பூமியின் இருதயத்தைப் பிளக்காதே – வேத முனிவன் அறிவுரை (Post.10,581)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,581

Date uploaded in London – –    20 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை 12

புறச் சூழல் பாதுகாவலர்களும் பசுமை நண்பர்களும் தினமும் படிக்க வேண்டியது பூமி சூக்தம்; பரப்ப வேண்டியது பூமி சூக்தம் ; அதில் 35-ஆவது பாடலில்/ மந்திரத்தில் ஒரு அருமையான வரி வருகிறது. “நாங்கள் உன்னுடைய இருதயத்தையோ மர்மஸ்தானங்களையோ தாக்கிவிடாமல் இருக்க வேண்டும்” . இந்த வேண்டு கோள் குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தது. அதாவது பைபிள் என்னும் நூல் உலகில் தோன்றுவதற்கு முன்னர், கிரேக்கர்கள், ரோமானியர்கள், தமிழர்கள் எழுத்தோ இலக்கியமோ அறியாத காலத்தில் அதர்வண வேத முனிவன் பாடியது. என்ன ஆச்சர்யம்!! எதிர்காலத்தில் கலியுகத்தில், விண்வெளியுகத்தில் நடக்கப்போகும் கொடுஞ்செயல்களை உணர்ந்து இப்படிப் பாடினர் போலும்!

மணற் கொள்ளை பற்றி தினமும் படிக்கிறோம்; ஆறுகளை வெட்டிக் குழிதோண்டி, சேரும் சகதியுமாகச் செய்யும் கும்பல்கள் உள ; மற்றோர் புறம் கனிமங்களை, தாது வளங்களை, ரத்தினைக் கற்களை, தங்கத்தைத் தோண்டி எடுக்கும் கும்பல்கள் உள . பூமிக்கு அடியிலும் கடல் நடுவிலும் அணுகுண்டு சோதனைகளையும் ஆயுதப் பயிற்சிகளையும் செய்து பல கோடி மீன்களையும் கடல் தாவரங்களையும் அழிப்பதைக் கேட்கிறோம் . இது தவிர கடல் பவளம், கடல் முத்து என்று அலையும் கும்பல்களும் இருக்கின்றன. பூமாதேவி மீது எப்போதும் மனிதன் தாக்குதலை நடத்திக்  கொண்டு இருக்கிறான். இயக்கையாக நடக்கும் காட்டுத் தீயை விட மனிதன் சுயநலத்துக்காக உண்டாக்கும் காட்டுத் தீ சம்பவங்களையும் பத்திரிகைகள் வெளியிட்ட வண்ணம் உள்ளன. ஆனால் பூமா தேவியோ நம் மீது கருணை கொண்டு நமக்கு உணவு தானியங்களை அளிக்கிறாள்.

33-ஆவது மந்திரத்தில் சூரியனை ‘நண்பன்’ என்று அழைக்கும் சொற்றொடர் முக்கியமானது. ரிக் வேதம் முழுதும் கடவுளை ‘நண்பர்’ என்றே முனிவர்கள் உரிமை பாராட்டுகின்றனர். தாய் தந்தை என்று அழைப்பதை விட ‘நண்பா!’ என்றே அழைக்கின்றனர்.

பிராமணர்கள் தினமும் நடுப்பகலில் சூரியனைப் பார்த்து சொல்லும் மந்திரத்தில் நூறாண்டுக்கு காலம் வாழ்வோமாக; நோய் நொடியில்லாமல் நல்ல கண் பார்வையுடன் உன்னைக் காண்பேனா குக ; நல்லசொற்கள், நல்ல பேச்சு, மகிழ்ச்சி, ஆனந்தம் 100 ஆண்டுகள் கிடைக்கட்டும் என்று வேண்டுகின்றனர். இந்தக் கருத்து எல்லா வேதங்களிலும் வருகிறது. எப்போதும் POSITIVE THINKING  பாசிட்டிவ் சிந்தனை! அது இன்று வரை தொடர்வது அதிசயமே!

34 -ஆவது மந்திரத்தில், மனிதன் புரண்டு படுத்து தூங்குவது பாடப்படுகிறது. ஒட்டு மொத்தக் கருத்து எங்களை நன்றாக தூங்க உதவி செய் என்பதே. மேலை நாட்டில் தூக்கம் வராமல் கஷ்டப்படுவோர்தான் அதிகம். நல்ல உறக்கம், நல்ல கனவு பற்றி தினமும் வேண்டும் மக்கள் இந்துக்கள்.

மனிதன் கனவு காணாமல் தூங்க  முடியாது என்று நவீன அறிவியல் கூறுகிறது. இதை அறிந்த இந்துக்கள் கெட்ட கனவுகள் எனக்கு வேண்டாம் என்று தினமும் வேண்டுகின்றனர். பிராமணர்கள் தினமும் மூன்று முறை செய்யும் சந்தியா வந்தனத்தில் கெட்ட கனவுகள் அழியட்டும் என்று சொல்லி பிரார்த்தனையை முடிக்கிறார்கள். சிவன் கோவிலில் தினந்தோறும் அபிஷேகம் செய்யும் போது சொல்லும் ருத்ரம் சமகத்தில்  ‘இந்த நாள் நல்ல நாளாக இருக்கட்டும்; நல்ல தூக்கம் எங்களுக்கு கிடைக்கட்டும்’ என்று வேண்டுகின்றனர்

சாந்தி பாடம் என்பதைச் சொல்லிவிட்டு நீண்ட துதியைப் பாடுவார்கள். அதில் ‘சயனம் சமே , சுதினம் சமே’ என்ற சொற்கள் எனக்கு ‘நல்ல உறக்கம் தா, நல்ல தினத்தை அருளுக’ என்பது முதலில் வந்து விடும்

35 ஆவது மந்திரம்தான் இன்று எல்லா கட்டிடங்களிலும் கொட்டை எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட வேண்டியது “பூமியின் இருதயத்தையும் மர்ம  ஸ்தானத்தையும் காயப்படுத்தாமல் இருப்போமாகுக”. புறச் சூழலை பாதுகாருங்கள் பூமியைக் காப்பாற்றுங்கள் — என்ற இந்த சிந்தனை குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு முன்னவர் வந்ததை உலகம் முழுதும் பறை சாற்றுவது இந்துக்களின் கடமை.

