மநுவை வள்ளுவர் காப்பி அடித்தாரா? (Post No.7221)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 16 NOVEMBER 2019

Time  in London – 19-25

Post No. 7221

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

மநு நீதி நூல் – Part 45

ரெவரண்ட் ஜி.யூ. போப் முதல் அண்மையில் பேரரறிஞர் டாக்டர் இரா.நாகசாமி வரை பலரும் திர்வள்ளுவர் எழுதிய திருக்குறளில் மநுவின் கருத்துக்களும் உவமைகளும் அப்படியே இருப்பது பற்றி சுட்டிக்காட்டி வந்துள்ளனர். இமயம் முதல் குமரி வரை பாரதீய சிந்தனை ஒன்றே  

என்பதை இது காட்டுகிறது. யாரும் யாரையும் காப்பி அடிக்கவில்லாஇ; இன்னும் ஆழமாகப் போனால் மஹாபாரதத்திலும் இக்கருத்துக்கள் இருப்பதைக் காணலாம். ஆனால் அதுவோ மஹாசமுத்திரம் ஒரு லட்சம் ஸ்லோகங்கள்; இரண்டு லட்சம் வரிகள்; பத்து லட்சம் சொற்கள். யாரே அதன் கரை காண்பார்?

மநு ஸ்மிருதியின் ஒன்பதாவது அத்தியாயத்தைத் தொடர்ந்து காண்போம். முந்தைய பகுதியில் 9-220 வரை கண்டோம். இதோ தொடர்ச்சி. முதலில் புல்லட் பாயிண்ட்ஸ்- ரத்தினச் சுருக்கம்—

வள்ளுவர், நாற்பது குறட்பாக்களில் நாலு அதிகாரங்களில் (சூது, கள்ளூண்ணாமை, கயமை, ஒற்றாடல் ) சொன்ன விஷயங்களை இந்த ஸ்லோகங்களில் மநுவும் குறிப்பிடுகிறார்  . அந்த  தீமைகளை கண்டிக்கிறார். அதாவது வள்ளுவரும் மநுவும் ஒரே கருத்தைச் சொல்கின்றனர். மநுவில் இடையிடையே ஜாதிகள் பற்றி வரும். வள்ளுவத்தில் அது இல்லை. காரணம்?

மநு எழுதியது சட்டப் புத்தகம்; வள்ளுவர் எழுதியது நீதி நூல்

வள்ளுவர் எழுதியது நமக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்னர்; மநு எழுதியதோ அதற்கும் குறைந்தது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்! (வள்ளுவர் மற்றும் மநுவின் காலம் பற்றி முன்னரே எழுதியதைக் காணவும்)

மேலும் சில சுவையான ஸ்லோகங்கள்:-

9-221- சூதாட்டத்துக்கும், பெட்டிங் (BETTING AND GAMBLING)  எனப்படும் பந்தயம் கட்டும் போட்டிக்கும் தடை விதிக்கவும்

9-235- பஞ்ச மஹா பாதகங்கள் எவை?

9-237 முதல் — நெற்றியில் சூடு போட்டு, பச்சை குத்தி அவமானப்படுத்தல்; ஜாதியிலிருந்தும், ஊரிலிருந்தும் விலக்கி வைத்தல்

9-244- பறிமுதல் செய்த சொத்துக்களை கடலில் எறி

9-245- வருணன் நம்மைக் கவனிக்கிறான் (தொல்காப்பியத்தில் வரும் வருணன்)

9-247- நல்ல மன்னன் நாட்டில் நிலங்கள் தானாக விளையும் .(வள்ளுவனும் குறளில் 545, 559, 560 சொல்லும் அதிசயம்; காளிதாசனும் இந்த அதிசயத்தை விளம்புவான்

9-249- அப்பாவிகளைத் தண்டித்து விடாதே

9-250-  18 வகைக் காரணங்கள் (எட்டாம் அத்தியாயத்தில் 4-7 முதல் உள்ள ஸ்லோகங்களில் 18 வகைக் காரணங்கள் உள.)

9-256 – ஒப்பிடுக- குறளில் வரும் ஒற்றாடல் அதிகாரம்.

