Compiled by London swaminathan
Date: 23 February 2016
Post No. 2567
Time uploaded in London :– 8-43 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
Please go to swamiindology.blogspot.com
OR
tamilandvedas.com
(குறைந்தது 75 ஆண்டு பழமையான விநோத விகட சிந்தாமணி – என்ற நூலிலிருந்து தொகுத்தது; நேற்று முதல் மாமி கடிதம் வெளியானது)
எனதருமை அக்காள்,
இதுவரை எனது ஆயுள் பரியந்தம் யான் எங்கும் காணாத அதிசயங்களை யெல்லாம் கண்டிருப்பதால், அவற்றையெல்லாம் உனக்குத் தெரிவிக்க வெண்ணியே இக்கடிதத்தை எழுதலானேன். இதை நீ வாசிக்க ஆரம்பிக்கும்போதே அதிசயப்படாதே. முழுதும் வாசித்த பின், மறுபடியும் வாசித்துப் பார்த்து ஆச்சரியப்படு. அஃதென்னவென்றால், அம்மாள் சுமார் ஒரு மாதத்திற்குமுன்பு, பெங்களூருக்கு அண்ணாத்தையைக் காணச் சென்றிருந்து நேற்றையதினம்தான் வந்தார்கள்.
அண்ணியைக்கொண்ட பிறகு அம்மாள் அங்குச் சென்றது இதுதான் முதல் தடவை. அம்மாள் இங்குக் காலை ஏழு மணி பெங்களூர் பாசஞ்சர் வண்டியேறி, மாலை சுமார் ஆறு மணிக்கு பெங்களூர் தண்டு ஸ்டேஷனில் இறங்கினார்களாம்.
(தண்டு =கண்டோன்மெண்ட்)
முன்னதாகவே கடிதமெழுதியிருந்ததால் அண்ணாத்தை ஆபீஸிலிருந்து நேராக ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்திருந்து அம்மாளை இட்டுக்கொண்டு சுமார் ஏழு மணிக்கு வீடு போய்ச் சேர்ந்தார்களாம். அப்போது அண்ணி, மேஜையின் மீது ஒரு ஹார்மோனியப்பெட்டியை வைத்து ஒரு நாற்காலியின்மீது உட்கார்ந்து கூடத்தில் பாடிக்கொண்டிருந்ததாம். அம்மாள் வந்ததைப் பார்த்தும், அண்ணி நாற்காலியைவிட்டு எழுந்திருக்காமல், அப்படியே அசட்டையாய் பாடிக்கொண்டிருந்ததாம்.
அம்மாளை, எப்போது வந்தீர்கள்? காப்பி சாப்பிடுகிறீர்களா? உடம்பு சௌக்கியமா? என்று ஒரு பேச்சுக்குக்கூட கேட்க வில்லையாம். அம்மாள், வேடிக்கையை யெல்லாம் பார்த்துக்கொண்டே கூடத்தில் உட்கார்ந்தார்களாம். பிறகு இரவு ஒன்பது மணியானதும் அண்ணி, தன் முத்தான வாயைத் திறந்து, ‘அடீ, வேதவல்லி, என்ன சந்தடியே காணோம். சாப்பாடு தயாராய் விட்டதா? மணியென்ன தெரியவில்லையா?’ என்று வேலைக்காரியைக் கேட்டதாம்.
உடனே அவள் இரண்டு பாத்திரங்களில் வெந்நீர் கொண்டு வைத்தபின், கைகாலலம்பிக்கொண்டு, ‘என்னாங்கோ! கைகாலலம்பிக்கொண்டு சாப்பிட வங்கோ என்றதும், அண்ணாத்தை மறுபாத்திர ஜலத்தில் கையை மட்டுமலம்பிக்கொண்டு மீதி ஜலத்தை அம்மாளிடம் கொடுத்ததாம். அம்மாள், இந்த ஆச்சரியத்தையெல்லாம் உள்ளேயடக்கிக்கொண்டு, கைகாலலம்பிக்கொண்டபின் சாப்பிட உட்கார்ந்தார்களாம். அண்ணியும், அண்ணாத்தையும் மேஜயின்மீது ஒரு பெரிய வெள்ளிக் கிண்ணியில் அன்னம் போட்டுக்கொண்டு நாற்காலியிலுட்கார்ந்து சாப்பிட்டார்களாம். அம்மாள் கீழே உடகார்ந்து, ஒரு இலையில் வேலைக்காரியிட்ட அன்னத்தை சாப்பிட்டார்களாம். பிறகு அண்ணியும், அண்ணாத்தையும் ஊஞ்சலின் மீதுட்கார்ந்து தாம்பூலமருந்தி இரவு பத்து மணிக்கு சயனித்தார்களாம்.