36-ஆவது மந்திரத்தில் ஆறு பருவங்களும் வந்து விடுகின்றன. சங்கத் தமிழ் இலக்கியத்திலும் ஆறு பருவங்கள்தான். உலகின் ஏனைய பகுதிகளில்- ஐரோப்பாவில் 4 பருவங்கள். இமயம் முதல் குமரி வரையுள்ள இந்த கருத்து மாக்ஸ்முல்லர் கும்பலுக்கும் மார்க்சீய கும்பலுக்கும் செமையடி, மிதியடி, தடியடி கொடுக்கும் வரிகள். வேத கால இந்துக்கள் குளிர் பிரதேசத்திலிருந்து கைபர் கணவாய் வழியாக வந்தவர்கள் என்று சொல்லுவோரை தமிழர்கள் புரட்டிப் புரட்டி அடிக்கும் வரிகள்; சங்கத் தமிழ் இலக்கியத்தில் 6 பருவங்கள்; வேதத்தில் 6 பருவங்கள் இந்த எல்லா பருவங்களிலும் எங்கள் மீது உணவு மழை பொழிக ! சொரிக என்று முனிவன் வேண்டுகிறான்.

2100 ஆண்டுகளுக்கு முன்னர் காளிதாசன் பாடிய ருது சம்ஹாரம் என்ற பாடல் தொகுப்பு ஆறு பருவங்களை மிக அழகாக சித்தரிக்கிறது . அதைத் தமிழர்கள் சங்க இலக்கியத்தில் அப்படியே பின்பற்றினர். தமிழர்கள் பெரும்பொழுதையும் சிறு பொழுதையும் ஆறு, ஆறாக வகுத்தனர்

காளிதாசன் ஏன் ருதுசம்ஹார என்ற ஆறு பருவ வருணனைக் காவியத்தை கோடை காலத்துடன் துவங்கினான் என்று அறிஞர்கள் வியப்பர். அதற்கு விடை 36 ஆவது மந்திரத்தில் கிடைத்துவிட்டது . அ .வே. புலவனும் ‘க்ரீஷ்ம’ என்று கோடை  காலத்திலேயே துவங்குகிறான்.

இதோ நான்கு பாடல்களும், தமிழில் அவற்றின் பொருளும் —

யாவத் தே அபி விபஸ்யாமி பூமே ஸூர்யேன  மேதினா

தாவன் மே சக்ஷுர்மா மே ஷ்டோ த் தராமுத்தராம்  ஸ மாம் -33

யச்சயானஹ பர்யாவர்தே தக்ஷிணம் ஸவ்யமபி  பூமே பார்ஸ் வம்

உத்தா னாஸ்த்வா ப்ரதீசீம்  யத் புஷ்டீபிரதிசேமஹே

மா ஹிம்ஸிஸ்தத்ர நோ பூமே ஸர்வஸ்ய  ப்ரதீசீவரி -34

யத் தே பூமே விகனாமி க்ஷிப்ரம் ததபி ரோஹது

மா தே மர்ம விம்ருக்வரி மா தே ஹ்ருதயமர்பிபம் – 35

க்ரீஷ்மதே பூமே வர்ஷானி சரத் ஹேமந்தஹ சிசிரோ வசந்தஹ

க்ருதவஸ்தே விஹிதா ஹாயநீரஹோராத்ரே ப்ருதிவி நோ துஹாதாம் -36

xxx

பொருள்

சூரியனை நண்பனாகக் கொண்டு நான் உன்னைப் பார்க்கும் வரை , ஆண்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக உருண்டு ஓடும்வரை, என்னுடைய கண் பார்வை மங்கக் கூடாது – 33

பூமி த தாயே ! உன் மீது நாங்கள்  வலது புறம், இடது புறம் சாய்த்து சாய்த்து உறங்கும்போதும் நிமிர்ந்து படுக்கும்போதும், புரண்டு படுக்கும்போதும் எங்களுக்கு இன்னல் செய்யவேண்டாம் . உன்னுடைய அருளால் எல்லோரும் உறங்குகிறார்கள் -34

நான் உன்னை தோண்டி, அகழ்ந்து எதை எடுத்தாலும் அது மீண்டும் வளரட்டும்; தூய்மை செய்யும் தாயே உன்னுடைய இருதயத்தையும் மர்ம ஸ்தானங்களையும் நாங்கள் காயப்படுத்தாமல் இருப்போமாகுக – 35

கோடை காலமும் குளிர் காலமும் மழைக் காலமும் இலையுதிர் காலமும் முன்பனி காலமும் பின்பனிக் காலமும் உன்னுடைய பருவங்கள் ; அவையே ஆண்டு என்பதையும் அதில் அடங்கிய இரவு பகலையும் உண்டாக்குபவை; அந்தக் காலம் முழுதும் எங்கள் மீது வளத்தை வாரி வழங்குவாயாகுக (பாலைச் சொரி வாயாகுக)-36

To be continued…………………………………

tags- பூமி சூக்த கட்டுரை 12, பூமி, இருதயம், மர்ம ஸ்தானம், பிளக்காதே