9-288- சிறைச் சாலைகளை` சாலையின் இரு புறமும் அமைக்கவேண்டும்; எல்லோரும் கைதிகளையும் அவர்கள் படும் கஷ்டங்களையும் காணட்டும்

9-258- ஜோதிடர் பற்றி

9-286, 9-329 –ரத்தினக் கற்கள் பற்றி

9-301– யுகங்களும் மன்னர்களும் பற்றிய சுவையான செய்தி

9-303- மன்னர்கள் இந்திரன், யமன் முதலிய திக் பாலகர் போல;

இதுவும் காலத்தைக் காட்டும். புறநானூறு முதலிய நூல்களில் மன்னரை சிவன், முருகன் மற்றும் இந்திரன் அக்னி, யமனுக்கு ஒப்பிடுவர். ஆனால் மநுவில் பிரம்ம, விஷ்ணு, சிவனை விட வருணன் இந்திரன், அக்னியே ஒப்புமைக்கு வரும்; மநு, காலத்தால் மிகவும் முந்தையவர். கிருஷ்ணன், பலராமன் போன்று என்று புறநானூறு சொல்லும் உவமைகள் மநுவில் இரா.)

9-313 – சான்றோரைப் பகைக்காதே; அரசு தவிடு பொடியாகிவிடும்; திருவள்ளுவரும் இதைச் சொல்லுவார்- குறள் 898, 899

9-264, 265- எந்த எந்த இடங்களை அரசன் கண்காணிக்க வேண்டும் என்ற பட்டியல்

9-270- திருடர்களுக்கு மரண தண்டனை; வள்ளுவரும் மரண தண்டனையை ஆதரிக்கும் புலவர் (குறள் 550, 1224, 1077, 1078))

9-276- திருடர்களின் கைகளை வெட்டு ( வள்ளுவர் கஞ்சர்களின் கையை முறுக்கி மூஞ்சியில் குத்தி முகவாக்கட்டைடையை நொறுக்கு என்கிறார் (குறள் 1224, 1077)

9-290- மாயா ஜால மந்திரவாதிகள், சூன்யக்காரிகளுக்கு 200 பணம் அபராதம் ( மேலை நாடுகளில் ஜோன் ஆப் ஆர்க்கை எரித்தது போல பல்லாயிரம் பெண்களை கிறிஸ்தவப் பாதிரிகள் உயிருடன் கொளுத்தி விட்டனர்)

9-292- பொற்கொல்லர்களுக்கு கடும் தண்டனை

9-294 – அரசின் ஏழு அங்கங்கள்

9-311 – குறள் (151) உவமை — அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல பொறுமை வேண்டும்; பூமாதேவியின் பொறை பற்றி சம்ஸ்கிருத நூல்கள் எல்லாவற்றிலும் உவமைகள் வரும்

9-313 முதல் – ஐந்து ஸ்லோகங்களில் பிராமணர்களின் புகழ்; புத்தரும் தம்ம பதத்தில் 26ஆவது அத்தியாயத்தில் பிராமணர்களின் புகழ் பாடுகிறார்.

9-320- க்ஷத்ரியர்கள் பிராமணர்களிடமிருந்து தோன்றினர்.

TAGS

மநு, வள்ளுவர், காப்பி அடி, ஜோதிடர் பற்றி, ரத்தினக் கற்கள், திருட்டு, மரணதண்டனை

Valluvar and Vasuki

நம்பினார் கெடுவதில்லை: மரண தண்டனை ரத்து! (Post No.2546)

two pillars

Written  by London swaminathan

 

Date: 16  February 2016

 

Post No. 2546

 

Time uploaded in London :–  9-43 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact swami_48@yahoo.com)

 

 

ஒரு மனிதனுக்கு ஒரு மாகாண கவர்னர், தவறுதலாக, அநியாயமாக மரணதண்டனை கொடுத்துவிட்டார். பாரசீக நாட்டில் (தற்போது ஈரான்) இது நடந்தது. மரண தண்டனைக் கைதிக்கு நம்பிக்கை போகவில்லை. இறுதிவரை முயன்று பார்ப்போம். நம்பினார் கெடுவதில்லை; இது நான்கு மறைத் தீர்ப்பல்லவா!

 

அந்த ஊரில் மரண தண்டனைக் கைதிகளை ஒரு தூணில் கட்டிவைத்து, தலையை ஒரே வெட்டாக வெட்டி விடுவர். நேரம் நெருங்கியது. கொலை வாளுடன் வந்தான் தண்டனையை நிறைவேற்றும் வெட்டியான். அப்போது, மரண தண்டனைக் கைதி ஒரு வேண்டுகோள் விடுத்தான். எனக்கு இந்தத் தூணில் மரணம் வேண்டாம். அடுத்த தூணில் கட்டிவைத்து என்னை வெட்டு என்றான்.

