மலையின் உயரம் +  கடலின் ஆழம் = புத்திசாலி (Post No.10,251)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,251

Date uploaded in London – 25 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மலையின் உயரம், கடலின் ஆழம் ஆகிய இரண்டும் ஒரு புத்திசாலியிடம் உள்ளது!

ச.நாகராஜன்

சரோஜா பட் தொகுத்த சுபாஷித சதகம் என்ற நூலிலிருந்து சில சுபாஷிதங்களைப் பார்த்தோம். இதோ இன்னும் ஐந்து சுபாஷிதங்கள் :-

துங்கத்வமிதரா நாத்ரௌ நேதம் சிந்த்யாவகாததா |

அல்லுங்கணீயதாதேதுர்பயம் தன்மனஸ்வினி ||

ஒரு மலையானது உயரத்தை மட்டும் கொண்டுள்ளது (ஆழத்தை அல்ல) கடலோ ஆழத்தை மட்டும் கொண்டுள்ளது (உயரத்தை அல்ல).  ஆனால் வெல்ல முடியாத இந்த இரு அம்சங்களும் ஒரு புத்திசாலியிடம் இருக்கிறது.

A mountain has height, not the other one (i.e depth). It (i.e. height) is not there in the sea but depth is there. Both (these properties) which are the cause of being insurmountable exist in an intelligent person.

*

பராபந்தேல்பமேவாக்ஞா: காமம் வ்யக்ரா பவந்தி ச |

மஹாரம்பா: க்ருததியஸ்திஷ்டந்தி ச நிராகுலா: ||

அல்ப புத்தியுள்ளவர்கள் சிறிய விஷயங்களை எடுத்துக் கொண்டு அதிலேயே மூழ்கி விடுகிறார்கள். ஆனால் உறுதியுள்ளவர்கள் பெரிய விஷயங்களை எடுத்துக் கொண்டு உறுதி குலையாமல் இருக்கிறார்கள்!

Ignorant people undertake small matters and are completely engrossed in them. Those who are determined embark upon giant undertakings and remain unperturbed.

*

சின்னோபி ரோஹதி தரு: க்ஷீணோப்யுபசீயதே புனச்சந்த்ர: |

இதி விம்ருஷந்த: சந்த: சந்தப்யந்தே ந தே விபதா ||

வெட்டப்பட்டாலும் கூட ஒரு மரம் மீண்டும் வளர்கிறது. தேய்ந்தாலும் கூட சந்திரன் மீண்டும் வளர்கிறது. இப்படி நினைத்து, மகான்கள் இடையூறுகளால் ஒரு போதும் தளர்வதில்லை.

A tree grows (again) even when it is cut. The moon grows even after getting reduced. Thinking thus, the saintly ones are never tormented by difficulties.

*

யத்யதிஷ்டதரம் தத்ததேயம் குணவதே கில |

அத ஏவ கலோ தோஷான் சாதுப்ய: சம்ப்ரபச்சதி ||

எது அதிகமதிகம் விரும்பப்படுகிறதோ அதுவே புண்யவான்களுக்கு உண்மையில் தரப்பட வேண்டும். அதனால் தான்  துஷ்டர்கள் நல்லவரிடம் தோஷங்களைச் சுமத்துகிறார்கள்.

Whatever is more and more desirable is indeed to be given to the virtuous people. That is why a wicked person assigns faults to the good.

*

சஜ்ஜனஸ்ய ஹ்ருதயம் நவநீதம் யத்வதந்தி கவய்ஸ்ததலீகம் |

அன்யதேஹவிலசத்பரிதாபாத் சஜ்ஜனோ த்ரவதி நோ நவநீதம் ||

நல்லோரின் இதயம் வெண்ணெயைப் போன்றது என்று கவிஞர்கள் வர்ணிக்கின்றனர். அது தவறு. ஒரு நல்லவனின் இதயமானது இன்னொருவனின் உள்ளம் சுடும் போதே உருகி விடுகிறது. ஆனால்  வெண்ணெய் அப்படி அல்ல; அதை சூட்டில் வைத்தால் மட்டுமே தான் அது உருகுகிறது.

Poets describe the heart of a good man as butter. This is false. A good man’s (heart) melts by the heat scorching in the body of another man, but not the butter (which melts only when it is heated).

**

English Translation by Saroja Bhate

Source : Subhasita Shatakam Thanks : Saroja Bhate

Tags- மலை உயரம், கடலின் ஆழம்,  புத்திசாலி