மல்லி விலை என்ன? (Post No.9000)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9000

Date uploaded in London – –5 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பேச்சு வழக்கில் நாம் பயன்படுத்தும் சொற்கள் பல பொருளைத் தரக்கூடும். எந்த தருணத்தில், எந்த சூழ்நிலையில் ஒருவர் ஒரு சொல்லைப்  பயன்படுத்துகிறார் என்பதை அறிபவரே அதன்பொருளை உணர்வார்.

இன்னும் ஒரு விஷயம் ஊர்ப் பெயர்களாகும். அந்தந்த வட்டார மக்கள் அதை சுருக்கெழுத்தில் சொல்லுவார்கள். கே. புதூர் , ஆ.புதூர் என்றெல்லாம் உண்டு.

“மல்லி  விலை ஏறிப் போச்சு” என்று பூக்கடைக்காரர்களோ, பெண்களோ பேசிக்கொண்டால்  அது மல்லிகைப் பூவைக் குறிக்கும். பலசரக்குக்க கடையில் இதே குரல் ஒலித்தால் அது கொத்த மல்லி விதைகளைக் குறிக்கும்.

இதுவே காய்கறிக் கடையானால் கொத்துமல்லி இலையைக் குறிக்கும் . சம்ஸ்க்ருதத்தில் மூன்று வகையான (Swaras) சுரங்கள் வேறு உண்டு. சீன மொழி போல அதிலும் அர்த்தவேறுபாடு வந்து விடும்.

xxxx

கும்போணம் வெத்தலை கிடைக்குமா?

தஞ்சாவூர்காரர்கள் கும்ப கோணம் என்று சொல்ல மாட்டார்கள். ‘கும்போணம்’ என்பர். மகாமகம் என்று சொல்லாமல் ‘மாமாங்கம்’ என்பர். எண்பத்தைத்தந்து (85) என்பதை ‘எண்ப்ளத்தைந்து’  என்பர்.

கீழ்கண்ட ஊர்ப்பெயர்களைப் பாருங்கள்; எப்படி உரு மாறுகிறது என்பது தெரியும்.

திருப்பராய்த் துறை – திருப்ளாத்துறை

ஐராவத நல்லூர் – அயிலானுர்

சீர்காழி – சீயாழி

ஆரல்வாய் மொழி – ஆராம்பொலி

தரங்கம்பாடி – ட்ராங்கு பார்

மட்டக்கிளப்பு – பட்டிக்கோலா

சோழாந்தகன் – சோழவந்தான்

வாரணாசி – பெனாரஸ்

பாரு கச்சம் – ப்ரோச்

இப்படி நாடு முழுதும் உண்டு.

தற்காலத்தில் மாநில அரசுகள் ஒவ்வொரு ஊரின் உண்மைப்பபெயரை ஆங்காங்கு சூட்டி வருவதை அறியலாம்.

வெள்ளைக்காரர்களும் பிற மொழிக்காரர்களும்  நம் ஊர்ப் பெயர்களை மாற்றியது இமயம் முதல் கண்டிவரை காணப்படுகிறது.

xxx

உம்மாச்சி பட்டர்

உம்மாச்சி பட்டர் என்றால் என்ன என்று திகைத்த காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) ஒரு கோவிலில் அதற்கு அர்த்தம் கண்டுபிடித்த சம்பவம் ‘தெய்வத்தின் குர’லில் இருக்கிறது; சுவாமிகளுக்கு முன்னர் உம்மா ச்சி பட்டரை க்கு கூப்பிடுங்கள் என்று பட்டர்கள் பேசிக்கொண்டனர். உம்மாச்சியும் வந்தார். அவருடைய பெயரை விஜாரித்தபோது அவருடைய பெயர் உமா மஹேஸ்வர பட்டர் என்று தெரிய வந்தது. மஹா மேதாவியான அவருக்கே அதை விளங்கிக் கொள்ள ஒரு சம்பவம் தேவைப்பட்டது. நாம் எல்லாம் எம்மாத்திரம்?

ஒப்பில்லாத அப்பனை உப்பிலி அப்பன் ஆக்கி உப்பில்லாத பிரசாதத்தை வழங்குவது போல வேதத்தை வெள்ளைக் கார்கள் மொழி பெயர்த்துள்ளனர்.

ரிக் வேதத்தை மொழி பெயர்த்தவர்கள் இப்படி நுணுக்கமான விஷயங்களை மனதிற் கொள்ளாமல் கண்டபடி மொழி பெயர்த்துவிட்டனர். இப்போதுதான் விழிப்புணர்ச்ச்சி ஏற்பட்டுவருகிறது.

xxx

ரிக் வேத மொழிபெயர்ப்புத் தவறுகள்

சங்க இலக்கி யத்தில் பகை மன்னர்களை வென்ற போது போர்க் களத்தில் “ரத்த ஆறு” (River of Blood)  ஓடியதாக வருணனைகள் உண்டு. இதே போல வடக்கில் சர்மண் நதி என்று ஒரு ஆறு உள்ளது . அது இயற்கையிலேயே சீனாவின் மஞ்சள்  நதி போல செம்மண் நிறம் உடையது. அதில் வெள்ளம் வருகையில் அது சிவப்பாக இருக்கும்.

ஒரு புலவர் தற்குறிப்பேற்ற அணியை பயன்படுத்தி இந்த ஆறு சிவப்பானதற்கு மன்னரின் ‘யாக பலி’ காரணம் என்று பாடி வைத்தார். உடனே ஒரு மார்க்சிஸ்ட் மேதாவி எத்தனை ஆயிரம் ஆடு, மாடுகள் வெட்டப்பட்டால் இப்படி சர்மண் நதியில் ரத்த ஆறு ஒடி இருக்கும் என்று கணக்குப் போட்டு விட்டார்!!! வேதத்தில் மஞ்சள் வர்ண மக்கள், சப்பை மூக்குக்கார்கள் பற்றி பாடல்கள் உள. இவை வட கிழக்கு  இந்தியாவில் உள்ள சீன , பர்மிய (Mongoloid) மக்களைக் குறிப்பதாக இருக்கவேண்டும் . இதை சப்பை மூக்கு திராவிடர்களைக் குறிப்பதாக வெள்ளையர் எழுதி வைத்துவிட்டனர்.! அவர்களே வேறு இடங்களில் திராவிடர்களை வருணிக்கையில் போண்டா மூக்கு, கோழிமுட்டைக் கண்ணன் என்றும் எழுதி வைத்துள்ளனர். கடைசியில் பார்க்கப்போனால். சிந்து- சரஸ்வதி நதி தீரத்தில் கண்டு பிடிக்கப்பட்ட எலும்புக்கு கூடுகள் அத்தனையும்  வேதகால மக்களுடையவை!! அதாவது இன்றைய பஞ்சாபியரின்  உடல்வாகைக் கொண்டவர்கள். சங்க இலக்கிய 30,000 வரிகளில் “சிந்து” என்ற பெயரே இல்லை. ஆனால் கங்கை, இமயம் , அருந்ததி, சப்தரிஷி , அத்தனை இந்துக்கடவுளரின் பெயர்களும் இருக்கின்றன. புத்தரோ, மஹாவீரரோ கூட ‘பெயர் அளவில்’ இல்லை!!

tags- கும்பகோணம், மல்லி விலை, உம்மாச்சி , வேதம்

–SUBHAM—