ராணி! மஹா ராணி!! எகிப்திய அதிசயங்கள் – 25 (Post No.3776)

Picture of Queen Nefertiti

Written by London swaminathan

 

Date: 31 March 2017

 

Time uploaded in London:- 12-33

 

Post No. 3776

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

எகிப்து நாட்டில் ஏராளமான மஹாராணிகள் உண்டு; பலர் மதுரை மீனாட்சி, அல்லி ராணி போன்று ஆளவும் செய்திருக்கிறார்கள்; மற்றையோர் கௌசல்யா, சுமித்ரா, கைகேயீ, குந்தி, காந்தாரி போல ராஜாக்களுடன் உட்கார்ந்தும் இருக்கின்றனர். சிலர் அந்தப்புர சதிகளில் ஈடுபட்டு அரசனையே கொன்றுமிருக்கிறார்கள். சுவையான விஷயங்களை மட்டும் சுருக்கமாகக் காண்போம்

 

எகிப்திய மஹாராணிகளில் எல்லோரும் அறிந்த மஹாராணி- கிளியோபாட்ரா; அவர் பற்றி முன்னரே எழுதிவிட்டேன் (தமிழ்நாட்டின் கிளியோபாட்ரா -என்ற கட்டு ரையில் காண்க).

 

ராணி 1

அங்கசேனாமுன் ANKHESENAMUN ( அங்கசென்பாடன்= அங்க சேனா பிரம்மன்)

 

இவருடைய காலம் கி.மு.1336-1327.

ஒரே கடவுள் என்று புரட்சி செய்த அகநாடன் (AKHENATEN ஏக நாதன்) என்ற மன்னருக்கும் நெபர்டிடி ( NEFERTITI நவரச தத்தா) என்ற ராணிக்கும் பிறந்த பெண். அமன் (பிரம்மன்) என்னும் ஆண் தெய்வத்தின் பெயர், இவர் பெயரில் இறுதியில் இருப்பதைக் காணலாம்.

 

உலகப்புகழ்பெற்ற இளம் அரசன் துதன்காமுன் (TUTANKHAMUN) என்பவரை மணந்தவள். (துட்ட காமினி= துதன் காமனின் தங்கப் புதையல் அப்படியே கிடைத்ததால் அவன் புகழ் உலகெங்கும் பரவியது. அந்தச் செல்வத்தை உலகம் முழுதும் மியூசியங்களுக்கு எடுத்துச் சென்று காட்சிக்கு வைப்பர்; அதி பயங்கர வசூல்!!!)

 

ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் இளம்  (16) வயதில் மன்னர் துதன்காமுன் இறக்கவே, அவள்தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும்; ஆனால் அவள் மேற்காசியாவை ஆண்டு வந்த ஹிட்டை மன்னர் சுப்பிலுலியுமஸுக்கு (HITTITE KING SUPPILULIUMAS) (சுப்பிரமணியஸ்), தனக்கு ஒரு ஆண்மகனைத் தரும்படி கெஞ்சினாள். அவரை எகிப்திய மன்னராக முடிசூட்டுவதாகவும் கடிதத்துக்கு மேல் கடிதமாக எழுதினாள். இதுவரை எகிப் தின் வரலாற்றில் யாரும் செய்யாத துணிகரச் செயல் அது.

 

வழியில் படுகொலை!

 

இப்படி அவள் மன்றாடிக் கேட்கவே ஹிட்டைட் மன்னன், தனது மகன்களில் ஒருவனான ஜென்னாஞ்சாவை  (ZENNANZA) அனுப்பிவைத்தார். ஆனால், சதிகாரர்கள், அவனை பாதிவழியிலேயே தீர்த்துக்கட்டிவிட்டார்கள்.

 

அதற்குப்பின் அந்தப் பெண்ணின் கதை என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. ஒரு வேளை அவள் ஆய் (AY) என்ற மன்னரை மணந்திருக்கலாம்.

 

(எகிப்திய பெயர்கள் அனைத்தும் குட்டுவன், கேது, மோன் (மோசி=குழந்தை), தேவன், தேவி, மஹா என்று தமிழ், சம்ஸ்கிருதப் பெயர்களில் இருப்பது பற்றி முன்னரே தனி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியுள்ளேன். ஆய் என்பது சங்க கால கடை எழு வள்ளல்களில் ஒரு பெயர்! சம்ஸ்கிருத நாடகத்தில் மிகவும் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரம் வசந்த சேனா! இலங்கையில் தமிழர்களை விழுத்தாட்டியவன் துட்டகாமினி)

 

இன்னொரு மர்மம்!

