Date: 16 DECEMBER 2017
Time uploaded in London- 6-34 am
WRITTEN BY S NAGARAJAN
Post No. 4501
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
நண்பரா, கைக்கூலியா!
மாக்ஸ்முல்லர் மர்மம் – 4 : கட்டுரை எண் 4269 – வெளியான தேதி 4-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 5 : கட்டுரை எண் 4327 – வெளியான தேதி 23-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 6 -கட்டுரை எண் 4355 – வெளியான தேதி 1-11-2017; மாக்ஸ்முல்லர் மர்மம் -7 கட்டுரை எண் 4385 – வெளியான தேதி 11-11-17; மாக்ஸ்முல்லர் மர்மம்-8 கட்டுரை எண் 4451 – வெளியான தேதி 2-12-17
இதனுடைய தொடர்ச்சியாக இக் கட்டுரை வெளியாகிறது.
மாக்ஸ்முல்லர் மர்மம்! – 9
ச.நாகராஜன்
15
மாக்ஸ்முல்லர் காலத்தில் அவருக்குச் சாதகமாக இந்தியாவில் நடந்த ஒரு நிகழ்ச்சி பிரம்ம சமாஜத்தின் தோற்றம்.
இதைத் தோற்றுவித்தவர் ராம் மோகன ராய் என்ற வங்காள பிராம்மணர். (தோற்றம் 22-5-1771 மறைவு 27-9-1833) பிரம்ம சமாஜத்தை அவர் 20-8-1828 அன்று தோற்றுவித்தார்.
அதனுடைய பிரதான கொள்கைகள்:
எந்த ஒரு புனித நூல் அல்லது சாஸ்திரத்தின் மீதும் நம்பிக்கை இல்லை.
அவதாரங்களில் நம்பிக்கை இல்லை.
உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லை.
பல தெய்வ வழிபாட்டில் நம்பிக்கை இல்லை.
ஜாதி பேதத்தில் நம்பிக்கை இல்லை
கர்ம பலன் மற்றும் புனர் ஜென்மத்தை நம்புவோர் நம்பட்டும்; நம்பாதவர் நம்ப வேண்டாம்.
ஏறத்தாழ கிறிஸ்தவ மாதத்தை பாலிஷ் போட்டு பளபளப்பாக்கி இந்தியாவுக்கு அன்பளிப்பாகத் தருவது போல இருக்கிறதல்லவா இது!
இதைத் தான் ராம் மோகனராய் உருவாக்கினார்.
ஆனால் கால வெள்ளத்தில் அது அடிபட்டுப் போயிற்று என்பது வேறு விஷயம்!
அவர் கிறிஸ்தவ மதத்திற்குத் துணை போனது மாக்ஸ்முல்லருக்கு மிகவும் சௌகரியமாகப் போயிற்று.
ஏற்கனவே நல்ல விதமாக மேலை நாட்டு கல்வி முறையை (கிறிஸ்தவ மத பிரச்சாரக் கல்வி என்று அர்த்தம் கொள்க) இந்தியாவில் புகுத்தினால் கிறிஸ்தவத்திற்கு ஈடான ஒன்று இந்தியாவில் பிறந்து இந்து மதம் ஒழியும் என்று மனப்பால் குடித்தார் அவர்.
அதற்காக சௌகரியமான வழியாக பிரம்ம சமாஜம் இருக்கவே அதை நாடினார்; அத்துடன் தொடர்பு கொண்டார்.
ராம் மோகன ராய் இரண்டாம் அக்பரின் அரசவையில் இடம் பெற்றார். அக்பருக்கு ஒரு பிரச்சினை. அவருக்கு பிரிட்டிஷாரின் கருணைத் தொகை (மானியம்) போதவில்லை.
ஆகவே ராம் மோகன ராயைத் தன் சார்பில் பேச்சு வார்த்தை நடத்த இங்கிலாந்து அனுப்பி வைத்தார். அவருக்கு 30000 பவுண்டு அளவில் அதை ராம் மோகனராய் பேச்சு வார்த்தை நடத்தி உயர்த்தினார்.
அவருக்கு இரண்டாம் அக்பர் ராஜா என்ற பட்டத்தையும் அளித்தார்.
ராம் மோகன ராய் என்ற வங்காள பிராம்மணர் இப்போது ராஜா ராம் மோகன ராய் ஆனார்.
இங்கிலாந்து சென்ற அவர் ஈஸ்ட் இந்தியா கம்பெனியில் ‘எழுத்துச் சேவை’ பணி புரிய முன் வந்தார்.
