
Written by LONDON SWAMINATHAN
Post No.7662
Date uploaded in London – 7 March 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
உலகமே வியக்கத்தக்க அளவுக்கு முதல் இலக்கண நூலை யாத்தவர் பாணினி. ‘நம்பரும் திறல்’ என்று பாரதியார் பாடலில் புகழப்பட்டவர். சுருக்கம் என்றால் அப்படிச் சுருக்கமாக, வான் புகழ் வள்ளுவனை விழுங்கிச் சாப்பிடும் அளவுக்குச் சுருக்கமாக 4000 சூத்திரங்களைக் கொண்டு சமஸ்கிருத மொழிக்கு இலக்கணம் கற்பித்தார். அவர் எழுதிய நூலுக்கு அஷ்டாத்யாயீ (எட்டு அத்தியாயம்) என்று பெயர். அவர் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் தற்போதைய பாகிஸ்தானில் பிறந்தார். அவருக்கு அடுத்த படியாக காத்யாயனர் என்பவர் விளக்க உரை எழுதினார். இவ்வளவு சுருக்கமாக இருந்தால் எதிர்கால சந்ததியினருக்குப் புரியாமல் போய்விடுமே என்று எண்ணி, 500 ஆண்டுகளுக்குப் பின்னர், பதஞ்சலி முனிவர் ‘மஹாபாஷ்யம்’ இயற்றினார். மஹா பாஷ்யம் என்றால் பேருரை என்று பொருள். உண்மையிலேயே அது அளவிலும் சரி, பொருளடக்கத்திலும் சரி, பேருரைதான். அதிலுள்ள சில நயங்களை ஒருவர் ஆங்கிலக் கட்டுரையில் தந்தார். அதன் மொழிபெயர்ப்பு இதோ-
ப்ராயேன ஸம்க்ஷேப ருசினான் அல்பவித்யா பரிக்ரஹான்
ஸம்ப்ராப்ய வையாகராணான் ஸங்க்ரஹே சமுபாகதே
க்ருதே ச பதஞ்சலினா குருணா தீர்த்த தரிசினா
ஸர்வேஷாம் ந்யாய பீஜானாம் மஹாபாஷ்யே நிபந்தனே
–பர்த்ருஹரி
“பெரும்பாலும் காணப்படும் குறைவான அறிவுடையவர்களால், வியாடி எழுதிய ஸங்க்ராஹானை விளங்கிக் கொள்ள முடியாததால் நலிவடைந்து போன இலக்கணத்தை மிகப்பெரிய தீர்க்கதரிசியான பதஞ்சலி முனிவர், எல்லா விதமான மூலச் சொற்களையும் மஹாபாஷ்ய உரையில் விளக்கினார்” – என்று பர்த்ருஹரி புகழ்மாலை சூட்டினார்
பதஞ்சலி முனிவர் கொடுக்கும் பல எடுத்துக்காட்டுகள் அக்கால பாரத சமுதாயத்தை விளங்கிக்கொள்வதற்கு வகை செய்கிறது. விவசாயம், கிராமீ யக் காட்சிகள் , நகர்ப்புற வாழ்வு, பெண்களின் உயர்ந்த கல்வி அறிவு, வரலாறு, பூகோளம் என்று அவர் தொடாத விஷயங்களே இல்லை.

காகங்களும் ‘டேக்கா’ கொடுக்கும் மாணவர்களும்
யதா தீர்த்த காகாஹா ந சிரம் ஸ்தாதாரோ பவந்தி
ஏவம் யோ குருகுலானி கதவை ந சிரம் திஷ்டதி ச தீர்த்த காக்காஹா
காகங்கள் தலையை மட்டும் முக்கிக் குளிப்பது போல , குருகுலத்தில் நீண்ட காலம் இல்லாத மாணவர்கள் காக்கைக் குளியல் குளித்தவர்களே .
அதாவது பள்ளிக்கூடத்துக்குப் போகாமல் வகுப்புகளைக் ‘கட்’ அடிக்கும் மாணவர்கள் காக்கை குளிப்பது போல அரைகுறைகளே .
நாம் எல்லோரும் காகங்கள் குளிப்பதை பார்த்திருப்போம் ஆயினும் அதை பதஞ்சலி பயன்படுத்தும் அழகு தனி அழகுதான்.
xxx