(சயனி = படு)
மறுநாள், அண்ணி நம்மைபோல் அதிகாலையில் எழுந்திருக்கவில்லையாம். காலை எட்டு மணிக்கு எழுந்திருந்து முகம் கழுவி, வேலைக்காரி கொண்டுவந்த பலகாரத்தைச் சாப்பிட்டுவிட்டு, ஒரு நாவலை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்ததாம். இதையெல்லாம் கேட்கக்கேட்க எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது. இவற்றை அண்ணாத்தை கவனித்தும் மௌனமாயிருக்கிறதாம். அது என்ன காரணமோ அறியேன். நிற்க.
அம்மாள், அங்கு இருந்த ஒரு மாதமும், அண்ணி படுத்தியபாடு இவ்வளவு அவ்வளவு என்று சொல்லமுடியாது. வேலைக்காரியுடன், அம்மாள் அருகிலிருந்து வேலை செய்யவேண்டுமாம்.
இல்லாவிடில், “ஆ! இதென்ன, என்னைப்போல ஒன்றுமறியாத மொட்டைப் பெண்ணா, எல்லாம் தெரிந்து போன, பேத்தியெடுத்து நரைத்த கிழவிக்கு எப்படி வேலை செய்யாமலிருக்க மனம் சகிக்கிறது? வேலை என்றால் மாட்டேன், சோறு என்றால் தின்பேன் என்ற கணக்காயிருக்கிறதே இம்மாதிரி மாமியார் இருந்தால், மருமகளுக்கு குறைவேயில்லைதான்! வயதாய்விட்டால் மட்டும் போதுமா? அதற்கேற்ற குணமும் மனமும் வேண்டாமா? என்று ‘பாரதம்’ படி முடிக்குமாம்.
அம்மாள் பதில் பேச பயந்து சும்மாய் இருந்துவிடுவார்களாம். ஒருநாள், மனம் தாளாமல், “ என்னடீ! மாமியார் ஆச்சுதே என்கிற மட்டுமரியாதை இல்லாமல் என்னை வேலை செய்யும்படி அதிகாரம் செய்கிறாயே. இதற்குத் தானா நான் உன்னைக் கொண்டது? புழுக்கைச் சிறுக்கி! அவ்வளவு தூரம் என்னிடம் வாலாட்டாதே. நீ பணக்காரன் வீட்டுப் பெண்ணாயிருந்தால் எனக்கென்ன?” என்றார்களாம்.
உடனே அண்ணி, அம்மாளின் தலைமுடியைப் பிடித்து இழுத்து, “ நாக்கை உள்ளே வைத்துப் பேசு. என்னையா அடீ, புழுக்கைச் சிறுக்கியென்று ஏசுகிறாய்? என் தகப்பனிடம் சொன்னால் உன் உடம்பிலுள்ள எலும்பைப் பொறுக்கிவிட்டுப் பல்லைத்தட்டிவிடுவார். ஜாக்கிரதை. என்ன, மாமியார் என்றால் இரண்டு கொம்பு முளைத்திருக்கிறதா? அந்த வெங்காய அதிகாரம் எல்லாம் இங்கே செல்லாது” – என்று வாயில் வந்தபடியெல்லாம் பேசி முடித்ததாம்.
அம்மாள், இதைக்கேட்டு நடுநடுங்கிப் போய், பேயிடம் அகபட்டுக் கொண்டது போல திகிலடைந்து, தலை மயிரை விடுவித்துக் கொண்டு ஒரு மூலையில் போய் படுத்துக்கொண்டார்களாம்.மற்றவைகளைப் பிறகு எழுதுகிறேன்.”
உன் அன்புள்ள சகோதரி
கமலா
You must be logged in to post a comment.