பின்னர் வில்லியம் கேரி என்பவரிடம் பணி புரிந்தார். இவர் பணி புரிந்த இடமெல்லாம் மத பிரசாரம் (கிறிஸ்தவத்தைப் பரப்புவது; இந்து மதத்தை ஒழிப்பது) அரசியல் ( இந்தியாவை நிரந்தரமாக பிரிட்டிஷாரின் கொள்ளை அடிக்கும் சொர்க்க பூமியாக வைத்திருப்பது) ஆகியவை ஆதிக்கம் செலுத்தின.
இறுதியில் அவர் கேரியையே தாக்க ஆரம்பித்தார். கடும் மிஷனரியான கேரிக்கு கோபம் வந்தது நியாயமே.
ராஜா ராம் மோகன ராயே பின்னால் பிரிட்டிஷார் இந்தியாவிலிருந்து கொள்ளை அடித்துச் செல்லும் தொகை வருஷத்திற்கு 30 லட்சம் பவுண்டுகள் என்பதை கண்டுபிடித்து வெளியிட்டார்.
“அவர் சதியை ஒழித்தார்; பெண்ணுக்கு உரிமை கோரினார்.” ஆகிய இவை அவரது சாதனைகளாகச் சித்தரிக்கப்படுகின்றன.
அவரது வரலாறை ஆராய்வது இந்தத் தொடரின் நோக்கமல்ல என்பதால் அவரை இத்துடன் விட்டு விடுவோம்.
அவர் பற்றிய விக்கிபீடியா தரும் செய்தியின் ஒரு பகுதி இது: விளக்கம் வேண்டுவோர் முழுமையாக அங்கு படிக்கலாம்.
From 1803 till 1815, Ram Mohan served the East India Company’s “Writing Service”, commencing as private clerk “munshi” to Thomas Woodroffe, Registrar of the Appellate Court at Murshidabad[ (whose distant nephew, John Woodroffe — also a Magistrate — and later lived off the Maha Nirvana Tantra under the pseudonym Arthur Avalon). Roy resigned from Woodroffe’s service and later secured employment with John Digby, a Company collector, and Ram Mohan spent many years at Rangpur and elsewhere with Digby, where he renewed his contacts with Hariharananda. William Carey had by this time settled at Serampore and the old trio renewed their profitable association. William Carey was also aligned now with the English Company, then head-quartered at Fort William, and his religious and political ambitions were increasingly intertwined.
The East India Company was draining money from India at a rate of three million pounds a year in 1838. Ram Mohan Roy was one of the first to try to estimate how much money was being driven out of India and to where it was disappearing. He estimated that around one-half of all total revenue collected in India was sent out to England, leaving India, with a considerably larger population, to use the remaining money to maintain social well-being. Ram Mohan Roy saw this and believed that the unrestricted settlement of Europeans in India governing under free trade would help ease the economic drain crisis.
During the next two decades, Ram Mohan launched his attack against the bastions of Hinduism of Bengal, namely his own Kulin Brahmin priestly clan (then in control of the many temples of Bengal) and their priestly excesses.[The Kulin excesses targeted include sati (the co-cremation of widows), polygamy, idolatry, child marriage and dowry.
From 1819, Rammohun’s battery increasingly turned against William Carey, a Baptist Missionary settled in Serampore, and the Serampore missionaries. With Dwarkanath’s munificence he launched a series of attacks against Baptist “Trinitarian” Christianity and was now considerably assisted in his theological debates by the Unitarian faction of Christianity.”
ஆக மாக்ஸ்முல்லர் பயன்படுத்த நினைத்த பிரம்ம சமாஜம் கிறிஸ்தவ மதத்தின் அடிப்படையான உருவ வழிபாட்டை எதிர்த்தல், பல் தெய்வ வழிபாட்டை ஒழித்தல் போன்றவற்றை ஆதரித்தாலும் மறுஜென்மக் கொள்கை பற்றிய வழவழா என்ற கொள்கையைக் கொண்டிருந்தது, ராம் மோகன் ராய் கிறிஸ்தவ மிஷனரிகளைத் தாக்கி பேச ஆரம்பித்தது ஆகியவற்றால் கலகலத்துப் போனது.
ராஜா ராம் மோகன ராய் பிரிஸ்டலில் இறந்தார்.
பிரம்மசமாஜத்தைப் பயன்படுத்தும் மாக்ஸ்முல்லரின் நோக்கம் வெற்றி பெற வில்லை. பிரம்ம சமாஜமே இல்லாமல் போயிற்று. 2001இல் இந்தியாவில் எடுத்த ஜனத்தொகைக் கணக்கெடுப்பில் 177 பேரே பிரம்மசமாஜத்தில் உறுப்பினராக இருப்பது தெரிகிறது.
