
Post No. 8598
Date uploaded in London – 30 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
18 என்ற எண்ணின் மஹிமை –1
சித்தர்கள் 18, தர்ம நூல்கள் 18, யாகங்கள் 18, பாஷைகள் 18, புராணங்கள் 18, உப புராணங்கள் 18, தேவாசுரப் போர் 18 ஆண்டுகள், ராம- ராவணன் யுத்தம் 18 மாதங்கள், மஹா பாரதப் போர் 18 நாட்கள், சேரன் செங்குட்டுவன் – க னக விஜயன் போர் 18 நாழிகை,மஹா பாரத பர்வங்கள் 18, கீதையில் அத்தியாயங்கள் 18, இவ்வாறு 18–ன் பெருமை மஹத்தானது . இதோ ஒரு பட்டியல்.
ஒரு எண்ணைக் கூட்டி ஒன்பது வந்தால் அதற்கு அபூர்வ சக்தி உண்டு. 18, 108, 1008, 10,008 போன்ற எண்களின் மஹிமையை முந்திய பல கட்டுரைகளில் கண்டோம் (கீழே இணைப்புகளைக் காண்க). ஸ்ரீ சத்ய சாயிபாபாவும் தனது உரையில் 9 எண்ணின் மஹிமையை விளக்கியுள்ளார். நாம் கோவில்களிலும் வீடுகளிலும் கடவுளின் நாமத்தை 108, அல்லது 1008 முறை சொல்கிறோம். இது வேத காலத்தில் துவங்கியது. யாக குண்டம் அமைக்க 10,008 செங்கற்களைப் பயன்படுத்துவர். முதல் செங்கலுக்குப் பெயர் அஸ்வினி (நக்ஷத்திரம்). சிந்து/ஸரஸ்வதி நதி தீர நாகரீகத்தை செங்கல் கட்டிடங்களால் உருவாக்கியவர்கள் வேத கால இந்துக்களே
தமிழில் உள்ள நிகண்டுக்களில் புகழ் பெற்றது பிங்கல நிகண்டு . 1000 ஆண்டுகளுக்கு முன்னர் திவாகர முனிவரின் சீடரான பிங்கல முனிவர் இயற்றியது . இதில் 18ன் கீழ் ஒரு பெரிய பட்டியல் உள்ளது.
பாரதியாரும் செப்பு மொழி பதினெட்டுடையாள் என்று பாரத மாதாவின் 18 முக்கிய பாஷைகளை நினைத்துப் பாடினார். தேவர்- அசுரர் யுத்தம் முதல் கனக விஜயன் யுத்தம் வரை வரை 18 எப்படிப் புகழ் பெற்றது என்பதை சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் இயம்புகிறார்.
முதலில் பிங்கல நிகண்டுவில் வரும் செய்திகளைக் காண்போம் .
***
18 கணங்கள்
இது நிகண்டிலும் உளது. புறநானூற்று உரையிலும் உள்ளது
அமரர், சித்தர், அசுரர், தைத்தியர், கருடர், கின்னரர், நிரு தர் , கிம்புருடர், காந்தருவர், இயக்கர், விஞ்சையர், பூதர் , பிசாசர், அந்தரர், முனிவர், ஆகாய வாசியர் , போகபூமியர், நாகர் .
வெள்ளைக்காரர்களும் மார்கசிய வாதிகளும் வந்து இந்தியர்களை ஆரியர், திராவிடர், முண்டர்கள் என்று மூன்று பிரிவுகளாகப் பிரித்து இந்திய வரலாற்றைத் திருத்தி எழுதுவதற்கு முன்னர் நாம் பிரித்த 18 வகை இது. இவர்களில் ஒவ்வொருவர் பற்றியும் ஆராய்ச்சி செய்தால் இந்தியாவின் உண்மை வரலாறு கிடைத்துவிடும். நாகர்கள்- மாயா நாகரீகம் தொடர்பு பற்றிய கட்டுரைகளில் நாகர் பற்றிய முழு ரகசியங்களையும் கொடுத்துள்ளேன். பல்லவர்களுக்கும் நாகர்களுக்கும் தொடர்பு உண்டு!!
***

18 சித்தர்களும் சமாதி அடைந்த தலங்களும்
பதஞ்சலி – ராமேஸ்வரம்
அகத்தியர் – கும்பகோணம், அல்லது திருவனந்தபுரம்
கமலமுனி – திருவாரூர் ,
திருமூலர் – சிதம்பரம்,
குதம்பைச் சித்தர்- மாயவரம்/மயிலாடுதுறை
கோரக்கர் – பேரரூர்,
தன்வந்திரி – வைதீஸ்வரன்கோவில்,
சுந்தரானந்தர் – மதுரை,
கொங்கணர் – திருப்பதி,
சட்டைமுனி – ஸ்ரீரங்கம்,
வான்மீகர் – எட்டுக்குடி,
ராமதேவர்- அழகர்மலை,
நந்தீ ஸ்வரர் – காசி,
இடைக்காடர் – திருவாண்ணாமலை,
மச்சமுனி – திருப்பரங்குன்றம்
கருவூரார் – கரூர் ,
போகர் – பழனி,அல்லது சிதம்பரம்
பாம்பாட்டிச் சித்தர் – சங்கரன்கோவில்
சித்தர் சமாதிகள் இருப்பதால் இந்த தலங்கள் அனைத்தும் ஜன ஆகர்ஷணம், தன ஆகர்ஷணம் செய்யும் புண்ணிய பூமிகளாகத் திகழ்கின்றன.