துதன்காமன் (துஷ்டகாமினி) கல்லறையில் இரண்டு பெண் குழந்தைகளின் கருச் சிதைவுற்ற– குறைப் பிரசவ — குழந்தைகள் உள்ளன. அவை இந்த அங்க சேனாவின் குழந்தைகளோ என்று ஆராய்ச்சியளர்கள் குடைந்துகொண்டு இருக்கின்றனர்.

xxxx

 

Picture of Queen Cleopatra

 

ராணி 2

அஹோதேப் (Ahotep அஹோ தேவி= மஹாதேவி); கி.மு1590-1530

 

ஆசிய நாடுகளிலிருந்து வந்து எகிப்தைத் தாக்கிய யக்ஷர்களை (Hyksos) விரட்டும் போரில் உயிர்நீத்த இரண்டாம்  செகனென்றி டாவோ ( Seqenenri Tao II ஜெயந்தி தேவன்) மனைவி அஹோடேப் (மஹாதேவி).

 

புதிய ராஜ்யத்தில் மிகவும் செல்வாக்குள்ள பெண்மணி. போரில் மன்னர் இறந்தவுடன் காமோசி (Khamose) பதவி ஏற்றார். இவர் இப்பெண்மணியின் சொந்த புதல்வனா என்று தெரியவில்லை. அவர் சீக்கிரம் இறக்கவே அஹோடேப்பின் சொந்தப் புதல்வன் ஆமோசி பதவி ஏற்றா ன். ஆனால் சின்னப் பையன்; ஆகவே அவனுக்கு 16 வயது ஆகும் வரை நாட்டை ஆண்டது மஹாராணிதான். அவள் இறந்தவுடன், மகனே ஒரு நினைவுச் சின்னத்தை எழுப்பினான். அதில் யக்ஷர்களை விரட்டி அடிப்பதில் அவள், பெரும்பங்கு ஆற்றியதாகப் பொறிக்கப்பட்டுள்ளது.

xxxxx

ராணி 3

ஆமோசி – மெரிடாமுன் (ஆமோசி- மாரியம்மன் Ahmose- Meritamun))

 

இவர் கி.மு.1525 முதல் 1504 வரை ஆண்டார். தனது சஹோதரனையே கல்யாணம் முடித்தார் (தங்கையரையே திருமணம் செய்யும் வழக்கம் பற்றி நான் தனிக் கட்டுரை எழுதியுள்ளேன்). அவர் பெற்றெடுத்த ஒரே மகனும் சிறு வயதில் உயிரிழந்தான்.

xxxx

 

Queen Hatsepsuda

ராணி 4

அங்கனஸ்மெரீர்(Ankhenemeryre) (கி.மு.2321-2287)

மிக நெடுங்காலத்துக்கு முன்னர் உலகை ஆண்ட பெண்ணரசி. மன்னர் முதலாம் பெபியை (PEPY I) இரண்டு சஹோதரிகள் மணந்தனர். அபிதோஸ் நகரப் பிரபு குயியின் (Khui) மகள்களையே  பெபி மணந்தார்.

 

இவர் காலத்தில் மிகவும் விநோதமான சம்பவம் நிகழ்ந்தது. முதல் சஹோதரிக்கும், மன்னர் பெபிக்கும் பிறந்த பெண் நெய்த் (Neith). இரண்டாம் சஹோதரிக்குப் பிறந்தவர் இரண்டாம் பெபி (PEPY II) ; எகிப்தை 94 ஆண்டுக்காலத்துக்கு ஆண்டவர்! இவர் நெய்த் – ஐ கல்யாணம் செய்து கொண்டார். அதாவது மூத்த சஹோதரியின் பெண்ணை திருமணம் முடித்தார்.

 

இருவருக்கும் தந்தை முதலாம் பெபி; ஆகவே மகனும் மகளும்  ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொண்டனர்!

xxxx

 

இக்கட்டுரையுடன் தொடர்புள்ள முந்தைய கட்டுரைகள்:

தமிழ்நாட்டின் கிளியோபாட்ரா –POSTED on 1 JUNE 2013

Cleopatra of Tamil Nadu – POSTED on 1 JUNE 2013