முப்பது கோடி ஹிந்துக்களை உருத்தெரியாமல் ஆக்கவும் உருவவழிபாட்டை ஒழிக்கவும் ஆரம்பித்த ஒரு “சீர்திருத்த” சமாஜம் 177இல் முடிந்தது. கிறிஸ்தவம் எடுத்த ஏராளமான உத்திகளில் ஒன்றான கைக்கூலியை ஆதரித்தல் என்ற உத்தி இன்னொரு முறை தோற்றது; இந்து மதம் நிலைத்தது. (இந்த பிரம்ம சமாஜ கூட்டங்களுக்கு கல்லூரியில் படிக்கும் போது விவேகானந்தர் போய் வந்தார் என்பது ஒரு சுவையான செய்தி)
மாக்ஸ்முல்லரின் மீது கிறிஸ்தவ மிஷனரிகளின் கோபம் இன்னும் கொஞ்சம் அதிகமானது.
16
இந்த நிலையில் இதன் வெளிப்பாடாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
1860ஆம் ஆண்டு போடன் சம்ஸ்கிருத பேராசிரியர் பணிக்கான தேர்தலில் நின்ற மாக்ஸ்முல்லர் தோற்றுப் போனார். இந்தப் பணிக்கு அவர் தகுதி படைத்தவர் தான். ஆனால் அவரை விட குறைந்த தகுதி பெற்றவரான மோனியர் வில்லியம்ஸுக்கு அது தரப்பட்டது.
மிகவும் வருத்தமடைந்தார் மாக்ஸ்முல்லர். அவருக்குப் பெருத்த ஏமாற்றம் இது. தேர்தல் முடிந்தது. அவர் தோற்றார். மோனியர் வில்லியம்ஸ் வென்றார். உடனே அவர் தன் தாய்க்கு எழுதிய கடிதத்தில் , “எல்லா சிறந்த மனிதர்களும் எனக்கு வோட்டுப் போட்டனர்.புரபஸர்களில் ஏறத்தாழ அனைவருமே எனக்குத் தான் வோட்டுப் போட்டனர். ஆனால் பொதுவில் இருந்த கூட்டம் தான் மெஜாரிட்டியை நிர்ணயம் செய்தது.”
இப்படியாக கிறிஸ்தவ பாதிரிகளுக்கு எதிரான போக்கு, அவரது ஜெர்மன் பிறப்பு உள்ளிட்ட பல காரணங்கள் அவரது தோல்விக்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. ஒரு காரணம், அவர் இந்தியாவையே பார்த்ததில்லை என்பது. மோனியர் வில்லியம்ஸ் இந்தியாவில் இருந்திருக்கிறார்.
விக்கி பீடியா தரும் ஆங்கில மூலத்தைக் கீழே பார்க்கலாம்:
He was defeated in the 1860 election for the Boden Professor of Sanskrit, which was a “keen disappointment” to him.[6] Müller was far better qualified for the post than the other candidate (Monier Monier-Williams), but his broad theological views, his Lutheranism, his German birth and lack of practical first-hand knowledge of India told against him. After the election he wrote to his mother, “all the best people voted for me, the Professors almost unanimously, but the vulgus profanum made the majority”.
17
பெரும் ஆறுதல் அளிக்கும் விஷயமாக மாக்ஸ்முல்லருக்கு, 1868ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டில் ஒப்பீட்டு மொழியியல் அறிவில் பேராசிரியர் பணி தரப்பட்டது. அப்போது அவருக்கு வயது 45. (1875இல் அவர் ஓய்வு பெற்ற போதிலும் கூட, அதை அவர் இறுதி வரை (1900ஆம் ஆண்டு மாக்ஸ்முல்லர் மரணமடைந்தார்) வகித்தார்.
(விக்கிபீடியாவின் வரி இது:
Later in 1868, Müller became Oxford’s first Professor of Comparative Philology, a position founded on his behalf. He held this chair until his death, although he retired from its active duties in 1875.)
மாக்ஸ்முல்லரின் நிதானமான மனமும் அறிவும் இந்தியாவின் புகழோங்கிய வரலாறைப் பற்றிப் புகழ ஆரம்பித்தது.
ஈஸ்ட் இந்தியா கம்பெனியும், கிறிஸ்தவ மிஷனரிகளும் நொந்து போக உலகம் வியந்தது – இந்தப் புகழுரைகளால்.
அவற்றில் சிலவற்றை இனி பார்ப்போம்!
நன்றி: விக்கிபீடியா (ஆதாரபூர்வ தகவல்களுக்காக விக்கி மேற்கோள்கள் தரப்பட்டன)
-தொடரும்
****