மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் வழிவிடுங்கள்: மனு கட்டளை (Post No.3292)

manu-book-3

Written by London Swaminathan

 

Date: 26 October 2016

 

Time uploaded in London: 20-23

 

Post No.3292

 

Pictures are taken from various sources;thanks

 

மனு தர்ம சாத்திரத்தில் ஏராளமான சுவையான விஷயங்கள் இருக்கின்றன.

manu-book-1

முன்னொரு கட்டுரையில் மனிதனுக்கு கிருத யுகத்தில் 400 வயது, பெண்ணின் வாய் எப்போதுமே சுத்தமானது, பெரிய ரிஷிகளைப் பார்த்து ஒருவர் என்னருமை சின்னப் பையன்களா என்று சொன்னது சரிதான், 36 ஆண்டு, 18 ஆண்டு பிரம்மச்சர்யம், திதியில் மாமிசம் சேர்ப்பது, பெண்களை நன்றாகக் கவனிக்காவிடில் அந்தக் குடும்பம் வேருடன் அழியும் , கீழ்ஜாதிக்காரன் படித்திருந்தால் அவனிடம் கைகட்டி வாய்பொத்தி கல்வி கற்க வேண்டும், ஆயிரம் தந்தைக்கு ஒரு தாய் சமம் — முதலிய பல விஷயங்களைக் கொடுத்திருந்தேன். அவைகளை இந்த பிளாக்கில் படிக்கலாம். இப்போது வேறு சில சுவையான  விஷயங்களைச் சொல்லுகிறேன்.

 

யார் யாருக்கு விலகி வழிவிட வேண்டும் என்று மனு சொல்லுகிறார்:-

 

ஒருவனுடன் 10 ஆண்டு வசித்தால் அவனை நண்பனாகக் கருத வேண்டும்.

ஒரு கலைஞனுடன் 5 ஆண்டு வசித்தால் அவனை நண்பனாகக் கருத வேண்டும்.

வேதம் அறிந்த ஒருவனுடன் 3 ஆண்டு வசித்தால் அவனை நண்பனாகக் கருத வேண்டும்.

சொந்தக்காரர்களை சிறிது காலத்துக்குள்ளேயே நண்பனாகக் கருத வேண்டும்.

 

ஒருவனுக்கு மரியாதை கொடுக்க பின்வரும் விஷயங்களை கருத்திற்கொள்க:-பணமுள்ளவனுக்கு மரியாதை கொடு; அதைவிட நண்பனுக்கும்,அதைவிட வயதுக்கும், அதைவிட நல்ல பணிசெய்பவனுக்கும்,   அதைவிட கல்விகற்றவனுக்கும் மரியாதை கொடுக்க வேண்டும்.

 

வேலைக்கரன் ஆனாலும் 90 வயதைக் கடந்து விட்டால் மரியாதை கொடுக்க வேண்டும்.

 

எதிரே வண்டியில் வருபவர்களுக்கும், 90 வயதைக் கடந்தவர்களுக்கும், நோயாளிக்கும், சுமை  தூக்குவோருக்கும், பெண்களுக்கும், வேத பண்டிதனுக்கும், மாப்பிள்ளைக்கும், அரசனுக்கும் விலகி நின்று வழிவிட வேண்டும். இவர்கள் எல்லோரும் வந்தால், அரசனுக்கும் வேத பண்டிதனுக்குமே முதல் மரியாதை.

 

அரசனும் வேத பண்டிதனும் ஒரே நேரத்தில் எதிரே வந்து விட்டால், வேத பண்டிதனுக்கே முதலில் வழிவிட வேண்டும்.

 

பெண்களுக்கும் வயதானோருக்கும் ஜாதி வேறு பாடின்றி மரியாதை கொடுக்கப்படுவது அந்தக்காலத்தில் பெண்களுக்கும் வயதுக்கும் இருந்த மரியாதையைக் காட்டுகிறது. மனு எவ்வளவு அளவு மனிதபிமானம் உடையவர், நல்ல சிந்தனை உடையவர் என்பதை இந்த இரண்டாம் அத்தியாய ஸ்லோகங்கள் (133- 139) காட்டுகின்றன.

manu-book-2

 

வீட்டிற்கு வந்த விருந்தாளிகள் வைஸ்யர்கள், சூத்திரகளாக இருந்தாலும் அவர்களை விருந்தினராக கருதி உணவளிக்க வேண்டும்

 

நண்பர்கள் வந்தால் மனையுடன் உட்கார்ந்து சாப்பிடலாம். விருந்தினர்கள் சாப்பிட்டவுடன் கர்ப்பிணிப் பெண்களையும், சிறு பெண்களையும் , புதுமணத் தம்பதிகளையும், நோயாளிகளையும் சாப்பிடச் சொல்ல வேண்டும்.

குடும்பத்திலுள்ள அத்தனை பேரும் சாப்பிட்ட பின்னரே கணவனும் மனைவியும் சாப்பிடலாம். (Manu 3- 111 to 118)

 

கர்ப்பிணிப் பெண்கள், கன்யாப் பெண்கள் மீது மனுவுக்கு எவ்வளவு மதிப்பு பாருங்கள்.

 

–Subham–