

Post No. 9731
Date uploaded in London – –14 JUNE 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
MARK TWAIN
(1835 – 1910)

மார்க் ட்வெய்ன் என்று பலராலும் அறியப்பட்ட அமெரிக்கா நாவலாசிரியரின் இயற்பெயர் சாம்வெல் க்ளெமென்ஸ் (SAMUEL LANGHORNE CLEMENS) மார்க் ட்வெய்ன் பயணக் கட்டுரைகளையும் எழுதினார். பெரிய நகைச்சுவை எழுத்தாளர்.
அமெரிக்காவில் மிஸ்ஸௌரி என்னும் இடத்தில் பிறந்தார். அவர் பிறந்தபோது ஹாலியின் வால் நட்சத்திரம் தோன்றியது. அடுத்தாற்போல ஹாலியின்(Halley’s Comet) வால் நட்சத்திரம் வருகையில் இறந்தும் விடுவோம் என்று அவருக்கு உள்ளுணர்வு உணர்த்தியது. அதுபோலவே 1835-இல் தோன்றிய வால்நட்சத்திரம் 1910-இல் —– திரும்பி வந்தபோது அவர் இறந்தார்.
ட்வெய்னுக்கு 12 வயதானபோது தந்தையை இழந்தார். உடனே வேலைக்கும் சென்றார். அச்சகம் ஒன்றில் ஒரு அச்சு இயந்திர ஊழியராக சேர்ந்தார். அதே நேரத்தில் கதைகளையும் கட்டுரைகளையும் எழுதத் தொடங்கினார், பின்னர் அச்சகப் பணியை விட்டு மிஸிஸிபி நதியில் படகில் வேலைப் பார்க்கத் தொடங்கினார்.
அமெரிக்க உள்நாட்டுப்போர் ஏற்பட்டபோது இணைப்பாளர் அணியில் சேர்ந்து போராடினார். இரண்டே வாரங்களில் மீண்டும் பத்திரிகை துறைக்குத் திரும்பினார். அப்போதுதான் மார்க் ட்வைன் என்ற புனைப்பெயரில் எழுதத்தொடங்கினார். படகோட்டிகளின் (பேச்சு வழக்கில்) கொச்சை மொழியில் இதற்கு 2 ஆள் ஆழம் என்று பெயர்.
1865ஆம் ஆண்டில் அவர் உலகப்பயணம் மேற்கொண்டார். பயணக் கட்டுரை எழுதுவதே இதன் குறிக்கோள். ஆனால் அவர் மத்தியதரைக் கடல் வட்டாரத்திற்குச் சென்று THE INNOCENTS ABROAD என்ற நூலை எழுதினார். இது வெற்றிபெறவே நியூயார்க் நகருக்குத் திரும்பி வந்து பணக்காரப் பெண்ணை கல்யாணம் கட்டினார் . திருமணத்திற்குப் பின்னர் TOM SAWYER, HUCKLEBERRY FINN, A YANKEE AT THE COURT OF KING ARTHUR ஆகிய நாவல்களை எழுதினார்.
டாம் சாயர், ஹக்ல்பெர்ரி ஃபின் ஆகியோரின் வாழ்வில் மிஸிஸிபி ஆறு ஒரு பெரிய சக்தியாக விளங்கியது.
மார்க் ட்வெய்ன் பிறந்த ஹானிபல் என்ற ஊரில் டாம் சாயரின் நினைவாக ஆண்டுதோறும் வெள்ளையடிக்கும் போட்டி நடத்தப்படுகிறது. இதில் மிஸிஸிபி மாணவர்கள் பங்கு பெறுவது வழக்கம்.
பணக்காரராக மாறிய மார்க் ட்வெய்னுக்கு திடீரென்று தாழ்வு ஏற்பட்டது. கடன்காரராக மாறினார். கடனைத் திருப்பிக் கொடுப்பதற்காக உலகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். ஆனால் நாடு திரும்பியவுடன் மேலும் ஒரு துயரம் நேரிட்டது. மனைவியும் மூன்று புதல்விகளில் இருவரும் இறந்தனர்.
ட்வெய்ன் அவர்கள் கருதியதைப்போலவே ஹாலியின் வால்நட்சத்திரம் தோன்றியபோது இறந்தார்.






— end —
tags மார்க் ட்வைன் , மார்க் ட்வெய்ன் , நகைச்சுவை, Mark Twain, Samuel Clemens,
You must be logged in to post a comment.