ஒரு சொல்லை விளக்கப் போகையில் மாணவர்- ஆசிரியர் உறவு முறை பற்றி ஒரு உதாரணம் தருகிறார்
சிஷ்யாஹா சத்ரவத் சாத்யாஹா
சிஷ்யேன குரூஹு பரிபாலயஸ் ச
‘அரசாட்சியில் காண்பதை போல மாணவர்களைக் குருவும் குருவை மாணவர்களும் கவனித்துக்கொள்ள வேண்டும்’
Xxx
கெட்ட மாணவர்களால் ஏற்படும் விளைவுகளை விளக்குகையில் ஆரோக்கியக் குறிப்புகளும் கிடைக்கின்றன-
நத்வலோதகம் பாதரோகாஹா ததித்ரபுசம் ப்ரத்யக்ஷ ஜ்வராஹா
கெட்ட தண்ணீரில் காலை நனைத்தால் நோய் வரும்; கெட்டுப்போன தயிரைப் பயன்படுத்தினால் ஜுரம் வரும் என்பது போல
2200 ஆண்டுகளுக்கு முன்னர் மக்களிடையே இருந்த சுகாதார அறிவையும் மருத்துவ அறிவையும் இதன் மூலம் அறிகிறோம்.
Xxx
ஒருமையில் சொன்னால் போதும்; எல்லாவற்றுக்கும் இலக்கண சுத்தமாகப் பன்மையைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் விளக்குகிறார்
‘இதம் மே அக்ஷி பஸ்யதி அயம் மே கர்ணஹ சுஸ்து ஸ்ருனோதி’
கண் பார்க்கிறது ; காது கேட்கிறது என்று ஒருமையில் சொல்வர். இருமை/ பன்மை அவசியமில்லை.
Xxxx

ஒருவருடன் உரையாடு கையில் சொற்களைப் பயன்படுத்தும் திறமையை அழகாக விளக்குகிறார். ‘சொல்லுக சொல்லிற் பயனுடைய’ – என்ற வள்ளுவன் வாக்கை நினைவுபடுத்துவதாக இது உள்ளது
‘ஆம்ரஸ்ச சிக்தா ஹா பிதரஸ் ச ப்ரிநீதாஹா’ (மாமரத்துக்கும் தண்ணீர் விட்டாச்சு; பித்ருக்களையும் திருப்தி செய்தாச்சு.)
‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது’ என்று தமிழில் சொல்லுவோம். ஒருவர் நீத்தார்க்கு நீர்க்கடன் செய்ய நினைத்தார். அட, மாமரத்தின் அடியில் செய்தால் மாமரத்துக்குத் தண்ணீர் விட்ட பயனும் கிட்டும் நீத்தார்க் கடனையும் முடித்ததாக இருக்கும் என்று மாமரத்துக்கு அடியில் தர்ப்பணம் செய்தாராம்;
Xxxx
இரு பொருள் தரும் சொற்களை இவ்வாறு விளக்குகிறார்
ஸ்வேதா (White) தாவதி
நாய் ஓடியது ; வெள்ளை ஓடியது .
Xxx
உரிச் சொற்களைப் பயன்படுத்துவதிலும் அ ல்பம் என்ற இடத்தில் ஹ்ரஸ்வம் வரா து என்று காட்டுகிறார்–
அல்பம் க்ருதம் அல்பம் தைலம் இத்யுச்சதே ந புனஹ
ஹ்ரஸ்வம் க் ருதம், ஹ்ரஸ்வம் தைலம்
அல்பம் என்றால் குறைவான என்று பொருள் நெய் குறைவு , எண்ணெய் குறைவு என்று சொல்லலாம் ஆனால் குள்ளமான / ஹ்ரஸ்வம் என்ற சொல்லை அங்கே பயன்படுத்த மாட்டோம்.
தமிழிலும் கூட கன்றுக் குட்டி, அணில் பிள்ளை , பன்றிப் போத்து, கோழிக் கு ஞ்சு என்று சொல்கிறோம்.
Xxxx


சம்ஸ்கிருதத்தில் வர்ணங்களைப் பயன்படுத்துவதிலும் கூட சில விதி முறைகள் உண்டு—
சமானே ரக்தே கௌஹு லோஹித அஸ்வ சோனஹ
சமானே காளார்த்தே கௌஹு க்ருஷ்ண அஸ்வ ஹேமஹ
சமே தவளார்த்தே கௌஹு ஸ்வேதஹ அஸ்வ கர்கஹ
சிவப்பு நிறப் பசுவை ‘ரத்த’ வர்ணம் எனலாம் ; சிவப்பு நிற குதிரையை சோனக என்போம் .
கருப்பு நிறப் பசுவை க்ருஷ்ண வர்ணம் எனலாம் ; கருப்பு நிற குதிரையை ஹேம வர்ணம் என்போம்.
வெள்ளை நிறப்பசுவை ஸ்வேத வர்ணம் எனலாம் ; வெள்ளை நிற குதிரையை கர்கஹ என்போம்.
அதாவது வர்ணம் ஒரே வர்ணம்தான்; ஆனால் பசு, குதிரைகளின் நிறத்தைக் குறிப்பிடுகையில் வெவ்வேறு வர்ண சொற்கள் பயன்படுத்துவது மரபு..
xxxx
உலக நடைமுறை
ஏவம் ஹி த்ருஷ்யதே லோகே பிக்ஷுகோயம் த்விதீயாம் பிக்க்ஷஆம் சமாசாத்ய பூர்வம் ந ஜஹாதி ஸஞ்சயாயைவ ப்ரவர்த்ததே
உலகத்தில் நாம் காண்பது என்ன ? இரண்டாவது பிச்சை கிடைத்தாலும் முதலில் கிடைத்த பிச்சையைத் தூக்கி எறிவதில்லை. அவன் எல்லாவற்றையும் சேர்த்து வை த்துக் கொள்வான் ; இதை அவர் உரிச் சொற்களின் தேவையை விளக்குகையில் எடுத்துக் காட் டாகத் தருகிறார் . சாதாரணமாக நாம் காணும் காட்சியை க் கொண்டு இலக்கண விதிகளை அவர் விளக்கும் பாங்கு மிகப்பெரிய, அரிய பாணினி இலக்கணத்தை எவரும் புரிந்துகொள்ள உதவுகிறது. பாணினி ‘உயிர்’ என்றால், பதஞ்சலி எழுதியதை ‘உடல்’ என்று சொல்லலாம்.
xxxx
வெவ்வேறு உடைகளுக்கு வெவ்வேறு பெயர்கள் சொல்லப்படும்
அன்யேன சுத்தம் தவுத்கம்
அன்யேன சேபாலிகம்
அன்யேன மாத்யமிகம்
Xxx