***
அஷ்டாதச குணம்
பசி, தாகம் , பயம், கோபம்
சந்தோஷம் , விருப்பம், நினைவு, உறக்கம் ,
நரை, நோய், மரணம், பிறப்பு ,
மதம், இன்பம், தோஷம், வியர்த்தல்,
துன்பம், செயலின்மை .
*****
சைவத் திரு மடங்கள் 18
திருவாவடுதுறை ஆதீனம்
தருமபுரம் ஆதீனம்
காஞ்சிபுரம் ஆதீனம்
சூரியனார் கோவில் ஆதீனம்
செங்கோல் ஆதீனம்
ஆகம சிவப்பிரகாச ஆதீனம்
திருஞான சம்பந்தர் ஆதீனம்
திருவண்ணாமலை ஆதீனம்
நீலப்பாடி ஆதீனம்
தாயுமான சுவாமிகள் ஆதீனம், அன்னப்பேட்டை
சாரமாமுனிவர் ஆதீனம்
திருச்சி சொர்கபுர ஆதீனம்
வேளாக்குறிச்சி ஆதீனம், திருவாரூர்
வள்ளலார் ஆதீனம்
இருளஞ்சேரி ஆதீனம்
வரணி ஆதீனம்
நாச்ச்சியார்கோவில் ஆதீனம், வேதாரண்யம்
நிரம்பவழகிய தேசிகர் ஆதீனம், குடந்தை
****
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
சங்க காலத்துக்குப் பின்னர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு முதல் தோன்றிய அற நூல்களை பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்று வகைப்படுத்தினார் அதற்குப் பின் வாழ்ந்த சான்றோர். அறத்தைத் தவிர பொருள், இன்பம் என்னும் துறைகள் பற்றியும் சில நூல்கள் பாடுகின்றன.
18 நூல்களின் பெயர்கள் —
நாலடியார், நான்மணிக்கடிகை , இனியவை நாற்பது , இன்னா நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது,
ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணை மாலை நூற்றைம்பது, திருக்குறள் , திரிகடுகம் , ஆசாரக்கோவை, பழமொழி நானுறு சிறு பஞ்ச மூலம், முதுமொழிக்காஞ்சி, இன்னிலை , ஏலாதி
நாலடி நான்மணி நால்நாற்பது ஐந்திணைமுப் பால்கடுகம் கோவை பழமொழி – மாமூலம் இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி என்பவே கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு. |
****
மஹாபாரதம் 18 பர்வங்களின் பெயர்
- ஆதிபர்வம்
- சபாபர்வம்
- வனபர்வம்
- விராடபர்வம்
- உத்யோகபர்வம்
- பீஷ்மபர்வம்
- துரோணபர்வம்
- கர்ணபர்வம்
- சல்யபர்வம்
- சௌப்திகபர்வம்
- ஸ்த்ரீபர்வம்
- சாந்திபர்வம்
- அநுசாஸனபர்வம்
- அஸ்வமேதிகபர்வம்
- ஆஸ்ரமவாசிகபர்வம்
- மௌஸலபர்வம்
- மஹாப்ரஸ்தானிக பர்வம்
18 ஸ்வர்காரோஹண பர்வம்
****
Hindu’s Magic Numbers 18, 108, 1008 | Tamil and Vedas
tamilandvedas.com › 2011/11/26 › hindus-magic-num…
26 Nov 2011 – Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. Hindu’s Magic Numbers 18, 108, 1008.
18 கணம் | Tamil and Vedas
tamilandvedas.com › tag › 18-கண…
இதைவிடச் சுவையான செய்தி 18 கணங்கள் பற்றிய செய்தி; யார் அந்த 18 கணங்கள்? தேவார …
இந்துக்களின் 18 பிரிவுகள் …
tamilandvedas.com › 2014/11/09
9 Nov 2014 – இந்துக்களின் 18 பிரிவுகள் : பதினெண் கணங்கள் · Samudra manthan சமுத்ர மந்தனம் …
சித்தர் பாடலில் எண்கள்; ரிக் …
tamilandvedas.com › 2020/04/16
16 Apr 2020 – (18 சித்தர்களின் பட்டியல், அஷ்டமாசித்திகள் … tamilandvedas.com › tag › அஷ்டமா-சித… 29 May …
பதினெட்டு சித்தர் | Tamil and Vedas
tamilandvedas.com › tag › பதின…
6 Nov 2018 – தமிழ் சித்தர்கள் 18 பேர் என்று சொல்லுவர். ஆனால் அந்த பதினெட்டு பேர் யார் …
18 பர்வங்கள் | Tamil and Vedas
tamilandvedas.com › tag › 18-பர்…
25 Mar 2017 – Tagged with 18 பர்வங்கள் … அட, மஹாபாரதத்தில் எத்தனை பர்வங்கள் (அத்தியாயங்கள்) … முதலில் 18 பர்வங்களின் பெயர்கள். ஆதிபர்வம் …
தொடரும்………………………………………….
tags – எண்18 ,மஹிமை- Part 1