 

வெட்டியானுக்கு ஒரே சிரிப்பு. “ஏனப்பா? சாகப் போகிறவனுக்கு தலைக்கு மேலே, வெள்ளம் சாண் போனால் என்ன, முழம் போனால் என்ன? உனக்கு எதற்கு அடுத்த தூண்?” என்று நகைத்தான். கைதியோ மீண்டும் மீண்டும் வேண்டினான். “சரி, போ! உன் கடைசி ஆசையை நான் நிறைவேற்றுகிறேன்” என்று அடுத்த தூணுக்கு அழைத்துச் சென்று கட்டிக் கொண்டிருந்தான். இதற்குள் பெரும் கூட்டம் கூடிவிட்டது. அந்த நாட்டு அரசன், அந்தப் பக்கமாகச் செல்லுகையில் இது என்ன  பெருங்கூட்டம்? எனக்குத் தெரியாமல் எந்நாட்டில் என்ன நடக்கிறது? என்றான். உடனே எல்லோரும் கைதியின் விநோத வேண்டுகோளைத் தெரிவித்தனர். அரசனுக்கும் ஆச்சரியம். கூட்டத்தை விலக்கி, மரண தண்டனைக் கைதியுடன் பேசினான். அவன், தான் நிரபராதி என்றும், தனக்கு மரணதண்டனை அளித்தது தவறு என்றும் அழகாக எடுத்துரைத்தான். உடனே அவனை விடுதலை செய்ய அரசன் உத்தரவிட்டான்.

நம்பிக்கையை இழக்கக்கூடாது;முயற்சி திருவினை ஆக்கும்.

 

Xxx

cow

சண்டை பிறந்தால் தீர்வு பிறக்கும்!

ஒரு ஊரில் ஒரு பக்காத் திருடன் இருந்தான். ஒரு குடியானவன், பக்கத்து ஊரில் ஒரு பசு மாட்டை விலைக்கு வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போவதைப் பார்த்தான். இந்த மாட்டை இன்று இரவு திருடி விடுவோம் என்று அவனுக்குத் தெரியாமல் பின் தொடர்ந்தான். போகும் வழியில் ஒரு ஆவியும் (பேய்) அவனைப் பின் தொடர்ந்தது. அது, அந்தக் குடியானவனைக் கொல்ல வேண்டுமென்று திட்டமிட்டது.

 

அந்தக் குடியனவனைப் பின் தொடரும் திருடனிடம் சென்று தனது திட்டத்தை தெரிவித்தது. திருடனுக்கு ஏக சந்தோசம். நமக்கு ஒரு துணை கிடைத்தது என்று ஜாலியாகப் பேசிக்கொண்டே சென்றான்.

 

குடியானவனின் வீடும் வந்தது. அவன் மாட்டைக் கட்டிவிட்டு, மனைவி மக்களைச் சந்தித்து அளவளாவினான். திருடனுக்கு திடீரென்று ஒரு சந்தேகம். முதலில் பேயை (ஆவி) அனுப்பி, குடியானவனைக் கொல்லச் செய்தால் வீட்டிலுள்ள எல்லோரும் அழுது புலம்புவார்கள். எல்லோரும் விழித்துக் கொண்டால் பின்னர் மாடு திருடும் வேலை நடக்காது என்று எண்ணி, பேயே! நீ உன் திட்டத்தை  எனக்குப் பின்னால் நிறைவேற்று; கொஞ்சம் பொறு — என்றான்.

 

பேய்க்கும் ஒரு சந்தேகம். இந்தத் திருடன் போய் முதலில் பசுவைத் திருடினால் அது, “மா, மே” என்று கத்தும். எல்லோரும் விழித்துக் கொண்டால் என் பாடு, திண்டாட்டமாகிவிடும் என்று எண்ணி, “ஏ, திருடா, கொஞ்சம் பொறு. நான் போய் என் வேலையை முதலில் முடிக்கிறேன்” என்றது.

 

 

இருவரும் ஒருவரை ஒருவர் வலியுறுத்தவே, அது வாக்குவாதமாகி மாறி கைகலப்பில் முடிந்தது. வீட்டிலுள்ள எல்லோரும் விழித்துக்கொண்டு வேடிக்கை பார்க்க வெளியே வந்துவிட்டனர். ஊரே கூடிவிட்டது. திருடனும் பேயும் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்கவே, ஊர் மக்கள் அனைவரும் கூடி, அவர்களை ஓட ஓட விரட்டினர். குடியானவனுக்கு மிக்க மகிழ்ச்சி.

 

–சுபம்–