ஊர்க் குருவி உயர உயரப் பறந்தாலும் பருந்து ஆகிவிடாது
‘காப்பி’ அடிப்பதில் (Imitating) பயனில்லை என்று ஓரிடத்தில் விளக்குகையில்
ந கல்வன்யத் ப்ராக்ருதமனு வர்த்தநாத் அஞ்ஞாத நஹி கோதாஹா ஸர்பந்தி ஸர்பனாதஹிர் பவதி .(பாம்பு போல வளைந்து நெளிந்து உருண்டாலும் கீரி , பாம்பு ஆகிவிடாது) .
அதாவது பிறரைப் பார்த்து அவர் போல நடித்தாலும் குணம் வேறுபடாது .
ஊர்க் குருவி உயர உயரப் பறந்தாலும் பருந்து ஆகிவிடாது என்ற தமிழ்ப் பழமொழியை ஒப்பிடலாம்
Xxx
மலையைக் கிள்ளி எலியைப் பிடித்தானாம்
சைசா மஹ தி வம்ச ஸ்தம்பா லாதவானுக்கிருஷ்யதே
சின்ன பலனுக்காக பெரிய வேலையை, கஷ்டமான பணியைச் செய்பவனை பதஞ்சலி ‘மூங்கில் காட்டில் பறவை பிடிக்கப்போனவனை’ ஒப்பிடுகிறார் .
தமிழிலும் மலையைக் கிள்ளி எலியைப் பிடித்தானாம் என்ற பழமொழி உளது .
மூக்கைத் தொடுவதற்கு கையைக் கழுத்துக்குப் பின்னால் வளைத்துத் தொடுவதற்கு முயற்சிப்பது போன்றது இது.
Xxx

சூடு =சுறுசுறுப்பு, குளிர்= சோம்பேறித்தனம், மந்தம்
ய ஆசு கர்தவ்யான அசிரேன கரோதி ச சீதகஹ
ய ஆசு கர்தவ்யாநாஸ்வேன கரோதி ச உஷ்ணகஹ
எவன் ஒருவன் உடனடியாகச் செய்யவேண்டியதை தாமதமாகச் செய்கிறானோ அவன் குளிர்ந்தவன்
எவன் ஒருவன் உடனடியாகச் செய்யவேண்டியதை உடனே செய்கிறானோ அவன் வெப்பமானவன்
வெப்பம், குளிர் என்பதையும் குணங்களுக்குப் பயன்படுத்துவதற்கு இவை எடுத்துக் காட்டுகள்.
மேலை நாடுகள் குளிர்ப் பிரதேச நாடுகள் ; ஆகவே இங்கு வெப்பம் போற்றப்படும். ஒருவருக்கு உற்சாக வரவேற்பு என்பதை இளம் சூட்டு – warm welcome வார்ம் வெல்கம் — வரவேற்பு கொடுக்கப்பட்டது என்பர்.
வெப்ப நாடான இந்தியாவில் அவர்கள் பேசும் மொழிகளில் இது எதிர்மறையான பொருளைத் தரும்
xxx
‘காஸுக்ருஸ்தா ப்ராஹ்மணி’ என்ற சொல் அக்காலத்தில் மீமாம்ச சாஸ்திரத்தில் வல்ல பெண்கள் இருந்ததைக் காட்டும்; பெண்கள் கல்வி உயர் நிலையில் இருந்தது.
Source (with my inputs from Tamil literature)
Article written by P .Narayanan Namputiri in
New Horizons of Indological Research , Edited by Dharmaraj Adat , KAIR, 2013
Tags — பதஞ்சலி , மஹா பாஷ்யம், பாணினி காகம் , குளியல், கீரி, வர்ணம்
–subham–