுபஞ்சமூலம் 36 (காரியாசான் இயற்றியது)

 

பொருள்:- தலை மயிர் அழகும், பார்ப்பவரின் கண்ணைக் கவரும் மார்பின் அழகும், நகத்தின் அழகும், செவியின் அழகும், குற்ரமில்லாத பற்களின் அழகும் அழகல்ல. நூல்களின் அமைந்துள்ள சொல்லின் அழகே அழகு.

Xxx

bob painting1

இடை வனப்பும் தோள் வனப்பும் ஈடின் வனப்பும்

நடை வனப்பும் நாணின் வனப்பும் – படைசால்

கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ

டெழுத்தின் வனப்பே வனப்பு

–ஏலாதி 74 (கணிமேதாவியார் இயற்றியது)

பொருள்:- இடையின் அழகும், தோளினுடைய அழகும், செல்வத்தின் அழகும், நடை அழகும், நாணத்தின் அழகும், திரண்ட கழுத்தின் அழகும், உண்மையான அழகு ஆகாது. கணித நூலறிவும், இலக்கியங்களைப் படித்தறியும் அறிவும்தான் உண்மையான அழகு.

Xxx

thalai atti bommai

வள்ளுவன் கூறுகிறான்

சிறந்த, ஆழமான பல நூல்களைக் கல்லாதவனுடைய அழகு, மண்ணினால் செய்யப்பட்ட பொம்மையின் அழகைப் போன்றதே.

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில் நலம்

மண்மாண் புனை பாவை அற்று

–திருக்குறள் 407 (திருவள்ளுவர் இயற்றியது)

 

–Subham–