
Post No. 9829
Date uploaded in London –8 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சைவ சமயப் பெரியோர் நால்வரில் உள்ளத்தை உருக்கும் திருவாசகத்தை நமக்கு அருளியவர் மாணிக்க வாசகர் . திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பதை எல்லோரும் அறிவர் . இறைவனின் அருள், கல்லைப்பிசைந்து கனியாக்கும் என்பது அவரது வாக்கு.; பால் நினைந்தூட்டும் தாய் என்று இறைவனைப் போற்றுகிறார் . அவர் மதுரைக்கருகில் திருவாதவூரில் அமாத்தியப் பிராமணர் குலத்தில் உதித்தவர் என்பதால் வேதத்ததில் வல்லவர் ஆக இருப்பதில் வியப்பில்லை.
அவர் பரியை நரியாக்கிய திரு விளையாடலில் தொடர்புடையவர். அதை அப்பரும் குறிப்பிடுவதால் அவருக்கு சற்று முன்னர் வாழ்ந்தவராக இருத்தல் வேண்டும். அதாவது 1400 ஆண்டுகளுக்கு முந்தையவர். இந்துக்களின் புனித நூலான ரிக் வேதம் உலகிலேயே பழமையான நூல் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமுமில்லை கிமு 6000 முதல் 1500 வரை பலரும் பல தேதிகள் குறிக்கின்றனர்.
ரிக்வேத ரிஷிகளின் பாடல்களிலும் மாணிக்க வாசகரின் பாடல்களிலும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன.. இரு நூல்களும் “அழுதால் உன்னைப் பெறலாமே ” என்று இறைவனிடம் அழுகின்றன..
மாணிக்க வாசகர் நான்கு வேதங்களும் ஓலம் இடுகின்றன என்கிறார்
வேதங்கள் ஐயா என்று அலறுகின்றன என்றும் பாடுகிறார்.. இதோ சில ஒப்புமைகளைக் காண்போம்.
xxxx

RV 1-25-19
Varuna , hear this call of mine; be gracious unto us this day.
Longing for help I cried to thee.
ரிஷி சுனஸ்சேபன் பாடுகிறார் –
வருணனே என்னுடைய இந்த அழைப்பைக் கேட்கவும். .எங்களிடம் கருணை காட்டுவாயாக. உன் உதவியை வேண்டி கதறுகிறேன்
நாத நாத என்றழு தரற்றிப்
பாத மெய்தினர் பாத மெய்தவும்- கீர்த்தித் திரு அகவல் 2-136
வேதங்கள்
ஐயா! எனவோங்கி ஆழ்ந்த கன்ற நுண்ணியனே !
-சிவபுராணம் , வரி 34/35, திருவாசகம்
Xxx
1-34-12
Bring in your triple car, O Asvins, bring us present prosperity with noble offspring.
I cry to you who hear me for protection; you be our helpers where men win the booty.
“அஸ்வினி தேவர்களே! உங்களுடைய முச்சக்கர தேரிலே எங்களுக்கு செல்வத்தையும் வீரம் மிக்க புதல்வர்களையும் கொண்டுவாருங்கள்; என் துதியை செவிமடுக்கும் நீவீர் எங்களைக் காப்பாற்றுங்கள்; போரில் நாங்கள் வெற்றி பெற எங்களுக்கு உதவுங்கள் என்று கதறுகின்றேன்.”
தப்பாமே, தாம் பிடித்தது சலியா,
தழல் அது கண்ட மெழுகு அது போல,
தொழுது, உளம் உருகி, அழுது, உடல் கம்பித்து,
ஆடியும், அலறியும், பாடியும், பரவியும்,
போற்றித் திரு அகவல் 4-59…..61
Xxx
1-38-2
Now whither to ? what goal of yours you go in heaven and not on earth?
Where else you find cows bellowing (mooing)?
மருத் தேவர்களே! இப்பொழுது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் ? சொர்க்கத்திலிருந்து வாருங்கள்; பூமியை விட்டுச் செல்லாதீர்; பசுக்களைப் போல கதறும் வழிபடுவோர் வேறு எங்கே இருக்கிறார்கள்?
வணங்கும் நின்னை, மண்ணும், விண்ணும்; வேதம் நான்கும் ஓலம் இட்டு
உணங்கும், நின்னை எய்தல் உற்று, மற்று ஓர் உண்மை இன்மையின்;
வணங்கி, யாம், விடேங்கள் என்ன, வந்து நின்று அருளுதற்கு,
இணங்கு கொங்கை மங்கை பங்க! என் கொலோ நினைப்பதே? 5-85
Xxx
திருச் சதகத்தில் மேலும் சில பாடல்களில் ‘கதறுதல், அழுதல் , உருகுதலைக்’ காண்கிறோம் . எவ்வளவுதான் பாவம் செய்தாலும் அழுதால் அவனுடைய அன்பினை, சிவ பெருமானுடைய அன்பினைப் பெறலாம் என்று மாணிக்க வாசகர் உறுதிபடக் கூறுகிறார்.
ஆக, ரிக்வேதத்திலும் திரு வாசகத்தில் நாம் காணும் ஒற் றமை , மனம் உருகி பிரார்த்தித்தால் இறைவன் ஓடி வந்து உதவுவான் என்பதே.
ராம க்ருஷ்ண பரம ஹம்சர் இதை ஒரு உவமை மூலம் விளக்குவதை இணைப்பில் காண்க
அழுகேன், நின்பால் அன்பு ஆம் மனம் ஆய்; அழல் சேர்ந்த
மெழுகே அன்னார், மின் ஆர், பொன் ஆர், கழல் கண்டு
தொழுதே, உன்னைத் தொடர்ந்தாரோடும் தொடராதே,
பழுதே பிறந்தேன்; என் கொண்டு உன்னைப் பணிகேனே?
5-348
In other words they pine, weep, yearn and long for God.
பாடல் எண் : 90
யானேபொய் என்நெஞ்சும் பொய் என்அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனைவந் துறுமாறே
5 -357 to 360
xxx
அழுதால் உன்னைப் பெறலாமே | Tamil and …
https://tamilandvedas.com › tag › அ…
28 Dec 2016 — அழுதால் உன்னைப் பெறலாமே – மாணிக்க வாசகர் (Post No.3491). Written by London swaminathan. Date: 28 December 2016. Time uploaded in London:- 11-05 am. Post No.3491. Pictures are …
அழுதால் உன்னை | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › அ…
24 Feb 2017 — “அழுதால் உன்னைப் பெறலாமே” என்று மாணிக்கவாசகர், திருவாசகத்தில் சொன்னார். ராமகிருஷ்ண பரமஹம்சரும் பிற்காலத்தில் …

–SUBHAM–
மாணிக்க வாசகர், திருவாசகம், ரிக் வேதம்